தொடரும் தோழர்கள்

வியாழன், பிப்ரவரி 16, 2012

துன்பம் எப்படிப் பட்டது?


உலகில் துன்பங்கள்,வேதனைகள்  நிரம்பியுள்ளன.ஆனால் அவற்றை வெற்றி கொள்வதும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது

வலி என்பது தவிர்க்க இயலாதது;ஆனால் வேதனை என்பது வருவித்துக் கொள்வது.

சிலுவையில் அடிக்கப்பட்டபோது ஏசு பிரானுக்குச் சொல்லொணா வலி இருந்திருக்கும்.ஆனால் அதனால் அவர் வேதனைப்படவில்லை. மாறாக அந்த நிலையிலும் அதைச் செய்தவர்களுக்காக இறைவனை மன்னிக்கச் சொல்லி வேண்டும் அன்பு அவருக்கு இருந்தது.

வேதனைகள் சில நேரங்களில் கவலை எனும் உருவில் வந்து வாட்டுகின்றன.அது தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் செயலே.முல்லா நஸ்ருதீன் ஓரிரவு தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தார்.மனைவியிடம் சொன்னார்”நான் அப்துல்லாவிடம் வாங்கிய கடனை நாளை தருவதாக வாக்களித்திருந்தேன்.ஆனால் அது என்னால் இயலாது”.நஸ்ரூதின் மனைவி அப்துல்லாவைச் சந்தித்து “என் கணவரால் நாளை பணம் தர இயலாது” எனக் கூறி விட்டுவந்து,கணவனிடம் சொன்னாள்”நீங்கள் தூங்குங்கள்.இப்போது அப்துல்லா கவலைப் படட்டும்!”

வேதனை என்பது பல நேரங்களில்,குற்ற உணர்வின் காரணமாக நமக்கு நாமே கொடுக்கும் தண்டனையாகி விடுகிறது.ஞானத்தைத் தேடிப் புறப்பட்ட புத்தர் தனது பழைய ஆடம்பர வாழ்வை எண்ணிக் குற்ற உணர்வுடன்  உண்ணா நோன்பை மேற்கொண்டார்.அதன் காரணமாக மயக்கமடைந்தார்.கண் விழித்த போது அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த ஒரு பாடகன் தன் சீடனிடம்”இதோ இந்த  தம்பூராவின் நரம்புகளுக்குச்  சரியான அளவு அழுத்தம் கொடுத்தால்தான் சுருதி சுத்தமாக மீட்ட முடியும்,அதிகமானால் அறுந்து விடும்;குறைவாயின் தொங்கிப் பயனற்று விடும்.”புத்தர் புரிந்து கொண்டார்.வேதனைப்படுவது நரம்பை இழுத்து முடுக்குவது போல்; வெறும் இன்பங்களில் திளைத்தல் என்பது முடுக்காத நரம்பு போல் என்று.

வேதனை அனுபவிப்பது என்பது ஒரு சோம்பேறித்தனத்தின் சின்னம்; மனச்சோர்வில்ஆழ்த்தும்.இரு நண்பர்களுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது.ஒருவன் ஊமையாக,அழுதுகொண்டேசாகத் தயாரானான். 

மற்றவன்மன்னனிடம்சொன்னான் ”மகாராஜா! எனக்கு ஓராண்டு அவகாசம் கொடுங்கள்.நான்உங்கள்குதிரைக்குப்பறக்கக்கற்றுக்கொடுக்கிறேன் ”மன்னனும் ஒப்புக் கொண்டான்.பின் நண்பன் அது பற்றிக் கேட்ட போது அவன் சொன்னான்”ஓராண்டு என்பது நீண்ட காலம்.என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்.அந்தக் குதிரை சாகலாம்.மன்னனே சாகலாம்.ஒரு வேளை குதிரை பறந்தாலும் பறக்கலாம்”

சிலருக்கு வேதனைப் படுவது என்பது மகிழக்கூடிய,மற்றவர் கவனத்தைக் கவரக் கூடிய செயலாக இருக்கிறது. ஒரு முறை ரயிலில் ஒருவர் சென்றார்.இரவு தூங்கும் நேரம்.கீழ்ப் படுக்கையில் இருக்கும் ஒருவர்”எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறதே” எனத் துன்பம் தோய்ந்த குரலில் சொன்னார்.மற்றவர் தன்னிடமிருந்த நீரை அவருக்கு அருந்தக் கொடுத்தார்.பின் உறங்க ஆயத்தமானார்.மீண்டும் அதே துன்பக் குரல்”ஐயோ!எனக்கு எவ்வளவு தாகமாக இருந்தது!”

