தொடரும் தோழர்கள்

திங்கள், ஆகஸ்ட் 24, 2015

நள்ளிரவில்,ஒரு நகைக்கடையில்.-2.....இப்படியும் நடக்குமோ?!


 

பலர் எனது முந்தைய பதிவின் ஒரு பாத்திரமான நகைக்கடைக்காரரைப் பராட்டிக் கருத்து சொல்லியிருக்கிறார்கள் 

பகவான்ஜி. அவர்கள் ஒரு அருமையான முடிவு சொல்லியிருக்கிறார்.

அது தவிர துளசிதரன் அவர்கள் “ஒரு ட்விஸ்ட் சுவாரஸ்யம் வைத்திருக் கலாமோ ”எனக் கேட்டு என்னை உசுப்பேத்தி விட்டு விட்டார்.

நம்ம குயுக்தி சும்மா இருக்குமா?

இதோ கற்பனை.....

காவலர்கள் அங்கிருந்து நேராக ஒரு சிறிய சந்துக்குள் இருந்த அந்த வீட்டை அடைந்து கதவைத் தட்டினர்.

கொஞ்ச நேரத் தட்டுதலுக்குப் பின் ஒரு பெண் கதவைத் திறந்தாள்.

“மணியை வரச் சொல்லு”

”அவர் இல்லீங்க.”என்றாள் அவள் 

”இதோ பாரு உள்ளே புகுந்து அவனைத் தடியால தட்டி இழுத்துட்டு வரணுமா? டேய் மணி,வாடா வெளில” காவலர்

வெளியே வந்தவனுக்கு நாற்பது வயதிருக்கும்.பார்த்தால் கண்ணியமான தோற்றம்.

”என்ன ஏட்டையா?

இன்னைக்குக் கல்யாண மண்டபத்துல ஆட்டையைப் போட்டுட்டு வந்து கமுக்கமாப் படுத்திட்டயா.நகையை எடுடா”

”நகையா?எனக்கு எதுவும் தெரியாது.மத்தியானத்திலிருந்து நான் வீட்ல யேதான் இருக்கேன்”

“ஆமா ஐயா” என ஆமோதித்தாள் அவன் மனைவி

“ வேலிக்கு ஓணான் சாட்சி!மயிலே மயிலேன்னா எறகு போடுமா.உள்ள போய்த் தேடி எடுத்தா,நகை கிடைச்சிட்டுப் போவுது.அப்புறம் மணி கம்பி எண்ண வேண்டியதுதான்” என்று கூறியவாறே உள்ளே நுழைய ஆயத்தமாயினர்

 அதெல்லாம் வேண்டாம் ஏட்டையா.வாங்க உள்ள போய்ப் பேசுவோம்

உள்ளே சென்றனர்

பேச்சு வார்த்தை நடந்தது.

பேரம் படிந்தது.

“நாற்பது பவுன் இருக்கும் போல் இருக்கே.இது உன்கிட்டயே இருக்கட்டும். ராவோட ராவா எங்கயாவது ஓடிடலாம்னு பாக்காதே.எங்கயும் போக முடியாது அப்புறமும் நகையும் போகும் ஒடம்பும் புண்ணாகும்.”

“எனக்குத் தெரியாதா ஏட்டையா.”

”சரி.காலைல வந்து  உன்னை எங்களுக்கு வேண்டிய நகைக்கடை முதலா ளிட்ட கூட்டிட்டுப் போறோம்.அவர் நாலு லச்சமாவது கொடுப்பாரு.பேசின படி ஒனக்கு இரண்டு லச்சம்; எங்களுக்கு ஆளுக்கு ஒரு லச்சம்; ஒனக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை.போய் நிம்மதியாப் படு!”

முடிந்தது!















19 கருத்துகள்:

  1. அதைப் படிச்சு கமென்டருதுக்குள்ளாற கதையே மாறிடுச்சே. இந்த முடிவின் கறை எனக்குப் பிடித்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போதுமே உண்மையை விட கதைதானே சுவாரஸ்யம்?
      நன்றி அப்பாதுரைஅவர்களே

      நீக்கு
  2. பதில்கள்
    1. வேலை வெட்டி இல்லை!
      (வெட்டியாத்தான் இருக்கேன்;ஆனால் வேலை வெட்டி இல்லை என்கிறேன்!இது எப்படி?)
      நன்றி அப்பாதுரை

      நீக்கு
  3. பேரம் ஸூப்பர் எப்படியெல்லாம் கதை விடுறீங்க...

    பதிலளிநீக்கு
  4. அட்ரா சக்கை..

    இந்த முடிவை முதல் பதிவில் சந்தேகிக்கவே முடியவில்லை.

    மிக அழகாக, திருத்தமாக இணைத்திருக்கிறீர்கள். நான் கூட பீட் போலீசுக்கு ஏதாவது பணம் கொடுத்திருப்பார் என நினைத்தேன். இந்த முடிவு நிஜமாகவும் இருக்கலாம் எனும் பிரமையை உண்டுபன்னுகிறது.

    கதையை அருமையாக பின்னுகிறீர்கள்.

    God Bless You

    பதிலளிநீக்கு
  5. போன பதிவில் குறிப்பிட்டது இதற்குதான் மிகவும் பொருந்தும் .......உண்மைச் சம்பவம் :)

    பதிலளிநீக்கு

  6. ‘தாய் அறியாத சூல் உண்டா?’ என்பது பழமொழி. அதைத்தான் அழகாய் எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. உங்கள் கற்பனைத் திறன் வியக்க வைக்கிறது! இதுவும் சிறப்பாத்தான் இருக்கு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. தாத்து இது கதையா நிஜமா ? ஆழமான சிந்தனை ஆதலால்
    உண்மையோ எனச் சிந்திக்க வைக்கிறது அருமை !வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. அட! நம்ம போட்ட உசுப்பேத்தல் நல்லாவே விளைஞ்சிருச்சு...நல்லாருக்கு முடிவு...இது கதையல்ல ஐயா...இதுதான் நிஜம்...

    அருமை...

    பதிலளிநீக்கு