தொடரும் தோழர்கள்

ஞாயிறு, ஆகஸ்ட் 09, 2015

விடுமுறை,சிரிமுறை!



குப்புவுக்கு நீண்ட நாட்களாக ஒரு குதிரை வாங்க வேண்டும் என்று ஆசை.

சிறு வயது முதலே குதிரை மீது ஒரு மோகம்.

அதன் காரணமாகவே குதிரையேற்றம் கற்றுக் கொண்டான்.

ஒருநாள் குதிரை விற்பனைக்கு என்ற விளம்பரம் கண்டான்,

போய்ப்பார்த்தான்

அழகான கம்பீரமான குதிரை.

வாங்கினான்

விற்றவர்கள் சொன்னார்கள்”நாங்கள் கடவுள் பக்தி அதிகம் உள்ளவர்கள். எனவே குதிரையை அதற்கேற்பப் பழக்கியிருக்கிறோம்.கடவுளுக்கு நன்றி என்று சொன்னால் குதிரை ஓடத் தொடங்கும்.கடவுள் இருக்கிறார் என்று சொன்னால் நிற்கும்”

வாங்கியபின் ஒரு நாள் மலைப்பிரதேசத்தில் குதிரை செலுத்தினான் குப்பு வேகமாக ஓடும் போது மலை முகடு வந்து விட்டது.என்ன சொல்லி நிறுத்த வேண்டும் என்பது அவனுக்கு மறந்து போனது.இன்னும் சிறிது தூரம்தான். நிற்கவில்லையெனில் பள்ளத்தில் விழ வேண்டியது தான்.கடைசி நொடியில் நினைவு வந்துகடவுள் இருக்கிறார் என்று சொல்ல குதிரை நின்று விட்டது. இன்னும் அரை அடியே பாக்கி.

குப்பு நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி ”நல்லவேளை.கடவுளுக்கு நன்றி ”என்றான்!
……………………………..

17 கருத்துகள்:

  1. ஹாஹாஹா! சிறப்பான சிரிப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
  2. இதை ஒரு பதிவில் வேறு மாதிரி சொல்லலாம் என்றிருந்தேன் ஐயா...

    பதிலளிநீக்கு
  3. ‘கடைசியில் குதிரையில் இருந்து இறங்கி கடவுளுக்கு நன்றி என்று சொன்னான்.’ என்று முடித்திருந்தால்?

    பதிலளிநீக்கு
  4. கடவுளுக்கு நன்றி சொன்னது ஒரு தப்பா?

    பதிலளிநீக்கு
  5. ஆகா
    நன்றி சொல்லிவிட்டாரா
    அடுத்த முறை நன்றிசொல்ல வாய்ப்பில்லாமல் போய்விட்டதே
    அருமை
    தம +1

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்,
    இப்ப என்ன செய்வது?,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  7. இதுக்குதான் நான் கடவுளை நம்புறதில்லை :)

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்
    ஐயா

    நன்றாக உள்ளது கதை.. கதையை படித்த போதுதான் ஐயா நினைவு க்கு வந்தது ஒரு சம்பவம்

    இரு மனிதர்கள் பிச்சை எடுத்த அரிசை தலையில் சுமந்த வண்ணம் காட்டு வழி பாதையால் செல்கின்றார்கள் அப்போது யானை துரத்துகிறது. அவர்கள் உயிரைப்பற்றி அக்கறைகொள்ள வில்லை அரிசியின் மேல் அக்கரை கொண்டவர்கள் அவர்கள்
    (என்னட அரிசீ...) என்று சொல்ல யானை நகர்ந்து சென்றது....(சீ )என்ற சொல் ஒரு மந்திர சொல்... போன்றது... கடவுள் நாமத்துக்கும் ஒரு சக்தி உண்டு... ஐயா...த.ம 8

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  9. ஹாஹா.....

    ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு