’அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும்’.இது சிலப்பதிகார நீதி.
இதில் சொன்ன பிழைப்பு,பிழை செய்தல் என்பது-பாண்டியனின் நீதி போல.
ஆனால் இன்றோ அரசியலையே தங்கள் பிழைப்பாக்கிக் கொண்டு பிழைக்கு மேல் பிழை செய்து வருவோர்க்கு எந்த அறம் கூற்றாகப் போகிறது?
-*-*-*-*-*-*-*-*-*-*-***************************************************
.ஒருவர் தன் நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தார்.நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்
மாலை அந்த வீட்டம்மாள் பூரி கிழங்கு செய்திருந்தார்கள்.நண்பர்கள் சாப்பிடத்
தொடங்கினர்.பூரியும் கிழங்கும் பிரமாதமாக இருக்கவே நம் நண்பர் வேண்டாம் என்று
சொல்லாமல் பூரிகளை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார்.சாப்பிட்டுக் கொண்டே
சொன்னார்”பூரியும் கிழங்கும் அட்டகாசமா இருக்கு.நீங்க பாட்டுக்குப் போட்டுக் கிட்டெ
இருக்கீங்க,நான் சாப்பிட்டுக் கிட்டே இருக்கேன்.எவ்வளவு சாப்பிட்டேனோ தெரியவில்ல”
வீட்டுக்காரரின் மகள் அங்கு அமர்ந்திருந்தவள் சொன்னாள்”எனக்குத் தெரியும். நான்
எண்ணிக்கிட்டே இருந்தேன்.மாமா 12 பூரி சாப்பிட்டிருக்காரு”
ஆம் !நமக்குத் தெரியாமலே நம் செய்கைகள் எவராலாவது கவனிக்கப்படுகின்றன ;இதை
உணருங்கள்!
****************************************
ஆங்கிலத்தில் லிமெரிக் என்று ஒரு வகைக் கவிதை
உண்டு.பொருளற்ற நகைச்சுவைக் கவிதை என்று சொல்வார்கள்.அந்தவகையில் பல முயற்சி செய்திருக்கிறேன்.அவற்றில்
ஒன்று உங்கள் பார்வைக்கு.இதற்கும் ஒரு இலக்கணம் உண்டு.அந்த.இலக்கணத்தைப் பின்பற்றியே எழுதி யிருக்கிறேன்………..l
அடுத்த வீட்டு ஆம்பிள அவன்தான்அப்பு
அவன்ஆசைப்பட்ட பொண்ணு பேரு சுப்பு
கவர யோசனை சொன்னான் கோண்டு
சொன்னபடி அடிச்சான் மட்ட செண்டு
இப்ப அவன் பக்கத்தில போனாலே ஒரே கப்பு!
***************************************************
***************************************************
நான்கு ஆண்டுக்ளுக்கு முந்தைய
பதிவொன்றுக்கு நேற்று 150
ஹிட்ஸ்!ஆச்சரியமாக இருக்கிறது.ஒரு பிரபல பதிவில் என் பின்னூட்டத்தில் இதன்
லிங்கை நான் கொடுத்ததன் விளைவு என்று எண்ணுகிறேன்!
உண்மைதான் ஐயா நமது செய்கைகள் ஒவ்வொன்றும் கவனிக்கப்டுகின்றன.. இதை முழுமையாக உணர்ந்தவன் தவறுகள் செய்யும் பொழுது சிறிது தயங்குவான்,
பதிலளிநீக்குதமிழ் மணம் 1
நன்றி கில்லர்ஜி
நீக்குநாம் கண்ணானிக்கப்படுகிறோம் என்பதை நாம் மறந்து விடுகிறோம்.....அல்லது தெரியாமல் இருப்பது.
பதிலளிநீக்குஉண்மைதான் ஐயா. நன்றி
தம +1
நன்றி உமையாள் காயத்ரி
நீக்குவங்கியில் உயர் பொறுப்பில் இருந்த உங்களுக்குத் தெரியாது அல்ல. நம்முடைய ஒவொரு செயலும் பிறரால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது என்பதே உண்மை.
பதிலளிநீக்குலிமெரிக் கவிதை பற்றிப் தாங்கள் ஏற்கனவே 2012-13 களில் எழுதிய பதிவுகளில் படித்திருக்கிறேன். 5.அக்டோபர் 2013 இல் தங்களது பதிவில் வெளியிட்ட கவிதையை செம்மைப்படுத்தி அழகாய் வடித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!
உண்மைதான்சார்.
நீக்குஉங்கள் நினைவாற்றல் வியக்க வைக்கிறது
நன்றி
என்னுடைய மூன்றாண்டுக்கு முந்தைய பதிவு ஒன்றுக்கு இன்னும் ஹிட்ஸ் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு பின்னூட்டம் கூட இல்லை இதுவரை, பதிவுலகில் இதெல்லாம் சகஜம் என்றே தோன்றுகிறது
பதிலளிநீக்குஉண்மை சார்.பழையபதிவுகள் படிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.ஆனால் 4 ஆண்டுக்கு முந்தைய பதிவுக்கு ஒரேநாளில்150ஹிட் என்பது எனக்கு வியப்பளித்தது. .
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்
பகிர்வுக்கு நன்றி..
பதிலளிநீக்குநன்றி சீனி
நீக்கு//நமக்குத் தெரியாமலே நம் செய்கைகள் எவராலாவது கவனிக்கப்படுகின்றன.//
பதிலளிநீக்குஉண்மைதான்.
த ம 6
நன்றி செந்தில்குமார்
நீக்குஆம் அய்யா..இணையத்தில் நம் செய்கைகள் கவனிக்கப்பட்டே வருகின்றன.த.ம.7
பதிலளிநீக்குநன்றி வலிப்போக்கன்
நீக்குகவனித்தல் மட்டுமே அறத்தின் செயலாகக் கருதி சமாதானமடைய வேண்டிய அவல நிலைக்கு ஆளாகியிருக்கிறோம். இந்த் அறம் எப்போது கூற்றாகுமோ..?
பதிலளிநீக்குநயமாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்.
God Bless You
நன்றி
நீக்குஉண்மை உண்மை ...ஒவ்வொன்றையும் மிகவும் அவதானமாக செய்யவேண்டும் என்று புரிகிறது. இச் சிந்தனை நிச்சயமாக எம்மை சரியாக வழிநடத்தி செல்லலும். ஆனால் அதைப் பற்றிக் கவலைப் படாதவர்களும் உண்டு.
பதிலளிநீக்குநன்றி இனியா
நீக்குஎனது பழைய பதிவுகள் தினமும் அதிகம் படிக்கப்படுகின்றன - புதிய பதிவால்...
பதிலளிநீக்குமுக்கிய காரணம் : இன்னொரு பதிவில் சொல்கிறேன்...!
நன்றி டி டி
நீக்குஆம் !நமக்குத் தெரியாமலே நம் செய்கைகள் எவராலாவது கவனிக்கப்படுகின்றன ;இதை
பதிலளிநீக்குஉணருங்கள்!/// மிக மிக உண்மை ஐயா!
லிமெரிக் அருமை....ஹஹஹ் ரகம்
ஹிட்ஸ் ஆச்சரியம்தான் ஐயா அதுவும் பழைய பதிவு......
''...ஆம் !நமக்குத் தெரியாமலே நம் செய்கைகள் எவராலாவது கவனிக்கப்படுகின்றன ..''
பதிலளிநீக்குகவிதையும் நன்று நன்று...
மிக சுவையாக உள்ளது பதிவு..
அதனால் தான் பல கி(H)ட்டு(T)..ஐயா