தொடரும் தோழர்கள்

செவ்வாய், நவம்பர் 22, 2011

குட்டி நடிகர் திலகம்!

        நான் ஏழாவது வகுப்பில் படிக்கும்போது, ஒரு சிவ ராத்திரியன்று இரவு, நானும் என் நண்பர்களும் சேர்ந்து ஒரு நாடகம் நடித்தோம்.’நீதிபதி’ என்ற அந்த நாடகத்தை எழுதி இயக்கியவன் நான்தான்.அதில் கதானாயகனாக நடித்தவனும் நான்தான்.அடுக்குமொழி வசனங்கள் நிறைந்த(கலைஞரின் தாக்கம்!) அந்த நாடகம் பெரிய பாராட்டைப் பெற்றது.அந்த ஊர் இளைஞர் சங்கத்தினர் அவர்களின் அடுத்த நாடகத்தில் எனக்கு ஒரு பாத்திரம் அளிப்பதாகக் கூறினர்.ஆனால் நான் வேறு ஊர் சென்று விட்டதால் அவர்களின் நாடகத்தில் நடிக்கவில்லை.


           நான் பள்ளி இறுதி வகுப்புப் படிக்கும்போது எங்கள் பள்ளியில் “நண்பர்கள் குழாம்”என்ற ஒருஅமைப்பில் ஒவ்வொரு வகுப்பைச் சேர்ந்தவர்களும் ஒவ்வொரு மாதமும் ஏதாவது நிகழ்ச்சி தயார் செய்து அளிக்க வேண்டும்.ஒரு மாதம் என் வகுப்பின் சார்பில் நான் ஒரு நாடகம் தயார் செய்து நானே முக்கிய வேடத்தில் நடித்தேன்.பொறாமை கொண்ட ஒரு மன்னனாக நடித்தேன்.என் நடிப்பு மிகவும் பாராட்டப் பட்டது.அந்த நேரத்தில் எங்கள் பள்ளி ‘முத்தமிழ் விழா’வுக்காக ஒரு நாடகம் தயாரிக்கப் பட்டு வந்தது.பெயர்’தமிழ் இன்பம்” என நினைக்கிறேன்——(பெயர்  சரியாக நினைவில் இல்லை.)என் நடிப்பால் கவரப்பட்ட குழுவினர் என்னையும் அந்த நாடகத்தில் சேர்த்துக் கொண்டனர். அந்த நாடகம் சில நிகழ்ச்சிகளின் தொகுப்பாக அமைந்த நாடகம்.நான் திருவள்ளுவர்  வேடத்தில் நடித்தேன்.


அதில் மன்னன் ஒருவனுக்கு அறிவுறுத்த நான் பேசிய குறள் இன்னும் மறக்கவில்லை.”உறு பசியும் ஓவாப்பிணியும் செறு பகையும் சேராதியல்வது நாடு” இந்த நாடகத்தில் நான் நடித்த மன்னன் நாடகமும் ஒரு அங்கமாகச் சேர்க்கப்பட்டு விட்டது.ஆக முதலிலியே நாடகத்தில் இரு வேடம் ஏற்று நடித்தேன்..திருவள்ளுவர் வேடத்தில் நடித்ததும் உள்ளே சென்று அவசரமாக ஒப்பனையைக் களைந்து மன்னன் வேடத்துக்கான ஒப்பனை செய்து கொண்டு உடைகளைத் தரித்துக் கொண்டு தயாரானது மிக சுவாரஸ்யமான அனுபவம்.


பள்ளி ஆண்டு விழாவில் ‘ராஜ ராஜ நரேந்திரன்’ என்ற நாடகம் நடத்துவதாகத் தீர்மானிக்கப்பட்டது.ஏற்கனவே நல்ல நடிகனாக அங்கீகரிக்கப்பட்டு விட்டதால் அந்த நாடகத்திலும் எனக்கு ஒரு வேடம் தருவதாக முடிவு செய்யப்பட்டது.நான் முன்பு நடித்த மன்னன் பாத்திரம் ஒரு வில்லத்தனமான நாயகன் என்பதால் இந்த நாடகத்திலும் எனக்கு ‘மகாசயர்’ என்ற வில்லன் வேடம் என்று முடிவு செய்தார்கள்(image ! !).ஆனால் கதானாயகன் நரேந்திரனாக நடிப்பதற்கு சரியான மாணவன் கிடைக்காததால் நானே நரேந்திரனாக நடித்தேன். அதில் சில காட்சிகளில் வசனம் பேசி நடிக்கும் போது என் துரோணாசாரியார் ‘சிவாஜி’ அவர்களையே மனதில் நிறுத்தி நடித்தேன்.என் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது.என்னை எல்லோரும் “குட்டி நடிகர் திலகம்” என்று அழைக்கத் தொடங்கினார்கள்.


