தொடரும் தோழர்கள்

சனி, ஆகஸ்ட் 08, 2015

வேட்டியும் கால்சட்டையும்



ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் “pant போட்டவனெல்லாம் sofa ல உக்கார்; வேட்டி கட்டினவ னெல்லாம் தரையில உக்கார்என்பார் எம்.ஆர்.ராதா. முழுக்கால் சட்டை அணிந்தால் மதிப்பு வேட்டி கட்டினால் அவமதிப்பு என்பது போல்.ஆனால் இதை வேறு விதமாகவும் பார்க்கலாம். முழுக்கால் சட்டை அணிந்து கொண்டு தரையில் கால் மடக்கி அமர்வது கடினமே.வேட்டி அணிந்து கொண்டு தரையில் அமர்வது எளிது.

ஆடை எவ்வளவு முக்கியம் என்பது அனைவரும் அறிந்ததே.எதாவது திருமணம் போன்ற நிகழ்வுகளுக்குச் செல்லும்போது நாம் ஆடை அணிவதில் மிகவும் கவனம் செலுத்துகிறோம். ஏனெனில் நமக்கென்று தரப்படும் மதிப்பு ஆடை யைப் பொறுத்து அதிகமாகவோ குறையவோ செய்கிறது.

முல்லா கதையொன்று சொல்வார்கள்.ஒரு முறை  முல்லாஒரு விருந்துக்குச் சென்றார்.அவர் மிக எளிமையான உடை அணிந்து சென்றார்.காவலாளி அவரை உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டான்.வீடு திரும்பிய அவர்,ஒரு சரிகைத் தலைப்பாகை அணிந்து திரும்பினார்.அவர் அனுமதிக் கப்பட்டார். விருந்தில் அமர்ந்த அவர்,தலைப்பாகையைக் கழற்றி அருகில் வைத்தார். உணவை  எடுத்துத் தலைப்பாகையில் போட்டுச் சாப்பிடு சாப்பிடு என்று சொன்னார் .என்ன முல்லா இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டவர்களிடம் சொன்னார்இந்தத் தலைப்பாகை இருந்ததால்தான் நான் உள்ளே வர முடிந்தது .எனவே விருந்து தலைப்பாகைக்குத்தான்அவருக்குக் கிடைக்காத மதிப்பு  அவர் தலைப்பாகைக்குக் கிடைத்தது.

ஆடையைப் பொறுத்தவரை சாமானியர்கள் பகட்டான ஆடை அணிந்தால்தான் மதிப்பு. இல்லையெனில் கஞ்சப்பய என்றோ பிச்சைக்காரப்பய என்றோ ஏளனப் பேச்சே கிளம்பும். ஆனால் பிரபலமானவர்கள்,எளிமையாக உடை அணிந்தால் மதிப்பு.எவ்வளவு பெரிய மனுசன்,இவ்வளவு எளிமையாக உடை அணிந்திருக்கிறார் என்று உலகம் வியக்கிறது ;பாராட்டுகிறது!

நான் சிறுவனாக இருந்தபோது ஒரே ஒரு முழுக்கால்சட்டை இருந்தது.ஆரம்பப் பள்ளிப் பருவம். பள்ளியில் ஒரு சிறு நாடகத்தில் நடிக்கும்போது அந்தக் கால் சட்டையை அணிந்து சென்றேன். எங்கள் சலவைக்காரர் அதைத் தேய்க்கும் போது முன்பின்னாகத்தேய்க்காமல்.பக்கவாட்டில் மடிப்பு வரும்படித் தேய்த்தி ருந்தார்.வெளியில் இருப்பவர்கள் கிண்டல் செய்தார்களோ இல்லையோ. எங்கள் வீட்டில் பல நாட்கள் கேலிதான்.

