தொடரும் தோழர்கள்

சனி, அக்டோபர் 03, 2015

உண்டென்றால் அது உண்டு!



//வாழ்க்கையின் சூறாவளிகளில் நமக்கு உதவ அவன் இருக்கிறான் என்ற  நம்பிக்கை நமக்கும் வேண்டும்.// ...சென்னை பித்தனின் அந்த மானைப் பாருங்கள் பதிவிலிருந்து.

//அற்புதம் - கடைசி வரியைத் தவிர.

இல்லை. அப்படி இருந்தால் அவளாகவும் இருக்கலாம். இல்லையா?// 
....அப்பதிவில் திரு அப்பாதுரை அவர்களின் கருத்து.

இல்லை-இல்லையா ஆகி விட்டது.
அவனும் அவளும்தானே அர்த்தநாரி? 
இப்படி என் எண்ணச் சிறகுகள் விரிந்தன.அவன்-  அவள்-அது...!அதுவாகக் கூட இருக்கலாம் தானே! நிலம்,நீர்,நெருப்பு,காற்று,அண்டம்-பஞ்சபூதங்கள்!

ஒவ்வொன்றுக்கும் ஒரு தலம் . அதை வர்ணித்து தீக்ஷிதர் கீர்த்தனைகள் பாடியுள்ளார்
                                  ஊர்                      கீர்த்தனை                                         ராகம்
நிலம்           காஞ்சிபுரம்                   ஏகாம்பரநாதம்                               ஆனந்தபைரவி
நீர்               திருவானைக்கா            ஜம்புபதே                          யமுனாகல்யாணி            
நெருப்பு       திருவண்ணாமலை        அருணாசலநாதம்                           சாரங்கா
காற்று          காளஹஸ்தி                  காளஹஸ்தீசம்                               உசேனி
அண்டம்       சிதம்பரம்                     ஆனந்தநடன                                  கேதாரம்

மகாகவி காளிதாசர் சாகுந்தலத்தில் இறை வணக்கத்தை இயற்கைத் தேவதைகளுக்கு அர்ப்பணித்துள்ளர்.

இறைவனைப் போற்றுவதும்,தூற்றுவதும் அவரவர் இன்பதுன்பங்களைப் பொறுத்தே அமையும்

450க்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை(நமக்குக் கிடைத்தது வரை) சுந்தரத் தெலுங்கினில் இயற்றிய தியாக ராஜர்.இராமனைக் கண்டித்தும் உள்ளார்போலி பக்தர்களையும், மெய்ய டியார்களையும் சமமாக்குவது உனக்கு மரியாதை அல்ல.என்னை இன்னும் ரட்சிக்காமல் இருப்பது சரிஅல்லஎன்று!

நமது தமிழ்த் தியாகராசர் சிவனும் நான் ஒரு விளையாட்டுப் பொம்மையா? நீ இரங்காயெனில்  புகலேது என்றெல்லாம் அவளைக் கேட்டிருக்கிறார்.

நம் கவியரசு அவர்கள் ராமன் எத்தனை ராமனடி என்று நாமாவளி பாடி விட்டு “கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்,அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்” அவனுக்கென்ன தூங்கி விட்டான்,  அகப்பட்டவன் நானல்லவா”,காலம் செய்த கோலமடி,கடவுள் செய்த குற்றமடி” என்றெல்லாம் பாடியிருக்கிறார்

ஆனால் நோபல் பரிசு பெற்ற பௌதிக விஞ்ஞானி லியான் மேக்ஸ் லெடெர்மேன் தமது புத்தகத்தில்  ஹிக்ஸ் போசனின் கண்டு பிடிப்பைக் ”கடவுளின் அணு”(god’s particle) என்று பெயரிட்டு போசனைக் கௌரவிப்பது மட்டுமல்லாமல் கடவுளையும் ஆராதித்துள்ளார்.


