தொடரும் தோழர்கள்

புதன், ஜூன் 24, 2015

குடும்பக் கட்டுப்பாட்டுக் குழப்பம்!



2015
--------
சாலை ஓரத்தில் அந்த இளைஞன் காத்திருந்தான்.

யார் அவன்?  அவன் பெயர் என்ன?

பெயரில் என்ன இருக்கிறது? அருண் என்று வைத்துக் கொள்வோமே!

அவன் காத்திருந்தான்

கையில் சுருட்டி வைத்திருந்த செய்தித்தாளின் நடுவே அதுவும் காத்திருந்தது,அவன் கைவிரலின் அசைவுக்காக.

அவள் வழக்கமாக வரும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.

அதோ அவள் வருகிறாள்.இன்று தவற விடக்கூடாது

எத்தனை ஆண்டுகள் ?எத்தனை  வெற்றியடையா முயற்சிகள்?

இன்று கடைசி.

இன்றோடு முடியட்டும் இந்தத் தொடர்கதை.

அவள் நெருங்கி விட்டாள்.

சால ஓரத்திலிருந்து புறப்பட்டு அவளுக்கு நேராகச் சென்று,ஒளித்து வைத்திருந்த கைத் துப்பாக்கியால் அவளைச் சுட்டு விட்டு  அங்கிருந்து ஓடினான்.பலர் பார்க்க நடந்த நிகழ்வு ஆனால் யாரும் எதுவும் செய்ய முடியாமல் தடுத்தது அந்தத் துப்பாக்கி. 

அவள்..... 

அந்த இடத்திலேயே மரணம் அடைந்தாள்

1977
--------
ராம்னாத் அதிர்ச்சியடைந்தான்

அன்றுதான் அவன் மனைவி சொன்னாள்”நான் கருவுற்றிருக்கிறேன்”

இது எப்படி முடியும்?

சென்ற ஆண்டுதான் அவசர நிலைசட்டத்தின் ஒரு விளைவாக அவனுக்குக் கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டது

இப்போது இது எப்படி நடக்க முடியும்?

மருத்துவரை நாடினான்.

பரிசோதனைக்குப் பின் அவர் சொன்னார் அறுவைச் சிகிச்சை சரியாகவே செய்யப்
பட்டிருக்கிறது.குழந்தை தர அவனால் இயலாது என்று

அப்படியானால்,அவன் மனைவி ரமா அவனை ஏமாற்றி விட்டாளா?

வேறு ஒருவனின் தொடர்பு இல்லையெனில் இது எப்படி நடந்திருக்கும். ?

ஒரு முடிவுக்கு வந்தான்.இதையே காரணமாக வைத்து மண விலக்குப் பெற்றான்.

சில நாட்களுக்குப் பின் உடன் பணிபுரியும் ராதாவை மணந்தான்.

1992
-------
ராம்னாத் -ரமாவின் மகன்,அருண்.இப்போது அவனுக்கு வயது 19.

சிறு வயது முதலே தன் தந்தையையும்,அவரது இரண்டாவது மனைவியையும்  பழி வாங்க வேண்டும் என்ற வெறியுடன் வளர்ந்தவன்.

தன் தாயையும் தன்னையும் தவிக்க விட்டுப்போன தந்தையை அவன் மன்னிக்கத் தயாராக இல்லை,அவர் அவன் படிப்புக்கு உதவி செய்து வந்தபோதிலும்.

ஒரு நாள்,பணிக்குச் சென்று கொண்டிருந்த ராதாவை மடக்கி ஒரு நாட்டுத் துப்பாக்கியால் சுட முயன்றான்.குண்டு வெடிக்கவில்லை.அவன் தப்பி ஓடி விட்டான்.

நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.அதன் பின் இரண்டு முயற்சிகள் தோல்வியில் முடிந்தன,

கடைசி முயற்சிக்குப் பின் ராம்னாத் அவன் மீது இரக்கப்பட்டு அவனைக் காப்பாற்றினார். 

அவனும் வருத்தம் தெரிவித்தான்

ஆனால் உள்ளுக்குள் வெறி கனன்று கொண்டுதான் இருந்தது.

2015 மே 14

சாலையோரத்தில் அந்த இளைஞன் காத்திருந்தான்.
....................
......................
.........................

(கதையல்ல,)

33 கருத்துகள்:

  1. ஒரே குழப்பமாய் இருக்கிறது. தலைப்புதான் காரணமோ?

    பதிலளிநீக்கு
  2. சிறு வயது வெறுப்பு.....

    தம +1

    பதிலளிநீக்கு
  3. எப்படியெல்லாம் பிரச்சனை வருகிறது பாருங்கள்!

    பதிலளிநீக்கு
  4. எங்கு நடந்தது இது?
    வட நாட்டிலா..?

    இத்தனை வெறுப்பு கொண்டவன் தன் தந்தையோடு எப்படி இத்தனை நாட்கள் இருந்தான்.

    அதிர்ச்சிதான்.

    God Bless You

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தந்தையோடு இல்லை.அவனும் அவன் தாயும் தனித்த்து இருந்தனர்.
      இது நடந்தது மீரட்(உ.பி.) யில்
      நன்றி

      நீக்கு
  5. கதைகளைப் போன்ற நிகழ்வுகள்.

    தொடர்கிறேன்.

    நன்றி

    பதிலளிநீக்கு
  6. ஐயா வணக்கம் !

    ஒரு திகில் நாவலின் முதல் பாகம் போல் விறுவிறுப்பு ஆனாலும் கடைசியில் இது கதையல்ல என்றதும் திக் என்றது !

    வெறுத்தகடா !

    நன்றி

    பதிலளிநீக்கு
  7. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (25/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    இணைப்பு: http://gopu1949.blogspot.in/

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    பதிலளிநீக்கு
  8. மரியாதைக்குரிய அய்யா சென்னைப் பித்தன் அவர்களுக்கு வணக்கம்! தமிழ்மணத்தில் உங்களது கட்டுரைகளை தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன்.

    நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப் பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

    தங்களின் வலைத்தளத்தினை இன்று (25.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
    நினைவில் நிற்போர் - 25ம் திருநாள்
    http://gopu1949.blogspot.in/2015/06/25.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுய அறிமுகம் தேவையா தமிழ் இளங்கோ ?என் “ஒரு பதிவர் மனம்திறக்கிறார்”
      பதிவு பற்றி நீங்கள் குறிப்பட்டதை நான் இன்னும் மறக்கவில்லை.
      தகவலுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      நீக்கு
  9. நம்ப முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் வாழ்க்கை!
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  10. வெறுப்பு எவ்வளவு தூரம் மனிதனைப் பாதிக்கிறது
    நன்றி ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  11. தங்களது வலைத்தளம் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களின் வலைத்தளத்தில் நினைவில் நிற்போர் -25ம் திருநாள் ஆன்ற தலைப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    பதிலளிநீக்கு
  12. கதையல்ல ! நடந்த உண்மைச் சம்பவம்! வேதனை தான்

    பதிலளிநீக்கு
  13. கோபமும் வெறுப்பும் மனிதனாய் எப்படிப் பாடாய்ப் படுத்துகிறது. வேதனையாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  14. தகவலுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  15. இப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள் . பழிவாங்கும் எண்ணத்துடன்.
    மன்னிக்க தெரிந்தவன் மனிதன் என்பதை மறந்து.

    பதிலளிநீக்கு
  16. கதையல்ல நிஜமா....? சிறுவயது முதலே பழிவாங்கும் வன்மம்...ம்ம்ம்

    பதிலளிநீக்கு