பின்னர் நான் முழுக்கால் சட்டை அணிந்தது பட்டப் படிப்பின் போதுதான், புகமுக வகுப்புப் படிக்கும்போதுபோது கூட வேட்டிதான்;அதுவும் நான்கு முழ வேட்டி! கல்லூரியிலேயே  மாணவர்கள் இரண்டு பேர்தான் வேட்டி.நானும் தியாகராஜன் என்பவரும்.இன்னொரு வேட்டி திரு.எம்.கே.ஜி நாயர்,ஆங்கிலப் பேராசிரியர்!

என் நண்பன் ஒருவன் அப்போதுதான் புதிதாக முழுக்கால்சட்டை அணிய தொடங்கியவன், தரையில் பாய் விரித்து அதன் மீது நின்றுதான் அணிவான். காரணம் தரையில் பட்டுக் கீழ் பாகம் அழுக்காகி விடுமாம்!

கால்சட்டைகளில் பல விதம் பார்த்தாகி விட்டது.நான் முழுக் கால்சட்டை அணியத் தொடங்கிய போது,இடுப்புக்குக் கீழ்  நன்கு இறக்கி அணுவது பாணியாக இருந்தது,பின்னாளில் இறுக்கமாக அணிவது, அகலமான அடிப்பாகம்,இணை,என்று பலப் பாணிகள்.இதெல்லாம் ஒரு சுழற்சிதான்!

//உறவினர் வீட்டுத் திருமணங்களின்போது வேட்டி.சட்டை/துண்டு என்று கிப்ட் வந்து விடுகிறது.துபாய்.யுஎஸ்ஸிலிருந்து அவ்வப்போது சர்ட்/ டீ சர்ட் கிடைத்து விடுகிறது.இப்போதுபார்த்தபோது 5 சர்ட்,5 டீ சர்ட் புதிதாகவே இருக்கின்றன. ஆனால் பேன்ட் யாருமே கொடுப்பதில்லையே!  //

இது அக்டோபர் 20,2014 இல் நான் கூகிள்+ இல் எழுதியது .அதன் பிறகு கால்சட்டைகளின் எண்ணிக்கை கூடி விட்டது.இப்போது கூட இரண்டு ரேமாண்ட் கால்சட்டைத்துணிகளைத்(அன்பளிப்புதான்!) தையல்காரரிடம் தைக்கக் கொடுத்திருக்கிறேன்.

தையல்காரர் சொன்ன தேதிக்கு மேல் ஒரு வாரம் ஆகியும் இன்னும் நான் தைக்கக் கொடுத்த கால்சட்டையைத் தரவில்லை.! அதுதான்...........




21 கருத்துகள்:

  1. பிரபலமானவர்கள்,எளிமையாக உடை அணிந்தால் மதிப்பு.எவ்வளவு பெரிய மனுசன்,இவ்வளவு எளிமையாக உடை அணிந்திருக்கிறார் என்று உலகம் வியக்கிறது ;பாராட்டுகிறது
    உண்மை ஐயா 100க்கு100 உண்மை.

    பதிலளிநீக்கு
  2. காக்க வைக்கிறதா கால் சட்டை :)

    பதிலளிநீக்கு
  3. தையல்காரருக்கு தான் நன்றியை சொல்ல வேண்டும்...! சுத்தமான நண்பரையும் அறிய முடிந்தது அல்லவா...!

    பதிலளிநீக்கு
  4. ஒரு கால் சட்டைக்குள் இவ்வளவு சமாச்சாரங்களா? இங்கு கால் சட்டை அல்லது டவுசர் என்றால் அரைக்கால் டவுசரைத்தான் குறிக்கும். பேண்ட் என்றால் முழுகால் சட்டை அல்லது புல் பேண்ட்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவில் முழுக்கால்சட்டை என்றே குறிப்பிட்டுள்ளேன்.தலைப்பில் விட்ட காரணம்,முழுவானால் என்ன அரையானால் என்ன என்ற சோம்பல்தான்!
      நன்றி தமிழ் இளங்கோ சார்

      நீக்கு
  5. கால் சட்டைக் கதை சுவராசியமாகத்தான் இருக்கிறது,

    பாய் போட்டு பேண்ட் அணிபவரை நானும் பார்த்திருக்கிறேன்.

