தொடரும் தோழர்கள்

திங்கள், அக்டோபர் 26, 2015

சாகா வரம்!



சாகா வரம் எவ்வளவு பெரிய சமாச்சாரம். அதைப் பெற்றவர்கள் பாற்கடல் பரந்தாமனையும், திருக்கையிலைநாதனையும் யார் என்று கேட்பார்கள். பிறவா வரம் என்றால் என்ன என்ற வினாவை எழுப்பி எள்ளி நகையாடுவார்கள். பாவமானது! புண்ணியமாவது!! கெட்டதெல்லாம் நல்லதே.

சாவையும், காலனையும் வென்று என்றும் பதினாறில் நிலை நின்ற மார்கண்டேயர் அதன் பிறகு என்ன ஆனார்? இதற்கு பதில் சொல்ல சென்னைப் பித்தன் அவர்களை தான் நாடவேண்டும்.

இந்த சிந்தனைகள் ஏன் உதித்தன? நான் அக்டோபர் 21 அன்று காலை சரஸ்வதியை துதிக்க தயாராகிக் கொண்டிருந்த போது கைபேசிசெந்தமிழ் நாடென்னும் போதினிலே, இன்பத்தேன் வந்து பாயுது காதினிலேஎன்று ஒலித்தது. தொடர்பை துண்டிக்காமல் பேச முற்பட்டேன் மறுமுனை நபர் நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.

நான் வயிற்றுப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவன் சிகிச்சைக்கு, அறுவை சிகிச்சைக்கு பெரிய செலவாகிறது. உதவி வேண்டும் என்றார்

கணிசமான தொகை கொடுத்தால்தான் உங்களுக்கு உதவ முடியும். உங்கள் நிலைக்காக வருத்தப்படுகிறேன். பென்ஷனில் வாழும் என்னால் உங்களுக்கு வாழ்த்துக்களை தவிர பெரிதாக உதவ முடியாது.நின்ஙள் குனமாகி நீண்டநாள் வாழ வாழ்த்துகிறேன். என்று பணிவான குரலில் விடையளித்தேன். அவரால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

யாருக்கு வேணாலும் கேன்ஸர் வரலாம் என்றார்.

நீங்கள் சொல்வது சரியே

இதை அறிந்தும் உதவ மறுக்குறீர்களே

என்னாலான பரோபகாரங்களை செய்து கொண்டு தான் இருக்கிறேன், அதை உங்களுக்கு விளக்க அவசியமும் அவகாசமும் இல்லை. 

கோபப்படாதீர்கள்என்றார்.

நான் இவ்வளவு தூரம் கேட்டதற்கு ஒரு ரூபாயாவது கொடுக்கலாமேஎன்று கேலிக்குரலில் சொன்னார்

ரொம்ப சரி. உங்கள் பெயர் என்ன?............. ஓஹோ!!

இன்றே பத்து பேர்களுக்கு உங்கள் பெயரைச் சொல்லி ஆளுக்கு பத்து ரூபாய் தருகிறேன் ஐயாஎன்று சொல்லி துண்டித்தேன்..

சரஸ்வதியை ஸ்துதிக்கும் போதுஉலகில் நோயினால் வாடும் பல்லாயிரம் கோடி மக்களுக்கு நிவாரணமும் நிம்மதியும் அளித்து அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடு தாயேஎன்று பிரத்தியேகமாக வேண்டிக் கொண்டு பிரார்த்தனையை முடித்தேன்.

அன்று மாலை, உலாவப் போகும் போது புற்று நோய் கொடியது என்ற சிந்தனைதான் மனதில் மேலோங்கியது. பல கண்டுபிடிப்புக்களையும் தாண்டி வியாதி வளர்ந்து கொண்டே செல்கிறது. மூப்பு, பிணி, மரணம், உலக நியதி தான். விபத்துக்கள், புற்றுநோய். வீரியமானவை. விபத்து அன்று கொல்லும் புற்றுநோய் நின்று கொல்லும்.

நோய் நிவாரணத்துக்காக நாம் செய்யும் சிறுஉதவிகள், பெருதுளியாகி  வெள்ளிப்பனிமலை ஆகலாம். பாத்திரமறிந்து பிச்சையிடுவது அவசியம் என்று சிந்தனைகள் சுழன்றன.

மேற்கில் சூரிய அஸ்தனம் புற்று நோய் என்றாலே அஸ்தமனம் தானே. மேற்கே வண்ணங்கள் பொங்கிப் பீரிட்டின. கண்களும்  குளிர்ந்தன மனமும் அமைதி அடைந்தது. 

