மறுநாள் அதிகாலை மிஹிரரும் மாதங்கியும் நடன ஒத்திகையை ரசித்தார்கள். நயனிக்கு ஈடுகொடுத்து லாவகமாக ஆடினான், விஜயன். பாடலின் உச்சரிப்புக்கள்
ஸ்பஸ்டமாக
இருந்தன.
“முதல் முதலாக சாகுந்தலம் மேடை ஏறுவதால் காளிதாஸரின் எதிர்பார்ப்பு
இன்னும்
அதிகமாக
இருக்கும்,
அவரை
முழுமையாக
திருப்திப்படுத்தினால்
அதுவே
உங்களது
பரிபூரண
வெற்றி”
என்று
அவர்களை
ஊக்குவித்தார்
மிஹிரர்.
நாளை
மறுநாள்
அரண்மனையில்
இரண்டாம்
சந்திர
குப்தர்
தலைமையில்
காளிதாசரின்
“ரகுவம்சம்”
அரங்கேறுகிறது.
அன்று
மாலை
சாகுந்தலம்
முதல்
முதலாக
மேடை
ஏறுகிறது.
காளிதாசர்
தனது
சாகுந்தலை
கவிதைகளை
பின்ணனியில்
விளக்குவார்.
நாடகத்தின்
முக்கிய
அங்கங்களை
நாட்டிய
நாடகங்களாக
அரங்கேற்றப்போவது
நயனியும்,
விஜயனும்,
எத்தகைய
பிரமிப்பூட்டக்
கூடிய
நிகழ்வு.
அரண்மணையில் குப்தநாட்டின்
பல
பகுதியிலிருந்து
பண்டிதர்கள்
கலை
ஆர்வலர்கள்
திரண்டனர்.
ரகுவம்சத்தின்
ஒரு
பகுதி
காலையில்
அரங்கேறியது.
இந்தியாவின்
பல
பகுதியிலிருந்து
பண்டிதர்கள்
கூடி
குதூகலமடைந்தனர்.
மாலையில் சாகுந்தல
நாட்டிய
நாடகத்தைக்
காண
பெண்களும்
அதிகமாக
திரண்டிருந்தனர்.
அதுவரை கண்டிராத கேட்டிறாத நிகழ்வு ஒன்று உஜ்ஜைனியில் அரங்கேறியது. தேவர்கள் கூடி பூமாரிப் பொழியாத குறை.
காளிதாஸர்,
“நயனியும்
விஜயனும்
தத்ரூபமாக
என்னுடைய
சகுந்தலையையும்
துஷ்யந்தனையும்
கண்முன்
கொண்டு
வந்து
நிறுத்தினர்.
இவர்களை
நிஜவாழ்க்கையிலும்
ஒன்று
சேர்த்து
வைத்தால்
கலை
சேவை
நன்றாக
அரங்கேறும்
என்று
புகழ்ந்து
ஆசீர்வதித்து
நயனிக்கு ஐந்து கல்
வைர
மூக்குத்தியையும்
விஜயனுக்கு
ஒரு
நவரத்ன
மோதிரத்தையும்
பரிசாக
அளித்தார்.”
சந்திரகுப்த மாமன்னர் நயனி, விஜயனின் திருமணத்தை அரசாங்கமே அடுத்த “பைஸாகிக்குள்” நடத்தும் என்று அறிவித்தபோது அவையே கரகோஷத்தால் அதிர்ந்தது.
மிஹிரருக்கும்
மாதங்கிக்கும்
அந்த
ஆணையை
உள்
வாங்க
சிறிது
நேரம்
ஆயிற்று.
நள்ளிரவில்
வீடு
திரும்பினர்.
நயனிக்கும், விஜயனுக்கும் திருஷ்டி கழித்து, அன்றைய நிகழ்வுகளை அசை போட்டுக் கொண்டே தூங்கச் சென்றனர்.
காளிதாஸர் மிஹிரரை பாராட்டும் போது, “விஸ்வேஸ்வரர் கிரஹ ரகசியங்களை மிஹிரரின் மூளையில் புகுத்தி, அவைகளை அவர் வாயிலாக உலகக்கு அறிவிக்க முயலுவதாக வியந்தது மாதங்கிக்கு மிக உயர்ந்த உணர்வுகளை ஈந்தது. காளிதாஸரின் இத்தகைய சிந்தனை மிஹிரரை வியப்படையச் செய்தது.”
மறுநாள் காலை, மிஹிரர் நயனியையும் விஜயனையும் பாராட்டி “நீங்கள் நேற்று அடைந்த வெற்றி உங்கள் முதல் மைல்கல் இன்னும் கடக்க வேண்டிய தூரம் ஏராளம். இதே ஆர்வத்துடனும்
அடக்கத்துடனும்
கடமையாற்றவேண்டும்”
என்று
அறிவுரை
கூறினார்.
விஜயனை மாதங்கி எதற்கோ அழைக்க நயனி தந்தையிடம் “எனக்கு நடனமாட பிடிக்கிறது, ஆனால் புகழ் அடைவதற்கு பயமாக இருக்கிறது.”
