தொடரும் தோழர்கள்

வெள்ளி, நவம்பர் 11, 2011

அரசியல்வாதி!ஹா,ஹா,ஹா!

ஒரு தன்னினந் தின்னி,நர மாமிச உண்ணி(cannibal)  காட்டினுள்நடந்து சென்று கொண்டிருந்தான்.வழியில் மற்றொரு  அவன் இனத்தானால் நடத்தப்படும் ஒரு உணவு விடுதியைக் கண்டான் .

அவனுக்குப் பசியாக இருந்ததால் அங்கு சென்று அமர்ந்து உணவுப் பட்டியலட்டையைப் பார்த்தான்.அதில்

1)சுற்றுலாப்பயணி---ரூ.500

2)வாட்டிய சமயப் பரப்பூழியர்ரூ.750

3) வறுத்த புதியவை தேடுபவர்---ரூ.1000

4)வேக வைத்த அமெரிக்க அரசியல்வாதிரூ.1250

5)மசாலா நிரப்பிய இந்திய அரசியல்வாதிரூ.2500

 அவன்  பணியாளை அழைத்துக் கேட்டான்”ஏன் இந்திய அரசியல் வாதிக்கு இந்த விலை?”

அவன் சொன்னான்.”எப்பவாவது அவங்களைச் சுத்தம் பண்ணிப் பாத்திருக்கீங்களா?  ஒரே அழுக்கு,அசுத்தம், ஒரு நாள் முழுவதும் ஆகும்!”
--------------------------------------------------------------------------------------------------------------


ஒரு முறை மூன்று ஊழல் அரசியல்வாதிகள் தனி விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தனர்

ஒருவர் ஒரு நூறு ரூபாய் நோட்டை கீழே போட்டு,”நான் ஒரு இந்தியனுக்கு மகிழ்ச்சியளித்தேன்”என்றார்.

இன்னொருவர் இரண்டு நோட்டுக்களைக் கீழே போட்டு”நான் இரு இந்தியர்களை மகிழ்ச்சியடையச் செய்தேன்” என்றார்.

மூன்றாமவர் நூறு ஒரு ரூபாய் நாணயங்களப் போட்டு “நான் நூறு  இந்தியர்களுக்கு
மகிழ்ச்சியளித்தேன்” என்றார்.

இவையனைத்தையும் கேட்ட விமான ஓட்டி சொன்னார்”இப்போது நான் உங்கள் மூவரையும் கீழே போட்டால் நூறு கோடி இந்தியர்கள் மகிழ்வார்கள்” என்று !


34 கருத்துகள்:

  1. நூறுகோடி இந்தியர்களில் நானும் உண்டு.ஹாஹாஹா

    பதிலளிநீக்கு
  2. அப்போ அரசியல்வாதிங்க நம்மளை பிச்சைகாரனாகதான் நினைக்கிறாங்க இல்லையா அவ்வ்வ்வ்வ்வ்வ்....!!!

    பதிலளிநீக்கு
  3. இரண்டுமே நல்ல நகைச்சுவை துணுக்குகள்... :) ரசித்தேன்....

    பதிலளிநீக்கு
  4. ஹாஹாஹா...நல்ல நகைச்சுவை துணுக்குகள்...

    பதிலளிநீக்கு
  5. அந்த pilot வேலையை எனக்கு வாங்கி குடுங்களேன்

    பதிலளிநீக்கு
  6. இரண்டு பகிர்வுகளும் அருமை ஜயா அதிலும் முதலாவதில் இந்திய அரசியல்வாதி மேட்டர் சூப்பர்

    பதிலளிநீக்கு
  7. இரண்டாவதில் பைலட்டின் வார்த்தை நச்

    த.ம 6

    பதிலளிநீக்கு
  8. கலக்கல்-கல கல. அதிலும் கடைசி பன்ச்-ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  9. இரண்டு நகைச்சுவைத் துணுக்குகளைப் படித்ததும் சிரிப்பு வந்தாலும், நமது அரசியல்வாதிகளைப் பற்றி நல்ல வார்த்தைகள் சொல்லும் நாள் எப்போது வருமென்று என்ற ஆதங்கமும் இருந்தது.

    பதிலளிநீக்கு
  10. ஹா... ஹா... நல்ல ‌ஜோக்குகள். ரசித்துச் சிரித்தேன். அதிலும் கன்னிபால்ஸ் என்பதற்கு தன்னினந்தின்னி என்று நீங்கள் ‌கொடுத்திருக்கும் வார்த்தை அரு‌‌மை.

    பதிலளிநீக்கு
  11. பித்தரே
    இரண்டும் அருமை!
    இரசித்தேன்!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  12. பாரத ரத்னா விருதுக்கு அந்த விமானி பெயரை நான் ரெகமெண்ட் பண்றேன் வாத்யாரே!

