தொடரும் தோழர்கள்

வியாழன், அக்டோபர் 01, 2015

இன்றைய இளைஞனும் நாளைய முதியவன்தான்!(உலக முதியோர் தினம்)

ஒரு இளைஞன்,தன் கல்லூரிப் படிப்பை முடித்து பட்டம் பெறுவதற்காக் காத்திருந்தான்.
ஒரு அழகிய விலை உயர்ந்த மகிழ்வுந்தைக் கடையில் கண்டு அது வேண்டும் என ஆசைப் பட்டான்.பண வசதியுள்ள தன் தந்தையிடம் தனக்கு அது பட்டம் பெறும் தினப் பரிசாக வேண்டும் எனத் தெரிவித்தான்.
தந்தை புன்னகைத்தவாறு தலையசைத்தார்.
பட்டம் பெற்றான்.
அன்று அவன் தந்தை அவனைத் தன் அறைக்கு அழைத்து அவனைப் பாராட்டி விட்டு அவன் கையில் ஒரு பரிசுப் பொட்டலத்தைக் கொடுத்துச் சொன்னார்”இது உனக்கு மிக உதவியாக இருக்கும்”.
அவன் அதை ஆர்வத்துடன் பிரித்தான்.உள்ளே ஒரு அழகிய பகவத்கீதைப் புத்தகம் இருந்தது.
அவனுக்கு அளவற்ற கோபம் வந்தது.
புத்தகத்தை மேசை மீது போட்டான்.
தந்தையை கண்டவாறு இகழ்ந்தான்.
வீட்டை விட்டு வெளியேறினான்.
ஆண்டுகள் ஓடின.
அவன் நல்ல வேலை,பணம்,வீடு குடும்பம் எல்லாம் பெற்றான்.
ஒரு நாள் அவன் தந்தை இறந்ததாகச் செய்தி வந்தது .
அவன் தன் ஊருக்குச் சென்றான்.
தந்தையின் அறைக்குச் சென்றபோது அந்த பகவத்கீதை கண்ணில் பட்டது.
அதை எடுத்துப் பிரித்தான்.அது திறந்த பக்கத்தில் ஓர் உறை ஒட்டப்பட்டிருந்தது.
அதன் மேல் என் அன்பு மகனுக்கு என எழுதப்பட்டிருந்தது.
அந்த உறையைப் பிரித்தான் .உள்ளே ஒரு மகிழ்வுந்து சாவியும், முழுத்தொகயும் செலுத்தி யதற்கான சீட்டும் இருந்தன.
அவன் கண்ணீர் விட்டான்.
………………………………..
ஆம்! நாம் பல நேரங்களில் நம் பெற்றோரின் அன்பைப் புரிந்து கொள்வதில்லை!
அன்பு மட்டுமல்ல;அவர்களின் உணர்வுகள் எதையுமே சரியாகப் புரிந்து கொள்ளாமல், அவர்களைக் காயப்படுத்தி விடுகிறோம்.
எத்தனையோ பெற்றோர் தங்கள் வறுமை நிலையிலும் குழந்தைகளுக்கு வேண்டியவற்றை இயன்ற அளவு செய்து கொடுக்கிறார்கள்,தங்கள் தேவைகளைச் சுருக்கிக் கொண்டு!
ஆனால் நாமோ பெரியவர்களான பின் அவற்றை மறந்து அவர்களை அலட்சியப் படுத்து கிறோம்.
முதியோர் வேண்டுவது மிகப்பெரிய வசதிகளை அல்ல.
அவர்கள் முக்கியத் தேவை அன்பு மட்டுமே.
 
 
அது கிடைத்தால் நீங்கள் குடிக்கும் கூழோ கஞ்சியோ குடித்துக் கொண்டு மகிழ்ச்சியாக 
உங்களுடன் காலம் கழிப்பார்கள்.
இந்த உலக முதியோர்  நாளில் ,எல்லா மகன்/மகள்களுக்கும் அந்த விழிப்புணர்வு வரட்டும்!
 
 
(மீள் பதிவு)
.......................................................

33 கருத்துகள்:

  1. மிக மிக நன்றி அய்யா! அன்பை குறைத்து விட்டு இன்று எததற்கே அடிமையாகிவிட்டோம்! அன்பை பெருக்கினால் முதியோர் இல்லங்கள் அழிந்துவிடாதா??

