தொடரும் தோழர்கள்

திங்கள், ஜூன் 08, 2015

வயிற்றுக்கான ஓர் ஆன்மீகப் பயணம்!



திருப்பூரில் இருந்த காலம்.

பலர் வாடிக்கையாளர் என்ற நிலை தாண்டி என் நண்பர்களாக இருந்தனர்-குறிப்பாக ராமதாஸ், கலந்தர்,நாகரத்தினம்,ராமசாமி(ரமேஷ்) இவர்கள் போல்.அங்கு செட்டியாரில் ஒரு பிரிவு உண்டு. பன்னிரெண்டாறு செட்டியார் என்று சொல்வார்கள்.அவர்களது கோவில் ஒன்று பாலக் காட்டுக்குப்  பக்கத்தில் உள்ள பாறை என்ற ஊரில் இருக்கிறது.அம்மன் பெயர் மாங்கரை யம்மன்..ஒவ்வோர் ஆண்டுமொரு நாளன்று அம்மனுக்கு விசேட பூசைகள் நடக்கும்.அநேகமாக அந்தப் பிரிவைச் சேர்ந்த அனைவரும் அங்கு கூடியிருப்பர்,

ஒரு முறை நாகரத்தினம் என்னையும் அவர்களுடன் வருமாறு அழைத்தார்.ஏற்றுக் கொண்டேன்.

ஒரு நாள் இரவு காரில் புறப்பட்டோம் நிதானமாக நள்ளிரவு அங்கு போய்ச் சேர்ந்தோம். மறுநாள் மாலைதான் பூசை.இரவு எங்களுக்கான அறையில் படுத்துறங்கினோம்.
காலை   எழுந்து குளித்து முடித்த பின் காலை உணவுக்கு அழைத்துச் சென்றார்.சுடச்சுட இட்லி, வடை,சட்னி,சாம்பார்.மிருதுவான இட்லிகள்,சுவையான சாம்பார்.இட்லிகள் (எத்தனை என்று கேட்கக்கூடாது) வேகமாக உள்ளே போயின.பின்னர் மணம் நிறைந்த காபி.

இனி என்ன செய்வது?


ஒரு பெரிய குழு சீட்டாட்த்தில் மும்முரமாகி விட்டது.நான் சிறிது நேரம் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.கொஞ்ச நேம் தெருக்களைச் சுற்றி வந்தேன்.சில மணித்துளிகள் தூங்கினேன்.ஒரு வழியாக மதிய உணவுக்கான நேரம் வந்து விட்து .”சார் நீங்க தூங்கிட்டீங்க.மதிய உணவில் பால் பாயசம் இருக்கு.நான் போய் டேஸ்ட் பாத்துட்டு வந்துட்டேன்,சூப்பர்”


அவர் சொன்னதைக் கேட்டதும் பசி வந்து விட்டது.வழக்கமான வடை பாயச விருந்துதான். அவர் சொன்னது போல் பால் பாயசம் பிரமாதம்.இலையில் இரண்டு மூன்று முறை ஊற்றிக் குடித்தேன் ..ஒரு முறை லட்டையும் அதோடு சேர்த்து….!ரத்தினம் கேட்டார்”சார்! டம்ளரில் தரச் சொல்லட் டுமா ?” விடுவானேன்.அதையும் வாங்கிக் குடித்தாயிற்று.இது செரிக்க ரெண்டு நாள் ஆகும் போல் இருக்கிறதே என எண்ணினேன்.


மாலை நானும் அவரும் ஒரு உள்ளூர்ச் சிற்றுலா சென்று வந்தோம்.


திரும்பி வரும்போது அவர் சொன்னார்.”சார்!சாயந்திரம் டிபனுக்குப் பஜ்ஜி போடறாங்க.நான் நமக்காக ஸ்பெசலா சேவை போடச் சொல்லியிருக்கேன்.”


அடக் கடவுளே! மதியம் சாப்பிட்டதே நெஞ்சு வரை இருக்கிறது.இப்போது இது வேறா?அவர் விடவில்லை அங்கு போய் அதையும் கொட்டிக் கொண்டேன் ….ஏவ்!சும்மா சொல்லக்கூடாது சுவை சூப்பர்!


மாலை ஆறு மணிக்குப் பூசை ஆரம்பமாயிற்று.சிறப்பான பூசை.முடியும்போது மணி 8.30.பூசை நடுவில் நண்பர் எழுந்து போய் வந்தார்.என் அருகில் அமர்ந்து சொன்னார்”சார்! ராத்திரிக்குக் கொழுக்கட்டை போடப்போறாங்க!”
நானும் இனிப்பு உப்புக் கொழுக்கட்டைகள் போலும் என நினைத்தேன்.


பூசை விமரிசையாக முடிந்த்து.எல்லோரும் சாப்பிடப் போனோம்.பரிமாறப்பட்டது பிடி கொழுக்கட்டை/உப்புமாக் கொழுக்கட்டை,சட்னியுடன். அங்கு சமைப்பவர்கள் உண்மையாகவே விற்பன்னர்கள்தான்.

