தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஜூன் 12, 2015

இது கதிர்வேலன் காதல்!




“அவள் மண்ணெண்ணை டப்பாவைக் கையில் எடுத்தாள்.

அவனுக்குத் திக்கென்றது.

எண்ணையைத் தன் மேல் ஊற்றிக்கொண்டாள்.

அவன் கத்தினான்”வேண்டாம்,கண்ணம்மா வேண்டாம்”

குரலே எழும்பவில்லை.காலிலே ஏதோ சுமையைக் கட்டியதுபோல நடக்க முடியவில்லை

அவள் தீப்பெட்டியை எடுத்தாள்


குச்சியை உரசிப் பற்றவைத்தாள்

அவன் இன்னும் அதிகமாகக் கத்தினான்

அவனுக்கே அவன் குரல் கேட்கவில்லை

அவள் தன்னைப் பற்ற வைத்துக் கொண்டாள்.

 பற்று ஒன்று கைகூடாத காரணத்தால் பற்றற்றுப் போன அவள் பற்ற வைத்துக்கொண்டாள்

தீ அவளை விழுங்கியது”

கண்ணம்மா,கண்ணம்மா என்று குழறியபடியே அவன் விழித்துக்கொண்டான்

இரண்டு மாதங்களாக இதே கனவுதான்.

என்று அவள் தன்னைத் தீக்கு இரையாக்கிக் கொண்டாளோ அன்று முதல் இதே கனவுதான்

முன்பெல்லாம் அவர்கள் வாழ்க்கையே ஒரு சுகமான சொப்பனமாகத்தான் இருந்தது.

அவன் கதிர்வேலன்- சொந்தத் தானி ஓட்டுனர்

அவள் கண்ணம்மா -காவல் துறைக் காவலர்

ஒரே ஊர்;ஒரே சாதி;சிறு வயது முதல் பழகியவர்கள்

பருவம் வந்ததும் பழக்கம் காதலானது

மணம் புரிய எண்னினர்.

ஆனால் வீட்டுப்பெரியவர்கள் ஒப்பவில்லை

இங்கு சாதி ஒரு தடையில்லைதான்

ஆனாலும் ஒப்பவில்லை

அவர்களின் தொழில்கள் காரணமாக இருந்திருக்கலாமோ?

வீட்டார் சம்மதமின்றி மணம் புரிய அவர்கள் இருவருக்கும் விருப்பமில்ல.

ஆனால் காத்திருப்பும் பயனின்றிப் போனது.

கண்ணம்மா ஒரு முடிவுக்கு வந்தாள்

தன் வீட்டார் வேறு மாப்பிளை பார்த்து ஏற்பாடு செய்வதற்கு முன் ஏதாவது செய்தாக வேண்டும்.

ஒரு நாள் தன் மீது தானே தீ மூட்டி அதற்கு இரையானாள்.

கதிர்வேலன் பித்துப் பிடித்தவன் போலானான்

தானி ஓட்டுவதில்லை.

ஊரைச் சுற்றித் திரிந்தான்.

பெரும்பாலான நேரங்களில் ஆற்றின் பக்கம் காணப்பட்டான்;ஆம் கண்ணம்மாவின் 
கல்லறைக்கு அருகில்.

கண்ணம்மா இல்லாத வாழ்க்கை சுமையாகிப் போனது.

இன்று காலை ஆற்றுப்பக்கம் போன சிறுவர்கள்,கண்ணம்மாவின் கல்லறை அருகில், கதிர் வேலன் படுத்துக் கிடப்பதைப் பார்த்தார்கள்.

அருகில் சென்று பார்த்தபோது அவன் அசைவற்றுக் கிடந்ததையும்,அருகில் கிடந்த  ஒரு சிறிய சீசாவையும் கண்டனர்.

ஊருக்குள் ஓடித் தகவல் அளித்தனர்

ஆம்! கதிர்வேலன் விஷமருந்தி தன் வாழ்வை முடித்துக் கொண்டான்,தன்காதலியின் கல்லறையை அணைத்த படியே! 

உண்மையான காதல் இதுதான் ஐயா!

//நாடகத்தில் காவியத்தில் காத லென்றால்
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்;
ஊடகத்தே வீட்டிலுள்ளே கிணற்றோ ரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமுகின்றார்;
பாடைகட்டி அதைக்கொல்ல வழிசெய் கின்றார்;
பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க//

-பாரதி

(இன்றைய செய்திதாளில் இருக்கும் ஒரு செய்தியே இதன் வித்து)

14 கருத்துகள்:

  1. செய்திகளையே சொன்னாலும் உயிர்ப்புடன் சொல்லும்போது மனது பிசைகிறது.

    இனிமேல் இதுபோல் நடக்கக் கூடாது என மனது இரைஞ்சுகிறது.

    God Bless You

    பதிலளிநீக்கு
  2. காதலில் இத்துனை உறுதியுடன் இருந்த இவர்கள் வாழாமல் போனார்களே என மன்ம் அழுகிறது.
    உடன் வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்தினையே வழி மொழிகின்றேன் ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  4. #அவன் கதிர்வேலன்- சொந்தத் தானி ஓட்டுனர்
    அவள் கண்ணம்மா -காவல் துறைக் காவலர்#
    அவளால் காவல் மீறி வர முடியவில்லையா ?அவனால் தாலிகட்டி சொந்தமாக்கி கொள்ளமுடியாதது வருத்தத்தை தருகிறது !

    பதிலளிநீக்கு
  5. இது மனிதர்கள் உணர்ந்து கொள்ளும் காதல் அல்ல...அதையும் தாண்டி....த.ம்7

    பதிலளிநீக்கு
  6. இது கதிர்வேலன் காதல்!
    இப்படி முடியுமென எதிர்பார்க்கவில்லை.
    கதை உணர்ச்சி வெளியீடாக இயல்பு வாழ்வை நேரில் பார்த்தது போல இருந்தது.
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்
    ஐயா

    படித்த போது..மனதை நெருடி விட்டது... ஐயா மிகவும் அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. அருமையான நடை....சிறிது சஸ்பென்ஸ்...அதாவது மணமான பின் மணமுறிவினால் ஏற்பட்டதோ என்று....ஆனால் பின்னர் அது காதல் என்று தெரிந்து மனது நொறுங்கியது! மனதை என்னவோ செய்துவிட்டது....

    பதிலளிநீக்கு
  9. கண் முன் படம்போலக் காட்சிகள் விரிந்தன...

    பதிலளிநீக்கு
  10. வேதனை தரும் செய்திக்கு தேசியக் கவி பாரதியின் பாடலை மேற்கோள் காட்டி மனதை உலுக்கி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு