தொடரும் தோழர்கள்

திங்கள், ஜனவரி 30, 2012

என்னை முடக்கிப் போட்ட வின் 32

வெள்ளியன்று இரவு என் கணினி வின் 32 வைரஸ் தாக்குதலுக்கு ஆளானது!இன்று ,இப்போதுதான் பொறியாளர் வந்து சரி செய்து விட்டுப் போனார்.என்ன இருக்கிறது, என்ன போயிற்று எனத் தெரியாது.இரண்டு நாள் வலைப்பக்கமே வராமல் இருந்தது,இப்போது எழுதுவது கொஞ்சம் சிரமமாக இருக்கிறது.இன்று இரவு ஏதாவது எழுத வேண்டும் என நினைக்கிறேன்.

பொறியாளர் பேசியவாறே பணியில் ஈடுபட்டிருந்தார்.அவர் பேசியதில் ஒரு துணிவான தந்தை பற்றிய  செய்தி கிடைத்தது.ஒரு பெரியவர்.அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற்வர்.15 ஆண்டுகளுக்கு முன் மனைவியை இழந்தவர்.ஒரே பையன் .அவனைத் தானே வளர்த்து நன்கு படிக்க வைத்தார்.நன்கு செலவு செய்து திருமணம் செய்து வைத்தார்.வந்த மருமகள் சிறிது காலத்தில் வேலையை ஆரம்பித்தாள்.தங்களிருவருக்கும்,காலை,மதிய உணவு செய்து,சாப்பீட்டு எடுத்துக் கொண்ட பின் அவருக்கு எதுவும் வைப்பதில்லை.பெரியவரும் பக்கத்து ஓட்டலில் சென்று சாப்பிட்டு வந்தார்.

ஒரு நாள் மகன் அவரை அன்புடன் காரில் .தன் மனைவியுடன் அழைத்துச் என்றான்.. ஒரு முதியோர் இல்லத்துக்குச் சென்று சுற்றிக்காட்டி,பிடித்திருக்கிறதா எனக் கேட்டான்.அவர் தலையசைத்தார்.இனி நீங்கள் இங்குதான் தங்கப்போகிறீர்கள்.நான் மாதாமாதம் பணம் கட்டி விடுகிறேன் எனச் சொன்னான்.பின் அவர்கள் வீடு திரும்பினர்.

வீட்டில் அவர் மகனிடம் சொன்னார்”நீ உன் பணத்தில் வாங்கிய அனைத்தையும் தனியாக எடுத்து வை,ஏன் எதற்கு எனக் கேட்காமல் ”

மிகக்குறைந்த சாமான்களே இருந்தன. அவர் சொன்னார்”இதி நான் கட்டிய வீடு.நீ உன் சாமான்களை எடுத்துக் கொண்டு வெளியே போய்விடு.”

இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.திகைத்தனர்.பெரியவர் உறுதியாயிருந்தார்.அப்போது இரவு நேரம்.நாளை காலை போகிறேன் என மகன் சொல்ல அவர் மறுத்தார்.பின் அவன் புறப்படக் கார் சாவியை எடுத்தான்.
அவர் சொன்னார்”அது நான் வாங்கிக் கொடுத்தது.”
அவர்கள் வெளியேறினர்.

வைரஸ் வந்தது,கதை கிடைத்தது.
பாராட்டப்பட வேண்டிய பெரியவர்.

41 கருத்துகள்:

  1. வைரஸ் கதையை மட்டும் அல்ல...சிந்திக்கவும் வைக்கின்றது!

    பதிலளிநீக்கு
  2. முதுமையின் தன்னம்பிக்கை அருமையான பாடம் கற்ப்பிக்கும் பதிவு அருமை

    பதிலளிநீக்கு
  3. முதுமையின் தன்னம்பிக்கை அருமையான பாடம் கற்ப்பிக்கும் பதிவு அருமை

    பதிலளிநீக்கு
  4. கதையை அறியும் வாய்ப்பை கொடுத்த வைரஸுக்கு நன்றி..... ஹா..ஹா...

    பதிலளிநீக்கு
  5. //வந்த மருமகள் சிறிது காலத்தில் வேலையை ஆரம்பித்தாள்.தங்களிருவருக்கும்,காலை,மதிய உணவு செய்து,சாப்பீட்டு எடுத்துக் கொண்ட பின் அவருக்கு எதுவும் வைப்பதில்லை//
    இப்பிடியெல்லாம் இருப்பாங்களா...?

    அந்தப் பெரியவரின் மன உறுதிக்கு ஒரு சல்யூட்! கதை செம்ம! :-)

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் ஐயா,
    வருத்தமான செய்தியினை வைரஸ் கொடுத்தாலும்,
    நல்லதோர் கதை கிடைத்த மகிழ்ச்சியினையும் தந்திருக்கிறது.

    நன்றி ஐயா.

    தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  7. அந்த பெரியவரின் துணிச்சல் சிந்திக்க வைக்கிறது

    பதிலளிநீக்கு
  8. வந்ததுக்கு அறிவு இல்லைன்னா வாய்ச்சத்து அறிவு எங்கே போச்சி??????????. பெற்றோரை காக்க மறந்தவன் அந்த வின் 32 வைப்போன்றவன். அவர் format செய்தது சரியே. அவன் இருக்கும் வரை எதுவும் விளங்காது. நன்றி ஐயா.
    ப்ளாக் பக்கம் தலைகாட்டி காலங்கள் கொஞ்சம் ஆகிவிட்டது. மனிக்கவு ஐயா. உங்கள் எழுத்தின் பரம ரசிகன் நான்.

    பதிலளிநீக்கு
  9. அந்த பெரியவர் போற்றுதலுக்குறியவர்.

    கம்பியூட்டருக்கு வைரஸ் வந்தில் உங்களுக்கு ஒரு நல்ல கதைகிடைத்திருக்கு..

    பதிலளிநீக்கு
  10. அந்தப் பெரியவரின் மிகவும் தைரியமான செயல் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது. நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  11. அவசரப்பட்டு சொத்தைப் பிரித்துக் கொடுத்துவிடாமல் இருந்தால் இறுதி வரை பிரச்சினையின்றி வாழலாம்.

    பதிலளிநீக்கு
  12. இதுதான் பித்தன்!!!!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  13. நெத்தியடி என்று கேள்விபட்டுள்ளேன். ஆனால் இப்போது அதை உங்கள் கதையின் மூலம் அறிந்துக்கொண்டேன். இந்த உறுதி அனைத்து பெரியவர்களுக்கும் இருக்க வேண்டும். பொதுவாக பெரியவர்கள் உணர்ச்சிவசப்பட்டு விட்டுகொடுத்துவிடுவர். இவர் சொன்னது மிகவும் சரியே!

    பதிலளிநீக்கு
  14. veedu கூறியது...

    // வைரஸ் கதையை மட்டும் அல்ல...சிந்திக்கவும் வைக்கின்றது!/
    நன்றி சுரேஷ்

    பதிலளிநீக்கு
  15. sasikala கூறியது...

    //முதுமையின் தன்னம்பிக்கை அருமையான பாடம் கற்ப்பிக்கும் பதிவு அருமை//
    நன்றி சசிகலா.

    பதிலளிநீக்கு
  16. தமிழ்வாசி பிரகாஷ் கூறியது...

    //கதையை அறியும் வாய்ப்பை கொடுத்த வைரஸுக்கு நன்றி..... ஹா..ஹா...//
    நன்றி பிரகாஷ்

    பதிலளிநீக்கு
  17. Rathnavel Natarajan கூறியது...

    // அருமை.
    நன்றி.//
    நன்றி ரத்னவேல் ஐயா

    பதிலளிநீக்கு
  18. ஜீ... கூறியது...

    //வந்த மருமகள் சிறிது காலத்தில் வேலையை ஆரம்பித்தாள்.தங்களிருவருக்கும்,காலை,மதிய உணவு செய்து,சாப்பீட்டு எடுத்துக் கொண்ட பின் அவருக்கு எதுவும் வைப்பதில்லை//
    // இப்பிடியெல்லாம் இருப்பாங்களா...?//
    இருக்காங்களே

    //அந்தப் பெரியவரின் மன உறுதிக்கு ஒரு சல்யூட்! கதை செம்ம! :-)//
    நன்றி ஜீ

    பதிலளிநீக்கு
  19. நிரூபன் கூறியது...

    //வணக்கம் ஐயா,
    வருத்தமான செய்தியினை வைரஸ் கொடுத்தாலும்,
    நல்லதோர் கதை கிடைத்த மகிழ்ச்சியினையும் தந்திருக்கிறது.

    நன்றி ஐயா.

    தொடருங்கள்.//
    தீமையிலும் ஒரு நன்மை!
    நன்றி நிரூ.

    பதிலளிநீக்கு
  20. ஆமினா கூறியது...

    // அந்த பெரியவரின் துணிச்சல் சிந்திக்க வைக்கிறது//
    நன்றி ஆமினா.

    பதிலளிநீக்கு
  21. கே. ஆர்.விஜயன் கூறியது...

    // வந்ததுக்கு அறிவு இல்லைன்னா வாய்ச்சத்து அறிவு எங்கே போச்சி??????????. பெற்றோரை காக்க மறந்தவன் அந்த வின் 32 வைப்போன்றவன். அவர் format செய்தது சரியே. அவன் இருக்கும் வரை எதுவும் விளங்காது. நன்றி ஐயா.
    ப்ளாக் பக்கம் தலைகாட்டி காலங்கள் கொஞ்சம் ஆகிவிட்டது. மனிக்கவு ஐயா. உங்கள் எழுத்தின் பரம ரசிகன் நான்.//
    உங்கள் பின்னூட்டம் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன் இனிய விஜயன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  22. K.s.s.Rajh கூறியது...

    //அந்த பெரியவர் போற்றுதலுக்குறியவர்.

    கம்பியூட்டருக்கு வைரஸ் வந்தில் உங்களுக்கு ஒரு நல்ல கதைகிடைத்திருக்கு..//
    நன்றி ராஜ்

    பதிலளிநீக்கு
  23. ஹாலிவுட்ரசிகன் கூறியது...

    //அந்தப் பெரியவரின் மிகவும் தைரியமான செயல் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது. நல்ல பதிவு.//
    நன்றி ஹாலிவுட்ரசிகன்.

    பதிலளிநீக்கு
  24. பழனி.கந்தசாமி கூறியது...

    // நல்ல முடிவு.//
    நன்றி கந்தசாமி ஐயா.

    பதிலளிநீக்கு
  25. புலவர் சா இராமாநுசம் கூறியது...

    //இதுதான் பித்தன்!!!!

    புலவர் சா இராமாநுசம்//
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  26. சைதை அஜீஸ் கூறியது...

    //நெத்தியடி என்று கேள்விபட்டுள்ளேன். ஆனால் இப்போது அதை உங்கள் கதையின் மூலம் அறிந்துக்கொண்டேன். இந்த உறுதி அனைத்து பெரியவர்களுக்கும் இருக்க வேண்டும். பொதுவாக பெரியவர்கள் உணர்ச்சிவசப்பட்டு விட்டுகொடுத்துவிடுவர். இவர் சொன்னது மிகவும் சரியே!//
    நன்றி அஜீஸ்

    பதிலளிநீக்கு
  27. இன்றைய பல குடும்பங்களில் இந்த கதை இருக்கிறது.சம்பாதித்துவைத்த பெரியவர் சரி,சம்பாதிக்காதவர்கள் கதிதான் கஷ்டம்.

    பதிலளிநீக்கு
  28. Ungalukku Viru thodarnthu vara Vaalthukkal. Appathane engalukku niraiya kathai kidaikkum. (hi...hi...)

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் ஐயா!அந்தப் பெரியவர் பாடம் கற்றுக் கொடுக்கவேண்டும் என்பதற்காகவே அவ்வாறு நடந்து கொண்டிருப்பார்!உண்மையில் பெரியோர் தாம் வாழ்ந்து முடித்தவர்கள் என்ற எண்ணத்தில் முதியோர் இல்லமென்ன,கோவில் குளமென்று கிளம்பிச் சென்றே விடுகிறார்கள்!

    பதிலளிநீக்கு
  30. வைரஸ் கதை சிந்திக்க வைக்கின்றது...

    பதிலளிநீக்கு
  31. சிந்திக்க வைக்கும் சிறுகதை சொல்வதில் சிறந்த மனிதர் நீங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  32. வைரஸ் வந்தது,கதை கிடைத்தது.
    பாராட்டப்பட வேண்டிய பெரியவர்.

    பாராட்டவேண்டிய பாடம்..

    பதிலளிநீக்கு
  33. அந்தப் பெரியவர் எடுத்த தைரியமான முடிவை அனைவரும் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும். பெற்றவர்களின் அருமையை உணராதவர்களுக்கு இப்படித்தான் சாட்டையடி தரவேண்டும். அருமை!

    பதிலளிநீக்கு
  34. கடமை தவறிய மகன்.அந்த பெரியவர் செய்தது மிகச்சரியானதே..

    பதிலளிநீக்கு
  35. இந்த மாதிரி நல்ல கதை கிடைக்கும்னு சொன்னா, 'வைரஸ் நல்லது'னு சொல்லலாம். பெரியவர் நல்ல அதிர்ச்சி வைத்தியம் குடுத்தார்.

    பதிலளிநீக்கு
  36. வைரஸ் கதை அழகான பதிவுக்கு என் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  37. வைரஸ் உங்கள் கணினியை முடக்கியது நல்லதுதான். ஏனெனில் ஒரு வைரக் கதை கிடைத்திருக்கிறதே!

    பதிலளிநீக்கு