தொடரும் தோழர்கள்

ஞாயிறு, ஜூன் 21, 2015

அம்மாவும் நீயே! அப்பாவும் நீயே!



என் அப்பா!
என்னை ஒரு கையால் உயரத்  தூக்குவார்
அவர் ஒரு சூப்பர்மேன்
 என் அப்பா
நான் கேட்டதெல்லாம் வாங்கித் தருவார்
அன்பானவர் அவர்.
என் அப்பா
என் பாடங்களில் உதவி செய்வார்
அறிவாளி அவர்
என் அப்பா 
எல்லோருக்கும் உதவுவார்
கருணையுள்ளவர் அவர்
ஆனால்....
அவர் பொய் சொல்வார்...
தான் நல்ல வேலையில் இருப்பதாக
உண்மையில் கூலிவேலை செய்து வருகிறார்
பணம் நிறைய இருப்பதாக,
அதற்காக மேலும் உழைப்பார்
தனக்குக்குக் களைப்பே இல்லை என்று.
வேலையின் களைப்பால் சாலையோரம் படுத்திடுவார்
பொய் சொல்வார்

எனக்காக!

நேற்று நண்பர் கக்கு மாணிக்கம் அவர்கள் பிளஸ்ஸில் ஒரு காணொளி பகிர்ந்திருந்தார்.அதன் வரி வடிவமே இது

இனி என் உணர்வுகள்..........
.
அப்பா!

உன் நினைவு
ஒரு கலங்கிய பிம்பமாகத்தான் இருக்கிறது
ஐந்து வயதுச் சிறுவனின் நினைவல்லவா?

உன் தோளில் அமர்ந்து நான்
பெருமாள் ஊர்வலம் பார்த்ததில்லை

உன் கரம் பற்றிக் கடற்கரை மணலில்
கால் புதைய நடந்தவாறு சுண்டல் ருசித்ததில்லை

நி சொல்லித்தந்து  பாடம் படித்ததில்லை
பள்ளிக்கே போகாதபோது
பாடம் படிப்பதெங்கே

இழப்புதான் ஆனாலும் தெரியவில்லை

அன்பு செலுத்துவதில் அம்மாவாய்
கண்டிப்பில் தந்தையாய்

அர்த்த நரனாய்

இருவர் பணிகளையும் தானேற்று
வளர்த்திட்ட தாய்!

அவளே எங்கள் தந்தையுமானவள்!



28 கருத்துகள்:

  1. அப்பா...அன்பின்...ஆழத்தில்...பதிந்துவிட்டார். எல்லாம் அம்மாவே...ஆனார். நெகிழ்ச்சி

    தம 2

    பதிலளிநீக்கு
  2. படிக்கும் அனைவருக்கும் தங்களின் தந்தையை நினைக்கத் தூண்டும் பதிவு!
    த ம 4

    பதிலளிநீக்கு
  3. தந்தையர் தின பதிவு கவிதையை ரசித்தேன் :)

    பதிலளிநீக்கு
  4. தந்தை உள்ளவர்களுக்குத்தானே தந்தையர் தினம்...எனக்கு அந்தத்தினம் இல்லை நான் பிறந்தவுடன் என் தந்தையை முழுங்கிவிட்டவனாம்.அய்யா...

    பதிலளிநீக்கு
  5. மனம் நெகிழ வைத்தது எனக்கும் நினைவுகள் பின்னோக்கி ஓடியது.....
    தமிழ் மணம் 8

    பதிலளிநீக்கு
  6. // அவளே எங்கள் தந்தையுமானவள்!//

    தாயுமானவர் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது தந்தையுமானவரை பார்க்கிறேன். அவருக்கு என் வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
  7. நல்ல தந்தை வளரும் குருத்தொன்றின் நல்லாதர்சம்.

    பதிவு நெகிழ்த்துகிறது

    நன்றி

    பதிலளிநீக்கு
  8. இளவயதில் தந்தையின் இழப்பு என்பது பேரிழப்புதான்! அதைத் தாண்டி தந்தையுமாக இருந்து வளர்த்த தாய் போற்றுதலுக்குரியவர்! நன்றி!

    பதிலளிநீக்கு
  9. ஒரு தந்தையாய்
    நெகிழ்ந்துபோய்விட்டேன் ஐயா
    தந்தையர் தின வாழ்த்துக்கள்
    தம +1

    பதிலளிநீக்கு
  10. தந்தையின் இடத்தை ஏற்று வழி நடத்திய உங்கள் தாயை வணங்குகிறேன்!

    பதிலளிநீக்கு
  11. "தந்தையுமானவள்"

    எல்லாப் பெருமையும் அவருக்கே..

    நெகிழ்வு.

    பதிலளிநீக்கு
  12. உணர்வின் வெளிப்பாட்டை வெளிப்படுத்திய கவிதை. ஆழப்பதிந்தது.

    பதிலளிநீக்கு
  13. ஆஹா! தந்தையுமானவள்!! அழகு! மனதில் நின்றது! வரிகளும் நெகிழ்வாய்

    பதிலளிநீக்கு