“நீ சின்னப் பெண். நடனத்தில் அக்கறை செலுத்து. புகழாரங்களை மூளையில் ஏற்றிக் கொள்ளாதே”
“சகுந்தலை பட்ட கஷ்டங்களை பார்த்தால் ஆண்களையே பிடிக்கவில்லை”.
“பாவம், சகுந்தலை முனிவர் சாபத்தால் தான் கஷ்டப்பட்டாள்.” இலக்கியங்களே அப்படித்தான் எல்லாமே மிகையாகத்தான்
இருக்கும்.
வாழ்க்கை
என்பதே
வேறு.
சுக
துக்கங்களை
அனுசரித்துச்
செல்வதே
வாழ்க்கையின்
தாத்பரியம்.
விஜயன்
நல்லவன்,
உன்னை
பொறுப்பாக
பார்த்துக்
கொள்வான்.
தைரியமாக
இரு”
“அம்மா சொன்னாளே. அது என்ன, மூக்கை குத்திக் கொள்ள அவ்வளவு பயப்படுகிறாயாமே. எப்படி மூக்குத்தியை அணிந்து கொள்ளப்போகிறாய்?
நான் ஒரு ரகசியம் சொல்லட்டுமா”,
“ம்………”
தன்வந்திரி மாமா புதிதாக ஒரு தைலம் கண்டு பிடித்திருக்கிறார். அதை தடவிக் கொண்டு மூக்கை குத்திக் கொண்டால் ரத்தமும் வராது, வலியும் தெரியாது”
“விஜயனை காளிதாசர் கொடுத்த மோதிரத்தை போட்டுக் கொள்ளக் கூடாது என்று சொல்லுங்கள் அப்பா”
“அது அவனது திறமைக்கு மகாகவி அளித்த பரிசு.” உன்னிடம் கொடுத்தால் நீ வாங்கிக் கொள்ளாதே. பிறகு அதை தொலைத்து விட்டு துஷ்யந்தனை இழந்து விடப்போகிறாய்”.
இருவரும் சிரித்தார்கள்.
“விஜயனை உனக்கு பிடித்திருக்கிறது
இல்லையா”
“அவன் கல்யாணத்திற்குப்பிறகு
மாறிவிடமாட்டானே”
“அது உன்னுடைய சாமர்த்தியம் தான் அவனை எப்படி சமாளிப்பது என்று அம்மாவைக் கேட்டு தெரிந்து கொள்”. “சரியப்பா”
நயனி, விஜயன் ஜாதகங்களை குறித்து பொருத்தம் பார்க்க வேண்டும் என்று மாதங்கி கூறியதை நினைத்துக் கொண்டார். அரசின் ஆணைக்குப் பிறகு ஜாதகப் பலன்கள்களுக்கும்
மற்ற
ஆட்சேபணைகளுக்கும்
மதிப்பு
உண்டா?
விஜயசிம்மன், சாகுந்தல நாடக அரங்கேற்றத்திற்கு
பிறகு
கற்பனையில்
மிதந்தான்.
கல்யாணத்திற்கு
மாதங்கி
அவன்
சம்மதத்தை
கேட்டபோது
“நயனியை
தன்னால்
சமாளிக்க
முடியுமா
என
வினவினான்.”
“பெண்களை
லாவகமாக
சமாளிப்பதற்கு
உன்
குருவிடம்
ஆலோசனை
கேள்”
என்று
சிரித்துக்
கொண்டே
சொல்லி
அவனை
வெட்கமடையச்
செய்தாள்.
மிஹிரருக்கு
மறுநாள்
மன்னரிடமிருந்து
அழைப்பு
வந்தது.
“உங்களைக் கலந்தாலோசிக்காமல், உங்கள் மகளின் திருமணத்தை எதேச்சையாக முடிவு செய்ததற்கு மன்னிக்கவும்.” குப்த நாட்டில் கலை நன்கு வளர அது அவசியம் என நம்பினேன்.” என்று மன்னர் கூற,உங்கள் அறிவிப்பு எங்களுக்கு பரிபூரண ஆனந்தத்தை தான் அளித்தது. கூடிய விரைவில் மணநாளை தெரிவிக்கிறேன்
என்று
பணிவாக
பதிலுரைத்து
விடைபெற்றார்.
பொதுவாக ஜாதகங்களை குறித்து மணப்பொருத்தம்
பார்க்கும்
முறையை
வைதீகர்கள்
அந்த
காலத்திலேயே
பின்பற்றிக்
கொண்டிருந்தனர்.
தனி
நபர்களின்
சுகதுக்கங்களுக்கும்
கிரஹங்களின்
போக்கிற்கும்
உள்ள
வலுவான
தொடர்பை
மிஹிரர்
பரிபூரணமாக
ஆராய்ந்து
உணர்ந்தவர்.
ஆயினும்
தனி
நபர்
ஜாதகங்களை
அவர்
பரிசீலனைக்கு
எடுத்துக்
கொள்வதில்லை.