    அதே போல பணக்காரர்கள் எளிமையாய் இருந்தால் பளிச் சென்று எடுபடும் என்பதும் உண்மைதான்.

    God Bless YOu

    பதிலளிநீக்கு
  6. நினைவுகள்.....

    எனது நினைவுகளையும் தூண்டியது......

    பதிலளிநீக்கு
  7. சட்டை விஷயத்தை சட்டை செய்யக்கூடாது என்பதை உணர்த்தும் பதிவு. நன்றி.
    தமிழ் விக்கிபீடியாவில் கட்டுரைகள் எழுத ஆரம்பிப்பது தொடர்பான எனது முதல் பதிவை http://drbjambulingam.blogspot.com/2015/08/blog-post_8.html இணைப்பில் காண அழைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு மனமகிழ் மன்றம் வேட்டி அணிந்து வந்ததால் ஒரு நீதியரசரையே உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டதை பார்க்கும்போது 1952 ஆம் ஆண்டில் இருந்த மனநிலையே இப்போதும் இருக்கிறதோ என எண்ணத்தோன்றுகிறது. ஆனாலும் வேட்டி அணிவது நமது பண்பாடு என்பதால் அலுவலக வேலைக்கு செல்லாத போது வேட்டி அணிந்து செல்லலாமே. மேலும் வேட்டி கட்ட தெரியாதவர்களுக்கென இப்போது ஒட்டிக்கொள்ளும் வேட்டிகள் வேறு விற்பனைக்கு வந்துவிட்டனவே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேட்டியில் பை வேறு!
      வேட்டி கட்டுகிறோமோ இல்லையோ,வேட்டி நாள் என்று ஒன்று கொண்டா டுவோம்.
      நன்றி

      நீக்கு
  9. பேண்ட் முதல் முதலில் என் மாமா கல்யாணத்தின் போது தைத்து கொடுத்தார்கள்! அது பெல்பாட்டம் ஸ்டைல்! அதற்கப்புறம் ஒன்பதாம் வகுப்பில் படிக்கையில் காக்கி பேண்ட் அணிந்தது பேண்டுக்கு அளவு கொடுத்தது எல்லாம் சுவாரஸ்யம்! நினைவுக்கு வருகையில் ஒரு பதிவே எழுதி விடுகிறேன்! நீங்கள் சொன்ன முல்லா கதை போல ஓர் கதை என் அப்பாவின் நண்பர் சொன்னார். அதையும் ஓர் பதிவு எழுத உள்ளேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  10. நினைவுகளை மீட்டெடுத்த பதிவு. சமீபத்தில் வேட்டி கட்டி ஏதோ ஒரு பார்ட்டிக்கு வரக் கூடாது என்று பிரச்சனையாகியதே....

    (கீதா: ம்ம் ஆண்களுக்கு கால்சராய் வருவதில்லை...பெண்களுக்கு அப்படியில்லை ..புடவை வந்தால் கூடவே ரவிக்கையும். மட்டுமல்ல ரவிக்கை மட்டும் வந்தால் கூட நல்ல கலராக இருந்தால்...அதற்காக புடவை கூட வாங்கிவிடுவார்கள் பெண்கள்! ஆண்கள் நீங்கள் எல்லாம் அப்படியா??!!!!! நவராத்திரி சமயத்தில் ரவிக்கைகள் பரிமாறப்பட்டு சுற்றி சுற்றி வரும்....ஆனால் அவர்களை அழைத்துக் கொண்டு போகும் ஆண்களுக்கு ஒரு கைக்குட்டை கூட கொடுப்பதில்லை...ஹஹஹ்ஹ் )

    பதிலளிநீக்கு