தொடரும் தோழர்கள்

திங்கள், ஆகஸ்ட் 31, 2015

விதியா?மதியா?=-அன்புள்ள மான்விழியே-இறுதிப் பகுதி



விஜயசிம்மன் ஈஸ்வரதயவில் யமனை வென்ற மார்க்கண்டேயனோ அல்லது நயனி யமனுடன் போராடி சத்யவானின் உயிரை மீட்ட சாவித்திரியோ அல்லர் என்பதை மிஹிரர் நன்கு அறிவார்.

வேத உபநிஷத்துக்களையும் பக்தி நூல்களையும் சித்தாந்தங்களையும் பகவத்கீதை மற்ற பக்தி நூல்களையும் சித்தாந்தங்களையும் கரைத்துக் குடித்த மிஹிரரையே பாசம் கிரங்கச் செய்து மாளவொண்ணா சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சோகத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டு அவர்களையும் கண்ணீரில் மூழ்கவைக்க அவருக்கு துணிவில்லை.

தன்னை சுதாரித்துக் கொண்டு விஜயனின் ஜாதகத்தை வேறு கோணங்களில் அலசினார். அவனுக்கு புத்திர பாக்கியம் இருப்பது தெள்ளத் தெளிவாக உறுதியானது. மணநாள் அன்றே கருவுற்றால், நயனி ஒரு சான்றோணை ஈன்றெடுப்பாள் என்ற கணிப்பு அவருக்கு ஆறுதலாக இருந்தது.

நயனி விஜயசிம்மன் தம்பதிகளின் முதலிரவு ஏற்பாடுகளை செய்ய விரைந்தார் வராகமஹிரர்.

இதற்கிடையே, மணமேடையிலிருந்து இளைப்பாற வந்த நயனியை மூக்குத்தியின் கல் எப்படி கழன்றது என்று மாதங்கி வினவ, “முகூர்த்தம் முடிந்தவுடன் மாலை மாற்றிக் கொள்ளும் போது பூமாலையின் நார் மூக்குத்தியில் மாட்டிக் கொண்டு கல்லை இழுத்து விட்டது அந்தக் கல்லை பத்திரப்படுத்த விஜயசிம்மனிடம் கொடுத்ததாக கூறினாள்.

அருகிலிருந்த விஜயசிம்மன், தன் தோழனும், மிஹிரரின் சிஷ்யனுமான ஈஸ்வர பட்டனிடம் கல்லைக் கொடுக்க, அதை அவன் அருகிலிருந்த மணிக்காட்டியின் மணலில் சொருகியதாக விளக்கினான்.

கல்லை பத்திரப்படுத்த வேறு இடம் கிடைக்கவில்லையா என மாதங்கி சற்று கோபமாக வினவ, “விலை உயர்ந்தகல்”, அதனுள் போட்டால் யாரும் தொட சாத்யமில்லை. மேலும் அந்த நிமிடத்தில் குரு (மிஹிரர்) அவசரமாக கூப்பிட்டதால் அப்படி செய்தேன், என்றான் ஈஸ்வரன்.

 “கோபமே வராத மிஹிரருக்குக் கூட உன்னுடைய இந்த செயல் சீற்றத்தை வரவழைத்திருக்கும்”. “அந்த மணிக்காட்டியை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வந்தார்.” என்ன அதிசயம். இந்த கல்யாண கலாட்டாவில் கூட அதை கண்டு பிடித்து என்னை சலிக்க வைத்து கல்லை மீண்டும் பதிக்க வைத்துவிட்டாரே! என்று மாதங்கி அதிசயித்தாள்.

இன்னும் சிறிது நேரத்தில் மாதங்கி மிஹிரரிடம் இந்த விஷயத்தை சொல்லப்போகிறாள்.
அந்த நிமிடம் வரை பாசவலையில் சிக்கி சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்த மிஹிரரை அப்படித் தவிக்கவிட்டது தான் ஈஸ்வர சங்கல்பமோ




என் குறிப்பு:ஐந்தாம் இடம் குழந்தைப் பேற்றைக் குறிக்கும்.அந்த பாவமோ,அதன் அதிபதியோ தீய கோளுடன் சேரமலோ,அவற்றால் பார்க்கப்படாமலோ இருந்து அத்தோடு நல்ல கோள்களின் இணைவு பெற்றிருந்தால் நிச்சயம் மக்கட்பேறு உண்டு.குரு எனப்படும் வியாழன்தான் குழந்தைப் பேற்றுக்குக் காரகன்.

வராக மிகிரருக்கு ஏன் இந்த மன வருத்தம் ஏற்பட்டது?அதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?
.....அன்று அவருக்குச் சந்த்ராட்டமமாக இருக்கலாம்!

சாதகப்படி நயனி கணவணை இழக்க வேண்டும் என்பது விதி!

ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் மணம் நடந்தால் விதியை வெல்லலாம் எனக் கண்டது மிகிரரின் மதி!

20 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. முடிந்தது;ஆனால் வாழ்க்கையே ஒரு தொடர்கதைதானே!
      நன்றி ஐயா

      நீக்கு
  2. சந்த்ராட்டமம் என்றால் என்ன சொல்லுங்களேன்.

    எல்லாம் நல்லபடியாக முடிந்தது அறிந்து மகிழ்ச்சி! கதையை அருமையாய் நகர்த்தி சென்றமைக்கு திரு பார்த்தசாரதி அவர்களுக்கு வாழ்த்தை சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் இருக்கும் நாட்கள்,சந்திராட்டம தினங்கள் என்று சொல்லப்படும்.
      நன்றி

      நீக்கு
  3. விதிக்கும் மதிக்குமிடையேயான போட்டி.

    பதிலளிநீக்கு
  4. முடிந்ததா தொடர் இல்லை தொடருமா ஐயா? விதியை மதியால் வெல்லலாம் என்பதுதான் இதன் நீதியோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க்கை இறப்பு வரை தொடரத்தானே வேண்டும்
      நன்றி ஐயா

      நீக்கு
  5. அருமையான முடிவு! சோதிட விளக்கங்களும் இறுதியில் கொடுத்தமை மிகவும் பொருத்தம்! நன்றி!

    பதிலளிநீக்கு
  6. நலமுடன் முடிந்தமைக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  7. நான்கு பகுதிகளையும் ஒரே மூச்சாக படித்து முடித்தேன்.விறுவிறுப்பான கதையோட்டம்.கட்டிப் போட்டுவிட்டது .ஜாதகக் குறிப்புகள் அருமை

    பதிலளிநீக்கு
  8. மிகிரர்-ககும்...மிஹிரர்க்கும் ஒரு குழப்பம் எனக்கு அய்யா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிஹிரர் என்று என் நண்பர் எழுதினார்;வட மொழி எழுத்தைத் தவிர்த்து மிகிரர் என்று நான் எழுதினேன்.அவ்வளவே

      நீக்கு