தொடரும் தோழர்கள்

புதன், ஆகஸ்ட் 05, 2015

வானமே எல்லை!



மாலை வேளைகளில் வெளியே செல்கையில் உங்கள் கண்களை மட்டுமன்றிக் காதுகளையும் நன்கு திறந்து வைத்துக் கொள்ளுங்கள்!

அது உங்களைச் சாலை விபத்துகளிலிருந்து காப்பதோடு பல இனிய அனுப வங்களையும் தரும்.

நீங்கள் காணும் சில காட்சிகளும்,காதில் விழும் உரையாடல்களும் சுவையானவையாக  அமையும்.

அவை உங்கள் கற்பனைச் சிறகுகளை நீங்கள் விரித்துப் பறக்க உதவும்.

இப்படித்தான் நேற்று மாலை......

ஒரு குடியிருப்பு வாசலில் ஒரு மகிழ்வுந்து வந்து நின்றது.

பின்புற இருக்கையிலிருந்து இரு இளம் பெண்கள் இறங்கினர்.

உந்தை ஓட்டி வந்தவரும் ஓர் இளம் பெண்ணே.

அவள் அருகில் யாரும் அமர்ந்திருக்கவில்லை.

இறங்கிய பெண்கள் ஓட்டுநரான பெண்ணிடம் சொன்னார்கள் “மிக்க நன்றி. வருகிறோம்”

அப்போது அந்தப் பெண் சொன்னாள்”இருவரும்  பின்னால் அமர்ந்து சவாரி செய்து விட்டீர்கள்.ஒருவர் என் அருகில் அமர்ந்து எனக்குத் துணையாக இருந்திருக்க வேண்டாமா?”

அந்த இரு பெண்ககளின் முகம் சிறுத்தது.

என் மனத்தில் தோன்றிய எண்ணங்கள்

இருவரும் பின்னால் அமர்ந்து கொண்டு மற்ற பெண்ணை ஓட்டுநராக்கிய அவர்களுக்குப் பண்பாடு தெரியவில்லையா?

ஏற்றிக்கொள்ளும்போதே ஒருத்தி முன் வந்து அமர் என்று சொல்லாமல் அதை மனத்துக்குள்ளேயே வைத்திருந்து அவர்கள் இறங்கிப் போகும் நேரத்தில் முகத்தில் அடித்தாற்போல் குத்திக்காட்டிப் பேசி பெண்ணுக்கு பண்பாடு தெரியவில்லையா?

யார் அதிகம் பண்பாடு தெரியாதவர்கள்? 

நெருங்கிய தோழிகளாகவோ,உறவினர்களாகவோ இருந்திருந்தால் இப்படி ஒரு நிலை உருவாகி இருக்க வாய்ப்பில்லை என்றே எண்னுகிறேன்.

அறிமுகப் பழக்கமாகவே இருக்க வேண்டும்.

இந்த நிகழ்வு ஒரு சிறு விதை,பொறி,கரு.

இதை விரிவாக்கி ஒரு சிறு கதையாக்கவும் முடியும்

வானமே எல்லை!

மற்றொரு நாள்.

ஒரு பெண் கைபேசியில் பேசியவாறு நடக்கிறாள்.

“கடைக்குப் போயிருந்தீங்களா?எங்கே....அப்படியா?....புடவையெல்லாம் எடுத்தாச்சா?...எனக்கு ஒரு பட்டுப் புடவையா எடுத்திடுங்க....என்ன? செலவாகுமா? எனக்கு ஒரு பட்டுப்புடவை எடுத்தா பணமெல்லாம் போயிடுமோ?....இதோ பாருங்க.நீங்க எனக்குப் பட்டுப் புடவை எடுக்க லேன்னா நான் திருமணத்துக்கே வர மாட்டேன்.சொல்லிட்டேன்”

அந்தப் பெண் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறாள்? அம்மாவுடனா? அண்ணியுடனா?யாருக்குத் திருமணம்? அவர்களின் வசதி எப்படி?இவள் ஏன் இப்படிக் கடுமையாகப் பேசுகிறாள்?

இதுவும் ஒரு சிறுகதையாகலாம்!

எத்தனையோ கோணங்கள்.

வானமே எல்லை

22 கருத்துகள்:

  1. இதுகூட அடுத்த பதிவாகலாம்?
    தமிழ் மணம் 2 என்று இனிமேல் போடமாட்டேன் ஐயா.

    பதிலளிநீக்கு
  2. பர்ர்க்கும் அனைத்திலும் பதிவுகள்/கதைகள் பொதிந்து கிடக்கின்றன! உண்மை தான்.

    பதிலளிநீக்கு
  3. தங்கை அண்ணனுடன் பேசி இருப்பாரா :)

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் சொல்வது உண்மைதான். அனைத்தையும் கவனித்து உள்வாங்கிக் கொள்பவனே சிறந்த எழுத்தாளனாகிறான்.

    அது சரி முன்புறம் உள்ள இருக்கையை காலியாக விடுவதில் இத்தனை உளவியல் சிக்கல் இருக்கிறதென்பதே எனக்கு இன்றைக்குத்தான் பட்டது. நீங்கள் காது கொடுத்து கேட்டதில் இந்த உண்மை வெளியாகி இருக்கிறது..நன்றி.

    God Bless You

    பதிலளிநீக்கு
  5. அப்படித்தான் பாஸ் நான் ஓட்டிகிட்டு இருக்கேன்... லேட்டஸ்ட் அலுவலக அமானுஷ்யம் உட்பட!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வளவுதான்..நாம் எழுதுவது log தானே! பார்த்ததையும் கேட்டதையும் சுவையாக எழுதி விட்டுப் போக வேண்டியதுதான்.
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  6. வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் ஒரு கரு இருக்கிறது என்பதே உண்மை. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. உண்மைதான் ஐயா
    வானமே எல்லைதான்
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  8. இரண்டு நிகழ்வுகளிலும் ஒரு சிறு கதைக்கான கரு உள்ளன. விரைவில் தங்களிடமிருந்து இரு சிறு /சிறந்த கதைகளை எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்
    ஐயா.

    அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி. த.ம9

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  10. பித்தன் உங்கள் காது கூர்மையானது !

    பதிலளிநீக்கு
  11. நான் இந்த சம்பவங்களை வைத்து கதை எழுத முயற்சிக்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  12. அன்புள்ள அய்யா,

    அடுத்தவர்களின் பேச்சுகளை கவனித்தால்... உண்மைகள் கதையானால் மிக நன்றாக இருக்கும்... அதில் உயிரோட்டம் இருக்கும்.

    நன்றி.
    த.ம.11

    பதிலளிநீக்கு
  13. ஆமாம் நம்மைச் சுற்றி நடப்பவற்றை கதைகளாகப் புனையலாம் தான்...அது சரி அப்ப இந்த முதல் தான் அடுத்த கதையாக வந்ததோ...செம சார்!

    பதிலளிநீக்கு