இல்லையென்றால் அது இல்லையென்றாலும், அவன் ,அவள்,அது உண்டென்றால் அது உண்டுதான் என்றே நினைக்கத் தோன்றுகிறது

......பார்த்தசாரதி  

 டிஸ்கி:உண்டென்று ஏற்றுக் கொண்டால்தானே போற்றுதலும்,தூற்றுதலும்! 

இல்லையென்று சொன்னாலும்,இருந்தா நல்லாருக்கும் என்று சொன்னாலும்,போற்றுதலும் இல்லை தூற்றுதலும் இல்லை அல்லவா? 

38 கருத்துகள்:

  1. உண்டென்று ஏற்றுக்கொண்டால்தான் அது பற்றி மேல் சிந்தனை வரும். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் அய்யா! பதிவின் முடிவில் சொல்லியிருப்பதுதான் என் கருத்தும்
    நன்றி!

    பதிலளிநீக்கு
  3. தங்களின் கருத்தை நானும் வரவேற்கின்றேன் குட்டிப் பையா ! :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அக்கா!!
      (ஒண்ணு தாத்தா,இல்லாட்டி குட்டிப்பையனா!!)

      நீக்கு
  4. அதே அதே!! டிஸ்கிதான் எங்களதும்...ஐம்பூதங்களை யாராலும் வெல்ல முடியுமா? அப்படி என்றால் இல்லை என்று சொல்லுபவர்களும் இதை நம்பித்தானே ஆக வேண்டும்...சூரியன் இல்லை என்றால் இவ்வுலகம் இருக்குமா? அப்போ சூரியன் ?? அப்படி நம்பினால் னம்மை மீறிய ஒரு சக்தியை நம்பினால் அது இயற்கை என்றாலும் இறைவன் என்று சொன்னாலும், அகராதியில் ஏத்தீஸ்ட் என்ற வார்த்தை இருக்கக் கூடாது இல்லையோ...இது கலாம் அவர்களின் வகுப்பறையில் ஆசிரியருடன் வாதம் என்று வந்தது இல்லையா அதன் அடிப்படையில்தான்..இல்லையா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்தசாதி!நன்றி மட்டும் நான் சொல்லி விடுவேன்;அதற்கு மேல் ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் நீங்கள்தான் வர வேண்டும்
      நன்றிங்க!

      நீக்கு
    2. ஆம்1 ஏதோ ஒரு சக்தி;அதை எப்பெயரில் அழைத்தாலும் உண்டென்றால் அது உண்டுதானே!

      --பார்த்தசாரதி

      நீக்கு
  5. God's particle கௌரவிக்க அல்ல :-)
    போற்றுவதற்கே அவசியம் இல்லாத போது தூற்றுவதற்கு என்ன அவசியம்? இல்லாததைத் தூற்றுவது இருப்பதை அங்கீகரிப்பது போலாகிறதே? கறுப்புச்சட்டை நாத்திகத்தின் விளைவு இது. கலர் சட்டை நாத்திகத்தில் போற்றுதலும் இல்லை, தூற்றுதலும் இல்லை. இல்லை தேவையில்லை அவசியமில்லை என்ற அறிவு மட்டுமே.

    இருந்தால் அவளாக இருக்கலாமே என்பதிலிருந்து தூற்றுதலுக்கு எப்படி வந்தோம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் பார்த்தசாரதியை அழைக்கிறேன்!
      நன்றி அப்பாஜி

      நீக்கு
    2. அப்பாதுரை அவர்களே1இல்லை என்று உங்கள் கருத்து ஆரம்பிப்பதால் அது /அவன்/அவள் இல்லை என்பதை வைத்துக்கொண்டே தொடங்கினேன் //போற்றுவதற்கே அவசியம் இல்லாத போது தூற்றுவதற்கு என்ன அவசியம்? இல்லாததைத் தூற்றுவது இருப்பதை அங்கீகரிப்பது போலாகிறதே//
      இது சொல்கிறது நீங்கள் அங்கீகரிக்கவில்லை என்பதை:அவளாக இருக்கலாம் என்பது செகண்டரி!

