வரும்போது வாசல்ல பொங்கல் பிரசாதம் கொடுத்தாங்களா.சாப்பிட்டதுக்கப்புறம் அந்தத் தொன்னையை எத்தனை பேர் குப்பைத்தொட்டில போட்டீங்க? பெரும்பாலோர் அப்படிச் செய்யாம ரோடு ஓரத்தில போட்டுட்டு வந்திருப்பீங்க.அங்க ஒருத்தர் சொல்றார் சாமி மண்டபத்து உள்ள கொண்டு வந்து போடலையேன்னு சந்தோஷப்படுங்கன்னு!.(சிரிப்பு)
நம்ம சுற்றுப்புறததைச் சுத்தமா வச்சுக்கணும்கற உணர்வு நம்மகிட்ட இல்லை
இது போலததான் நம்ம மனத்தையும் குப்பையா வச்சிட்டிருக்கோம்.
நேற்றுக் காலையில சத்சங்கத்துக்கு
வந்த ஒரு கிரகஸ்தர்,நிறைய பழங்கள் எல்லாம் கொண்டு வந்து சாமிகிட்ட குடுத்தார்.
சாமி கேட்டார் என்னப்பா விசேஷம்னு.
அவர் சொன்னார்”சாமி!எங்க வீட்டுல மாடத்தில
பரம்பரையா அம்மன் இருக்கான்னு நாங்க வெள்ளிக்கிழமை தவறாம பூசை பண்ணிப்
பிரசாதமெல்லாம் படைச்சுக் கும்பிடறோம்.அந்தப் பிரசாதம்தான் இது”
சாமிகேட்டார்”ரொம்ப சந்தோஷம்பா.அம்மன்
கிட்ட நீ ஏதாவது வேண்டியிருப்பியே? என்ன கேட்டே?”
நல்லாருக்கணும்னு வேண்டினேன் சாமி.
உலகமே நல்லாருக்கணும்னு வேண்டினியா.இல்ல
உன் குடும்பம் மட்டும் நல்லாருக்க ணுன்ம்னு வேண்டினையா?
அவர்கிட்டிருந்து பதில் இல்லை.
தலையக் குனிஞ்சிட்டு நிக்கறார்.அவர்னு
இல்ல .எல்லாருமே இப்படித்தான்.எனக்கு அதைக் கொடு இதைக்கொடுன்னு ஆண்டவனை
வேண்டறோம்.அவனுக்குத் தெரியாதா,உனக்கு என்ன வேணும்னு.நமக்கு எது தகுதியோ,நமக்கு
எது நல்லதோ அதை அவன் தருவாங்கிற நம்பிக்கை நம்ம கிட்ட இருக்கா?
ஒருத்தர் கேட்டார்.
அவர் வீட்டு மாடத்தில அம்மன்
இருக்கான்னு சொன்னாரே;உண்மையா கடவுள் எங்கே இருக்கார்னு
சாமி பிரகலாதன் மாதிரி தூணிலும்
இருப்பான் துரும்பிலும் இருப்பான்னு சொல்வார்னு எதிர்பார்த்தாரோ என்னவோ(சிரிப்பு)
சாமி
சொன்னார்”
இறைவன் உன் வீட்டு மாடத்திலும் மண்டபத்திலும், கூடத்திலும் கோவிலிலும்,வேடம் அணிந்த ஆஷாடபூதிகளிடமும் இருக்கான்னா நினைக்கிறாய். இல்ல.அவன் இதயத்தில
இருக்கான்.யார் இதயத்திலன்னு கேள்வி வருதா.யார் ஆசையை விட்டாங்களோ அவங்க இதயத்தில.நெஞ்சம்
அளவில்லா அதீத ஆசைகளால நிரம்பியிருந்தா அதனாலே அந்த ஆசையின் காரணமா இன்னும் பல
இதயத்தில குடியேறிடும் ....கோபம்,பொறாமை,வெறுப்பு இப்படி.இதெல்லாம் குப்பைகள்.ஒரு
இடம் காலியாக சுத்தமாக இருந்தால்,அங்கு குடியேறலாம்.அங்கு குப்பைகள்
நிரம்பியிருந்தால்? அது போல குப்பைகள் நிரம்பிய இதயத்தில் கடவுள் எப்படி
குடியேறுவார்,அதனால் மனதைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்,
திருமூலர்
சொல்றார்...
”மாடத் துளானலன் மண்டபத் துளானலன்
கூடத் துளானலன்
கோயி லுளானலன்
வேடத் துளானலன் வேட்கைவிட்
டார்நெஞ்சில்
மூடத் துளேநின்று முத்திதந் தானே”--
அதாவது
கடவுள் வீட்டு மாடத்திலோ,மண்டபத்திலோ,கூடத்திலோ,கோவிலிலோ,திரு வேடத்திலோ இருப்பவன்
இல்லை.ஆசையை விட்டவர் நெஞ்சில் மறைந்திருந்து முக்தி அளிக்கிறான்.
இதெல்லாம்
ஒரு ராத்திரில நடக்கிற காரியமில்ல.ஆனா முயற்சி செய்யணும்.இங்க பொழுது போக்கறத்துக்கு
வந்துட்டு,வீட்டுக்குப்போனது எல்லாத்தையும் மறந்திட க்கூடாது.முயற்சி
திருவினையாக்கும்,
உங்க வீட்டை யும் சுற்றுப்புறதையும் சுத்தமா வச்சுக்குங்க,
உங்க மனதையும்தான்
ஆசீர்வாதம்
(ஸ்வாமி பித்தானந்தாவின் உரையிலிருந்து)
அருமையானதொரு மன அலசல்.
பதிலளிநீக்குஐயா நான் குப்பையை தொட்டியில் போடும் ரகமே...
மேலும் இதை தாங்கள் நம்புவீர்களோ என்னவோ ஆனால் உண்மை நான் இறைவனிடம் வேண்டும பொழுது இந்த உலக்த்தில் உள்ள அனைவரும் நல்லா இருக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை மட்டுமே இன்று வரை கடைப்பிடிக்கிறேன்,
இதனுள் நானும் உண்டு, எனது எதிரியும் உண்டு ஏன் நீங்களும் உண்டு.
தமிழ் மணம் 2
பிறருக்காகச் செய்யும் பிரார்த்தனைகள் boomerang போன்றவை.நமக்கே திரும்பி வந்து பயன் தருபவை!
நீக்குஉங்கள் நல்ல மந்துக்கு வாழ்த்துகள்
நன்றி கில்லர்ஜி
நன்னாயிருந்தது. ஆமாம் இந்த பித்தானந்தா fictious character ஓ அல்லது நீர் சந்தித்த சாமியார்களில் ஒருத்தரோ..
பதிலளிநீக்குconfusing ஆ இருக்கு. ஆனாலும் சத் ஸங்கம் நன்னாயிருக்கு போங்கோ...
ரசித்தேன்.
God Bless You
இவர் நிச்சயமாக நான் சந்தித்த சாமியார்களில் ஒருவர் இல்லை.
நீக்குபாதி fictitious என்று கொள்ளலாமா?!:))
நன்றி
சுவாமி பித்தானந்தாவின் உரை வர வர சுவை கூடிக்கொண்டிருக்கிறது. அவரை எப்போது நேரில் பார்க்கலாம்?
பதிலளிநீக்குஇன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும்!
நீக்குநன்றி சபாபதி சார்.
திருமூலர் வந்துட்டாரா! சூட்சுமங்களை இனிமே இந்த ப்லாக்லயாவது பித்தானந்தா எடுத்துவிடட்டும்!
பதிலளிநீக்குஅப்பாஜி!நல்லாருக்கீங்களா?எழுதுவேன் என்றே நினைக்கிறேன்
நீக்குநன்றி
திருமூலர் கருத்து ஏற்கத் தக்கதே!
பதிலளிநீக்குதிருமந்திரம் அது ஒரு மந்திரம்
நீக்குநன்றி ஐயா
நான் பொங்கச் சோறே வாங்குவது..இல்லீங்க..அய்யா....
பதிலளிநீக்கு’பொங்க’ அரிசிதான் வாங்கணும்.பின் பொங்கினால் சோறாகும்!:))
நீக்குநன்றி வலிப்போக்கன்.
நல்ல கருத்துக்கள் ஐயா...நன்றி
பதிலளிநீக்குநன்றி உமையாள் காயத்ரி
நீக்குஅப்படிச் சொல்லுங்க...
பதிலளிநீக்குஆசையே அலை போல... நாமெல்லாம் அதன் மேலே...
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே...!
எல்லாத்துக்கும் நன்றி வலைச் சித்தரே
நீக்குஇப்போது வந்து விட்டது ஓட்டை போட்டு விட்டேன் நன்றி ஐயா.
பதிலளிநீக்குவலைப்பதிவைக் காக்கா கொண்டு போயிருந்தது.சித்தர் நொடில சரி
நீக்குபண்ணிக் கொடுத்தார்.
நன்றி
நல்லதொரு தகவல்...பகிர்வுக்கு நன்றிங்க ஐயா.
பதிலளிநீக்குநன்றி சசிகலா
நீக்குமனதின் குப்பைகளை களைய திருமூலரின் பாடலோடு சுவாமிஜியின் விளக்கம் நன்று!
பதிலளிநீக்குத ம 9
நன்றி செந்தில் குமார்
நீக்கு”மாடத் துளானலன் மண்டபத் துளானலன்
பதிலளிநீக்குகூடத் துளானலன் கோயி லுளானலன்
வேடத் துளானலன் வேட்கைவிட் டார்நெஞ்சில்
மூடத் துளேநின்று முத்திதந் தானே”--
திருமூலரின் இப் பாடலும் சுவாமி பித்தானந்தா வின் விளக்கமும் அப்படியே பசுமரத் தாணி போல பதிந்ததையா மிக்க நன்றி இவ் இவ்வினிய பதிவுக்கு தொடர வாழ்த்துக்கள் ...!
திருமூலர் பாடல் அருமை! மனதில் உள்ள குப்பைகளை அகற்றினால்தான் இறைவன் குடிகொள்ளும் ஆல்யமாக்கலாம் நம்மனமும் ஆலயமே... எனவே சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் அவசியம்....நல்ல பதிவு...
பதிலளிநீக்கு