”நான்தான்
சின்னப் பையன்.
இக்கதையின்
ஆசிரியர் மற்றும் நாயகன்.
என்
கதைகளில் உயிர் இருக்க வேண்டும் என நினைப்பவன்.
ஒரு
விலைமாதின் கதை எழுத எண்ணம் கொண்டேன்.
அது
வாழ்க்கையை ஒட்டி இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு நண்பன் மூலம்,ஒரு விலமாதைப் பார்க்கப்
போவதாகத் தீர்மானித்தேன்
தவறாக
எண்ண வேண்டாம்.ஒரு விலைமாதாக அவளுடைய அனுபவங்களை அறியத்தான்;நான் அனுபவிக்க
அல்ல.
தரகன்
என்னை ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்று,”எட்டாம் எண் அறைக்குப் போங்க. காத்துக் கிட்டிருக்கா.சீக்கிரம் முடிச்சிட்டுக் கிளம்புங்க.”என்று சொல்லி விட்டுப் போய் விட்டான்.
அறைக்கதவு
திறந்தே இருந்தது,கட்டிலின் மீது அவள் அமர்ந்திருந்தாள்.
”வாங்க “என்று சொல்லி விட்டுக் கையை நீட்டினாள்,பணத்துக்காக.
பணத்தை
வாங்கியவள் தன் உடைகளைக் களைய முனைந்தாள்
நான்
அவளைத் தடுத்து நிறுத்தினேன்
“நான் அதற்காக வரவில்லை.உன்னிடம்
சில விசயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்”
என்றேன்
அவள் என்னை ஒரு புழுவைப் போல்
பார்த்தாள்”அப்படியாளா
நீ?கேளு” என்றாள்
பேச ஆரம்பித்தோம்.
அவளுக்குச் சந்தேகம் அதிகம்.கணவனுக்கு
தன்னைத் தவிர பிற பெண்களின் தொடர்பு இருப்பதாகச் சந்தேகித்திருக்கிறாள்.
ஒரு நாள்,மாலையும் இரவும் சந்திக்கும்
நேரத்தில் வெளியே சென்று திரும்பும் போது அவள் கணவன் போன்ற ஒருவன் ஒரு வீட்டினுள்
நுழைவதைப் பார்த்தாள்.சினம் மூண்டு தானும் அந்த வீட்டினுள் நுழைந்தாள்.அங்கே
அமர்ந்திருந்த பெண்ணிடம் இப்போது வந்தவர் எங்கே எனக்கேட்க அவள் ஓர் அறையைச்
சுட்டிக் காட்டினாள் .இவள் போய்க் கதவைத்தட்ட ,கதவு திறந்தது.ஆனால் உள்ளே இருந்தது
அவள் கணவனல்ல.இவள் திரும்பும் போது பின்னிருந்து இருகைகள் பலமாகப் பிடிக்க மூக்கில்
ஒரு துணி அழுத்தப்பட்டது.
கண் விழித்தபின் உடலெல்லாம் வலி.தன்
நிலையை உணர்ந்தாள்.
அந்தப்பெண் வந்தாள்.சொன்னாள்”இங்கு நடந்த்தைக் காணொளியாகப்
பதிவுசெய்திருக்கிறோம். இனி நீ தொடர்ந்து ஒத்துழைக்வில்லை என்றால் அது உன்
குடும்பத்தாருக்கு அனுப்பப்படும். இப்போது உன்னை எங்கள் ஆள் வீட்டில் கொண்டு போய்விடுவான்.
நாளை காலை 11மணிக்கு வருவான் அவனுடன் வரவேண்டும்”
அவள் சென்றாள்.தான் தற்கொலை செய்து
கொண்டால் கதியற்று நிற்கப் போகும் தன் சிறுபெண்ணைநினைத்தாள்.படுகுழியில்விழுந்தாள்
”இதுதான் என் கதை!இந்தச்சாக்கடைக்கு நீ
ஏன் வந்தாய்?நீயும் ஏதாவது ஆபத்தில் மாட்டிக்கொள்ளப் போகிறாய்”
அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கதவு
தட்டப்பட்டது.