    மீண்டும் நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆதரவற்றவர்களுக்கு முதியோர் இல்லங்கள் இருக்கலாம்.ஆனால் மகன்,மகள் என்று அனைவரும் இருக்கையில்?
      நன்றிபூபகீதன்

      நீக்கு
  2. அருமையா பகிர்வு இப்போது நான் எப்படி அழைப்பது நீங்கள் என்னுடைய பதினாறு வயது நிரம்பிய செல்லத் தாத்தா அன்பும் பண்பும் நிறைந்த தாத்தா தங்களின் இதயத்தில் குடிகொண்டு இருக்கும் வாய்ப்பைப் பெற்ற நான் இன்றைய புனித நாளில் வாழ்த்தியும் வணங்கியும் செல்கின்றேன் இன்று எங்களை நீங்கள் வாழ்த்துங்கள் அது எம் வாழ்வை வளப்படுத்தும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் வாழ்த்து உனக்கு எப்போதும் உண்டம்மா.
      பதினாறு வயதில் தாத்தாஇருக்க முடியுமா?!
      நன்றி அம்பாளடியாள்

      நீக்கு
  3. இது உண்மையான நிகழ்வாக இருக்கக்கூடாது என மனம் தவிக்கிறது. ஆனாலும் கண்ணீரை தடுக்க இயலவில்லை. தலைப்பே சொல்கிறது. நாளைய நிகழ்வை.சிறப்பான பகிர்வுங்க ஐயா.

    பதிலளிநீக்கு
  4. இன்றைய முதியோர் நாளில் சொல்லப்பட்ட இந்த கதையை முன்பே படித்திருந்தாலும் அந்த கதையோடு இன்றைய இளைஞர்களுக்கு சொல்லியிருக்கும் அறிவுரை பொன்னேட்டில் பொறிக்கப்படவேண்டிய ஒன்று. பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்!
    இங்ஙனம்
    நேற்றைய இளைஞன்.

    பதிலளிநீக்கு
  5. முதியோர்கள் தினத்திற்கேற்ற கதை. நம் குழந்தைகள் நம் அன்பை புரிந்து கொண்டாலே போதும் என்றுதான் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  6. மனம் நெகிழ வைத்து விட்டீர்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  7. முதியோர் தின பதிவு மிக அருமை சார்.

    பதிலளிநீக்கு

  8. அன்புக்கு ஏங்கும் உள்ளங்களை "முதியோர் தினம்"
    வெளிச்சம் போட்டு காட்டிய அரும் படைப்பு!
    பெருமை அய்யா!
    த ம +


    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  9. கண்களில் கண்ணீரை கசிய வைத்த பதிவு. எல்லோரும் எல்லா பருவத்தையும் கடந்துதான் ஆக வேண்டும். அதுதான் இயற்கையின் நியதி.
    முதியோர் தினத்திற்கேற்ற அருமையான பதிவு!
    த ம 4

    பதிலளிநீக்கு
  10. மனதினை நெகிழச் செய்யும் பதிவு ஐயா
    ஒவ்வொருவருமே ஒர நாள் முதுமையை எய்தத்தான் போகின்றோம்
    அதை மறந்து விட்டு, பலர் செய்யும் செயல்கள் வருந்துதற்கு உரியது ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  11. காலத்திற்கேற்ற தேவையான பதிவு. பலருடைய மனதை உறுத்தும். பலர் மனதில் பதியும். நன்றி.

    பதிலளிநீக்கு
  12. இன்றைய நாளின் தேவை இதுவானதால் இனிய முதியோர் தின நல்வாழ்த்துக்களுடன் ......பகிர்விற்கு என் நன்றிகள் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  13. முன்பே படித்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை படித்தேன். பல இடங்களில் இந்த நிலை தான் என்பது வருத்தம் தரும் விஷயம்....

    பதிலளிநீக்கு
  14. படித்ததும் மனம் நெகிழ்ந்துவிட்டது...பல குடும்பங்களில் இந்த நிலைதான் என்பது மிக மிக வேதனையான விஷயம்..தங்களைக் குறித்து அறிவோம் என்பதால் இந்த தினம் முடிந்துவிட்டாலும், எல்லா தினங்களுமெ இதே தினம் தானே என்ற பார்வையில் உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்!! (இதுக்குத் தமிழ் எல்லாம் கேக்கப்டாது...இருந்தாலும் ராஜ வணக்கம்!!! மரியாதை!!! )பதிவிராக அல்ல...உங்களைக் குறித்துத் தெரியும் என்பதால்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துளசிதரன்
      //)பதிவிராக அல்ல.//
      பதிவராகச் சொல்ல ஒன்றும் இல்லை என்கிறீர்களா?!
      உண்மையைத்தான் சொல்கிறீர்கள்!

      நீக்கு
  15. காலத்தின் கோலம் என்பதா இல்லை நவீனத்த்தின் மோகம் இந்த நிலையோ?? நெகிழ்ச்சியாக்கும் பகிர்வு ஐயா.

    பதிலளிநீக்கு
  16. இன்னொரு வித்தியாசமான சிந்தனை.... சரியா தவறா ....? தெரியவில்லை!

    http://dharumi.blogspot.in/2006/12/192-for-eyes-of-senior-citizens-only.html

    பதிலளிநீக்கு