தொடரும் தோழர்கள்

திங்கள், ஜனவரி 23, 2012

செவிடர் தேசத்தில் ஒரு குருடன் !

ஒரு  நாடு இருந்தது.

அதன் மக்கள் அனைவரும்,மன்னன் உட்பட,காது கேட்கும் திறன் அற்றவர்களாக  இருந்தனர்.

இதற்கும் ஒரு காரணம் உண்டு.

ஒரு காலத்தில் அவர்களுக்கும் காது கேட்டுக் கொண்டுதான் இருந்தது.

ஆனால் ஒரு மன்னன் செவிடனாக இருந்தான்.

எனவே அவன் ஒரு ஆணை பிறப்பித்தான்,இந்த நாட்டு மக்கள் யாவரும் செவிடாக்கப் பட வேண்டும் என்று.

அரசாணையின்படி மக்கள் அனைவரின் செவிப்பறையும் கிழிக்கப் பட்டு அனைவரும் செவிடர்கள் ஆயினர்.

பிறக்கும் குழந்தைகளுக்கும் பிறந்த உடனே செவிப்பறை பழுதாக்கப் பட்டது.

நாளடைவில் இது ஒரு சடங்காகவே மாறி விட்டது.குழந்தை பிறந்தவுடன்,அரச குடும்பத்திலும்கூட, கொற்றவை கோவிலில் செவிப்பறை கிழிக்கும் சடங்கு நடத்தினால்தான் குழந்தை நன்கு வளரும் என்ற ஒரு நம்பிக்கை உருவானது. காது என்ற உறுப்பின் தேவை என்ன என்பதே தெரியாமல் போயிற்று.கேட்பது என்ற சொல் பொருளற்றதாகி விட்டது.மற்றவர் வாயசைவின் மூலம் பேசுவதைப்   புரிந்து கொள்ளும் திறன் வளர்ந்தது.யாரைப் பற்றியாவது அவர் அறியாமல் பேச எண்ணினால் அவர் முதுகுக்குப் பின் பேசும் வழக்கம் தொடங்கியது.

இந்த நாடு மலைகள் சூழ்ந்த ஒரு பள்ளத்தாக்கில் இருந்ததால் இது பற்றி யாரும் அறிந்திருக்க வில்லை.புதியவர் யாரும் வருவதில்லை.

இந்நிலையில் ஒரு நாள் வழிதவறிய குருடன் ஒருவன் அந்நாட்டின் வாயிலை வந்தடைந்தான்.

காவலர்கள் அவனைத் தடுத்து நிறுத்தி  அவனைக் கேட்டனர்யார் நீ?இங்கு எப்படி வந்தாய்?”

அவன் சொன்னான்நான் பார்வையற்றவன்.நானும் என் நண்பனும் அலைந்து திரிந்து கொண்டிருந்தோம்.ஆனால் எப்படியோ பிரிந்து விட்டோம்.நான் வழிதெரியாதவனாக இங்கு வந்து சேர்ந்தேன்,நீங்கள் யார்?இது என்ன இடம்?”

அவன் சொன்னதைக்கேட்டு ஆச்சரியப்பட்ட காவலர்கள் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டனர்.”இது கூர்மதி தேசம்.நாங்கள் கோட்டைக் காவலர்கள். உனக்குப் பார்வையில்லை என்றாய்.ஆனால் நாங்கள் பேசுவதை நீ எப்படிப் புரிந்து கொண்டாய்?”

குருடன் இப்போது ஆச்சரியப்பட்டான்,”பார்வைக்கும் கேட்பதற்கும் என்ன சம்பந்தம்?”

சொன்னான்ஐயா! நீங்கள் பேசுவதை என்னால் கேட்க முடியுமே!”

காவலர்களுக்குப் புரியவில்லை.”என்ன சொல்கிறான்?கேட்பதா? அப்படியென்றால்? இவன் ஏதோ விசேட சக்தி படைத்தவன்.”

அவனை மன்னரிடம் அழைத்துப் போய் செய்தி தெரிவித்தனர்.மன்னன் அவனுடன் பேசி அவன் பார்வையற்றாவனாக இருப்பினும் தான் பேசுவதைப் புரிந்து கொள்கிறான் என்பதை உறுதி செய்து கொண்டான். பின் அமைச்சரிடம் கேட்டான்இது எவ்வாறு சாத்தியம் அமைச்சரே?”

அமைச்சர் சொன்னார்மன்னா!அவர் தெய்வ அருள் பெற்ற மகானாக இருக்க வேண்டும்.எனவேதான் அந்த சக்தி அவரிடம் இருக்கிறது இவரை நம் நாட்டிலேயே  தங்க வைப்பது நன்மை பயக்கும்

மன்னன் குருடனிடம் சொன்னான் நீங்கள் இங்கேயே தங்க வேண்டு கிறேன்உங்களுக்கென  மாளிகை,பணியாட்கள் எல்லாம் தந்து விடுகிறேன். அவ்வப் போது எனக்கு ஆலோசனை கூறுங்கள்

குருடனுக்கு மகிழ்ச்சிஇதுதான் குருட்டு அதிர்ஷ்டம் என்பதோ? ஆலோசனை என்கிறாரே?என்ன செய்வது? சமாளித்துக் கொள்ளலாம்

குருடன் எல்லா வசதிகளுடனும் அங்கேயே தங்கினான்.

டிஸ்கி:-இது எந்த தேசம்,என்ன சொல்ல வருகிறீர்கள்,ஏதாவது உள்குத்து, வெளிக்குத்தா என்றெல்லாம் கேட்காதீர்கள்.எனக்குத் தெரியாது.இது திடீரென்று மனதில் தோன்றிய ஒரு கரு. அவ்வளவே !

49 கருத்துகள்:

 1. இதில் எதாவது அரசியல் இருக்கா என்ன?!

  பதிலளிநீக்கு
 2. சிந்திக்கும்விதமான பதிவுகள் அன்பரே..

  பதிலளிநீக்கு
 3. அடடா.... ஆனா என்ன உள்குத்து என்பது தான் புரியல... :)

  பதிலளிநீக்கு
 4. தங்கள் பதிவைப் படித்தவுடன் நினைவுக்கு வந்த கலீல் ஜிப்ரானின் கதை..

  கடவுளின் முட்டாள்..

  http://gunathamizh.blogspot.com/2010/08/blog-post_16.html

  காண அன்புடன் தங்களை அழைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. "செவிடர் தேசத்தில் ஒரு குருடன் !"

  அருமையான கருத்துள்ள கதை!

  பதிலளிநீக்கு
 6. அட பாஸ் என்ன ஒரு கதை தீடீர் என்று தோன்றிய கதையா மிக சிறப்பாக இருக்கு

  பதிலளிநீக்கு
 7. சூப்பர் கத... உள்குத்து கொஞ்சம் புரியல.. நாம இன்னும் அரசியல்ல வளரனுமோ???

  பதிலளிநீக்கு
 8. ஸ்ரீராம். கூறியது...

  // இதில் எதாவது அரசியல் இருக்கா என்ன?!//
  சத்தியமா எனக்குத் தெரியாது ஸ்ரீராம்.இது ஒரு கதை!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 9. guna thamizh கூறியது...

  //சிந்திக்கும்விதமான பதிவுகள் அன்பரே..//
  நன்றி குணசீலன்.

  பதிலளிநீக்கு
 10. வெங்கட் நாகராஜ் கூறியது...

  //அடடா.... ஆனா என்ன உள்குத்து என்பது தான் புரியல... :)//
  ஒண்ணும் இல்லை வெங்கட்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 11. guna thamizh கூறியது...

  // தங்கள் பதிவைப் படித்தவுடன் நினைவுக்கு வந்த கலீல் ஜிப்ரானின் கதை..

  கடவுளின் முட்டாள்..

  http://gunathamizh.blogspot.com/2010/08/blog-post_16.html

  காண அன்புடன் தங்களை அழைக்கிறேன்.//
  நிச்சயம் சென்று பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 12. இராஜராஜேஸ்வரி கூறியது...

  "செவிடர் தேசத்தில் ஒரு குருடன் !"

  // அருமையான கருத்துள்ள கதை!//
  நன்றி இராஜராஜேஸ்வரி

  பதிலளிநீக்கு
 13. K.s.s.Rajh கூறியது...

  //அட பாஸ் என்ன ஒரு கதை தீடீர் என்று தோன்றிய கதையா மிக சிறப்பாக இருக்கு//
  நன்றி ராஜ்!

  பதிலளிநீக்கு
 14. Mohamed Faaique கூறியது...

  // சூப்பர் கத... உள்குத்து கொஞ்சம் புரியல.. நாம இன்னும் அரசியல்ல வளரணுமோ???//
  உள்குத்து எதுவும் இல்லை,இல்லை.
  முதல் வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 15. பல சிந்தனைகளைக் கிளறிப்போகும்
  அருமையான கதை
  பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் ஐயா!என்ன மர்மம் இது?கண் தெரியாதவன் அந்த நாட்டுக்கு வருகிறான்!காவலர்கள் தடுத்துக் கேள்வி கேட்கிறார்கள்.அவர்களுக்குத்தான் காது கேட்காதே?வயசைவின் மூலம் புரிந்து கொண்டாலும்,குருடனை வைத்து....................!

