”இதோ பாருங்க!நீதி மன்றமே சொல்லியாச்சு.உங்களுக்கு
வேண்டியவங்க நாலு பேரை அழைச்சிட்டு வாங்க.எல்லோரும் கூடிப்பேசி சமாதானமாப்
போயிடலாம் உங்களுக்கு என்ன வேணுமோ அதை யோசிச்சுச் சொல்லுங்க.ஓர் உடன்படிக்கைக்கு
வந்துட்டோம்ன சட்டப் படியே அதை நீதி மன்றத்தில தாக்கல் செய்து வழக்கை
முடிச்சுக்கலாம்.நான் சிறைக்குப் போறதாலயோ ,நீதி மன்றத்தில அபராதம் கட்டுவதாலயோ
உங்களுக்கு என்ன பயன்? அந்தப் பணம் உங்களுக்குக் கிடைச்சாலாவது பிரயோசனமா இருக்குமே.ஆறு வயசுக்
கொழந்தை வேற இருக்கு.அதுக்கு எதிர்காலத்துக்குப் பணம் தேவையில்லையா?சீக்கிரம்
முடிவு செய்யுங்க.”
2008! அந்த 15 வயதுப் பெண்ணுக்கு அவள்
வாழ்வின் இருண்ட நாள்.அன்றுதான் அவள் அந்த மிருகத்தால் வன்புணர்வுக்கு ஆளானாள். அந்தப்
பதின்ம வயதுச் சிறுமியின் வேதனை அந்த மிருகத்துக்குச் சுகமாக இருந்தது. முடிந்தது.எல்லாம்
முடிந்தது.
நடந்ததை மறக்க முடியாத வாறு அடுத்த ஆண்டே அவள் ஒரு குழந்தைக்குத்
தாயானாள்.
சட்டத்தின் முன் நின்ற அவனுக்கு மகளிர்
நீதி மன்றம் ஏழு ஆண்டுச் சிறைவாசமும் இரண்டு இலட்சம் அபராதமும் விதித்தது.
அவன் மேன்
முறையீடு செய்தான்.
உயர் நீதி மன்றம் சமாதான உடன்படிக்கைக்குப்
பரிந்துரைத்தது.
அதன் விளைவாக இதோ அவன்
பாதிக்கப்பட்டவர்களிடம் பேரம் பேசிக் கொண்டி ருக்கிறான்.
ஒப்பந்தம் ஏற்படலாம். பணம் கைமாறலாம்.
அது அறியா வயதில் வன்புணர்வுக்கு ஆளாகி
உடல் மட்டுமன்றி மனதளவிலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு,அவள் உணர்வுக்கான நஷ்ட ஈடா?
வழக்கு விலக்கப்படலாம்.
அவன் விடுதலையாகி ஊரைச் சுற்றலாம்.
கற்பழிப்புக்காகப் பஞ்சாயத்தின் முன்
நின்று அபராதப்பணத்தை நான் முன் பணமாகவே கட்டியிருக்கிறேன் என்று விவேக்கிடம் திமிராகச் சொல்லும் மைனர் குஞ்சுவின் நினைவுதான்
வருகிறது.
இவன் போன்றவர்களுக்கு விவேக் அளித்த
தண்டனைதான் சரியானது
“மைனர் குஞ்சைச் சுட்டுட்டேன்!”
மிகச் சரியான பதிவு.
பதிலளிநீக்குசுடனும் சார்..!
God Bless You
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நீக்குஆமா சரியான தீர்ப்பு, பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நீக்குசரியான தீர்ப்பு, பகிர்வு. நன்றி.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா
நீக்குகுஞ்சை சுட தீர்ப்பு சொல்லாமல் நீதிமன்றமே குற்றவாளிக்கு உதவுவது எந்த வகையில் நியாயம் ?
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி பகவன்ஜி
நீக்கு;நீதி மன்ற ! நிலை இதுவா!
பதிலளிநீக்கு? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா
நீக்குஅது தான் சரியான தீர்ப்பு....
பதிலளிநீக்குஆனால் இங்கோ பேசித் தீர்த்துக் கொள்ள அனுமதிக்கிறது நீதி மன்றம்... :(
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்
நீக்குவினோதமான இந்த நீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக மகளிர் நல அமைப்புகள் குரல் கொடுத்திருக்கின்றன. நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?
பதிலளிநீக்குquo vqdis?
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்
வணக்கம் ஐயா !
பதிலளிநீக்குதப்பு செய்தவன் வசதியுள்ளவன் என்றால் சமாதானப் பேச்சா அடங் கொக்கா மக்கா .....இதுக்கெல்லாம் விவேக்கின் தீர்ப்புத்தான் சரி
அதே
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சீராளன்
கற்பழித்துவிட்டால்
பதிலளிநீக்குகல்யாணம் செய்து கொள்ளலாம்
அல்லது இதுபோல் அபராதம் செலுத்திவிடலாம்
என்கிற முறையே இந்த மைனர்களின் திமிர்
பெருகக் காரணம்
விவேக் தீர்ப்பு சரிதான்
சொல்லிச் சென்றவிதம் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரமணி சார்
நீக்குஅப்போதே வெட்டி விட வேண்டும்...
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி டிடி
நீக்குஐயா... என்னாச்சி...? மறுபடியும்... tm
பதிலளிநீக்குOK... Done...!
நீக்குநன்றி
நீக்குநீதிமன்றங்கள் கூட பஞ்சாயத்து பேசுவது வியப்பினைத் தருகின்றது!
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நீக்குநல்ல...தீர்ப்பு...
பதிலளிநீக்குநன்றி ஐயா
தம 8
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உமையாள்
நீக்குஇப்போதெல்லாம் நீதிபதிகள் (ஹெல்மெட் உட்பட) சட்டம் என்ன சொல்கிறது என்று சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு சொல்வதில்லை. நான் சொன்னால் சொன்னதுதான் என்று தங்கள் கருத்தை திணிக்கிறார்கள்.
பதிலளிநீக்குபடத்தில் நடிகர் விவேக் மைனர் குஞ்சை சுட்டதிற்குப் பதிலாக நாட்டாமையையே சுட்டு இருக்க வேண்டும்.
த.ம.9
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ் இளங்கொ
நீக்குநீதிமன்றத்தின் இந்த ஏற்பாடு நம்ப முடியாதது, வேதனையைத் தருவது.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்
நீக்குநீதி மன்றம் இப்படி சொன்னால் நீதி தலை குனியத்தான் வேண்டும்
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி முரளி
நீக்குசரியான தீர்ப்புதான்!
பதிலளிநீக்குத ம 12
தமிழ்மணம் வாக்கு 13
பதிலளிநீக்குமுன்னமே அளிக்க மறந்துட்டேன் ஐயா
சரியா..தீர்ப்பு சொல்லாதவர்களை என்ன செய்வதாம்..
பதிலளிநீக்குசரியான தீர்ப்பு தான்
பதிலளிநீக்குநல்ல தீர்ப்பு...சரியான தீர்ப்பு
பதிலளிநீக்குநீதி மன்றங்களில் நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டிருப்பது இது போன்று அநியாயங்கள் நடப்பதினால் தானோ...