அவள் பயந்து ஒதுங்கினாள்
அவன் திகைத்தான்.
கதவை உடைத்துக் கொண்டு உள்ளே
வந்தார்கள்.... போலீஸ்!
அவளை இருவர் பிடிக்க, இருவர் இவனிடம் ”வாய்யா
மன்மதராசா” என்றபடிக் கைகளைப் பிடித்தனர்
“சார் நான் அதுக்கு
வரவில்லை...நான் ”என்று
அவன்ஆரம்பிக்க அவர்கள் சிரித்துக் கொண்டே ”பின்ன
வேடிக்கை பாக்க வந்தயா” என்றனர்
அப்போது ஒரு ஆய்வாளர் உள்ளே நுழைந்தார்.
அவரைப் பார்த்த்தும் அவன் அவமானத்தால்
வெளிறிப் போனான்.
அவர் அதிர்ந்தார்.
பின் காவலர்களிடம் “அவரைப் போக விடுங்கள்” என்றார்
பின் காவலர்களிடம் “அவரைப் போக விடுங்கள்” என்றார்
அவன் அவரிடம் ஏதோ சொல்ல முயன்றபோது கையை
உயர்த்தி அவனைத் தடுத்து விட்டுப் ”போகலாம்” என்றார்.
அவன் குப்பையாய் வெளியேறினான்.
வீட்டுக்கு வந்ததும் அப்பா”சிவகுரு! அன்னைக்குப் பெண் பார்த்தோமே அவங்க
வீட்டிலிருந்து இப்பத்தான் போன் பண்ணினாங்க.நம்ம சம்பந்தத்தில அவங்களுக்கு
விருப்பமில்லையாம் ,அன்னைக்கு அப்படிச் சொல்லிட்டு இன்னைக்கு
மாத்திட்டாங்க. பெண்ணோட அண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர்தான்
போன் பண்ணினாரு.நான் போய் நாலு வார்த்தை கேட்டுட்டு வரேன்”
அவன் அவரைத் தடுத்தான்”வேண்டாம்பா.விட்டுடுங்க,போய்க்
கேக்கறது நமக்குத்தான் அவமானம்”
பாவம் சின்னப்பையன்!இனிமே கதை எழுதுவானா?!”
..............
..............
கதையைப் படித்து முடித்து விட்டுக் குமுதத்தை
கீழே வைத்தாள் தாரிணி.மனம் கனத்திருந்தது.கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.மீண்டும்
குமுதத்தைப் பார்த்தாள். கதாசிரியர் பெயர் சிவகுருநாதன்.மென்பொருள் துறையில் பணி
புரிபவர் என்ற அறி முகத்துடன் படமும் பிரசுரமாயிருந்தது.எப்படிப்பட்ட அநியாயம்
நிகழ்ந்து விட்டது?
ஒரு முடிவுக்கு வந்தாள்.தாய் தந்தை வெளியே
சென்றிருந்தனர்.
கைபேசியை எடுத்தாள்
“ஜி-2 காவல் நிலையமா?அண்ணா நான்தான்
தாரிணி.............”.பேசினாள்
இனி சிவகுரு சிக்குவதை சிவனாலும் தடுக்க
முடியாது!
டிஸ்கி:பாவம் வராகமிகிரர்!அதிர்ச்சி அடைந்து உறைந்து போயிருக்கிறார்.ஒரு நாள் ஓய்வெடுக்கட்டும்!
சூப்பர் ட்விஸ்ட்டுகள்
பதிலளிநீக்குஅதுவும் அடுக்கடுக்கடுக்காய் ..
மிகவும் ரசித்தோம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
நன்றி ரமணி
நீக்குஅட! சில நாட்களுக்கு முன் வந்த உங்கள் கதை.....இன்று திருப்பத்துடன்...நாங்கள் நினைத்தோம் அந்தப் பெண் எப்படியாவது அவளுக்குக் கணவனாக வருபவன் நல்லவனே என்று தெரிந்து முடிவு எடுக்க மாட்டாளா என்று....சூப்பர்....
