தொடரும் தோழர்கள்

திங்கள், ஆகஸ்ட் 17, 2015

காக்கா முட்டை-கிளியோபாட்ரா !


அண்ணா சாலை, மவுண்ட் ரோடாக இருந்த போது ஒரு பெரிய லேண்ட் மார்க்  சபைஃயர்
அரங்கம். பஸ்ஸில் போகும் போது கூட பிரம்மாண்டமாக காட்சியளிக்கும். ஆனந்த்திற்குப்
பிறகு வந்த 70mm அரங்கு. 1964-65ல் சபைஃயர் ஆரம்பிக்கும் முன் நிர்வாகிகள், கிளியோ பாட்ரா, சவுத் பேசிபிக், கேன்கேன் என்ற மூன்று படங்களுள் எதைத் திரையிடுவது என்று பொது மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தினார்கள். கிளியோபாட்ரா பெரும்பான் மையான வாக்குகளை பெற்று முதலில் திரையிடப்பட்டது. (R.K. நகர் சட்டமன்ற இடைத்தேர்தலைப் போல) ஆங்கிலத்தில் வெள்ளிவிழா கொண்டாடிய வெகு சில படங்களில் இதுவும் ஒன்று.

அப்பொழுது எனக்கு வயது 15 தான். அடல்ட்ஸ் ஒன்லி படங்களுக்கு வயது வராதவர்கள் நுழைவது எளிதல்ல. டிக்கெட் வாங்கியும் உள்ளே அனுமதிக்கப் படவில்லை .பிறகு, கல்லூரி முடிந்து வேலையில்லாமல் இருந்த போது சபைஃயரில் மீண்டும் ஒரு முறை திரையிடப்பட்ட எகிப்து ராணியை காணச் சென்ற போது கையில் இரண்டு ரூபாய் முப்பத்தைந்து காசுகள் தான் இருந்தது.திருவல்லிக்கேணியிலிருந்து சபைஃயர்க்கு 15 பைசா பஸ் டிக்கெட் கையில் மிஞ்சியது ரூ.2.20/- கீழ் மட்ட டிக்கெட் ரூ.1.80/-. எனக்கு முந்தியவருடன் ரூ.1.80/- டிக்கெட் காலி. அடுத்த வகுப்பு ரூ.2.25/- காசு கையிலிருந்த ரூ.2.20/-ஐ நீட்டினால்ஐந்து காசு எங்கே என்று கேட்டு, கவுண்டரில் இருந்து பணம் வாபஸ். தெரிந்த மூஞ்சிகள் எவும்தென்படவில்லை. “Age cannot wither nor customs stale her infinite variety” என்ற ஷேக்ஸ்பியரின் வரிகளை அசைபோட்டுக் கொண்டு நடந்தே வீடு திரும்பினேன்.

1975ல் இன்னொரு முறை அதே திரையரங்கில் கிளியோபாட்ரா திரையிடப்பட்டது. நல்ல வேலையில் இருந்த நான் ரூ.25/- கொடுத்து சோபா சர்கிள் டிக்கெட்டை வாங்கிக் கொண்டு தியேட்டருக்குள் நுழைந்தேன். சோபா சர்கிள் மனதை சொக்க வைத்தது. மனதில் எதிர்பார்ப் போடு சென்ற என்னை படத்தின் காட்சிகள் திருப்திபடுத்தவில்லை. ரெக்ஸ் ஹாரிஸன் களைப்பாக்கினார்.

ஷேக்ஸ்பியர் என் மனதில் தீட்டிய கிளியோபாட்ராவின் வடிவத்தை எலிசபத் டெய்லர் தனது நடிப்பாற்றலால் வெளிக்கொண்டு வர முடியாத மாதிரி நான் எண்ணினேன். ஆறு மணிக்கு தியேட்டர் சிப்பந்தி வந்து எழுப்பி விட்ட பிறகு அரங்கத்தை விட்டு வெளியேறினேன்,

“கஷ்டப்பட்டு பணம் சேமித்து பிட்சா சாப்பிட்ட காக்கா முட்டை சகோதரர்கள் அனுபவத் தைப் போல”

(அனுபவ ஆக்கம் :நண்பர் பார்த்தசாரதி;)


12 கருத்துகள்:

  1. பதிவைப் படிக்கும்போது தங்களுடைய அனுபவத்தைத்தான் சொல்கிறீர்களோ என நினைத்தேன். கடைசியில் காக்கா முட்டை பட சகோதரர்களின் அனுபவத்தை எடுத்துக்காட்டி கிளியோபாட்ரா படம் தந்த ஏமாற்றம் பற்றி தங்கள் நண்பர் குறிப்பிட்டிருந்தது இரசிக்கும்படி இருந்தது. தங்கள் நண்பர் திரு பார்த்தசாரதியின் ஆக்கத்தை பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான்! கிடைக்காத ஒன்றுக்கு ஏங்கி கிடைத்தபின் திருப்தி இல்லாமல் போவது இயற்கைதான்! இது பலருக்கும் நடந்திருக்கிறது!

    பதிலளிநீக்கு
  3. கிளியோபாட்ராவின் அழகுக்கு காரணம் ,அவர் கழுதைப் பாலில் குளித்தார் என்பார்கள் ,நண்பர் அதை எதிர்பார்த்து சென்று இருப்பாரோ :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கழுதைப்பாலில் குளிப்பதை விட கழுதையுடன் குளிப்பது சுகம்!

      நீக்கு
  4. கிளியோபாட்ரா படித்ததில்லை. தாங்கள் கூறிய படம் பார்த்துள்ளேன். பிரம்மாண்டங்களில் ஒரு திரைப்படம். ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. உங்கள் அனுபவம் என்று நினைத்தபடியே படித்தேன்..... :)

    நல்ல அனுபவம் தான் உங்கள் நண்பருக்கு! மிகுந்த எதிர்பார்ப்புடன் படம் பார்க்கச் சென்று படம் பார்த்த போது வெறுப்பு உண்டாகிய அனுபவம் எனக்கும் உண்டு!

    பதிலளிநீக்கு