தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஜனவரி 06, 2012

வெற்றி! வெற்றி! வெற்றி நமதே!!

ஒரு அறிஞர் இருந்தார்.அவர் ஒரு நாள் நடந்து சென்று கொண்டி ருந்த  போது  அவர் எதிரே வந்த முரடன் ஒருவன் அவரைப் பார்த்து”நீ ஒரு முட்டாள்;போலி;உனக்கு எதுவும் தெரியாது.நீ யார் எல்லோருக்கும்  உபதேசம் செய்வதற்கு?” என்றெல்லாம் கடும் வார்த்தைகளால்  சாடினான்.

அனைத்தையும் புன்முறுவலுடன் கேட்டுக்கொண்ட அறிஞர்”நீ ஒருவருக்கு ஒரு பரிசு கொடுக்கிறாய்.ஆனால் அதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லையெனில் அது யாருக்குச் சொந்தம்.”எனக்கேட்டார்.

எதிர்பாராத கேள்வியால் அதிர்ச்சியடைந்த அவன் “நான் வாங்கிய பரிசுஅது. எனக்குத்தான் சொந்தம்”என்றான்.

“அது போல்தான் உன் கோபமும்.உன் கோபத்தினால் நான் காயப்பட வில்லையெனில் அந்தக்கோபம் உனக்கே திரும்பி வருகிறது.நீ காயப்படுகிறாய்.மகிழ்ச்சியற்றவனாகிறாய்.மற்றவரை நீ வெறுப்பதால் உனக்கு மகிழ்ச்சியில்லாமல் போகிறது.ஆனால் மற்றவர் மீது நீ அன்பு செலுத்தும்போது,அனைவரும்,நீ உட்பட, மகிழ்கிறார்கள்.” என்றார் அறிஞர்.

அவன் மனம் நெகிழ்ந்தான்.”எனக்கு அன்பு வழியைக் காட்டுங்கள்.  இன்று முதல் நான் உங்கள் சீடன்” என்றான்.

அறிஞர் சொன்னார்”விரும்புபவர்களுக்கு வழிகாட்டுவது என் கடமை.” என்று சொல்லி உபதேசம் செய்தார்----------

”நீ செய்வது சரியென்றால்,கோபப்பட அவசியமில்லை; தவறென்றால்  உனக்குக்  கோபப்பட  உரிமையில்லை”

உற்றாரிடம்  பொறுமை என்பது அன்பு.
மற்றாரிடம் பொறுமை என்பது   மரியாதை
தன்னிடமே பொறுமை என்பது  பற்றுறுதி
இறைவனிடம் பொறுமை என்பது விசுவாசம்.


கடந்தகாலத்தைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்காதே;அது கண்ணீரைத்தரும்.
எதிர்காலம் பற்றி அதிகம் சிந்திக்காதே .அது பயம் தரும்.
இந்த விநாடியை மகிழ்ச்சியுடன் வாழுங்கள்:அது உற்சாகம் தரும்.


வாழ்க்கையில் வரும் ஒவ்வோரு சோதனையும் நம்மை செப்பனிடும் அல்லது சிதைத்து விடும்.
ஒவ்வொரு பிரச்சினையும்,நம்மை உருவாக்கும் அல்லது உடைக்கும்.
நாம் வெல்கிறோமா அல்லது வெல்லப் படுகிறோமா என்பது நம் கையில்தான் இருக்கிறது. 

டிஸ்கி:இதற்கு என்ன இப்படி ஒரு தலைப்பு என்றா கேட்கிறீர்கள். சும்மா ஒரு செண்டிமெண்ட்தான் --சினிமாக்காரங்க மாதிரி!!

29 கருத்துகள்:

  1. அன்பு வழியே உகந்த வழி.அத்தனையும் சிந்திக்கத் தூண்டும் கருத்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. நாம் வெல்கிறோமா அல்லது வெல்லப் படுகிறோமா என்பது நம் கையில்தான் இருக்கிறது.

    "வெற்றி! வெற்றி! வெற்றி நமதே தான்.

    பதிலளிநீக்கு
  3. அருமையான குட்டிக் கதை. வாழ்க்கைக்கு அவசியமான தத்துவங்கள்! பிரமாதம்!

    பதிலளிநீக்கு
  4. செண்டிமெண்டோ என்னவோ தலைப்பு சரியானதே .. அறிஞர் கூறிய உபதேசங்களை பின் பற்றினால் வெற்றி வெற்றி வெற்றி ! இதை positive thinking என்றும் கூறலாம் ..அதிகம் இந்த சொற்களை தான் தோன்றும் முதல் கட்சியில் பயன் படுத்தியவர் மக்கள் மனதில் இன்றும் குடி கொண்டிருக்கும் MGR தான். அவர் அடைந்த இமாலய வெற்றி அனைவரும் அறிந்ததே ! வாசு

    பதிலளிநீக்கு
  5. சிந்திக்கும் விதமாச் சொன்னீங்க ஐயா..

    அருமை

    பதிலளிநீக்கு
  6. வாழ்க்கை தத்துவங்கள். வழிகாட்டும் சம்பவங்கள்.

    பதிலளிநீக்கு
  7. அழகும், கம்பீரமும், மேன்மையும் வெளிப்படும் அறிவுரைகள்.
    பகிர்வுக்கு நன்றி "கொழந்தே " :))

    பதிலளிநீக்கு
  8. சிந்திக்க வைக்கிறது கதை..அனைத்து தத்துவங்களும் தேவையானவை..

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் ஐயா!அருமை.இன்னுமின்னும் இதுபோல் அருமையான படிப்பினை யூட்டும் கதைகளை எதிர்பார்த்து................

    பதிலளிநீக்கு
  10. shanmugavel கூறியது...

    //அன்பு வழியே உகந்த வழி.அத்தனையும் சிந்திக்கத் தூண்டும் கருத்துக்கள்.//
    நன்றி சண்முகவேல்.

    பதிலளிநீக்கு
  11. இராஜராஜேஸ்வரி கூறியது...

    //நாம் வெல்கிறோமா அல்லது வெல்லப் படுகிறோமா என்பது நம் கையில்தான் இருக்கிறது.

    "வெற்றி! வெற்றி! வெற்றி நமதே தான்.//
    நன்றி இராஜராஜேஸ்வரி

    பதிலளிநீக்கு
  12. கணேஷ் கூறியது...

    //அருமையான குட்டிக் கதை. வாழ்க்கைக்கு அவசியமான தத்துவங்கள்! பிரமாதம்!//

    நன்றி கணேஷ்

    பதிலளிநீக்கு
  13. Vasu கூறியது...

    // செண்டிமெண்டோ என்னவோ தலைப்பு சரியானதே .. அறிஞர் கூறிய உபதேசங்களை பின் பற்றினால் வெற்றி வெற்றி வெற்றி ! இதை positive thinking என்றும் கூறலாம் ..அதிகம் இந்த சொற்களை தான் தோன்றும் முதல் கட்சியில் பயன் படுத்தியவர் மக்கள் மனதில் இன்றும் குடி கொண்டிருக்கும் MGR தான். அவர் அடைந்த இமாலய வெற்றி அனைவரும் அறிந்ததே ! வாசு//
    நன்றி வாசு.

    பதிலளிநீக்கு
  14. guna thamizh கூறியது...

    //சிந்திக்கும் விதமாச் சொன்னீங்க ஐயா..

    அருமை//
    நன்றி குணசீலன்.

    பதிலளிநீக்கு
  15. FOOD NELLAI கூறியது...

    //வாழ்க்கை தத்துவங்கள். வழிகாட்டும் சம்பவங்கள்.//
    நன்றி சங்கரலிங்கம்

    பதிலளிநீக்கு
  16. கக்கு - மாணிக்கம் கூறியது...

    //அழகும், கம்பீரமும், மேன்மையும் வெளிப்படும் அறிவுரைகள்.
    பகிர்வுக்கு நன்றி "கொழந்தே " :))//
    நன்றி கக்கு.

    பதிலளிநீக்கு
  17. மதுமதி கூறியது...

    //சிந்திக்க வைக்கிறது கதை..அனைத்து தத்துவங்களும் தேவையானவை..//
    நன்றி மதுமதி.

    பதிலளிநீக்கு
  18. Yoga.S.FR கூறியது...

    //வணக்கம் ஐயா!அருமை.இன்னுமின்னும் இதுபோல் அருமையான படிப்பினை யூட்டும் கதைகளை எதிர்பார்த்து................//

    நன்றி Yoga.S.FR

    பதிலளிநீக்கு
  19. நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...

    // குட்டி கதை ,அருமை.//

    நன்றி நண்டு @நொரண்டு

    பதிலளிநீக்கு
  20. சிந்தனைத்தூண்டும் சிறப்பான சிறுகதை.

    பதிலளிநீக்கு
  21. அண்ணே the ball always return...நல்ல அறிவுரை!

    பதிலளிநீக்கு
  22. கடந்தகாலத்தைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்காதே;அது கண்ணீரைத்தரும்.
    எதிர்காலம் பற்றி அதிகம் சிந்திக்காதே .அது பயம் தரும்.
    இந்த விநாடியை மகிழ்ச்சியுடன் வாழுங்கள்:அது உற்சாகம் தரும்.//

    நல்லவொரு புத்திமதி, இப்படியே ஒவ்வொரு மனிதனும் நடந்தால் உலகமே சுபிட்சம் பெரும் இல்லையா தல...!!!

    பதிலளிநீக்கு
  23. டிஸ்கி:இதற்கு என்ன இப்படி ஒரு தலைப்பு என்றா கேட்கிறீர்கள். சும்மா ஒரு செண்டிமெண்ட்தான் --சினிமாக்காரங்க மாதிரி!!//

    நீங்களும் கிளம்பியாச்சா அவ்வ்வ்வ்வ்....

    பதிலளிநீக்கு
  24. நல்லாதொரு பதிவு.
    தெளிவு பெற வைக்கிறது.
    தலைப்பு பொருத்தமே.

    பதிலளிநீக்கு
  25. அருமை! அருமை!அருமை!
    அனைத்தும் மிகவும் அருமை!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  26. பதிவின் தலைப்பு சரியே. நீங்கள் தொகுத்துள்ள கருத்துக்கள் படி நடந்தால் வெற்றி நமக்கே தான்.
    இந்த பதிவில் எனக்குப்பிடித்த வரிகள் இதோ
    // ”நீ செய்வது சரியென்றால்,கோபப்பட அவசியமில்லை; தவறென்றால் உனக்குக் கோபப்பட உரிமையில்லை”//
    /நாம் வெல்கிறோமா அ/ல்லது வெல்லப் படுகிறோமா என்பது நம் கையில்தான் இருக்கிறது.//

    தொடரட்டும் உங்களது கருத்துச்செறிந்த பதிவுகள்.

    பதிலளிநீக்கு