நமக்கு வரும் வலிகளை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?

25 கருத்துகள்:

  1. புத்தர் புரிந்து கொண்டார். வேதனைப்படுவது நரம்பை இழுத்து முடுக்குவது போல்; வெறும் இன்பங்களில் திளைத்தல் என்பது முடுக்காத நரம்பு போல் என்று.

    -நானும் புரிந்து கொண்டேன் வாழ்க்கையின் தத்துவத்தை. அருமை. என்னைப் பொறுத்த வரை வலி, வேதனைகளை சிரித்துச் சமாளித்து வருகிறேன். இதுவும் கடந்து போகும் என்ற மனநிலையை வளர்த்துக் கொண்டால் எல்லாம் சுலபமே. அருமையான கருத்துப் பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. சிலருக்கு வேதனைப் படுவது என்பது மகிழக்கூடிய,மற்றவர் கவனத்தைக் கவரக் கூடிய செயலாக இருக்கிறது.

    அவர்கள் துன்பத்திலிருந்து வெளியேற விரும்புவதில்லை.. பறைசாற்றவே செய்வார்கள்..

    பதிலளிநீக்கு
  3. சுவாரஸ்யமான குட்டிக் கதைகள் மூலம் நமக்கு வரும் வலிகளை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி!

    பதிலளிநீக்கு
  4. புத்தர் பற்றிய கதை அருமை.ஒரு சந்தேகம் ஒரே புத்தர் ஒராயிரம் கதைகள் ஆனால் ஒரே கருத்து.புத்தர் உண்மையிலே ஹீரோ தான்.

    வலியில்லா வாழ்க்கை வழியில்லாமல் போகும்.அருமை பதிவு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. அருமையான் சிந்திக்க வைக்கும் பதிவு.சிறு கதைகளைச் சொல்லி அதன் மூலம் நல்லதொரு கருத்தை சொன்னது நன்று..வாசித்தேன் வாக்கிட்டேன்.

    பதிலளிநீக்கு
  6. நல்ல பதிவு..


    //என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்.அந்தக் குதிரை சாகலாம்.மன்னனே சாகலாம்.ஒரு வேளை குதிரை பறந்தாலும் பறக்கலாம்”//

    அட இதுவும் நல்லாத்தான் இருக்கு..
    :)))

    பதிலளிநீக்கு
  7. //வேதனை என்பது பல நேரங்களில்,குற்ற உணர்வின் காரணமாக நமக்கு நாமே கொடுக்கும் தண்டனையாகி விடுகிறது.//

    மிக அழகாக சொல்லியிருக்கீங்க சார்.
    சிந்திக்க வைக்கும் பதிவு.நன்றி பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  8. வலிக்கும் வேதனைக்குமான விளக்கம்
    மிக மிக எளிமையாக
    மிக மிக அருமையாக இருந்தது
    மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. இதுவும் கடந்து போகும்...புத்தர் பற்றிய கதை அருமை...

    பதிலளிநீக்கு
  10. //”ஓராண்டு என்பது நீண்ட காலம்.என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்.
    அந்தக் குதிரை சாகலாம்.
    மன்னனே சாகலாம்.
    ஒரு வேளை குதிரை பறந்தாலும் பறக்கலாம்”
    //

    மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  11. வாழ்வின் போக்குகளில் ஏற்படும் வலிகளை
    அவ்வளவு எளிதாக யாரிடம் பகிர்ந்துகொள்ளவும்
    புரியவைக்கவும் முடியாது...
    தற்கான அழகான விளக்கம் கூறிநிற்கும்
    நல்ல கதை ஐயா..

    பதிலளிநீக்கு
  12. அண்ணே சிறு குறிப்புன்னு சொல்லுவாங்க...அது போல உங்க கதைகள்!

    பதிலளிநீக்கு
  13. நெஞ்சை அள்ளும் தத்துவக்கருத்துக்கள் அருமை! அருமை!
    இனி, சென்னை பித்தர் என்பதோடு
    சென்னை தத்துவப் பித்தர் என்றே அழைக்க வேண்டும்!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  14. சின்ன சின்ன குட்டி கதைகள் மனசுக்கு இதமாக இருக்குது தல...!!!

    பதிலளிநீக்கு
  15. வேதனை+வலி அருமையா சொல்லிட்டீங்க நன்றி...!!!

    பதிலளிநீக்கு
  16. சிந்திக்க வைத்த பதிவு. பகிர்வுக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு