தொடரும் தோழர்கள்

சனி, ஜனவரி 21, 2012

குழந்தை பீர் தெரியுமா?!

பீர் குடிக்கும் பழக்கமுள்ளவர்களுக்குக்கு, ’பீர் ’தெரியும்.ஆனால் குழந்தை பீர் தெரியுமா?குடித்துப் பார்க்க வேண்டுமா? பஞ்சாபுக்குத்தான் போக வேண்டும்!கீழே உள்ள விளம்பரப் பலகையைப் பாருங்கள்!

-----------------------------------  ---------------------------------  ------------------------------------     
 பஞ்சாப்  பற்றிப் பேசிம்போது ஒரு சர்தார்ஜி ஜோக் சொல்லாமல் இருக்க முடியுமா? 

         
             அமர் சிங் ஒரு புதிய ஊரில் பாருக்குச் சென்றார்.அந்த ஊர் பாரில் புதியவர்கள் யாரும் வந்தால் அங்கிருப்பவர்கள் ஏதாவது தொல்லை கொடுப்பது  வழக்கம்.

அமர்சிங் குடித்து முடித்த பின் வெளியே சென்றார்.அவரது மோட்டார் சைக்கிளைக் காணவில்லை.

மீண்டும் உள்ளே வந்தார்.சத்தமாகக் கடுமையாகச் சொன்னார் ”நான் இன்னும் ஒரு கோப்பை அருந்தப் போகிறேன்.அதற்குள் என் பைக் வர வேண்டும்.இல்லையெனில் நான் பாட்டியாலாவில் என்ன செய்தேனோ அதைச் செய்து விடுவேன்”

அங்கிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அமர் சிங் குடித்து முடித்து விட்டு வெளியே சென்று பார்த்தார். பைக் நிறுத்தப்பட்டு இருந்தது..அதை உயிர்ப்பித்துப் புறப்படத் தயாரானார்.

அவர் பின்னாலேயே வெளியெ வந்த பார் மேலாளர் கேட்டார் ”சார்.பாட்டியாலாவில் என்ன செய்தீர்கள்?”

அமர்சிங் சொன்னார்”நடந்தே வீடு திரும்பினேன்!!
                                       

34 கருத்துகள்:

  1. சின்ன வயசுல இது தெரியாம போச்சே!

    பதிலளிநீக்கு
  2. 1)சர்தார்ஜியை வைத்து நகைத்து மகிழ்வதை விட்டுவிடுவோமே!
    2)எடுத்துக்காட்டாக, “ஒரு தமிழன் அப்படித்தான் கடைக்கு போய்க்கொண்டிருந்த போது.....” என்று ஒரு நகைச்சுவை தொடங்கினால்,,, நமக்கு எவ்வளவு கோபம் வரும் என்பதை நாமறிவோம்!
    3)சர்தார்ஜியை பெருமைப்படுத்தும் விதமாக “அபியும் நானும்” திரைப்படத்தில் ஒரு காட்சி வந்திருப்பதை பார்த்திருப்போம்! அதே போல, ஊடகங்களை கையில் வைத்திருக்கும் நாம், அனைத்து சக மனிதர்களை பெருமை படுத்தும் விதமாக நமது கருத்துக்களை வெளியிடுவது சிறப்பு.
    இந்த பதிவில் இது மட்டும் என்னை உறுத்தியது. அதனால்தான் கூறினேன்! தவறு இருந்தால் மன்னிக்கவும்! நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
  3. சர்தார்ஜி யின் யதார்தமாக யோசிக்கும் திறனும்
    பெருந்தன்மையும் சிலிர்க்கவும் வைத்தது
    சிரிக்கவும் வைத்தது
    அட்டகாசமான பதிவு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. விட்டா மினி டாஸ்மாக் போர்ட் கூட வப்பாங்க போல. நீங்க எப்ப சார் பஞ்சாப் போனீங்க?

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் ஐயா!அருமையான தகவல்,நகைச்சுவை!!!!!!!உண்மையில் சர்தார்ஜிகள் புத்திசாலிகள்!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  6. உண்மையில் சர்தார்ஜிகள் கடின உழைப்பாளிகள்.அவர்களைப் பற்றி இட்டுக்கட்டி சொல்லப்படும் நகைச்சுவைகளை, அவர்களே பிறரிடம் சொல்லி மகிழ்வதுண்டு. வழக்கம்போல் சர்தார்ஜி பற்றிய நகைச்சுவைத் துணுக்கு வாய் விட்டு சிரிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  7. அப்படி என்றால் பஞ்சாபிகளெல்லாம் புத்திசாலிகள் ஆகிவிட்டனரா?
    2012ல் உலகம் அழியத்தான்போகிறது!

    பதிலளிநீக்கு
  8. படித்தேன் ...ரசித்தேன்...சிரித்தேன் !

    பதிலளிநீக்கு
  9. குழந்தை பீருக்குதான் அதிக விலை???

    பரவாயில்லையே,அமர் சிங்,சாமர்த்தியமான சர்தார்ஜியாக இருக்கிராரே!!

    பதிலளிநீக்கு
  10. எழுத்து பிழையா? நான் என்னமோன்னு நினைச்சு பயந்துட்டேன் ஐயா

    பதிலளிநீக்கு
  11. குழந்தை பீர்லயும் லைட்டும் ஸ்டராங்குமா? உருப்படுமாய்யா இந்த நாடு. என்னய்யா நடக்குது இங்கே?! சர்தார்ஜி ஜோக் அருமை சார்.

    பதிலளிநீக்கு
  12. ஹா....ஹா...நல்ல நகைச்சுவை. இதே ஜோக் இன்னும் வெவ்வேறு வடிவங்களில் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. @வே.சுப்ரமணியன்
    நீங்கள் சொல்வது சரி.ஆனால் இந்த ஜோக்கில் சர்த்ர்ர்ர்ஜியின் சாமர்த்தியம் அல்லவா தெரிகிறது!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  14. @ சிவகுமார் !
    இப்போது போகவில்லை.
    நன்றி.

    பதிலளிநீக்கு