தொடரும் தோழர்கள்

திங்கள், ஆகஸ்ட் 24, 2015

நள்ளிரவில்,ஒரு நகைக்கடையில்.......



அழைப்பு மணி ஒலித்தது.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நகைக் கடை அதிபர் ராசமாணிக்கம் கண் விழித்தார்.

உண்மையில் அழைப்பு மணி ஒலித்ததா.இல்லையேல் பிரமையா என்று யோசித்தவாறு படுத்திருந்தார்.

மீண்டும் அழைப்பு மணியின் ஓசை ,இரண்டு! முறை விட்டு,விட்டு!

சுவர்க் கடிகாரத்தில் மணியைப் பார்த்தார்.

மணி 12.30

இநத நள்ளிரவில் யார் என்று சிந்தித்தார்.

மீண்டும் மணி.

எழுந்து வாசல் கதவை நோக்கி நடந்தார்.

கூடத்தின் விளக்கு விசையைத் தட்டினார்.

கதவை நோக்கி நடந்தார்.

கதவருகே சென்றதும்அங்கிருந்த சாளரம் வழியாகப் பார்த்தார்

இரண்டு பேர் நின்றிருந்தனர்.

ஒருவர் அவர் நன்கு அறிந்த முத்துசாமி.அவர் வாடிக்கையாளர்

கதவைத் திறந்து அவரைப் பார்த்து “என்ன இந்த நேரத்தில்” என்றார் 

முத்துசாமியும் அவருடன் இருந்தவரும் மிகப் பதட்டமாய்க் காணப்பட்டனர்.

மீண்டும் கேட்டார்” நாளைக் காலை உங்க மகள் தங்கம்மா திருமணம் இப்போது இங்கே….?”

முத்துசாமி சொன்னார்”இவர்தான் என் சம்பந்தி பச்சையப்பன்.சாயந்திரம் வரவேற்பு முடிந்து பார்க்கும்போது நகைகள் எல்லாம் திருட்டுப் போயிருந்தது தெரிய வந்தது.நாளைக்காலை,6 மணிக்கெல்லாம் முகூர்த்ர்தம்;தாலி வேண்டுமே. அதனால்தான் உங்களைத் தேடி வந்தோம் உங்கள் கடை யிலிருந்து ஒரு தாலியும் சங்கிலியும் கொடுங்கள்.கையில் இருந்த பணத்தைத் திரட்டிக் கொண்டு வந்திருக்கிறேன்.உதவுங்கள்”

ராசமாணிக்கம் யோசிக்கவேயில்லை.”இருங்க சாவியை எடுத்திட்டு வரேன்” என்று சொல்லி உள்ளே போனார்..

சாவியுடன் திரும்பி வந்து அருகில் இருந்த நகைக்கடையைத் திறந்தார்

அந்தப் பக்கமாக் ரோந்து வந்த காவலர்கள் நின்று விசாரிக்க விவரம் சொன்னார்கள்.உள்ளே சென்று தாலிவகைகளைக் காட்டி முத்துசாமி வேண்டியதை எடுத்துக் கொண்டதும் துண்டுச் சீட்டில் கணக்குப் போட்டு விலையைச் சொன்னர், நாளைக்கு வந்து விலைப்பட்டி வாங்கிக் கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டு,பணத்தை வாங்கி கைப்பையில் வைத்தார்.அது வரை அங்கு நின்றிருந்த காவலர்க்கு ஏதோ கொடுத்தார்.

கடையைப் பூட்டினார்

முத்துசாமி கண்கள் பனிக்க நன்றி கூறி சம்பந்தியுடன் அங்கிருந்தே மண்டபம் நோக்கி விரைந்தார்,மறுநாள் திருமணம் தடங்கலின்றி நடக்கும் என்ற நிம்மதியுடன்! 


(கதையல்ல,உண்மை.இரு தினங்களுக்கு முன் சென்னையில் நடந்தது.ஆதாரம் டைம்ஸ் ஆப் இந்தியா)


26 கருத்துகள்:

  1. மனிதம்முற்றிலுமாய் அழிந்துவிட வில்லை என்பதைக் காட்டும் நிகழ்வு
    நகைக் கடைக்காரர் பாராட்டிற்கு உரியவர்
    பாராட்டுவோம்
    தம 1

    பதிலளிநீக்கு
  2. ஒரு செய்தியைப் படித்ததும் அதை சுவாரஸ்ய பதிவாக்கும் கலையில் கைதேர்ந்தவர் நீங்கள் என்பதை. மறுபடியும் நிரூபித்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்!

    ‘’அது வரை அங்கு நின்றிருந்த காவலர்க்கு ஏதோ கொடுத்தார்.’’

    இது நடந்திருக்கும் என நினைத்து எழுதியதை இரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  3. நகைக்கடைக்காரரின் செயலை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. நல்ல மனம் படைத்தவர் நகைக்கடைக்காரர்...ம்ம்ம் ஒரு ட்விஸ்ட் சுவாரஸ்யம் வைத்திருக்கலாமோ..."அது வரை அங்கு நின்றிருந்த காவலர்க்கு ஏதோ கொடுத்தார்.’’ அதையே கொண்டு...

    பதிலளிநீக்கு
  5. செய்தியைப் பதிவாக்கித் தந்த விதம் அருமை. மனிதம் இன்னும் உள்ளது என்பதை இதுபோன்ற நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

    பதிலளிநீக்கு
  6. Yes. I read this in newspaper. Felt sad on theft but at the same time felt happy looking to the good gesture of the jewellery shop owner.

    பதிலளிநீக்கு
  7. நகைக்கடைக்காரர் பாராட்டுக்குறியவரே...

    பதிலளிநீக்கு
  8. இப்படியான நல்ல மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
    நல்ல பகிர்வுங்க ஐயா.

    பதிலளிநீக்கு
  9. நல்ல காரியம் செய்ய வந்தவருக்கு நல்லதே நடந்தது ,உள்ளே இருந்த கொள்ளைக்காரர்கள் மாட்டிக் கொண்டார்கள் ....என்று முடித்து இருக்கலாம் :)

    பதிலளிநீக்கு
  10. பாராட்டப்பட வேண்டிய செய்தி.

    பதிலளிநீக்கு
  11. அடக் கடவுளே கதையல்ல!நடந்தது! வாழ்க நகைக் கடைக்காரர்!

    பதிலளிநீக்கு