தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஆகஸ்ட் 21, 2015

புள்ளிராஜாவுக்கு............வருமா?



அன்று வேலைக்கு வரும்போது துரைக்கு மனதே சரியில்லை.

உள்ளத்தில் குழப்பம்;ஓர் ஊமைக் கோபம்;வெடிக்கத்தயாரான ஓர் எரிமலை போல இருந்தது உள்ளம்.

ஆனால் அன்று வெளியூர் செல்லவேண்டும்.அதனால் அவன் சீக்கிரமே வந்து விட வேண்டும் என்று சொல்லி விட்டு அவன் முதலாளி அவனுக்கு 500 உரூபாய் வேறு கையில் கொடுத்து அனுப்பினார்.

அந்த நோட்டை எடுத்துப் பார்த்தான்.

தூக்கி அருகில் இருந்த நாற்காலி மீது எறிந்தான்

புறப்பட்டான் வேலைக்கு.

அவன் முதலாளி ஒரு அரசியல்வாதி.ஆளும் கட்சிப் பிரமுகர்,மாவட்டத் தலைவர். அன்று வெளியூர்செல்ல வேண்டும் கட்சிப் பணிக்காக.

அவர் வண்டியில் ஏறியதும் தானும் அமர்ந்து வண்டியை உயிர்ப்பித்தான்.

ஊரை விட்டு வெளியே வந்து நெடுஞ்சாலையில் விரைந்தது வண்டி.

பாதி தூரம் கடந்திருந்த நேரம்.சாலையின் குறுக்கே வந்த ஆட்டுக் குட்டியின் மீது ஏற்றாமலிருக்க வண்டியை ஒடித்தபோது கட்டுப்பாடிழந்து வண்டி சாலை யோரத்தை நோக்கிப் பாய்ந்து,கரணம் அடித்து விழுந்தது.


வயற்காட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓடி வந்தனர்

துரைக்குச் சிறிய காயம்தான்,

ஆனால் அவன் முதலாளிக்கு பலத்த காயம்,

அவரை வெளியே எடுப்பதே கடினமாக இருந்தது.

பார்க்கும்போது அவர் மயக்கமுற்றிருந்தார்.

குருதிப் பெருக்கு அதிகமாக இருந்தது.

அங்கிருந்தோர் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்த மருத்துவ மனைக்கு அவரைத் தூக்கிச் செல்லலாம் என தூக்கிக் கொள்ள அவன் அவர்களுடன் சென்றான்.

மருத்துவர் பார்த்தார்

”அதிகம் இரத்தம் வெளியேறி விட்டது .அவர் இரத்தம் அரிய வகை.இங்கே கிடைக்காதே”என்றார்.

அவன் யோசித்தான்.

”ஐயா.என் இரத்தம் அவர் பிரிவைச் சேர்ந்த்துதான்.அடிக்கடி அவரே அதைக் குறிப்பிட்டுப் பேசுவார்.எனவே என்னிடம் இருந்து எடுத்துக் கொள்ளுங்கள்”

“உங்களுக்கு காசம் புற்றுநோய் எதுவும் இல்லையே?”

”நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்”

”சமீபத்தில் காமாலை,விடக்காய்ச்சல் ஏதாவது வந்ததா”


”ஐயா நேரத்தை வீணாக்காதீர்கள்.எனக்கு எந்த வியாதியும் இல்லை”

அதற்குள் அங்கு வந்து சேர்ந்த  முன்பே துரையை அறிந்த உள்ளூர்க் கட்சிக் காரர்களும் அவசரப் படுத்த, மருத்தவர் துரையின் இரத்தத்தை அவன் முதலாளிக்கு ஏற்றினார்.

கட்சிக்காரர்கள் துரையைப் பார்த்து“ஐயா உயிரைக் காப்பாற்றி விட்டீர்கள்” எனப் பாராட்டினர்.

துரையின் முகத்தில் ஒரு புன்னகை 

அதன் பொருள் என்ன?...............

(தொடரும்)

22 கருத்துகள்:

  1. ஆஹா துரைக்கு எயிட்ஸ் ஏதும் இருக்குமோனு ?பயமாக இருக்கிறது ஐயா உடனே அடுத்த பதிவை போடுங்கள்

    பதிலளிநீக்கு
  2. தொடர்கிறேன்! சரியான இடத்தில் கொக்கி போட்டு நிறுத்திவிட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
  3. இவ்வளவு வேகமாக ஆரம்பித்துவிட்டு திடீரென தொடரும் என்றதும் சற்றே ஏமாந்தோம்.

    பதிலளிநீக்கு
  4. குருதிக்கொடை கொடுத்ததால் உண்மையில் இரத்தத்தின் இரத்தம் ஆகிவிட்டோமே என்பதால் வந்த புன்னகையா?

    பதிலளிநீக்கு
  5. என்ன ,என்ன ,என்ன .இப்படி மண்டையைக் காய விடலாமா :)

    பதிலளிநீக்கு
  6. கதையை ஆவலோடு படித்து வந்தேன். தொடரும் என்று போட்டுட்டீங்க. நாளை மீண்டும் பதிவை பார்க்க வருகிறேன் சார்.

    பதிலளிநீக்கு
  7. இது எயிட்ஸ் என்ற குரூரம் அல்ல... சாதி என்னும் வெறி பிடித்த மனிதனுக்கு தனது ரத்தத்தைக் கொடுத்த குரூரமே என்று தோன்றுகிறது....

    பதிலளிநீக்கு
  8. ஆகா
    அடுத்தப் பதிவிற்காகக் காத்திருக்கிறேன் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  9. ஒண்ணு அந்த ஆளுக்கு புள்ளி பரவப்போகுது.

    இல்லைனா இவன் சாதி இப்ப அவரோட கலந்துருச்சு.....அது சாதி வெறியொ இல்லை தொண்டன் சாதியோ.

    பதிலளிநீக்கு
  10. தலைப்பே ஆவலைத் தூண்டுகிறது. அதற்கேற்ப தொடரும் போட்ட இடமும்

    பதிலளிநீக்கு
  11. வணக்கம்
    ஐயா
    படிக்க படிக்கத்தான் சொல்லுது.. அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  12. சரியான இடத்தில் தொடரும்.... இப்பவே படிக்கணுமே! :)

    பதிலளிநீக்கு