தொடரும் தோழர்கள்

வியாழன், பிப்ரவரி 23, 2012

சிங்கமா?குரங்கா?


  கென்யாவில் ஒரு மிருக்காட்சி சாலையில் ஒரு சிங்கம் இருந்தது.மிருகங்களை நன்கு பராமரிக்க வசதியற்ற இடம், அது.சிங்கத்துக்கு ஆட்டுக்கறி அளிக்கப் பட்டாலும் ,அது போதவில்லை..தனக்கு விடிவு காலம் வராதா என ஏங்கியது.   ஒரு நாள் துபாயின் ஒரு மிக வசதியான மிருகக்காட்சி சாலையில் இருந்து வந்த மேலாளர் அந்த சிங்கத்தை துபாய்க்கு அனுப்பச்சொல்லி எற்பாடு செய்தார்.அந்த சிங்கத்துக்கு மிக மகிழ்சி. வசதியாக  வயிறு நிறைய நல்ல ஆட்டுக்கறி சாப்பிட்டு வாழலாம் என நினைத்தது.

துபாய்க்குச் சென்றதும் முதல் நாள் அதற்கு உணவு வழங்கப்பட்டதுஅதற்கு ஏமாற்றம்!பத்து வாழைப்பழம் !இடம் மாற்றத்தினால் சீரணம் ஆவது பிரச்சினையாகுமோ எனப் பயந்து பழம் கொடுத்திருப்பார்கள் என நினைத்தது.

ஆனால் தொடர்ந்து இரு நாட்கள் இது போலவே நடந்தது.மறு நாள், உணவளித்த மனிதனிடம் அது கேட்டது”நான் சிங்கம்!எனக்கு இப்படியா உணவளிப்பது?”

அவன் சொன்னான்”நீ சிங்கம்தான் தெரியும்.ஆனால் நீ இங்கு வந்திருப்பது ஒரு குரங்கின் ’நாட்டு நுழைவனுமதி’யில்!”(visa)
..
..
..
..
நீதி:வெளிநாட்டில் குரங்காக வாழ்வதை விடத் தன் நாட்டில் சிங்கமாக வாழ்வது சிறந்தது!


34 கருத்துகள்:

  1. பதிவு நன்றாக இருக்கிறது. கொஞ்சம் லேஅவுட்டை சரி செய்யவும்

    பதிலளிநீக்கு
  2. இந்தக் கதையின் கருத்து அருமை, ஐயா!

    உள்நாட்டில் இன்று வாழ கொடுத்து வைத்துள்ள நாம் எல்லோரும் தான் உண்மையிலேயே ’சிங்கங்கள்’ என்று புரிகிறது.

    பதிலளிநீக்கு
  3. என் வாழ்க்கை வரலாற்றை இவ்வளவு சுருக்கமாகவும் அழகாகவும் எழுதிவிட்டீர்களே! அந்த சிங்கம் தான் இனி ஒரு குரங்கு என்று நம்பும் வரை பிரச்சனை தான்!

    பதிலளிநீக்கு
  4. அண்ணே இப்படி அடிச்சி புட்டீங்களே!

    பதிலளிநீக்கு
  5. நல்ல கருத்துள்ள பதிவு. இதையே இப்படியும் சொல்வார்கள்.‘புலிக்கு வாலாக இருப்பதைவிட பூனைக்கு தலையாக இருக்கலாம் என்று.’

    பதிலளிநீக்கு
  6. நீதி உணர்ந்து சொல்லப்பட்டிருக்கும் அருமையான பகிர்வு.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  7. நகைச்சுவையாக இருந்தாலும் கதை சிந்தனையை தூண்டும் விதமாக உள்ளது.

    //நீதி:வெளிநாட்டில் குரங்காக வாழ்வதை விடத் தன் நாட்டில் சிங்கமாக வாழ்வது சிறந்தது!//

    மிக அருமையான நீதி.

    பதிலளிநீக்கு
  8. கதையும் அதன் கருத்தும் அருமை .

    பதிலளிநீக்கு
  9. சொல்லியுள்ள கருத்து உண்மையானது.....

    அருமையான பகிர்வு ஐயா.

    பதிலளிநீக்கு
  10. சூப்பர் நல்ல வேளை எலியோட visa ல போல.

    அருமைப் பதிவு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  11. நல்ல விஷயம்... இருக்குமிடமே சொர்க்கம்....

    பதிலளிநீக்கு
  12. வெளிநாட்டில் குரங்காக வாழ்வதை விடத் தன் நாட்டில் சிங்கமாக வாழ்வது சிறந்தது...//

    சரியாகச் சொன்னீர்கள்...

    பதிலளிநீக்கு
  13. உள்நாடு சரியில்லன்னா என்ன பண்றது? ஹி....ஹீ...!

    பதிலளிநீக்கு
  14. நீதிபோதனை அருமை!
    சருங்கச் சொல்லி விளங்க வைத்தீர்! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு