என்ன பித்தன் சார்!நேற்று தொடரும் போட்டிருந்தீங்க.இன்றைக்கு
முடிவை எழுதுவீங்க இல்ல?
முடிவா?என்ன முடிவு?
அதான் சார். ”துரையின் முகத்தில் ஒரு புன்னகை.அதன்
பொருள் என்னன்னு”
முடிச்சிருந்தீங்களே.அதுக்கு விளக்கம் வேண்டாமா?ஏன் அந்தப்
புன்னகை? அதன் பின்னணி என்ன? இப்படி நிறையக் கேள்விகள் இருக்கே?இந்த முடிச்சு
எல்லாம் அவிழ்த்தாத்தானே கதை முடியும்?
நான்
என்ன முடிச்சவிக்கியா?புன்னகையோடு கதை முடிஞ்சாச்சு.நீங்க சொல்ற படி விளக்கம்
எல்லாம் கொடுத்தா அது சிறுகதையாக இருக்காது.புதினமாகி விடும்!
இருந்தாலும்
ஒரு முடிவு வேண்டாமா?
ஒரு
தொடக்கம் ஒரு நடு, ஒரு முடிவு ஒரு உச்சம் இதெல்லாம் புதினத்துக் குத்தான்
வேண்டும்.சிறுகதைக்கல்ல.சிறுகதை என்பது ஒரு நிகழ்ச்சி.ஒரு சம்பவம் அவ்வளவே
அதெப்படி
சார்?
ஒரு
எடுத்துக்காட்டு சொல்கிறேன்.
காலையில்
எழும்போதே ஒரு அழுத்தமான மன நிலையில் எழுந்திருக்கிறீர்கள்.
பல் தேய்க்கிறீர்கள்,மாடி
முகப்பில் நின்றபடி.எதிர்வீட்டில் ஒரு நான்கு வயதுக் குழந்தை. உங்களைப் பார்த்துச்
சிரிக்கிறது;கையை ஆட்டுகிறது;அங்கிள் என்று அழைக்கிறது. முதலில் உர்ரென்று
இருக்கும் நீங்கள்,கொஞ்சம் கொஞ்சமாக மகிழ்ச்சியான நிலைக்கு வருகிறீர்கள்”கலா”
என்று மனைவியை அழைத்தபடி உற்சாகமாக உள்ளே போகிறீர்கள் .அவ்வளவுதான்.எழுதும் விதத்தில் இது ஒரு
சிறுகதையாகி விடும்
இப்போது புள்ளிராஜா கதையையே எடுத்துக் கொள்ளுங்கள்.காலையில்
துரையின் மனநிலை சரியில்லை எனச் சொல்லியிருந்தேன்.மலச்சிக்கல் இருக்க லாம்,வயிற்றில்
அமிலம் இருக்கலாம்;தூக்கம் சரியில்லாமல் இருக்கலாம். இப்படி எத்தனையோ.எனவே இதைக்
கதையோடு ஒட்ட வைத்துப் பார்க்க வேண்டாம் .
அப்போ
புள்ளிராஜா முடிந்ததா?
ஆம்!அந்தப்புன்னகை
படிப்பவர் மனதில் பல எண்ணங்களைத் தோற்றுவித் திருக்கிறது அல்லவா?அது போதும்
ஆனால்....
வருகிறேன்;உங்களைப்
போல் பலர் கேட்கக் கூடும்.அவர்களுக்காகச் சுருக்கமாக ஒரு முடிவு சொல்கிறேன்;அதை அவர்கள் விரிவுபடுத்திக்
கொள்ளலாம்.
பல
மாதங்களுக்கு முன் துரை வெளியூர் போன நேரத்தில் புள்ளிராஜா அவன் வீட்டுக்கு வந்து ..............அதன்
காரணமாக துரையின் மனைவி தற்கொலை செய்து கொண்டு விடுகிறாள்,என் சாவுக்கு யாரும்
காரணமல்ல என்று எழுதி வைத்துவிட்டு. ஏனெனில் அவளுக்குத் தெரியும் புள்ளிராஜா தன்
செல்வாக்கால் அனைத்தையும் அமுக்கி விடுவார் என்பது.மானம்தான் போகும்.திரும்பி வரும் துரை அவளது உயிரற்ற
உடலைத்தான் பார்க்கிறான்.சில நாட்கள் கழித்து அவன் சோகத்தை மாற்ற அவன் நண்பன்
அவனைப் பலான இடத்துக்கு அழைத்துப் போகிறான்.அதன் விளைவு சமீபத்தில்தான் துரைக்குத்
தெரிய வருகிறது. கதையன்று காலை ஏதோ தேடும்போது ஒரு நோட்டுப்புத்தகம் கிடைக்க,அதில்
அவன் மனைவி நிகழ்ந்ததை ரகசியமாக எழுதி வைத்திருப் பதைப் பார்க்கிறான்........இனி
கதை ஆரம்பத்துக்குப் போகலாம்!
நான்
வேறு சில முடிவுகளையும் நண்பர்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
அவ்வாறு
வருமாயின் அதுவே கதையின் வெற்றி!
தேவகோட்டை திரு KILLERGEE அவர்கள் எழுதியிருந்தது போல் அவருக்கு உடற் தேய்வு நோய் (AIDS- Acquired immune deficiency syndrome) இருந்திருக்கலாம். தனது மனைவியை சீரழித்து அவளது தற்கொலைக்கு காரணமானவனை தனது நோய் தாக்கிய குருதியைக்கொடுத்து பழி தீர்த்துக்கொண்டு விட்டு அதை நினைத்து புன்னகைத்திருக்கலாம். இதுவே நீங்கள் எழுதிய முடிவாக இருக்கலாம். முடிவை நீங்கள் தான் சொல்லவேண்டும்.
பதிலளிநீக்குஅதுதான் முடிவு.
நீக்கு//சில நாட்கள் கழித்து அவன் சோகத்தை மாற்ற அவன் நண்பன் அவனைப் பலான இடத்துக்கு அழைத்துப் போகிறான்.அதன் விளைவு சமீபத்தில்தான் துரைக்குத் தெரிய வருகிறது. //
//ஒரு நோட்டுப்புத்தகம் கிடைக்க,அதில் அவன் மனைவி நிகழ்ந்ததை ரகசியமாக எழுதி வைத்திருப் பதைப் பார்க்கிறான்........இனி கதை ஆரம்பத்துக்குப் போகலாம்!//
அவ்வளவுதான்.சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேனே!
நன்றி ஐயா
அப்ப நான் நேற்று எதிர்பார்த்த முடிவு இல்லையா?
பதிலளிநீக்குஅது சரி....
ஆரம்பத்தில் சிறுகதைக்கான விளக்கம் அருமை ஐயா...
அதை நீங்கள் எழுதுங்களேன் குமார்.இன்னும் சிறப்பாக இருக்கும்.
நீக்குநன்றி
ஹாஹாஹா நல்லாவே எதிர்பார்க்கவைத்து விட்டீர்கள் இதை நீங்கள் ஏப்ரல் மாதம் வெளியிட்டிருக்கலாம் தொடங்க வைத் தங்களது கரு வலையுலகில் தொடர வாழ்த்துகள்
பதிலளிநீக்குகதை முடிவும் சொல்லி விட்டேனே ஐயா!
நீக்குநன்றி
தாங்கள் எழுதுவதோடு மட்டுமன்றி எங்களையும் சிந்திக்கவைத்து வாய்ப்பு கொடுத்துவிட்டீர்கள். நன்றி.
பதிலளிநீக்குஊடாடுதல்!
நீக்குநன்றி ஐயா
அப்படி என்றால் எங்கள் அனுமானத்தில் ஒன்று சரி...
பதிலளிநீக்குதப்பாகுமா?
நீக்குநன்றி
நான் என்ன முடிச்சவிக்கியா?....நீங்கள் மட்டுமல்ல எழுதுகிற எல்லோருமே :)
பதிலளிநீக்குஎதை எழுதுகிற?
நீக்குநன்றி
அருமையான அணுகுமுறை
பதிலளிநீக்குஅருமையான எழுத்து முறை
நன்றி ஐயா
தம +1
நன்றி ஜெயக்குமார்
நீக்குசிறப்பானவிளக்கம்! சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதுவது உங்களின் சிறப்பு! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி சுரேஷ்
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
கதை நன்றாக உள்ளது தொடருங்கள் காத்திருக்கேன் அடுத்த பகுதிக்கு.த.ம 8
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்
நீக்குஎப்படி எழுதினாலும் அவன் செய்த ஏதோ ஒரு தீச்செயலுக்குப் பழி வாங்குவது போலத்தான் எழுத முடியும். இல்லாவிட்டால் இவர் கெட்டவராகி விடுவார்!
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்!
நீக்குநல்ல விளக்கம்!
பதிலளிநீக்கு