      இறை நம்பிக்கை உள்ளவர்கள் கூட தூற்றும் நேரம் வரும்!ஆனால் நம்பிக்கை இல்லை என்றால் போற்றுதலும் இல்லை தூற்றுதலும் இல்லை
      இதையே செ.பி.அவர்களும் டிஸ்கியில் சொன்னார்!

      there is no contraversy !
      ....பார்த்தசாரதி

      நீக்கு
    3. god's particle பற்றி--என்னவென்றே புரியாத,புதிய ஒன்றுக்கு ஏன் கடவுளின் பெயர் சூட்ட வேண்டும்;கடவுளும் புரிவதில்லை என்பதாலா?
      ..பார்த்தசாரதி

      நீக்கு
  6. இல்லையென்று சொன்னாலும்,இருந்தா நல்லாருக்கும் என்று சொன்னாலும்,போற்றுதலும் இல்லை தூற்றுதலும் இல்லை //
    ஏற்கலாம் உண்மையே...

    பதிலளிநீக்கு
  7. கடவுள் இருக்கிறார் என்று சில சமயங்களில் தோணுது..
    சில சமயம் ........... ம் ....ம் ......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிக்கெனப் பிடிக்க வேண்டும்!
      நன்றி அபயாஅருணா

      நீக்கு
    2. சிக்கெனப் பிடிக்க வேண்டும்!
      நன்றி அபயாஅருணா

      நீக்கு
  8. வாலிப வயதில் இல்லை என்று சொன்னவர்கள், நாடி தளர்ந்து நலம் கெட்டபின் உண்டு என்று சொல்கிறார்களே அது உண்டு என்பதால் தானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒன்றுமே பயன் இல்லை என்பவர் உணர்ந்த பின்பு அவர் உண்டென்பார்
      ஒவ்வொரு மனிதனும் ஒரு நாள் இன்நிலை எய்துவதுறுதி இதை உணர்ந்தால்(மறந்தால்)
      அந்தி செயலழின் தலம் வரும் பொழுது அவன் (சிவன்) பெயர் நாவில் வாராதே
      ஆதலினால் மனமே இன்றே அவன்(சிவன்) நாமம் சொல்லிப் பழகு....பழ்கு...

      -பாபநாசம் சிவன் அவர்களின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றது ...அருமையான வரிகள்....

      கீதா

      நீக்கு
  9. இருக்கிறது இல்லை என்று எவ்வளவோ வாதங்கள் வந்தாகிவிட்டது! நம்பிக்கை இருக்குமிடத்தில் கடவுள் இருக்கிறான் என்பது என் தாழ்மையான கருத்து.

    பதிலளிநீக்கு
  10. நல்ல பகிர்வு ஐயா...
    கடைசிப் பாரா முத்தாய்ப்பாய்....

    பதிலளிநீக்கு
  11. மதங்கள் இல்லாவிட்டால் கடவுள் இருப்பதாக நம்பலாம் :)

    பதிலளிநீக்கு
  12. விட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........

    பணம்அறம்

    நன்றி

    பதிலளிநீக்கு
  13. நம்பிக்கை என்பது ஒரு பற்றுகோல். அது அவரவர் மனத் திண்மையைப் பொறுத்து.

    பதிலளிநீக்கு
  14. எதிலும் நம்பிக்கைதான் வெற்றிக்கு வழி வகுக்கும்!

    பதிலளிநீக்கு
  15. கடவுள் உண்டா இல்லையா என்பது அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தது; அவரவர் உணர்தலைப் பொறுத்தது. (தெய்வம் என்றால் அது தெய்வம்; வெறும் சிலை என்றால் அது சிலைதான் – கண்ணதாசன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த வரிதான் ’உண்டென்றால் அது உண்டு,இல்லையென்றால் அது இல்லை!’
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ் இளங்கோ அவர்களே

      நீக்கு