தொடரும் தோழர்கள்

திங்கள், ஜூன் 15, 2015

இரு சம்பவங்கள்;இரு கேள்விகள்!



நேற்று மாலை வெளியே செல்லும்போது நாலைந்து நரிக்குறவர்கள். ஓடுவதைக் கண்டேன். நின்று கவனித்தபோது தெரிந்தது ஒரு பூனையைத் துரத்திக் கொண்டு ஓடுகிறார்கள்  என்று..பூனையால் தப்பிக்க முடியவில்லை.அதைச் சுற்றி வளைத்து அதன் மீது ஒரு கோணிப் பையைப் போட்டுப் பிடித்துத் தோளில் போட்டுக்கொண்டு போய்விட்டார்கள்.

பாவம் பூனை.வெளியே கிளம்பும் போது மனிதன் எவனோ குறுக்கே வந்து  விட்டானோ?!  
***************************************************************


இரண்டு நாட்களாக இரவு படுத்தபின் ஒரு மூஞ்சூறு வீட்டுக்குள் வந்து தொந்தரவு செய்து கொண்டிருந்தது.தூங்கும்போது-அது தூங்கும்போது அல்ல- ,நான் தூங்கும்போது கடித்துத் தொலைத்து விடுமோ என் பயம்!நான் தரை மேல் படுக்கை விரித்துத்தான் படுக்கிறேன் .நேற்று காலை முதல்  ஒரு துர்நாற்றம்..வெளியே ஏதோ செத்துக் கிடக்குமோ என எண்ணினேன்.வேலைக்காரப்  பெண் வந்து பெருக்கும்போது படுக்கை அறை மூலையில் செத்துக்கிடந்த மூஞ்சூறைக் கண்டு பிடித்து அப்புறப்படுத்தினாள்

எனக்கு ஆச்சரியம்

மூஞ்சூறுதான் நம்மைக் கடிக்கக் கூடவில்லையே;ஏன் செத்தது?:))

(ஃபிரிட்ஜுக்குக் கீழிருந்து கிரிச்.கிரிச் சப்தம் கேட்டதும்,ஒரு கம்பை அடியில் நுழைத்துப் பரசினேன்.அதில் அந்த மூஞ்சூறுக்கு மூக்கில் அடி பட்டிருக்குமோ?)
 

29 கருத்துகள்:

  1. அப்படி இருக்காது என
    அறிவு சொன்னாலும்
    அப்படியும் இருந்திருக்கலாமோ
    என எண்ணவைக்கிறது
    தங்கள் எழுத்தின் திறன்

    பகிர்வுக்கும் தொடரவும்
    நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. ஹஹஹஹஹஹ் நல்ல கேள்விகள்! அதுவும் அந்த பூனைக்குக் குறுக்கே குறவர்கள் சென்றதால்தான்...மிகவும் ரசித்தோம்...

    பதிலளிநீக்கு
  3. மனுசன் குறுக்கே போனால் பூனைக்கு ஆகாது
    தமிழ் மணம் 4

    பதிலளிநீக்கு
  4. இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதில்தான். தலைவிதி!

    பதிலளிநீக்கு
  5. பாவம் அந்த பூனையும் மூஞ்சூறும்! பொதுவாக மூஞ்சுறு கடிக்காது! என்ன ஒருவித துர்நாற்றம் அது நடமாடுகையில் வீசும். தமிழ்மணம் முதலிடத்திற்கு வாழ்த்துக்கள்! என் தளத்தில் தமிழ்மணம் என்று நீங்கள் இட்ட பின்னூட்டம் புரியவில்லை! தமிழ்மணம் சென்று பார்த்து தெரிந்து கொண்டேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  6. நடந்துள்ள இரண்டு சம்பவங்களையும்விட, தாங்கள் அதை எடுத்துச்சொன்ன விதம் சூப்பர். :)

    பதிலளிநீக்கு
  7. நடத்துங்க...

    இப்படி அப்பாவி மூஞ்சுருவை கொண்ணுட்டிங்களே எசமான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்க காலனி பிள்ளையாருக்குக் கூட நாலு தோப்புக்கரணம்!
      நன்றி

      நீக்கு
    2. எங்க காலனி பிள்ளையாருக்குக் கூட நாலு தோப்புக்கரணம்!
      நன்றி

      நீக்கு
  8. பாவம் பூனையும் மூஞ்சூறும்!

    பதிலளிநீக்கு
  9. வலுத்தவன் கையினால் அடி பட்டு சாகவே ,இப்படிப்பட்ட உயிரினங்கள் படைக்கப் பட்டிருக்கின்றனவோ :)

    பதிலளிநீக்கு
  10. பூனையும் பாவம், மூஞ்சுறும் பாவம். அவை நம்மை பாவிகள் என்று கூறும்.

    பதிலளிநீக்கு
  11. இரண்டுமே வித்தியாசமான பதிவுகள். அப்படியும் இருக்கலாமா..!
    த ம 12

    பதிலளிநீக்கு