நான் இதுவரை பார்த்த வர்ணஜாலங்களிலேயே அற்புதமானது.அகிரா க்கரூசோவாவின் ட்ரீம்ஸ், கனவுகள், என்ற ஜப்பானிய படத்தில் தான். 1990ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்திற்கு சோனி நிறுவனம் தொழில்நுட்ப உதவி வழங்கியுள்ளது. 

டைரக்டர் க்கரூசோவாவுடன் வார்கனர் பிரதர்ஸ் நிறுவனம், ஜார்ஜ் லூகாஸ், போர்ட் கோப்ளர், ஸ்டீபன் ஸ்பீல் பர்க் இணைந்தால் பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இல்லை.

வர்ணங்கள் நதியாக ஒடும், அருவியாகக் கொட்டும், காட்டாறாக சீரும், சாரல் மழை போல் தூவும். படம் புது அனுபவத்தை ஏற்படுத்தும். இயற்கையை கொண்டாடும். சுற்றுப்புற சூழலின் தூய்மையை பறைசாற்றும். மாசு மருவற்ற சூழலை உருவாக்க உத்தரவு இடும்.


போரில்லா உலகை நில நாட்டி, அணு ஆயுதங்களை புறக்கணிக்க அறைகூவும். ஜப்பானை அணுகுண்டு வீசி சீர்குலைத்த அமெரிக்காவின் திரைப்படத்துறை ஜாம்பவான்களுடன் ஈடு இணையற்ற ஒத்துழைப்போடு ஒரு தலையாய பணியை துல்லியமாக படைத்திருக்கிறார் ஜப்பானிய சினிமா மேதை. காந்தியை இங்கிலாந்தின் சர் ரிச்சர்ட் அட்டெண்ட் பர்ரோ தானே தயாரித்து இயக்கி ஆஸ்காரை வாங்கவில்லையா

அவரேஇக்ரூ” (IKURU) என்ற ஒரு படத்தை எடுத்தார். “TO LIVE” என்று அர்த்தம். புற்றுநோய் தாக்கப்பட்டவர் எப்படி தனது மீதி உள்ள வாழ்க்கையை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்கிறார் என்பதே கதை.

நீர் குமிழி சேது(நாகேஷ்) ஆனந்த் (ராஜேஷ் கண்ணா) இவர்களை விட வித்யாசமானவர்.

இக்ருநாயகன், டோக்கியோ நகரசபையில் உயர் உதவி வகித்தவர். ஊழல் விளையாடும் இடம் அது. புற்றுநோய் வந்துவிட்டது என்றவுடன், மனைவியை இழந்த அவர், தன் குடும்ப உறுப்பினர்களை நம்பமுடியாதபடி சில சம்பவங்கள் நடக்கின்றன. தனக்குக் கீழே உதவியாக இருந்த ஒரு பெண்ணிடம் தஞ்சம் தேடுகிறார். தனக்கு குடும்பக் கடமைகள் உள்ளதால் தன்னால் அதிக நேரம் அவருடன் செலவிட முடியாது என்று அவள் அவரைபுரிய வைத்தது.

சாவதற்கு முன் ஏதாவது நல்ல காரியம்செய்யத் தூண்டுகிறார். 

அவர் செய்யத் துணியும் நல்ல காரியம் இதுதான். தனது வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் புறம்போக்கு நிலத்தை விஷமிகள் ஆக்ரமித்து சமூக விரோத செயலில் ஈடுபடுகிறார்கள். பணியில் இருக்கும் போதே இதை அறிவார். இப்போது அவர்களுடன் கடும் போரிட்டு (சட்ட ரீதியாக) அப்புறப்படுத்தி ஒரு அழகான சிறுவர் பூங்காவை உருவாகச் செய்கிறார். பணம், சக்தி எல்லாம்  பாஸிடிவ்வாக செலவாகிறது.

அந்தப் பூங்காவின் துவக்க நாளன்று இரவில் பனி பெய்யும் அந்த இரவில், ஊஞ்சலில் ஆடிக்கொண்டே பரிபூரண நிம்மதியுடன் உயிர் துறக்கிறார். நாம் அவருக்கு நம் மனதில் சாகாவரம் அளித்து சாஸ்வதமாக இடம் கொடுத்துவிடுவோம்.

