தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஜூன் 09, 2015

முருகனுக்கும் சோதனை!



என்ன அண்ணே ?மொட்டையெல்லாம் போட்டிருக்கீங்க?பழனியா?திருப்பதியா?
பழனிதான் வேலுச்சாமி.

நல்ல தரிசனமாண்ணே?

பரவியில்லை .கூட்டம்தான் பயங்கரம்!

ஏன் அண்ணே,பழனிலேருந்து வந்திருக்கீங்க,முக்கியமான சமாசாரம் கிடையாதா?

திருநீறா?இதோ ,பையிலே வச்சிருக்கேன்.பிடி இந்தப் பொட்டலத்தை

சரி,குடுங்கண்ணே,நான்கேட்து வேற!

!பஞ்சாமிர்தமா?நீ வேற என்ன கேட்கப்போறே.வீட்டுக்கு வா.தரேன்.

சாயந்திரம் நிச்சயம் வரேண்ணே!
---------------------------

வா வேலுச்சாமி.கரக்டா வந்துட்டயே.இந்தா உனக்காக இந்தக் கிண்னத்தில எடுத்து
வச்சிருக்கேன்.

.ஒரு செய்தி படிச்சேண்ணே.பழனி பஞ்சாமிருதத்தில உபயோகிக்கற வெல்லம் தரம் இல்லையாம் அதைப் பரிசோதனக்கு அனுப்பிச்சிருக்காங்களாம்.

ஓ!ஏதோ நூடுல்ஸை தடை பண்னினாங்களே அது மாதிரியா?

ஆமாண்ணே!எனக்கு ஒண்ணு புரியலண்ணே.சனங்க தினம் சாப்பிடற எத்தனியோ உணவுப் பொருள்களில பயங்கரக் கலப்படம் இருக்கு அதையெல்லாம் விட்டுட்டு,என்னிக்கோ ஒரு நாளைக்கு அதுவும் கொஞ்சமா உள்ளங்கையில போட்டு நக்கப் போற  பஞ்சாமிர்தத்துக்கு இப்பப் பரிசோதனை ரொம்ப அவசியமா?தினம் நிறையப்பேர் ஓட்டல்ல சாப்பிடறாங்க. எல்லா ஓட்டல்லயும் உணவு தரமானதா இருக்காண்ணே.அதுக்குத் தீவிரமான தரக்கட்டுப்படு அவசியம் இல்லையாண்ணே?அது இருக்கா?அதுவும் பழனி பஞ்சாமிர்தம்னா அது கோவில்ல மட்டும் செய்யறதில்ல.பல கடைகள் தனியா செய்து விக்கறாங்க.அதுஎல்லாமே  தரம் சரியா இல்லையா? இல்லை குறிப்பா ஏதாவதா? பொதுவா திருப்பதி லட்டு மாதிரி சொல்லிட முடியுமா அண்ணே?

“எப்படியோ போகட்டும் வேலுச்சாமி.”

சரிதாண்ணே.இன்னும் ரெண்டு டப்பா வாங்கிட்டு வந்திருக்கக் கூடாது?தடை பண்ணிப் போட்டா பெறவு கெடைக்காதில்ல.

ஏதாவது நிகழ்ச்சியைக் கடவுள் வாழ்த்தோடு ஆரம்பிக்கிறமாதிரி,கடவுள் கிட்டேருந்து தொடங்கிருக்காங்க திண்டுக்கல் உணவுப்பாதுகாப்பு அதிகாரி சாம் இளங்கோ!

நல்லது நடந்தாச் சரி!




33 கருத்துகள்:

  1. திருப்பதி லட்டின் தரம் கூட இப்போது குறைந்துவிட்டது என்று பேசப்படுகின்றது. பல உணவுப் பொருள்கள் எப்படிச் செய்யப்படுகின்றது என்று பார்த்தால் நாம் எதுவுமே வெளியில் சாப்பிடமாட்டோம். அப்பள மாவு காலால் மிதிக்கப்படுகின்றது. அது போன்று திருப்பதி லட்டும் கூட என்று சொல்லுவதுண்டு. இப்படிப் பல....வெளியில் ஐஸ் போடப்பட்டு ஜூஸ் குடிக்கின்றோமே அந்த ஐஸ் கட்டிகளின் மேல் வெற்றுடம்புடன் ஆண்கள் உட்கார்ந்திருக்கும் ஃபோட்டோவுடன் செய்திக் குறிப்பும் வந்தது. நல்லது நடந்தால் சரி!...

