சிவகுருநாதனைத் தெரியுமா உங்களுக்கு?
நீங்கள் தவறாமல் வார இதழ்களைப்
படிப்பவரா?
சமீபத்திய குமுதம் இதழ்களில் அவனது சில
கதைகள் வெளியாகியுள்ளன.
ஆம்.அவன் ஒரு மொட்டு விடும் எழுத்தாளன்
ஆனால் நீங்கள் அக்கதைகளைப்
படித்திருந்தால் கூட உங்களுக்கு அவன் பெயர் தெரிய வாய்ப்பில்லை.
ஏனெனில் அவன் சொந்தப்பெயரில் கதை
எழுதுவதில்லை.
அதற்கென அவன் சூட்டிக் கொண்ட புனைபெயர்—”சின்னப் பையன்”
வாசகர் கடிதத்தில் அவன் கதைக்குப்
பாராட்டும் கிடைத்திருக்கிறது.
இதற்கென்றே சில பேர்வழிகள் இருக்கத்தானே
செய்கிறார்கள்!
ஆனால் அவன் கதையைப் படித்த அவன் நண்பன்
ஒருவன்—ஒரு குறையைச் சுட்டிக் காட்டினான்
அதாவது அவன் எழுதும் விசயத்தில்
ஆழமில்லை என்பது.
முந்தைய கதையில் உண்மை நிகழ்வுக்குப் புறம்பான சில செய்திகளைச்
சுட்டிக் காட்டிய அவன் சொன்னான்”எடுத்துக் கொள்ளும் விசயத்தைப் பற்றிய அறிவு மிக
முக்கியம். எதையுமே அனுபவ பூர்வமாக எழுதும்போது அது முழுமையடைகிறது.’
சிவகுருவுக்கு அவன் சொன்னது சரியென்று
தோன்றியது.
இப்போது அவன் ஒரு சிவப்பு விளக்குப்
பெண் பற்றிய கதைக்கான கருவை யோசித்து வைத்திருந்தான்.
எனவே அப்படிப்பட்ட ஒரு பெண்ணைச்
சந்தித்து விவரம் சேகரிக்கலாம் என முடிவு செய்தான்
இந்த விசயத்தில் கில்லாடியான நண்பன்
ஒருவனின் உதவியை நாடினான்.
இரண்டு தளத்தில் அதை எழுத அவன் முடிவு
செய்திருந்தான்—ஹை கிளாஸ்,லோ கிளாஸ்
நண்பன் அவனை ஒரு புரோக்கரிடம் அறிமுகப்
படுத்த,சனிக்கிழமை அந்த சுப தினம் வந்தது.
உள்ளே போன பின் ஒரு மணி நேரத்துக்குள்
பேச வேண்டியதையெல்லாம் பேசி விட்டு வரும்படி அவன் அறிவுறுத்தினான்.
அவன் உள்ளே போனான்.
அவள் தயாராயிருந்தாள்
அவன் “நான் அதற்காகவரவில்லை.உன்னிடம்
சில விசயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்”
அவள் அவனை ஒரு புழுவைப் போல்
பார்த்தாள்”அப்படியாளா நீ?கேளு” என்றாள்
அவர்கள் பேச ஆரம்பித்தனர்,
கதவு தட்டப் பட்டது.அவள் பயந்து ஒதுங்கினாள்
அவன் திகைத்தான்.
கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்தார்கள்....
போலீஸ்!
அவளை இருவர் பிடிக்க, இருவர் இவனிடம் ”வாய்யா
மன்மதராசா” என்றபடிக் கைகளைப் பிடித்தனர்
“சார் நான் அதுக்கு வரவில்லை...நான் ”என்று
அவன்ஆரம்பிக்க அவர்கள் சிரித்துக் கொண்டே ”பின்ன
வேடிக்கை பாக்க வந்தயா” என்றனர்
அப்போது ஒரு ஆய்வாளர் உள்ளே நுழைந்தார்.
அவரைப் பார்த்த்தும் அவன் அவமானத்தால்
வெளிறிப் போனான்.
அவர் அதிர்ந்தார்.
பின் காவலர்களிடம் “அவரைப் போக விடுங்கள்” என்றார்
பின் காவலர்களிடம் “அவரைப் போக விடுங்கள்” என்றார்
அவன் அவரிடம் ஏதோ சொல்ல முயன்றபோது கையை
உயர்த்தி அவனைத் தடுத்து விட்டுப் ”போகலாம்” என்றார்.
அவன் குப்பையாய் வெளியேறினான்.
வீட்டுக்கு வந்ததும் அப்பா”சிவகுரு! அன்னைக்குப்
பெண் பார்த்தோமே அவங்க வீட்டிலிருந்து இப்பத்தான் போன் பண்ணினாங்க.நம்ம சம்பந்தத்தில
அவங்களுக்கு விருப்பமில்லையாம் ,அன்னைக்கு அப்படிச் சொல்லிட்டு இன்னைக்கு
மாத்திட்டாங்க. பெண்ணோட அண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர்தான் போன் பண்ணினாரு.நான் போய்
நாலு வார்த்தை கேட்டுட்டு வரேன்”
அவன் அவரைத்
தடுத்தான்”வேண்டாம்பா.விட்டுடுங்க,போய்க் கேக்கறது நமக்குத்தான் அவமானம்”
(இது டிசம்பர் 2014 இல் இப்பதிவில் வந்த கதை’என்ன காரணத்தாலோ அப்போது அவ்வளவு வரவேற்பு இல்லை.எனவே மீள் பதிவு!)
பாவம்.
பதிலளிநீக்குஅனுபவம்!
நீக்குநன்றி ஸ்ரீராம்
ஹாஹாஹா ஐயோ...ஐயோ.....
பதிலளிநீக்குஹையோ,ஹையோ
நீக்குநன்றி கில்லர்ஜி
சின்னப் பையன் தான்.
பதிலளிநீக்குகதை எழுதுவதற்கு நீங்கள் சொன்னபடி அனுபவங்களைத் தேடி அலைந்தோர்கள் உண்டுதான்.
ஆனால் அதற்காக பேய்க்கதைகள் எழுதுவதென்றால் அனுபவத்திற்கு எங்கே போவது?
God Bless YOu
மனப்பேய்தான்!
நீக்குநன்றி
பதிலளிநீக்குஅன்று சொன்னதைத் தான் இன்றும் சொல்கிறேன். பயப்படுபவர்கள் கதை எழுதக் கூடாது. எதையும் தீர விசாரிக்கவேண்டும் என்று. மீள் பதிவென்றாலும் கதை திரும்பவும் படித்தாலும் சுவாரஸ்யம் குறையவில்லை. வாழ்த்துக்கள்!
நன்றி ஐயா
நீக்கு.நல்ல திருப்பம் தான்!
பதிலளிநீக்குமுதல் வருகை?
நீக்குநன்றி மோகன்ஜி
வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமுதல் வருகை?
நீக்குநன்றி சுரேஷ்(’தளிர் ’சுரேஷ் என்றொருவர் இருக்கிறார்)
பையன் மேற்கொண்டது நல்ல, மறக்க முடியாத அனுபவம்தான்.
பதிலளிநீக்குமறக்க முடியுமா?
நீக்குநன்றி ஐயா
ஆகா
பதிலளிநீக்குமறக்க முடியாத அனுபவம் கிடைத்துவிட்டதே
தம +1
ஆம்!
நீக்குநன்றி ஜெயக்குமார்
இப்படியும் ஒரு அனுபவம்.
பதிலளிநீக்குவாழ்க்கை!
நீக்குநன்றி கவிதாயினி
பாவம் சின்னப்பையன்...தன் கதை மிளிர வேண்டும் என்று தன் கையைச் சுட்டுக் கொண்டான்....
பதிலளிநீக்குமுன்பே படித்ததாக நினைவிருக்கிறதே என்று நினைத்தேன்! மீள்பதிவு என்று சொல்லிவிட்டீர்கள்! பாவம் எழுத்தாளர்!
பதிலளிநீக்குநானும் தான் பாஸ்... கொஞ்சம் படிச்சுட்டு உடனே கீழே பார்த்தேன் ..
நீக்குபெயரைப் போலவே சின்னப் பையன் என்பதை நிரூபித்து விட்டான் :)
பதிலளிநீக்கு