தொடரும் தோழர்கள்

வியாழன், ஜூன் 04, 2015

ஒரு மத போதகருடன் சந்திப்பு.



 சின்னச்சின்ன சாயிஅனுபவங்கள்  இன்னும் சில.ஆனால் ஒரேமாதியாகப் போய்க் கொண்டிருந்தால் போரடித்து விடும்.

எனவே வேறு திசையில் பயணிக்கலாம்.
 
ஒரு நாற்பது ஆண்டுக் காலம் பின்னோக்கிப் போகலாமா?

நான் பேசுவது எழுபதுகளைப் பற்றி.

அந்தக் காலத்தில் வீட்டில் அமர்ந்தபடி நாடகங்களோ,திரைப்படங்களோ பார்க்க முடியாது.

ஏனெனில் முட்டாள் பெட்டி அன்றில்லை.

சினிமா பார்க்க அரங்குக்குச் செல்ல வேண்டும்.

வீட்டில் ஒரே பொழுது போக்கு என்றால் வானொலிதான்

பாட்டுக் கேட்கலாம்..நாடகங்கள் கேட்கலாம்.திரைப்பட ஒலிச்சித்திரங்கள் கேட்கலாம்

எல்லாம் ’கேட்கலாம்’தான்!

முக்கியமாகப் பலர் கேட்டு வந்தது ரேடியோ சிலோனும்,விவித்பாரதியும் .

அவ்வாறு  சில சமயங்கள்கேட்டு வந்த பல நிகழ்ச்சிகளில் ஒரு நிகழ்ச்சி ஒரு கிறித்தவ மத போதகரின் நிகழ்ச்சி.

அவரைப்போலவே பாடி நான் கலாட்டா கூட செய்வேன்.

ஆனாலும் அதில் ஒரு ஈர்ப்பு இருந்தது

நிகழ்ச்சி முடிவில் இப்போது பிரார்த்தனை செய்வோமா என்று கேட்டு விட்டு எல்லோரும் ”உங்கள் கைகளை வானொலிப்பெட்டி மீது வைத்துக் கொள்ளுங்கள்”என்று சொல்லி எல்லாருக்காகவும் பிரார்த்தனை செய்வார்.

பலர் அவ்வாறு செய்திருக்கவும் கூடும்.

அவரைப் பல ஆண்டுகள் கழித்து  1994-98 இடைப்பட்ட காலத்தில் இரண்டு மூன்று முறை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது,அலுவலக நிமித்தமாக.

ஒரு முறை சென்றபோது  அவருக்குச் சால்வை அணிவித்து பூச்செண்டு அளித்து மரியாதை செய்தபின் பேசிக்கொண்டிருந்தோம்.

புறப்படும்போது இப்போது பிரார்த்தனை செய்வோம் என்று சொல்லி எங்களுக்காகப் பிரார்த்தனை செய்தார்.

பிரார்த்தனை முடித்து அவரது கையை ஆசிர்வதிப்பதாக என் தலை மீது வைத்தார்.

அந்த நொடியில் என் தலை  முதல் கால் வரை மின்சாரம் தாக்கியது போல் உணர்ந்தேன்

ஏதோ ஒரு பரவச நிலை,ஓரிரு நொடிகள்தான்.

ஒரு தொடுகைக்கு இவ்வளவு சக்தியா?

கோடிக்கணக்கான பிரார்த்தனைகள் செய்திருப்பார் அவர்.

அந்த சக்திதான் இவ்வாறு வெளிப்பட்டிருக்க வேண்டும்,

ஓர் இந்துவான நான் என் அனுபவத்தை வெளிப்படையாகக் கூறுகிறேன் எனில் என் அனுபவத்தின் தாக்கத்தை நீங்கள் அறியக்கூடும்.

அவர்….சகோ.டி.ஜி.எஸ்.தினகரன்(இயேசு அழைக்கிறார்)

13 கருத்துகள்:

  1. பலர் அப்படித்தான் சொல்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  2. படித்தேன்! அனுபவம் பல விதம்!

    பதிலளிநீக்கு
  3. உங்களோடு சேர்ந்து நானும் அந்த அனுபவத்தைப் பெற்றதை இப்போது நினைத்துப்பார்க்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. 1985 வாக்கில் என்னுடன் நிர்வாக அதிகாரியாக பணி இருந்த எனது ஆப்த நண்பர் திரு ஜெர்ரி மானுவேல் அவர்கள்

    தனது 40 வது வயதிலே எனக்கு ஜீசஸ் இடமிருந்து ஒரு அழைப்பு கால் வந்திருக்கிறது என்று தனது வேலையைத் துறந்து


    நீங்கள் குறிப்பிட்ட நிறுவனத்துடன் இணைந்து விட்டார்.

    யாருக்கு எப்போது இறைவனின் குரல் காதில் விழும் என்று சொல்ல இயலாது. அவர்கள் அனுபவத்தை மற்றவர் உணர்வர் என்றும் சொல்ல முடியாது.

    கண்டவர் விண்டதில்லை.
    விண்டவர் கண்டதில்லை.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  5. அனுபவம் எப்போ எப்படி யாருக்கு கிடைக்கும்ன்னு சொல்ல முடியாது....அதற்கு அவர்களின் நற்பலன்களே காரணம் .....நன்றி ஐயா

    தம +1.

    பதிலளிநீக்கு
  6. சில விடயங்கள் இன்னும் புரிந்து கொள்ள முடியாமலேயே இருப்பது உண்மைதான் ஐயா.
    தமிழ் மணம் 4

    பதிலளிநீக்கு
  7. முட்டாள் பெட்டி..இன்று இல்லாத வீடில்லை அய்யா...!!!!!த.ம.6

    பதிலளிநீக்கு
  8. சில நிகழ்வுகளுக்கு விடை கிடைப்பதில்லை. இதுவும் அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான்.
    த ம 7

    பதிலளிநீக்கு
  9. //கோடிக்கணக்கான பிரார்த்தனைகள் செய்திருப்பார் அவர்//

    நாம் நமக்காகப் பிரார்த்தனை செய்வதைவிட பிறருக்காக (லோக க்ஷேமத்திற்காக) செய்யும்போது அதற்கு ஒரு தனிசக்தி இருக்கும் என நினைக்கிறேன்.

    இதைத்தான் நம்மவர்களின் பிரார்த்தனைகளில் கடைசியாக “லோகா சமஸ்தா சுகினோ பவந்து” எனச் சொல்லி முடிக்கிறார்கள். :)

    ஆச்சர்யம் அளிக்கு அனுபவப்பகிர்வுக்கு நன்றிகள்.

    [முட்டாள்பெட்டி என்பதைப் படித்ததும் சிரிப்பு வந்தது :) ]

    பதிலளிநீக்கு
  10. Its just a psychological factor that made you feel like that Ayya!

    பதிலளிநீக்கு
  11. Its just a psychological factor that made you feel like that Ayya!

    பதிலளிநீக்கு