    பதிலளிநீக்கு
  2. நீண்ட நாள் கடையில் வைத்து விற்பனை செய்யப்படுகின்ற பொருட்களுக்கென்று விசேஷமான கட்டுப்பாடுகள் உண்டு. (மேகி போன்றவைகளுக்கு.) அவ்வப்பொழுது தயாரித்து சில நாட்களிலேயே விற்பனையாகிவிடும் உணவுப் பொருட்களுக்கு அதே கட்டுப்பாடுகள் விதிப்பது சாத்தியமா என்று தெரியவில்லை. அமல்படுத்தமுடியாத கட்டுப்பாடுகளை விதிப்பதைவிட சும்மா இருப்பதே மேல் அல்லவா? மற்றபடி, பழனி மட்டுமல்ல, வேறெந்த பஞ்சாமிர்தத்திலும் எனக்கு அதிக நாட்டமில்லை. ஏனோ வழவழா பொருட்களில் எனக்கு நாட்டம் போய்விட்டது. - இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு
  3. வரவர அரசியல் போக்கும் சரியில்லை! அதிகாரிகள் போக்கும் சரியில்லை!

    சனங்க தினம் சாப்பிடற எத்தனியோ உணவுப் பொருள்களில பயங்கரக் கலப்படம் இருக்கு அதையெல்லாம் விட்டுட்டு,என்னிக்கோ ஒரு நாளைக்கு அதுவும் கொஞ்சமா உள்ளங்கையில போட்டு நக்கப் போற பஞ்சாமிர்தத்துக்கு இப்பப் பரிசோதனை ரொம்ப அவசியமா

    நல்ல கேள்வி!

    பதிலளிநீக்கு
  4. //ஏதாவது நிகழ்ச்சியைக் கடவுள் வாழ்த்தோடு ஆரம்பிக்கிறமாதிரி, கடவுள் கிட்டேருந்து தொடங்கிருக்காங்க திண்டுக்கல் உணவுப்பாதுகாப்பு அதிகாரி சாம் இளங்கோ!//

    அடக்கடவுளே !

    //நல்லது நடந்தாச் சரி!//

    அதுவும் சரிதான். :)

    பதிலளிநீக்கு
  5. பஞ்சார்மிதம் பற்றிய பன்ச்
    விழிப்புணர்வு விருந்து படைத்தமைக்கு நன்றி அய்யா

    நன்றி!த ம 4
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  6. பிள்ளையார் கோவிலில் முதலில்
    துவங்கி இருந்தால் விக்னம் இல்லாமல்
    நடக்கக் கூடுமோ ?
    ( எரிச்சலை இப்படியாவது
    மாற்றிக் காட்டிப் போவோம் )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்தப்பிள்ளையாருக்கும் இதுபோல் ஸ்பெசல் பிரசாதம் இல்லையே?!
      நன்றி ரமணி

      நீக்கு
  7. //நல்லது நடந்தாச் சரி!//

    நடக்குமா என்பதுதான் இப்போதைய கேள்வியே! கடவுள் காப்பாராக!

    பதிலளிநீக்கு
  8. முருகனுக்கு வந்த சோதனை என்ன? என்ன? என்ன?

    பதிலளிநீக்கு
  9. நாட்டுல களை எடுக்க வேண்டியது நிறைய இருக்கு....களைகளை எடுத்த பின் ஒன்னு ரெண்டு தான் மிஞ்சும்....போல....அப்போது தான் நல்லது வளர ஏதுவாக இருக்கும்.....நல்ல மனதுடன் அதிகாரிகள் செய்ய வந்தால் நலம்....கடவுளுக்கே வெளிச்சம்...

    தம +1

    பதிலளிநீக்கு
  10. எதைத்தான் நம்பி வாங்குவது கலப்படம் செய்வதற்க்கு ஒரு அளவு வேண்டாமா அப்பா முருகா...
    தமிழ் மணம் 9

    பதிலளிநீக்கு
  11. கோவில் பிரசாதத்தையும் சோதனை செய்வதில் தவறில்லை. துக்ளக்கில் போல இது ஏதோ பரபரப்புச் செய்தி போலத்தான் இருக்கிறது. கோக்க கோலா போன்ற பானங்கள் பற்றி முன்னர் வந்த தகவல்கள் மனதைப் பதற வைத்தன. என்ன ஆச்சு? இதுவும் கடந்து போகும். சில நாட்களில் இதை மறந்து விட்டு அடுத்த விஷயத்தில் பரபரப்பாவோம்.

    பதிலளிநீக்கு
  12. தரம் பார்ப்பதில் தவறில்லைதான்! ஆனால் மற்ற உணவு விடுதி கலப்படங்களும் தரம்பார்க்கப்படுமா? என்பதுதான் கேள்வி!

    பதிலளிநீக்கு
  13. கலப்படம் மட்டும்தான் இப்போதைய பிரச்சினைக்கு காரணமில்லை எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம் ,கலப்படத்தில் கலந்து இருப்பது அரசியல் :)

    பதிலளிநீக்கு
  14. அரசியல் ஆதாயத்தோடு கலப்படம் குறையப்பெற்றால் மகிழ்ச்சியே.

    பதிலளிநீக்கு
  15. அவன் பார்த்துப்பான். எல்லாம் நன்மைக்கே. நன்றி பதிவுக்கு ...!

    பதிலளிநீக்கு