இப்படியாக இரண்டு நாளுக்கான உணவை ஒரு நாளில் சாப்பிட்டாயிற்று.அவ்வை சொன்னது தப்பாகிப் போய் விட்டதோ…”ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்,இரு நாளைக்கேல் என்றால் ஏலாய்” 

அதுதான் இல்லை.
ஊர் திரும்பிய பின் வயிறு குழப்பமாகி மருத்துவரிடம் சென்று மருந்து வாங்கிச் சாப்பிட்டு…. …..! இரண்டு நாள்  பட்டினி!...”லங்கணம் பரம ஔஷதம்”

கோவிலுக்குப் போய் மாலை வரை பூசை பற்றி நினையாமல் சாப்பாடு பற்றியே நினைத்திருந்த இந்தப்பயணம்…............

.
வயிற்றுக்கான ஆன்மீகப் பயணம் அன்றி வேறென்ன?!

39 கருத்துகள்:

  1. பதிவு சொல்லும் பாடம் புரிகிறது. இருந்தாலும், இதுபோல விருந்துகள் பக்கம் நான் செல்லும்போது தவறாமல் நான் நாடுவது யுனிஎன்சைம்! வயிற்றைப் படுத்தாமல் இருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும்தான்!ஆனால் இந்தத்தீனி தின்னா யுனிஎன்சைம்தான் என்ன செய்யும் பாவம்!
      நப்ன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. வயிற்றிற்கான ஆன்மீகப் பயணம் அருமை ஐயா

    பதிலளிநீக்கு
  3. அடித்து நொறுக்கி விட்டு... சரி தான்... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  4. // உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
    உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே//

    என்ற திருமூலரை படித்தவரல்லவா நீங்கள். அதனால்தான் உயிரை வளர்க்க முயற்சித்திருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  5. அன்பு வலைப்பூ நண்பரே!
    நல்வணக்கம்!
    இன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் "குழலின்னிசை"க்கு
    தங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.

    முதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்
    அன்பின் இனிய வலைப் பூ உறவுகளே!
    "குழலின்னிசை" என்னும் இந்த வலைப் பூ!
    உங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.
    ஆம்!
    கடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, "குழலின்னிசை" வலைப்பூ மலர்ந்தது.
    http://kuzhalinnisai.blogspot.com/2015/06/blog-post_7.html#comment-form
    சரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.
    தங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.
    மற்றும்!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    TM 5

    பதிலளிநீக்கு
  6. அருமையான சுவையான ருசியான அனுபவங்களுடன் கூடிய ஆன்மீகப்பயணம் படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  7. பயணம் போவதே இனிமையானதே!

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்
    ஐயா.

    வித்தியாசமான தலைப்பிட்டு நல்ல கருத்து சொல்லி அசத்தியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 8

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  9. அய்யா...

    வித்யாசமான கண்ணோட்டத்தில், ஹாஸ்ய நடையில் அருமையான பதிவு ! ஏதோ நானே அங்கிருந்து அனைத்தையும் ருசித்து சாப்பிட்டது போன்ற உணர்வு...

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  10. நகைச்சுவையான நடை அருமை ஐயா
    தமிழ் மணம் 9

    பதிலளிநீக்கு
  11. நகைச்சுவைப் பயணம் அருமை.

    நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  12. வயிற்றுக்கான ஆன்மீகப் பயணம்....அசத்தலாய் இருக்கிறது ஐயா....ஹஹஹா....ஆமாம் கிடைக்கும் போது என்ஜாய்...பண்ண வேண்டியது தான்.தம +1

    பதிலளிநீக்கு
  13. நகைச்சவை கலந்த பதிவு. நேரம் கிடைக்கும் போது எனது வலைப்பூவையும் பார்வையிட வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  14. சிரித்துக் கொண்டே தங்களுடன் ஆன்மிகப் பயணம் வந்தோம் அய்யா!
    த ம 12

    பதிலளிநீக்கு
  15. வயிற்றுக்கான ஆன்மீகப் பயணம்தான் என்று உணமையாகிவிட்டதே அய்யா..த.ம.13

    பதிலளிநீக்கு
  16. இப்படித்தான் பலரும் ஆன்மீகத்தை வளர்க்கிறேன் என்று வயிறை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் :)

    பதிலளிநீக்கு
  17. ஹஹஹஹஹ் ஆன்மீகப் பயணம் சாப்பாடுடன் நகைச்சுவைப் பயணம் ஆகிவிட்டதோ....சார் ஓமத் தண்ணீர் நல்ல மருந்து சார். இனி இது போன்றசாப்பாடுகளுக்குச் செல்லும் போது ஓமத் தண்ணி கையில் கொண்டு செல்லுங்கள்...எல்லா கோயில்களிலும் இந்த ஆன்மீகம் சாப்பாட்டில் தான் முடிகின்றது....

    பதிலளிநீக்கு