தொடரும் தோழர்கள்

புதன், ஜூன் 17, 2015

என்ன நடந்தது?



இரு நாட்களுக்கு முன் நரிக்குறவர்கள் பூனை பிடித்தது பற்றிச் சொல்லியிருந்தேன்.பிடித்த காரணம் அது அவர்களுக்குப் பிடித்ததுதான்!ஆம் பூனை மாமிசம் விசேடமான உணவாம் அவர்களுக்கு.

ஓர் இடம் அல்லது இனம்  பற்றிக் கதை எழுதுமுன் அது பற்றி நன்கு அறிந்து கொள்ளுதல் அவசியம்.ஜெகசிற்பியன் ஒர் அற்புதமான கதை எழுதினார்,”நரிக்குறத்தி” என்ற தலைப்பில். அக்கதையில் அவர் அவர்கள் வாழ்க்கை முரை,மொழி பற்றிiயெல்லாம் எழுதியிருப்பார், அனைத்தையும் நன்கு தெரிந்து கொண்டே அவர் எழுதினார் என்பது வாசகனுக்குத்தெரியும். பிறக்கும் ஊரின் பெயரையும் சேர்த்துதான் குழந்தைகளுக்குப் பெயர் வைப்பார்களாம்-அவர் சிறந்த சிருகதைகள் மட்டுமன்றி சரித்திரப் புதின்ங்களும் எழுதினார்.ஆலவாய் அழகன், திருச்சிற்றம்பலம் போல்.

சில ஆண்டுகளுக்கு முன் என் அண்ணா திடீரென்று ஒரு கேள்வி கேட்டார்.
"
ஜெகசிற்பியன் அவர்கள் காலமானபின் என்ன நடந்தது என்று தெரியுமா?
"
தெரியாது.என்ன நடந்தது?"-நான்.
"
அவர் மனைவி பத்திரிகையில் ஒரு விளம்பரம் கொடுத்திருந்தார்-RC கிறித்தவப் பிரிவைச் சேர்ந்த இளைஞர் யாராவது அதிக செலவின்றி அவர் மகளை மணக்க முன் வருவாரா என்று"-அண்ணா
"
எப்போது இது?"-நான்
"
முப்பது ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்"-அவர்
அவர் மறைவுக்குப் பின் இப்படி ஒரு நிலையேற்பட்டதென்றால்,இதென்ன கொடுமை?
அப்போது என் மனத்தை அரித்த நினைவெல்லாம் ,"பின் என்னவாயிற்று?"
யாராவது நல்ல மனம் கொண்ட இளைஞன் அப்பெண்ணை மணந்து அவர்கள் சிறப்பாக வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும் என்று மனம் விரும்புகிறது.

யாருக்காவது தெரியுமா?

27 கருத்துகள்:

  1. அன்றைய நிலையில் எழுத்தாளர்கள்
    எல்லாம் பொருள் நோக்கம் கொள்ளாதவர்களாகவே
    இருந்திருக்கிறார்கள்
    தகவல் தெரியவில்லை
    ஆயினும் நிச்சயம் ஒரு நல்ல பையன்
    அமைந்திருப்பான்

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு வாழ்வு அமைந்திருக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் சித்தர் அருள்!கேளாமல் செய்த உதவிக்கு நன்றி!
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  3. திடுக்கிட வைத்த விளம்பரம். சஸ்பென்ஸ் மனசை அரிக்குது.

    பதிலளிநீக்கு
  4. ஆனந்த விகடன் நடத்திய சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை ‘நரிக்குறத்தி’ அதை எழுதிய எழுத்தாளர் திரு ஜெகசிற்பியன் அவர்களின் குடும்பம் அவரது மறைவுக்குப் பின் பிறர் உதவியை நாடவேண்டியிருந்தது என்பது வேதனைக்குறியதே. அந்த காலத்தில் நிரந்தர வருமானம் இல்லாத எழுத்தாளர்களும் திரைப்பட நடிகர்களும் சம்பாதித்த காலத்தில் சேமித்து வைக்காததால் பின்னர் வறுமையில் வாடினார்கள் என்பதை அறியும்போது வருத்தமாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. முந்தைய எழுத்தாளர்களெல்லாம் மிகவும் போற்றத்தகுந்த வகையில் இருந்தனர். Ethical sense அவர்களுக்கு மிக அதிகமாகவே இருந்தது. எனக்குத் தெரிந்த ஒரு பழமையான எழுத்தாளர் தனது வாழ்வின் இறுதியில் தன் சம்பாத்தியத்தில் ஒரு மனை வாங்கினார். அதற்குப்பின்னர் அரசு அவருக்கு ஒரு வீட்டு வசதி வாரியத்தால் ஒதுக்கப்பட்ட மனை அளித்தது. ஆனால் அவர் வீட்டு வசதி வாரிய விதிகளின் படி வீட்டுமனை அல்லது வீடு இல்லாதவர்களுக்குத்தான் அது போய்ச்சேரவேண்டுமென்டு அதனை surrender செய்து விட்டார்.

    எழுதியவர்கள் மிகுந்த கண்ணியத்துடனும் நாணயத்துடனும் இருந்த காலம் அது.

    மனித நாகரிகத்தை வரையறை செய்யும் வகையில் வாழ்ந்தனர் என்று கூட சொல்லலாம்.

    உங்களது பதிவில் சொன்ன செய்தியைக் கண்டு எனக்கும் மனம் வேதனைப்படுகிறது.

    என்ன செய்ய?

    சிந்தனையைத் தூண்டியது உங்கள் பதிவு.

    God Bless You

    பதிலளிநீக்கு
  6. அன்றைய சிறந்த எழுத்தாளரின் நிலையை நினைத்து வேதனைப்படவே முடிகின்றது.

    பதிலளிநீக்கு
  7. //பிறக்கும் ஊரின் பெயரையும் சேர்த்துதான் குழந்தைகளுக்குப் பெயர் வைப்பார்களாம்//

    ஆம், இதை நானும் படித்திருக்கிறேன். அவர்கள் அடிக்கடி ஊர் ஊராய் சுற்றித்திரிபவர்களாகவே அந்தக்காலங்களில் இருந்துள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் ஊர் ஊராக சுற்றிடும்போது திண்டிவனத்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால் ‘திண்டிக்கோன்’ என பெயர் வைப்பார்களாம்.

    ’கோன்’ என்றால் அரசன் என்றும் ‘கோனி’ என்றால் அரசி என்றும் பொருள் உண்டு.

    கோவையில் ‘கோனி அம்மன் கோயில்’ மிகப்பிரபலமானது. அந்த அம்மன் ’கோவையின் அரசி’ என்று பொருள் கொள்ளல் வேண்டும்.

    இதைப்பற்றி விபரமாக என் பின்னூட்டம் ஒன்றில், ஏற்கனவே கோனி அம்மன் பற்றி மிகச்சிறப்பாக எழுதியிருந்த கோவைப்பதிவர் ஒருவரின் பதிவினில் நான் சொல்லியுள்ளேன்.

    //யாருக்காவது தெரியுமா?//

    எனக்குத் தெரியாது ஐயா. இருப்பினும் அவர்களுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைந்திருக்கலாம் என பாஸிடிவ் ஆக நினைப்போம்.

    பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்.

    தமிழில் எழுத்தை நம்பிப் பிழைத்தல் என்பதெல்லாம் நடக்காத விடயம் என்பதற்கு வாழந்த உதாரணங்களாய், பாரதி, புதுமைப்பித்தன் எனப் பலரையும் சொல்லலாம்.

    விதிவிலக்கானவர்கள் கல்கி போன்ற மிகச்சிலரே!

    அதே நிலைதான் அன்றும் இன்றும்.

    அனுபவத்திற்காகக் கதையின் களங்களுக்குள் சென்று சூழல்களையும் பாத்திரங்களையும் பார்த்துக் கதையெழுதும் வெகுசிலருள், நம் காலத்தவாராக ராஜம் கிருஷ்ணனைச் சொல்லலாம்.

    அறியாத செய்திகளைத் தங்களின் பதிவின் வழி அறிந்தேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  9. அறியாத தகவல். இனியும் அறிய முடியாத தகவல்.

    பதிலளிநீக்கு
  10. நல்ல வாழ்வுதான் என நம்புவோம்
    தமிழ் மணம் 7

    பதிலளிநீக்கு
  11. எழுத்தாளர் பலர் இன்றும் அப்படித் தான் வாழ்கிறார்கள்!

    பதிலளிநீக்கு
  12. எழுத்தாளர்களை ஊக்குவிக்காமல் இது என்ன விதியோ, சாபக்கேடோ. வருத்ததிற்குரிய விடயம்.
    நரிக்குறவர் பூனையை சாப்பிடுவார்களா.புதிய தகவல்.பதிவுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  13. அறியாதன அறிந்தேன். பல சாதனையாளர்களின் வாழ்க்கை பெரும்பாலும் அவல நிலையில் இருந்ததை நினைக்கும்போது வேதனையாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  14. புதிய தகவல் ஆனால் இனி இதைப் பற்றி அறிய முடியாதோ...

    பண்டைய எழுத்தாளர்கள் பலரது வாழ்வு ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானோர் அப்படி ஒன்றும் , இப்போது உள்ளவர்களைப் போல சொகுசாக வாழ்ந்ததில்லை என்று சொன்னாலும் இப்போதும் கூட சிலர் நன்றாக இல்லைதான்...என்றே தோன்றுகின்றது..பாவம் நல்லவர் யாரேனும் நிச்சயமாகக் கிடைத்து நல் வாழ்க்கை வாழ்வார்கள் என நம்பிடுவோம்...

    பதிலளிநீக்கு