--பார்த்தசாரதி

டிஸ்கி:
//சாவையும், காலனையும் வென்று என்றும் பதினாறில் நிலை நின்ற மார்கண்டேயர் அதன் பிறகு என்ன ஆனார்? இதற்கு பதில் சொல்ல சென்னைப் பித்தன் அவர்களை தான் நாடவேண்டும்.//

நண்பர் பார்த்தசாரதியிடம் இதுதான் பிரச்சினையே!முன்பே நான் சொன்னது போல் ஏதாவது சிக்கலில் மாட்டி விடுகறார்!
பார்க்கலாம்!

18 கருத்துகள்:


  1. நண்பர் திரு பார்த்த சாரதி அவர்கள் ஒவ்வொரு தடவையும் புதிய புதிய தகவல்களை/நிகழ்வுகளைத் தந்து வியப்பில் ஆழ்த்துகிறார். அவருக்கு பாராட்டுக்கள்! மார்க்கண்டேயன் பற்றி உங்களின் கருத்தை அறிய ஆவலோடு எதிர் நோக்கி காத்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் அய்யா! புது புது கோணங்களில் அறிய தகவல்கள்! பொன்னர் -சங்கர் இவர்களுக்குகூட என்றும் 16தான் என்று படித்திருக்கேன்! அடுத்து ஆவலுடன்! நன்றி

    பதிலளிநீக்கு
  3. புதுமையான விடயங்களோடு ஆரம்பம் தொடர்கிறேன் ஐயா

    பதிலளிநீக்கு
  4. உங்கள் பதிலை விரைவில் எதிர்ப்பார்க்கிறேன் ஐயா...

    பதிலளிநீக்கு
  5. சாகாவரம் ...இரண்டு விசயங்களை முடிச்சு போட்டது சூப்பர் !அதை விட சூப்பர் ,உங்களுக்கு போட்டிருக்கும் முடிச்சு ,எப்படி அவிழ்க்கப் போகிறீர்கள் :)

    பதிலளிநீக்கு
  6. நான் இது போல் கான்சர் வந்து துன்பப்பட்ட ஒரு மிக நெருங்கிய உறவினருக்கு ரூ 50000 கடனாகக் கொடுத்தேன் 2004 செப்டெம்பரில். .கஷ்டப்பட்ட காலங்களில் தினம் ( ஓர் மூன்று மாதம் நாள் தவறாமல் )போன் செய்து விசாரித்து ஆறுதல் சொன்னேன் இன்று உயிரோடு உள்ள அவரது மனைவி ..... நீங்களே புரிந்து கொள்ளுங்கள் .இதுதான் உலகம்

    பதிலளிநீக்கு
  7. சாகா வரம் - சாகும் நிலை இருக்கும்போதே பலரை கையில் பிடிக்க முடிவதில்லை.... இதில் இது வேறு கிடைத்து விட்டால்....

    சிலருக்கு உதவி சின்னா பின்னப்பட்ட அனுபவம் உண்டு.

    உங்கள் பதிவினையும் படிக்கும் ஆவலுடன்....

    பதிலளிநீக்கு
  8. ஒவ்வொரு பதிவிலும் ஒரு புதுமையான கருத்தைச் சொல்லிப்போகும் விதம் மிகவும் கவர்கிறது ஆச்சரியமாக இருக்கிறதுங்க ஐயா. பதிலுக்காக காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. சாகா வரமும், பிறவா வரமும் சிந்திக்க வைக்கிறது.

    தாம்பரத்திலிருந்து ஒரு அனாதைக் குழந்தைகள் காப்பகம் என்று சொல்லி எனக்கு ஒரு அலைபேசி அழைப்பு வரும். அவர்களும் வற்புறுத்தி உதவி கேட்பார்கள்.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. இந்த பதிவுதான் அந்த பதிவுக்கு முன்னோட்டமா? நல்லதொரு பதிவு! சிந்திக்க வைத்தது! நன்றி!

    பதிலளிநீக்கு
  11. ஓ! இதன் அடுத்த பதிவை வாசித்துவிட்டு இங்கு வந்தால் அதற்கு ஒரு க்ரவுண்ட் வொர்க் இங்கு....ம்ம்

    பிறவா வரம் ...சாகா வரம் எதிர் எதிர் ...

    உதவிவிட்டு பட்ட கஷ்டங்களும் உண்டு...பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்பதுதான் நினைவிற்கு வருகின்றது. அதே போன்று எதிர்பாராமல் உதவி செய்ய வேண்டும் என்று சொல்லப்படுவதும் முரண்டுகின்றது.

    பதிலளிநீக்கு