    பதிலளிநீக்கு
  13. விக்கியுலகம் கூறியது...

    // super anne!//
    நன்றி விக்கி.

    பதிலளிநீக்கு
  14. shanmugavel கூறியது...

    //நூறுகோடி இந்தியர்களில் நானும் உண்டு.ஹாஹாஹா//
    நன்றி சண்முகவேல்.

    பதிலளிநீக்கு
  15. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //அப்போ அரசியல்வாதிங்க நம்மளை பிச்சைகாரனாகதான் நினைக்கிறாங்க இல்லையா அவ்வ்வ்வ்வ்வ்வ்....!!!//
    பின்னே இந்நாட்டு மன்னராவா நினைப்பாங்க?
    நன்றி மனோ.

    பதிலளிநீக்கு
  16. வெங்கட் நாகராஜ் கூறியது...

    //இரண்டுமே நல்ல நகைச்சுவை துணுக்குகள்... :) ரசித்தேன்...//
    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  17. ரெவெரி கூறியது...

    //ஹாஹாஹா...நல்ல நகைச்சுவை துணுக்குகள்...//
    நன்றி ரெவெரி.

    பதிலளிநீக்கு
  18. suryajeeva கூறியது...

    //அந்த pilot வேலையை எனக்கு வாங்கி குடுங்களேன்//
    போட்டி அதிகமா இருக்குமே!
    நன்றி suryajeeva.

    பதிலளிநீக்கு
  19. கும்மாச்சி கூறியது...

    //நல்ல நகைச்சுவை.//
    நன்றி கும்மாச்சி.

    பதிலளிநீக்கு
  20. K.s.s.Rajh கூறியது...

    //இரண்டு பகிர்வுகளும் அருமை ஜயா அதிலும் முதலாவதில் இந்திய அரசியல்வாதி மேட்டர் சூப்பர்//
    நன்றி ராஜ்.

    பதிலளிநீக்கு
  21. ரஹீம் கஸாலி கூறியது...

    // arumai//
    வாங்க கஸாலி.நன்றி.

    பதிலளிநீக்கு
  22. M.R கூறியது...

    //இரண்டாவதில் பைலட்டின் வார்த்தை நச்

    த.ம 6//
    நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  23. செங்கோவி கூறியது...

    //ஹா..ஹா..நல்ல ஜோக்ஸ் ஐயா.//
    நன்றி செங்கோவி.

    பதிலளிநீக்கு
  24. FOOD கூறியது...

    //கலக்கல்-கல கல. அதிலும் கடைசி பன்ச்-ஹா ஹா ஹா.//
    நன்றி சங்கரலிங்கம்.

    பதிலளிநீக்கு
  25. வே.நடனசபாபதி கூறியது...

    //இரண்டு நகைச்சுவைத் துணுக்குகளைப் படித்ததும் சிரிப்பு வந்தாலும், நமது அரசியல்வாதிகளைப் பற்றி நல்ல வார்த்தைகள் சொல்லும் நாள் எப்போது வருமென்று என்ற ஆதங்கமும் இருந்தது.//

    :)) :( நன்றி சபாபதி அவர்களே.

    பதிலளிநீக்கு
  26. கணேஷ் கூறியது...

    //ஹா... ஹா... நல்ல ‌ஜோக்குகள். ரசித்துச் சிரித்தேன். அதிலும் கன்னிபால்ஸ் என்பதற்கு தன்னினந்தின்னி என்று நீங்கள் ‌கொடுத்திருக்கும் வார்த்தை அரு‌‌மை.//
    நன்றி கணேஷ்.

    பதிலளிநீக்கு
  27. புலவர் சா இராமாநுசம் கூறியது...

    //பித்தரே
    இரண்டும் அருமை!
    இரசித்தேன்!//
    ஐயா நலமா?நன்றி.

    பதிலளிநீக்கு
  28. சைதை அஜீஸ் கூறியது...

    //பாரத ரத்னா விருதுக்கு அந்த விமானி பெயரை நான் ரெகமெண்ட் பண்றேன் வாத்யாரே!//

    பொருத்தம்!
    நன்றி அஜீஸ்.

    பதிலளிநீக்கு
  29. இந்திய அரசியல்வாதி ஜோக்கும் காரமான கடியும் தான் இப் பதிவின் ஹைலைட் ஐயா.

    பதிலளிநீக்கு
  30. இந்திய அரசியல்வாதி வெறும் ரூபாய் 2500 தானா ? 25000 என்பதினை தவறாக பதித்து விட்டர்கள் என்றே நினைக்கிறன் நூறு கோடி மக்களின் மகிழ்ச்சியை சில நூறு அரசியல் வாதிகள் பறிக்க முடிவதை நினைத்தாள் வேதனை தான் மிஞ்சுகிறது . காலம் எப்போது மாறுமோ . வாசுதேவன்

    பதிலளிநீக்கு