இதே நாடகம் கோடை விடுமுறையில் நடக்கும் பொருட்காட்சியிலும் நடத்தப்பட்டது.என் ஜோடி அம்மங்கையாக நடித்த மாணவன் என்னை விட சிறிது உயரம்.எனவே அவனை மேடையில் சிறிது தலையைக்குனிந்து கொண்டே நடிக்கச் சொல்லியிருந்தேன்.இருந்தும் இந்த உயர வித்தியாசம் பார்வையாளர்களிடம் கேலிச் சிரிப்பை எழுப்பியது.நாடகம் பார்க்க வந்திருந்த என் தாயார் மற்றும் சகோதரிக்கு சிறிது சங்கடத்தை எற்படுத்தியது.ஆனால் சிறிது நேரம் சென்று என் முக்கிய காட்சி வந்ததும் சிரித்தவர்கள் எல்லாம் என் நடிப்பை ரசிக்க ஆரம்பித்தனர்.என் தாயின் அருகில் அமர்ந்திருந்த பெண் ”இந்தப் பையன் சிவாசி மாதிரியே நடிக்குதே”என்று வியந்து பாராட்டவும் என் தாயார்”என் மகன்தான்” என்று சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டார் களாம்.

இந்த நாடகத்தில் “தூது நீ சொல்லி வாராய்” என்று நிலவைப் பார்த்து நான் பாடும் பாட்டு ஒன்று உண்டு.இது வேண்டாம் என்று முதலில் முடிவு செய்தோம்.ஆனால் அந்தக் காட்சி வருவதற்கு முன்னால் எங்கள் தமிழ் ஆசிரியர் அந்தப்பாட்டையும் சேர்க்கச் சொல்லி விட்டார்.அது காட்சி அமைப்பாளருக்குத் தெரியாது எனவே நான் பாட ஆரம்பித்தவுடன் நிலா காணாமல் போய் விட்டது!! (நான் பாடியது நிலாவுக்கே பொறுக்க வில்லை.ஹா,ஹா)

இப்படியாக பள்ளியில் என் நடிப்பின் காரணமாக ஒரு ராஜாவாகவே வலம் வந்தேன்.இதில் என் கணித ஆசிரியருக்குத்தான் வருத்தம்-’நடிப்பு வந்து என் படிப்பைக் கெடுத்துவிட்டது’ என்று...

(இன்னும் வரும்)

இது ஒரு மீள் பதிவு-சில மாற்றங்களுடன்.

43 கருத்துகள்:

  1. இந்த தமிழ் திரையுலகம் ஒரு நடிகர் திலகத்தை இழந்து விட்டதே சார்...

    பதிலளிநீக்கு
  2. பகல் வணக்கம்,ஐயா!அருமை.தொடர்ந்திருக்கலாமே?(நடிப்பை!)

    பதிலளிநீக்கு
  3. ஒரு நல்ல நடிகர் நல்ல பதிவராக மாறிவிட்டார்

    பதிலளிநீக்கு
  4. இன்றைய பதிவுலக ராஜா அன்றைய நடிப்புலக ராஜா- பள்ளிகளில் சுவாரஸ்யம்,

    பதிலளிநீக்கு
  5. ஏம்பா
    உன்க்கு சினிமால்லாம் தெர்யாதுனு நென்சேன்பா.
    இப்போ இன்னாடான்னா,
    கதை யெயுதுற, திரைகதே போட்றே, அப்பாலிக்கா நடிக்கிறே!
    இன்னா நைனா, உள்ளே ஒரு சின்ன சிவாஜி, சின்ன கமல் அப்பொறம் வொரு பெரிய T ராஜேந்தர் வேற இர்க்காங்க போலயேபா?
    ஜமாய்க்கிறியேபா!
    ட்க்கர் ஆளுபா நீ

    பதிலளிநீக்கு
  6. ஹா... ஹா... நீங்கள் பாட, நிலவு மறைய. நினைத்து ரசிக்க நல்ல அனுபவம்தான். நிறையப் பேர் அப்போதே பாராட்டியது பெரும் ஊக்கத்தைத் தந்திருக்குமே... பின் நடிப்பைத் தொடரவில்லையா? ஏன்? தொடரும் பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  7. அடடடா இந்த பரந்த தமிழ்நாடு அருமையான ஒரு சூப்பர் ஸ்டாரை இழந்துவிட்டதே....!!!

    பதிலளிநீக்கு
  8. வருத்தப்பட்ட வாத்தியார் பாவம்தான், அடி விளுந்துச்சா...?

    பதிலளிநீக்கு
  9. நல்ல வேளை நீங்கள் நடிக்கப் போய்விடவில்லை.இல்லாவிட்டால் இந்த பதிவுலகம் ஒரு நல்ல பதிவரை இழந்திருக்கும். வங்கியில் சேர்ந்தபிறகு நடித்தீர்களா? அதாவது மேடையில்!

    பதிலளிநீக்கு
  10. காணாமல் தொலைந்து போன நட்சத்திரம் தமிழ் சினிமா அருமையான ஒரு நடிகரை இழந்துவிட்டது....

    உங்கள் சின்னவயது பள்ளிக்காலத்தில் உங்கள் திறமையை சிறப்பாக நினைவு கூர்ந்தீர்கள்...தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  11. இன்றைய சிறந்த எழுத்தாளர் அன்றைய நடிகரா!..அருமை வாழ்த்துக்கள் ஐயா ...மிக்க நன்றி பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  12. நிச்சயமாக நீங்கள் நடிகர் திலகம் தான் ஐயா....

    பதிலளிநீக்கு
  13. மைந்தன் சிவா கூறியது...

    // ராஜா வாழ்க :)//
    நன்றி சிவா.

    பதிலளிநீக்கு
  14. எப்பவும் நீங்க ராஜா தான்...முன்னாடியே படித்த பீல்...

    But,சுவாரஸ்யம்...

    பதிலளிநீக்கு
  15. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    //ஆஹா, அண்ணன் வித விதமா பதிவு போடறாரே?//
    நன்றி சிபி.

    பதிலளிநீக்கு
  16. பாலா கூறியது...

    // இந்த தமிழ் திரையுலகம் ஒரு நடிகர் திலகத்தை இழந்து விட்டதே சார்...//

    :( :) நன்றி பாலா.

    பதிலளிநீக்கு
  17. Yoga.S.FR கூறியது...

    //பகல் வணக்கம்,ஐயா!அருமை.தொடர்ந்திருக்கலாமே?(நடிப்பை!)//
    தீர்மானிப்பவன் அவன்!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  18. நம்பிக்கைபாண்டியன் கூறியது...

    //ஒரு நல்ல நடிகர் நல்ல பதிவராக மாறிவிட்டார்//
    நன்றி நம்பிக்கைபாண்டியன்.

    பதிலளிநீக்கு
  19. கோகுல் கூறியது...

    //இன்றைய பதிவுலக ராஜா அன்றைய நடிப்புலக ராஜா- பள்ளிகளில் சுவாரஸ்யம்,//
    நன்றி கோகுல்.

    பதிலளிநீக்கு
  20. சைதை அஜீஸ் கூறியது...

    // ஏம்பா
    உன்க்கு சினிமால்லாம் தெர்யாதுனு நென்சேன்பா.
    இப்போ இன்னாடான்னா,
    கதை யெயுதுற, திரைகதே போட்றே, அப்பாலிக்கா நடிக்கிறே!
    இன்னா நைனா, உள்ளே ஒரு சின்ன சிவாஜி, சின்ன கமல் அப்பொறம் வொரு பெரிய T ராஜேந்தர் வேற இர்க்காங்க போலயேபா?
    ஜமாய்க்கிறியேபா!
    ட்க்கர் ஆளுபா நீ//
    :)) நன்றி அஜீஸ்.

    பதிலளிநீக்கு
  21. கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...

    //குட்டி நடிகர் திலகம் ஐயா வாழ்க...//
    நன்றி சௌந்தர்.

    பதிலளிநீக்கு
  22. கணேஷ் கூறியது...

    //ஹா... ஹா... நீங்கள் பாட, நிலவு மறைய. நினைத்து ரசிக்க நல்ல அனுபவம்தான். நிறையப் பேர் அப்போதே பாராட்டியது பெரும் ஊக்கத்தைத் தந்திருக்குமே... பின் நடிப்பைத் தொடரவில்லையா? ஏன்? தொடரும் பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்...//
    வாய்ப்புகளை நான் தேடவில்லை. தொடர்ச்சி வருகிறது.
    நன்றி கணேஷ்.

    பதிலளிநீக்கு
  23. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //அடடடா இந்த பரந்த தமிழ்நாடு அருமையான ஒரு சூப்பர் ஸ்டாரை இழந்துவிட்டதே....!!!//
    ஹா,ஹா. நன்றி மனோ.

    பதிலளிநீக்கு
  24. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    // வருத்தப்பட்ட வாத்தியார் பாவம்தான், அடி விளுந்துச்சா...?//
    என் SSLC மார்ர்க்கைப் பார்த்து மகிழ்ச்சியாகி விட்டார்!

    பதிலளிநீக்கு
  25. பல திறமைகள் உங்களுக்குள்ளே.... வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  26. வே.நடனசபாபதி கூறியது...

    //நல்ல வேளை நீங்கள் நடிக்கப் போய்விடவில்லை.இல்லாவிட்டால் இந்த பதிவுலகம் ஒரு நல்ல பதிவரை இழந்திருக்கும். வங்கியில் சேர்ந்தபிறகு நடித்தீர்களா? அதாவது மேடையில்!//
    நாளை பாருங்கள்!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  27. K.s.s.Rajh கூறியது...

    //காணாமல் தொலைந்து போன நட்சத்திரம் தமிழ் சினிமா அருமையான ஒரு நடிகரை இழந்துவிட்டது....

    உங்கள் சின்னவயது பள்ளிக்காலத்தில் உங்கள் திறமையை சிறப்பாக நினைவு கூர்ந்தீர்கள்...தொடருங்கள்//

    தொடர்கிறேன்.
    நன்றி ராஜ்.

    பதிலளிநீக்கு
  28. அம்பாளடியாள் கூறியது...

    //இன்றைய சிறந்த எழுத்தாளர் அன்றைய நடிகரா!..அருமை வாழ்த்துக்கள் ஐயா ...மிக்க நன்றி பகிர்வுக்கு .//
    நன்றி அம்பாளடியாள்.

    பதிலளிநீக்கு
  29. மகேந்திரன் கூறியது...

    // நிச்சயமாக நீங்கள் நடிகர் திலகம் தான் ஐயா....//
    :) நன்றி மகேந்திரன்.

    பதிலளிநீக்கு
  30. ரெவெரி கூறியது...

    //எப்பவும் நீங்க ராஜா தான்...முன்னாடியே படித்த பீல்...

    But,சுவாரஸ்யம்...//
    நன்றி ரெவெரி.

    பதிலளிநீக்கு
  31. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

    // தொடரட்டும் உங்கள் கலக்கல்
    அன்புடன்
    ராஜா

    நெருப்பு நரியுடன்(FIREBOX) சில விளையாட்டுகள்.//
    நன்றி ராஜா.

    பதிலளிநீக்கு
  32. எனக்கும் இப்படி நடித்த அனுபவம் உண்டு.சுவையான அனுபவங்களாக இருக்கிறது.தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  33. தங்களின் இந்த பதிவு கல்லூரி நாட்களில் நாடகத்தில் நான் நடித்தது நினைவு படுத்திவிட்டது

    சுவாரஸ்யம் ஐயா

    த.ம 12

    பதிலளிநீக்கு
  34. shanmugavel கூறியது...

    //எனக்கும் இப்படி நடித்த அனுபவம் உண்டு.சுவையான அனுபவங்களாக இருக்கிறது.தொடருங்கள்.//
    உங்களால் இதை மேலும் ரசிக்க முடியும்!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  35. M.R கூறியது...

    //தங்களின் இந்த பதிவு கல்லூரி நாட்களில் நாடகத்தில் நான் நடித்தது நினைவு படுத்திவிட்டது

    சுவாரஸ்யம் ஐயா

    த.ம 12//
    நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  36. குட்டி நடிகர் திலகத்திற்கு
    என் வாழ்த்துக்கள்!

    த ம ஒ 13

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  37. ஐயா பெரிய ஆளா இருப்பார் போலிருக்கே..

    பதிலளிநீக்கு
  38. அடுத்த பகுதியில் ‘குட்டி கே.ஆர்.விஜயா’ பற்றிய மேட்டரை ஓப்பன் பண்ணவும்...ஹி..ஹி.

    பதிலளிநீக்கு