வெட்ட வெளிதனிலே வெறுந்தரை மீதினிலே
சுட்டெரிக்கும் சூரியனின் கிரண நெருப்பினிலே
சட்டை மேல் சட்டையுடன் சயனித்திருந்தேன் நான்
கொட்டும் பனி போல் குளிரில் உடல் நடுங்க!
மொட்டை மாடியிலே, முன் பனிக்காலத்திலே
பட்டுவிரித்தது போன்ற பால் நிலா ஒளியினிலே
கட்டும் வேட்டியும் இன்றி கட்டிலில் நான் கிடந்தேன்
மட்டில்லா பெருஞ்சூடு முழு உடலை தகித்திடவே!
ஓசைகள் எதுவுமே என் காதுகளில் விழுவதில்லை
ஒயாத நிசப்தமே எப்போது நிலைத்து நிற்க!
யாருமின்றித் தனியே கதவடைத்துக் கிடக்கையிலே
ஓங்கார ஒலிகள் என் உயிரைப் பிளக்குதன்றோ!
இது என்ன மாயமென்று எனக்குத் தெரியவில்லை
சொல்ல வல்லார் யாருமுண்டோ,
சொல்வீரோ தயை கூர்ந்து?
கால மாற்றத்தில் காரணிகள் மாறுபட அடைகாக்க துடிக்கும் அடைபட்ட அகிலத்தின் நிகழ்க்காண நிகழ்த்துவோன் செயலோ....
பதிலளிநீக்குசொல்ற அளவுக்கு எனக்கு அறிவில்லைன்னே!
பதிலளிநீக்குஇந்த கவிதை ஒரு இளைஞனுடையதாய் இருக்குமானால் இது ‘காதல் நோய்’ ஏற்படுத்துகின்ற ‘மாயம்’ என்பேன். இல்லை இது மணமாகி துணையை பிரிந்திருக்கும் ஒருவனின் பாடல் என்றால், இது பிரிவின் சோகம் ஏற்படுத்தியதால் உண்டான ‘மாயம்’ ஆகும்.
பதிலளிநீக்குகவிதை ஒன்று பொருள் பல.எப்படி இருப்பினும் கவிதை அருமை. வாழ்த்துக்கள்!
வணக்கம் ஐயா!ஏதோ புரிவது போலும் இருக்கிறது,புரியாதது போலவும் இருக்கிறது!மொத்தத்தில் கவிவரிகள் அருமை!!!
பதிலளிநீக்குnice... muranpaadu... may be kaathal valiyo.... thanks to share...www.rishvan.com
பதிலளிநீக்குஎனக்கும் மாயை எதுவென்று... மாயம் என்னவென்று புரியவில்லையே....
பதிலளிநீக்குமுரண்பாடுகள் அருமை....
அருமை நண்பரே!
பதிலளிநீக்குதனிமை பற்றியதா இருக்குமோ? ஒரு வேளை காதல்?
பதிலளிநீக்குபாதி புரியல! மீதியும் லைட்டா புரியல பாஸ்! நாங்க இன்னும் வளரனுமோ!
உடலை இறக்கி வைத்துவிட்டு மனமது எங்கோ சென்று வருகிறது என்று நினைக்கிறேன்.ஒன்றை குறிப்பிட்டு சொல்லமுடியவில்லை..வே.நடன சபாபதி அய்யா சொன்னதை வழிமொழிகிறேன்..கவிதை நன்று..வலைச் சரத்தில் தங்கள் பணி சிறப்பு..
பதிலளிநீக்குஉள்ளொலியாக இருக்கக் கூடுமோ ?
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
எனது மனம் கனிந்த பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்
த.ம 7
வாசித்த போது என்னுள் ஏதோ உணரபடுவதாய் தோன்றியது...என்னவென்று தெரியவில்லை...ஆனால் மதுரமாய் ஓன்று...
பதிலளிநீக்குஒரு கவிதை! இரு பொருள்கள்! Two in One.....? அருமை! நன்றி Sir!
பதிலளிநீக்குஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
அன்புடன் அழைக்கிறேன் :
"பாராட்டுங்க! பாராட்டப்படுவீங்க!"
விரக தாப தவிப்பே அன்றி இது வேறு ஒன்றுமில்லை . தலைவியின் நினைப்பில் தலைவன் வாடுவது போல் உள்ளது ...வாசு
பதிலளிநீக்குVeyilum Mazhaiyum ore nerathil. Appadiyanaal love than. Love na Kadhal mattumilla.
பதிலளிநீக்குTM 9.
உள்ளொலியாக இருக்கக் கூடுமோ ?
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
எனது மனம் கனிந்த பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்
இவை இரமணியின் வரிகள்!
இதனையே நான் வழி மொழி
கிறேன்
புலவர் சா இராமாநுசம்
முரண்களும் உடன்பாடுகளும் உள்ளதுதான் வாழ்க்கை இதைத்தான் ஓங்கார ஒலிகள் உணர்த்துகின்றன போலும். அருமை.
பதிலளிநீக்குஅருமையான கவிதை.
பதிலளிநீக்குஎங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
கவிதை அருமை...
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு