தொடரும் தோழர்கள்

சனி, ஜூன் 27, 2015

ஏடிஎம்மில் பணம் எடுப்பது எப்படி?



ஆண்

1.காரை எடுத்துக் கொண்டு ஏடிஎம்முக்குச் செல்கிறார்
2.மெசினில் அட்டையைச் செருகுகிறார்
3.பின்எண்ணையும்,தொகையையும் அழுத்துகிறார்
4.பணத்தையும் ரசீதையும் எடுத்துக் கொண்டு புறப்படுகிறார்

பெண்
1.காரில் ஏடிஎம்முக்குப் போகிறார்
2.கைப்பையைத் துழாவி அட்டை அகப்படுகிறதா எனப் பார்க்கிறார்
3. கையில் கண்ணாடியும் அகப்படுகிறது.ஒப்பனையைச் சரி செய்து கொள்கிறார்,தலை முடியைத் திருத்திக் கொள்கிறார்.
4.கிட்டத்தட்ட இரண்டு பேர் மேல் மோத இருக்கிறார்.
5. ஏடிஎம் அருகில் காரை நிறுத்த முயல்கிறார்.
6.சரியாக வரவில்லை
7.இரண்டாவது முயற்சி வெற்றிகரம்
8.கைப்பையிலிருந்து அட்டையை எடுத்துச் செருகுகிறார்
9.ஏடிஎம் ஏற்க மறுக்கிறது
10.பேன் அட்டையைப் பையில் வைத்து விட்டு.ஏடிஎம் அட்டையை எடுத்துச் செருகுகிறார்
11,பின் எண் எழுதி வைத்திருந்த சீட்டு பையில் இல்லை
12.கணவருக்குப் போன் செய்து பின் எண் கேட்கிறார்
13.அழுத்துகிறார்
14 எவ்வளவு எடுப்பது என்று மீண்டும் யோசிக்கிறார்.
15.தொகையை அழுத்துகிறார்
16.பணத்தை எடுத்துக் கொண்டு புறப்படுகிறார்
17.கார் அருகே வரும்போது கார் சாவி கையில் இல்லை என்பது தெரிந்து மீண்டும் ஏடிஎம் போய் சாவியை எடுத்து வருகிறார்.
18.காரில் புறப்பட்டதும் ரசீது எடுக்காதது நினைவுக்கு வருகிறது
19.போய் எடுத்து வருகிறார்.
20.கார் கண்ணாடியில் பார்த்து ஒப்பனையைச் சரி செய்து கொள்கிறார்.
21.கடைக்குப் போய் எல்லாம் செலவான பின் மீண்டும் நம்பர் 1!

டிஸ்கி:சகோதரிகள் கோபித்துக் கொள்ள வேண்டாம்.இது நடப்பை ஒட்டி வராத நகைச்சுவை என்பதே என் ஆணித்தரமான நம்பிக்கை.

(இந்த டிஸ்கி எழுதலேன்னா இன்று இரவு  சோறு கிடைக்காது!)



19 கருத்துகள்:

  1. சரியாகச் சொன்னீர்கள். சோறு கிடைக்காதது பற்றி.

    பதிலளிநீக்கு
  2. ஹா... ஹா...

    ஒப்பனை... நாம் ரசிக்கத் தானே...? (டவுட்)

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. இந்த டிஸ்கி எழுதலேன்னா இன்று இரவு சோறு கிடைக்காது!)//
      இன்னிக்கு மட்டுமா !!
      ஆயுசு முழுக்க கிடைக்காது.
      எப்பவுமே ஒரு பதிவு எழுதியபின் அதை
      இல்லாளிடம் கொடுத்து அதை படிக்கச் சொல்லி
      அப்ப்ரூவல் வாங்கின பிறகு தான் பப்ளிஷ் பண்ணவேண்டும்.
      தெரியாமயா சொன்னாரு.வள்ளுவர் ?
      எதிரதாக் காக்கும் அறிவினார்க்கில்லை
      அதிர வருவதோர் நோய்.
      எதிர்காலத்திலே என்ன எங்கே எப்படி நடக்கும் அப்படின்னு எதிர்பார்த்து அதுக்குத் தகுந்தாற்போல காரியங்களை செய்வது தான் அறிவுடைமை.
      சரி, சரி. இல்லாள் கிட்ட போயி,
      சாரி, இனிமே அப்ப்ரூவல் வாங்கிவிடுவேன்.
      அப்படின்னு ட்ரூஸ் போட்டுக்கிங்க.
      டிஸ்கி சகோதரிகளும் சமாதானமா ஆகிடுவாங்க..
      சுப்பு தாத்தா.
      www.subbuthathacomments.blogspot.com

      நீக்கு
  4. பணம் எடுக்க போறப்ப உள்ள கேமரா இருக்கு இல்ல மேக்அப் போட்டாத்தானே நல்ல்லா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. சரிதான்.. உங்களுக்கு சோறு கிடைக்காவிட்டாலும் சரிதான்..
    இப்படியா காலை வாருவது..

    God Bless YOU

    பதிலளிநீக்கு
  6. சோறு கிடைக்காட்டி ,முதல் நான்கை ஆம்பளயா லட்சணமா ஃ பாலோ செய்ய வேண்டியதுதானே :)

    பதிலளிநீக்கு
  7. ஹஹஹஹஹஹ்....சரிதான் சார் நீங்கள் சொல்லி இருப்பது....(நாங்கள் நட்புகள் இருவர் எழுதுவதில் ஒருவர் பெண்....என்றாலும் இருவரின் கருத்துமே)

    ரசித்தோம்....

    பதிலளிநீக்கு
  8. ஹாஹாஹா!!! அந்த பயம் இருக்கட்டும்:)

    பதிலளிநீக்கு
  9. //இது நடப்பை ஒட்டி வராத நகைச்சுவை என்பதே என் ஆணித்தரமான நம்பிக்கை.//

    இந்த பொறுப்புத் துறப்பு மூலம் தப்பித்துக்கொண்டீர்கள்!

    பதிலளிநீக்கு
  10. ஹா... ஹா... ரசித்தேன் - முன்பே ஆங்கிலத்தில் படித்திருந்தாலும்!

    டிஸ்கி - இப்படிச் சொல்லி தப்பிக்கறதே முழு நேர வேலையாகப் போய்விட்டது!

    பதிலளிநீக்கு
  11. வணக்கம்
    ஐயா
    கலாட்டா அருமையாக உள்ளது .இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 12
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு