தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஜூன் 16, 2015

சுமை சுமந்து சோர்ந்திருக்கும் பெண்ணே!




சுமக்கத் தொடங்கி விட்டாயா பெண்ணே?

உனக்குத்தான் எத்தனை சுமைகள் வாழ்க்கையில்!

இன்பமானவை சில;துன்பமானவை சில.

இந்த வயதில் பிற சிறுமிகள் சுமப்பர் புத்தகச் சுமை.

அதுவின்றி வந்ததோ உனக்கு இந்தக் குடச்சுமை?

காலிக்குடம் இப்போது ,கனமின்றி இருக்கும்

நிறை குடமானபின் எங்ஙனம் சுமப்பாய்?

ஒன்றல்ல மூன்று குடம் சுமப்பது எளிதோ?

பழ்கத்தான் வேண்டும்,சுமக்க

உடற்சுமை,உயிர்ச்சுமை

வயிற்றுச்சுமை,இடுப்புச்சுமை

கைச்சுமை,கால்சுமை யென

எல்லாச்சுமையும் சிறிதேனும் இறக்கலாம்

இறக்குவது எங்கே வாழ்நாளில் உன் மனச்சுமை?


(நிழற்படம் :டைம்ஸ் ஆஃப் இந்தியா)

18 கருத்துகள்:

  1. ஞாபகம் வந்த பாடல்...

    பெண்ணாகப் பிறந்தவர்க்கு
    கண்ணுறக்கம் இரண்டு முறை
    பிறப்பில் ஒரு தூக்கம்
    இறப்பில் ஒரு தூக்கம்
    இப்போது விட்டு விட்டால்
    எப்போதும் தூக்கம் இல்லை
    என்னரிய கண்மணியே
    கண்ணுறங்கு கண்ணுறங்கு

    ஆரிராரிரி ராரிராராரோ ஆரிராரிராரோ...
    ஆரிராரிரி ராரிராரோரோ ஆரிராரிராரோ...

    காலமிது காலமிது...
    கண்ணுறங்கு மகளே...
    காலமிதைத் தவற விட்டால்
    தூக்கமில்லை மகளே...
    தூக்கமில்லை மகளே...

    நாலு வயதான பின்னே
    பள்ளி விளையாடல்
    நாள் முழுதும் பாடச் சொல்லும்
    தெள்ளுதமிழ்ப் பாடல்
    எண்ணிரண்டு வயது வந்தால்
    கண்ணுறக்கம் இல்லையடி
    ஈரேழு மொழிகளுடன்
    போராடச் சொல்லுமடி
    தீராத தொல்லையடி

    மாறும்..
    கன்னி மனம் மாறும்...!
    கண்ணன் முகம் தேடும்
    ஏக்கம் வரும்போது
    தூக்கம் என்பதேது...?
    தான் நினைத்த காதலனை
    சேர வரும்போது
    தந்தை அதை மறுத்து விட்டால்
    கண்ணுறக்கம் ஏது...?
    கண்ணுறக்கம் ஏது...?

    மாலையிட்ட தலைவன் வந்து
    சேலை தொடும்போது
    மங்கையரின் தேன் நிலவில்
    கண்ணுறக்கம் ஏது...?
    கண்ணுறக்கம் ஏது...?

    ஐயிரண்டு திங்களிலும்
    பிள்ளை பெறும்போதும்
    அன்னை என்று வந்தபின்னும்
    கண்ணுறக்கம் போகும்...
    கண்ணுறக்கம் போகும்...
    கை நடுங்கிக் கண் மறைந்து
    காலம் வந்து சேரும்
    காணாத தூக்கமெல்லாம்
    தானாகச் சேரும்...
    தானாகச் சேரும்....

    ஆரிராரிரி ராரிராராரோ ஆரிராரிராரோ
    ஆரிராரிரி ராரிராரோரோ ஆரிராரிராரோ

    பதிலளிநீக்கு
  2. படித்ததும் என் மனச்சுமையையும் கூட்டிவிட்ட மகத்தான ஆக்கம் ஐயா. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. மனச்சுமையை இறக்க முடியாதுதான்! அருமையான பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
  4. இறக்குவது எங்கே வாழ்நாளில் உன் மனச்சுமை?
    Unmai...

    பதிலளிநீக்கு
  5. ராஜஸ்தானில் (என்று நினைக்கிறேன்) தண்ணீர் தூக்கி வர என்றே மூன்று நான்கு மனைவிகளைக் கல்யாணம் செய்து கொள்வார்களாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்விப்பட்டிருக்கிறேன்.சமீபத்தில் படித்தேனோ?
      நன்றி

      நீக்கு
    2. வெங்கட் ஜி அவர்களின் பதிவில் குறிப்பிட்டிருந்தார்....

      நீக்கு
  6. மனம் கணத்தது பதிவு
    தமிழ் மணம் ஓட்டுப்பட்டை எங்கே ?

    பதிலளிநீக்கு
  7. இந்த கவிதையைப் படித்தவுடன் சித்தி படத்தில் வரும் ‘கண்ணுறங்கு மகளே கண்ணுறங்கு’ என்ற திரைப்படப்பாடல் நினைவுக்கு வந்தது. ஏனோ தெரியவில்லை .பெண்கலுக்கு மட்டும் இத்தனை சுமைகள்? அருமையான பதிவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதே பாடலைத்தான் டிடியும் சொல்லியிருக்கிறார்
      நன்றி

      நீக்கு
  8. வேதனை யான பதிவு நெகிழவைத்தது .

    பதிலளிநீக்கு
  9. ஆம்! பெண்களுக்கு இத்தனை சுமைகள் தான்...மனச்சுமை எல்லாருக்கும் பொதுவானதுதானே...அதை இறக்கி வைப்பதுதான் ரொம்பவே கஷ்டம்...எங்கு இறக்கி வைக்க முடியும்?வரிகள் சிறப்பு....

    பதிலளிநீக்கு