  பதிலளிநீக்கு
 17. இன்னைக்கு இருக்கும் arasiyal நிலைமை இதுதான் அய்யா...
  அழகா சொல்லியிருகீங்க......

  பதிலளிநீக்கு
 18. “குருடர்களின் தேசத்தில் ஒற்றைக் கண்ணன் ராஜாவாம்” [in the land of the blind a one-eyed man is king] (சரியா???) என்றொரு பழமொழி உண்டு. அதற்கேற்றாப் போல இருக்கிறது உங்கள் கதை.

  நன்றாக இருக்கிறது பித்தரே.

  பதிலளிநீக்கு
 19. சிறப்பாக இருக்கிறது கதை! நன்றாக சிந்தித்து இருக்கிறீர்கள்! குருட்டு அதிர்ஷ்டத்திற்கு நல்ல விளக்கம் தரும் கதைதான்

  பதிலளிநீக்கு
 20. கதை என ‘கதை’க்காதீர்கள்.
  எங்கு நடக்கிறது என்று சொன்னால், ‘தானியங்கி’ வரும் என்ற பயமா? இருப்பினும் ‘கதை’ அருமை!

  பதிலளிநீக்கு
 21. நல்ல கருதான் - இருந்தாலும் இப்படி வெளிபடையாக குத்தகூடாது

  பதிலளிநீக்கு
 22. உங்கள் கதையின் கரு, இன்றைய காலகட்டத்திற்கு பொருந்துவது, உங்கள் கற்பனையின் தவறல்ல.

  பதிலளிநீக்கு
 23. நல்லா இருக்கு ஆனா யார குத்துறீங்கனு தெரியல!!

  பதிலளிநீக்கு
 24. மிகவும் தெளிவான கருத்துள்ள கதை. ஆனால் அந்த உள்குத்து... நமக்கெதுக்கு அரசியலெல்லாம? ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் நமக்கொரு பயனுமில்லை. சரிதானே?

  பதிலளிநீக்கு
 25. கதையில் ஒரு பிழை. இயற்கையில் காது கேளாதவர்களுக்கு பேச்சும் வராது, ஏனென்றால் அவர்களால் ஒலியை எப்படி உச்சரிப்பதென்று தெரியாதல்லவா?. ஆனால் உங்கள் கதையில் காது கேளாதவர்கள் பேசுவதாக உள்ளது தவறு.

  பதிலளிநீக்கு
 26. Ramani கூறியது...

  //பல சிந்தனைகளைக் கிளறிப்போகும்
  அருமையான கதை
  பகிர்வுக்கு நன்றி//
  Ramani கூறியது...

  //Tha.ma 6//
  நன்றி ரமணி.

  பதிலளிநீக்கு
 27. துரைடேனியல் கூறியது...

  //நல்ல கதைதான் போங்க.//
  நன்றி துரை டேனியல்.

  பதிலளிநீக்கு
 28. Yoga.S.FR கூறியது...

  //வணக்கம் ஐயா!என்ன மர்மம் இது?கண் தெரியாதவன் அந்த நாட்டுக்கு வருகிறான்!காவலர்கள் தடுத்துக் கேள்வி கேட்கிறார்கள்.அவர்களுக்குத்தான் காது கேட்காதே?வயசைவின் மூலம் புரிந்து கொண்டாலும்,குருடனை வைத்து....................!//
  கதை!
  நன்றி Yoga.S.FR

  பதிலளிநீக்கு
 29. மகேந்திரன் கூறியது...

  //இன்னைக்கு இருக்கும் arasiyal நிலைமை இதுதான் அய்யா...
  அழகா சொல்லியிருகீங்க......//

  நன்றி மகேந்திரன்

  பதிலளிநீக்கு
 30. ஹாலிவுட்ரசிகன் கூறியது...

  //“குருடர்களின் தேசத்தில் ஒற்றைக் கண்ணன் ராஜாவாம்” [in the land of the blind a one-eyed man is king] (சரியா???) என்றொரு பழமொழி உண்டு. அதற்கேற்றாப் போல இருக்கிறது உங்கள் கதை.

  நன்றாக இருக்கிறது பித்தரே.//
  நன்றி ஹாலிவுட்ரசிகன்

  பதிலளிநீக்கு
 31. நம்பிக்கைபாண்டியன் கூறியது...

  //சிறப்பாக இருக்கிறது கதை! நன்றாக சிந்தித்து இருக்கிறீர்கள்! குருட்டு அதிர்ஷ்டத்திற்கு நல்ல விளக்கம் தரும் கதைதான்//
  நன்றி நம்பிக்கைபாண்டியன்

  பதிலளிநீக்கு
 32. வே.நடனசபாபதி கூறியது...

  // கதை என ‘கதை’க்காதீர்கள்.
  எங்கு நடக்கிறது என்று சொன்னால், ‘தானியங்கி’ வரும் என்ற பயமா? இருப்பினும் ‘கதை’ அருமை!//
  நன்றி சபாபதி அவர்களே

  பதிலளிநீக்கு
 33. மனசாட்சி கூறியது...

  //நல்ல கருதான் - இருந்தாலும் இப்படி வெளிபடையாக குத்தகூடாது//
  நன்றி மனசாட்சி

  பதிலளிநீக்கு
 34. FOOD NELLAI கூறியது...

  //உங்கள் கதையின் கரு, இன்றைய காலகட்டத்திற்கு பொருந்துவது, உங்கள் கற்பனையின் தவறல்ல.//
  நன்றி சங்கரலிங்கம்

  பதிலளிநீக்கு
 35. dhanasekaran .S கூறியது...

  //நல்லா இருக்கு ஆனா யார குத்துறீங்கனு தெரியல!!//
  நன்றி தனசேகரன்

  பதிலளிநீக்கு
 36. சைதை அஜீஸ் கூறியது...

  //மிகவும் தெளிவான கருத்துள்ள கதை. ஆனால் அந்த உள்குத்து... நமக்கெதுக்கு அரசியலெல்லாம? ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் நமக்கொரு பயனுமில்லை. சரிதானே?//

  நன்றி அஜீஸ்

  பதிலளிநீக்கு
 37. ஈரோடு கோடீஸ் கூறியது...

  // கதையில் ஒரு பிழை. இயற்கையில் காது கேளாதவர்களுக்கு பேச்சும் வராது, ஏனென்றால் அவர்களால் ஒலியை எப்படி உச்சரிப்பதென்று தெரியாதல்லவா?. ஆனால் உங்கள் கதையில் காது கேளாதவர்கள் பேசுவதாக உள்ளது தவறு.//

  அவர்கள் பிறவிச் செவிடர் களல்ல. பின்னர் செவிடாக்கப் படுபவர்கள்.
  நன்றி

  பதிலளிநீக்கு
 38. வேடிக்கையான கதையாய் இருந்தாலும்,முதுகுக்கு பின் பேசுவது,குருட்டு அதிர்ஷ்டம் என்பதற்கெல்லாம் விளக்கம் நன்றாக இருக்கு.சிறப்பான கதை.

  பதிலளிநீக்கு
 39. பாலா கூறியது...

  //புரிந்து கொண்டேன் சார். ஹி ஹி//
  நன்றி

  பதிலளிநீக்கு
 40. கோவை2தில்லி கூறியது...

  //கதை நன்றாக இருக்கிறது சார்...//
  நன்றி

  பதிலளிநீக்கு
 41. RAMVI கூறியது...

  //வேடிக்கையான கதையாய் இருந்தாலும்,முதுகுக்கு பின் பேசுவது,குருட்டு அதிர்ஷ்டம் என்பதற்கெல்லாம் விளக்கம் நன்றாக இருக்கு.சிறப்பான கதை.//
  நன்றி.

  பதிலளிநீக்கு
 42. கதை நன்றாக இருந்தது .. ஆனால் ஒன்று புரியவில்லை . பிறவியிலேயே காது கேளாதவர்களுக்கு பேச இயலாது ..குருடன் பேசியது சேவகர்களுக்கும் அரசனுக்கும் எவ்வாறு; கேட்டது ..... தமிழ் சினிமா போல் ..இதை ஆராய கூடாதோ ! வாசு

  பதிலளிநீக்கு
 43. @வாசு
  அவர்கள் பிறவிச் செவிடர்கள் அல்ல.செவிடர்களாக்கப் படுகிறார்கள். வாயசைவை வைத்துப் புரிந்து கொள்ளும் திறன் வளர்ந்தவர்கள். மேலும் இது தினம் நிகழும் யதார்த்தக் கதை அல்ல.இங்கு எதுவும் சாத்தியம்!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 44. //”இதுதான் குருட்டு அதிர்ஷ்டம் என்பதோ?//

  இருக்கலாம். "செவிடர் தேசத்தில் ஒரு குருடன்” ;)

  பதிலளிநீக்கு
 45. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வைகோ சார்.

  பதிலளிநீக்கு