பதிலளிநீக்குநீங்கள் நினைத்தபடி ந்டந்து விட்டது!
நீக்குநன்றி
எந்த கதைக்கும் முடிவில்லை என்று படித்திருக்கிறேன். அதை நிரூபித்துவிட்டர்கள். நல்ல முடிவை தந்திருக்கிறீர்கள். அதற்கு வாழ்த்துக்கள்! இதைத்தொடர்ந்து இன்னொரு கதையை எதிர்பார்க்கலாமா?
பதிலளிநீக்குஇத்ற்குப் பின் என்ன இருக்கிறது?முயன்று பார்க்கலாம்!
நீக்குநன்றி
ஒரே மரத்தில் பல கிளைகள் பிரிகின்றது அருமை ஐயா.
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி
நீக்குபுதிய திருப்பம்!
பதிலளிநீக்குநன்ரி ஸ்ரீராம்
நீக்குஎன்ன படித்ததையே மறுபடி படிக்கிறோமா என மறுபடி தலைப்பை பார்த்தேன்..
பதிலளிநீக்குஇதுவும் நல்லாயிருக்குங்க ஐயா.
நன்றி சசிகலா
நீக்குநல்ல திருப்பம்!(கதையில்)
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குஅருமையான திருப்பம்
பதிலளிநீக்குரசித்தேன் ஐயா
தம +1
நன்றி ஜெயக்குமார்
நீக்குகதைக்குள் கதை! அசத்தல் எழுத்து! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி சுரேஷ்
நீக்குகதையை தொடர்ந்து இன்னொரு முடிவு அமைத்தது அட்டகாசம்.
பதிலளிநீக்குகுமுதத்தில் நான் எழுதிய மதுவுக்கு எதிராக போராடாதே கதை
உங்கள் பாணிக் கதையே . எனது முந்தைய கதை வெளியானபோது எனக்கு தகவல் தெரிவித்தது தாங்கள்தான். இப்போதும் நீங்கள் தொடர்பு கொண்டு தகவல் தர முயன்றமைக்கு நன்றி. மன்னிக்கவும் ஐயா , அன்று இரவு 11 வரை அலுவலக பணியில் ஈடுபட்டிருந்ததால் தங்கள் அழைப்பை அறிய இயலவில்லை.
வலையுலகில் தொடக்கத்தில் இருந்து உங்கள் ஆதரவும் ஆசியும் கிடைத்திருப்பது நான் பெற்ற பேறு
முதன் முதலில் டிஸ்கவரி புத்தகக்கடையில் ஒரு சந்திப்பில் உங்களிடம் அறிமுகமானபோது நீங்கள் முரளிதரன் என்று அறிமுகப் படுத்திக்க் கொள்ள நான் டி என் முரளிதரன் என்று சொல்லுங்க என்ரு சொன்னது உங்களுக்கு நினைவிருக்குமா தெரியாது.அதன் பின் பதிவுலகில் உங்கள் வளர்ச்சி கண்டு மகிழ்ந்திருப்பவன் நான்.வாழ்த்துகள்.நன்றி
நீக்குஅதை எப்படி மறக்க முடியும்? மிக நன்றாக நினைவில் இருக்கிறது . இன்று வரை அதனை பலரிடமும் சொல்லி மகிழ்வேன். நன்றி
நீக்குமுடிவில் ஒரு நல்ல ஆரம்பம் என்றே படுகிறது :)
பதிலளிநீக்குமுடிவுகள் ஆரம்பமாவதும் ஆரம்பங்கள் முடிவாவதுமே வாழ்க்கை!
நீக்குநன்றி பகவான்ஜி
நல்ல திருப்பம் நன்றாக உள்ளது கதை வித்தியாசமாக எழுதுகிறீர்கள் நன்றி! வாழ்த்துக்கள் ....!
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி இனியா
பதிலளிநீக்குஆஹா... ட்விஸ்டுகள் நிறைந்த அருமையான கதை ஐயா...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.