நயனி அவரது ஜேஷ்ட புத்திரி ஆயிற்றே. அவளுடைய ஜாதகத்தை துல்லியமாக கணித்து பலன்களை ஆராய்ந்தார். 18 வயது வரை சகல சௌபாக்யங்களும்
நிரம்பிய
நயனியின்
வாழ்க்கையில்
திருமணம்
சிக்கலை
ஏற்படுத்தும்
என்பதற்கான
தடயங்கள்
இருந்தன.
ஆழ்ந்த
ஆராய்ச்சிக்குப்
பிறகு
திருமண
வாழ்க்கை
குறுகியதாக
இருக்கும்
என்ற
கணிப்பு
தெளிவாகியது.
மிஹிரருக்கு
மூளையே
நடுங்க
ஆரம்பித்தது.
கணவனை
சிறு
வயதிலேயே
இழந்து
அல்லலுருவாள்
என்ற
கணிப்பு
தாங்கிக்
கொள்ளக்கூடியதா
என்ன!
இந்த
துர்கணிப்பை
மாதங்கியிடம்
பகிர்ந்து
கொள்ளக்கூட
அவருக்கு…………….மனமில்லை.
(தொடரும்)
படம்-நன்றி-கல்கி
என் குறிப்பு:
ஒருவர் பிறக்கும் நேரத்தைக் கொண்டே இலக்கினம் அமைகிறது.இலக்கினம் என்பது அந்த சாதகரைக் குறிப்பது,உயிர்,குணம்,தோற்றம்,நிறம்,இப்படி சாதகரின் தனிப்பட்ட அம்சங்களைக் குறிப்பது. இலக்கினத்தை ஒன்று எனக் கொண்டு,கடிகாரச்சுற்றில் மற்ற வீடுகளை எண்ணி வர வேண்டும் ,அவ்வாறு வரும்போது இலக்கினத்துக்கு நேர் எதிரே வருவது ஏழாம் வீடு.இது வாழ்க்கைத்துணையைக் குறிப்பதாகும்,இதன் மூலம் ஒருவரது மண வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்.
(தொடரும்)
படம்-நன்றி-கல்கி
என் குறிப்பு:
ஒருவர் பிறக்கும் நேரத்தைக் கொண்டே இலக்கினம் அமைகிறது.இலக்கினம் என்பது அந்த சாதகரைக் குறிப்பது,உயிர்,குணம்,தோற்றம்,நிறம்,இப்படி சாதகரின் தனிப்பட்ட அம்சங்களைக் குறிப்பது. இலக்கினத்தை ஒன்று எனக் கொண்டு,கடிகாரச்சுற்றில் மற்ற வீடுகளை எண்ணி வர வேண்டும் ,அவ்வாறு வரும்போது இலக்கினத்துக்கு நேர் எதிரே வருவது ஏழாம் வீடு.இது வாழ்க்கைத்துணையைக் குறிப்பதாகும்,இதன் மூலம் ஒருவரது மண வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்.
தொடர்ந்து வாசிக்கிறேன். நன்றி.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஅது உன்னுடைய சாமர்த்தியம் தான் அவனை எப்படி சமாளிப்பது என்று அம்மாவைக் கேட்டு தெரிந்து கொள்”. /// ஹஹஹஹ இந்த வரிகளை மிகவும் ரசித்தோம்...
பதிலளிநீக்குசுவாரஸ்யமாக செல்கின்றது...சாதகமா? அதைக் கடந்து திருமணமா...காத்திருக்கின்றோம் அறிந்து கொள்ள தொடர்கின்றோம்....
நன்றிங்க
நீக்குமிஹிரர் அவரது கணிப்பை மாதங்கியிடம் பகிர்ந்துகொண்டாரா இல்லையா? என்ன முடிவெடித்தார் ஆடிய காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஇந்த பதிவிற்கு தந்ததுபோல் இந்த தொடர் கதையின் ஒவ்வொரு பதிவின் முடிவிலும் சோதிடம் பற்றிய தங்களது குறிப்பைத் தரலாமே?
நன்றி ஐயா
நீக்குஅருமை ஐயா திருமணத்திற்க்கும் வருவேன்
பதிலளிநீக்குநண்பர்கள்,உறவினர்களுடன்--...
நீக்குநன்றி
சில சமயங்களில் பிற்பாடு வரப்போகும் பலன்களை பார்க்காமல் இருப்பதே நல்லது என்று தோன்றுகிறது!
பதிலளிநீக்குநல்ல்தானால் மனம் மகிழ்கிறது;தீயதானால் மனம் கவலை கொள்கிறது..மருத்துவர் போல்தான் ஜோதிடரும்;நிச்சயம் தேவையென்றால் அணுகலாம்!
நீக்குநன்றி ஸ்ரீராம்
அருமையாக நகர்கிறது தங்களின் எழுத்து
பதிலளிநீக்குதொடர்கிறேன் ஐயா
தம+1
நன்றி ஜெயக்குமார்
நீக்குதொடர்கிறேன்!
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஅருமையாகச் செல்கிறது! தொடர்கிறேன்!
பதிலளிநீக்குநன்றி சுரேஷ்
நீக்கு