தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஜூன் 19, 2015

காணவில்லை! கண்டு பிடித்தால் பரிசு 5000!


இது தெருச் சுவரில் ஒட்டப்பட்டிருந்த ஒரு விளம்பரம்!

சாதாரணமாக இவ்வாறு புகைப்படங்களுடன் சுவரில் ஒட்டப்படும் விளம்பரங்கள் பல இரங்கல் செய்திகளாகத்தான் இருக்கும்..இதுநாள் வரை புகைப்படத்துடன் கூடிய  காணவில்லை விளம்பரம் எதுவும் மனிதர்களைக் குறித்து நான் பார்த்ததில்லை.இன்று, முதல் முறையாக புகைப்படத்துடன் கூடிய ஒரு காணவில்லை விளம்பரம்.அதுவும் ஒரு நாய் காணவில்லை என்று.இதை அந்த நாயின் சொந்தக்காரர்கள் படித்தால் மிகவும் கோபம டையக்கூடும்,எங்கள் செல்லத்தை நீ எப்படி நாய் என்று அழைக்கலாம் என!நாய்க்குச் சொந்தக்காரர் என்ற சொற்றொடர் சிறிது குழப்பம் ஏற்படுத்துகிறது.நாய்க்குச் சொந்தக்காரர் ஒரு நாயாகத்தானே இருக்க முடியும் என்ற குதர்க்கமான கேள்வி அங்கு எங்கோ எழுகிறது! எனவே மாற்றிச் சொல்கிறேன்  ’உரிமையாளர்.’.இதுதான் சரியான சொல்.விளம்பரத்தில்  நாயின் படம் போட்டார்கள்,பரிசு ரூ 5000 என்று போட்டார்கள்.ஒரு முக்கியச் செய்தியை விட்டு விட்டார்கள்

புகைப்படத்தை வைத்து நாயை அடையாளம் காண முடியுமா?இது என்ன இனம்--புல்டாக்கா இல்லை பக்கா?கருப்பு நாய் என்பது தெரிகிறது.ஆனால் இந்த இனத்தைச் சேர்ந்த எல்லா நாயின் முகமும் நமக்கு ஒன்று போலத்தானே இருக்கும்?!

மனிதர்கள் காணவில்லை விளம்பரங்களில் சொல்வார்கள்”கன்னத்தில் மச்சம் இருக்கும், நெற்றியில் தழும்பு காணப்படும்” .காணாமல் போனபோது நீல கால்சட்டையும் பச்சைச் சட்டையும் அணிந்திருந்தார் “ என்றெல்லாம்.  ஒரு படத்தில் நாகேஷ் ஒரு விளம்பரத்தைப் படிப்பார்”கானவில்லை.படத்தில் இருப்பவர் கன்னத்தில் டொக்கு விழுந்திருக்கும் வேண்டுதலுக்காக நாலணாவை இடுப்பில் முடிந்து வைத்திருப்பார் “ என்று அது மாதிரி இந்த நாய்க்கு  ஏதாவது விசேட அடையாளம் உண்டா?!அதன் முகத்தில் ஏதாவது தழும்பு இருக்கிறதா எனப்பார்க்க அருகில் போய் நம் காலிலோ கையிலோ தழும்பு ஏற்பட வாய்ப்புக்களும் உண்டு!

நான் சொல்ல வந்தது அதுவல்ல..நாயின் பெயர்!உரிமையாளர்கள் நிச்சயமாக அதற்கு ஒரு பெயர் சூட்டி அழைத்திருப்பார்கள்.பெயர்சூட்டு விழா கூட நடத்தியிருக்கக்கூடும். பெயரைச் சொல்லி அழைத்தால் மனிதர்கள் கேளாதது போல் இருக்க வாய்ப்பு உண்டு.ஆனால் ஒரு நாயைப் பெயர் சொல்லி அழைத்தால் அது திரும்பிப் பார்க்காமல் இராது..இது போன்ற தோற்றமுள்ள நாயை யாராவது பார்த்தால் பெயர் சொல்லி அழைத்து உறுதி செய்து கொள்ளப் பெயர் விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

படம் அழகாக எடுக்கப்படாததன் காரணம் அவசரம்.நான் படம் எடுக்கப்போகிறேன் என்றதும் அங்கு நாலைந்து பேர் கூடி விட்டார்கள் ஒருத்தர் சொன்னார்”சார் செல் போன்ல படம் எடுத்து வச்சிக்கிட்டுத் தேடப்போறார் போல!”
.

இன்று உங்களுக்கெல்லாம் ஒரு நல்ல வாய்ப்பு.!இந்தப்படத்தை வைத்துக் கொண்டு தேடுதல்வேட்டையில் ஈடுபடுங்கள்

யாருக்காவது 5000 ரூபாய் கிடைக்கலாம்

அப்படிக் கிடைத்தால் என்னை மறந்து விடாதீர்கள்!

30 கருத்துகள்:

  1. டாஷ் ஹஔண்ட் , பாமநேரியன் போன்றவை எப்படியும்
    திரும்பி வந்து விடும். தானாகவே.

    ஏதேனும் ஆக்சிடெண்ட் ஆகியிருக்கக் கூடாதே என்று அந்த
    பைரவரிடம் வேண்டிக்கொள்கிறேன்.

    எதுக்கும் ஓனரை அஷ்டமி அன்று பைரவருக்கு எழுமிச்ச மாலை அணிவித்து சந்தன அபிஷேகமும், கொத்துக்கடலை சுண்டலும் ஒரு 10 படி செய்து

    என்னைப்போன்ற 2 ஏழைகளுக்கு இலவச வேட்டி அங்கவஸ்திரம் செய்து ''

    பரிஹாரம் பண்ணிச் சொல்லவும்.

    குருப்பெயர்ச்சி ஆனா உடன் நம்மை விட்டு ஓடிப்போன எதுவும் திரும்பி வந்து விடும் என்று பிரச்னம் சொல்கிறது.

    பிரச்னத்துக்கு ஆன் தக்ஷனையை 501 ஐ உடன் அனுப்பி வைக்கச்சொள்ளவும்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாய் கிடைக்கட்டும் ;அப்புறம் தருவார்கள்!
      நன்றி

      நீக்கு
  2. நாயின் இடது கண்ணைப் பாருங்க சார். ஏதோ அடையாளம் தெரியராப்ல இல்ல..?

    நமக்குத்தான் இதெல்லாம் விளங்காது. நாய்ப்பிரியர்கள் கரெக்டா கண்டுபிடிச்சுருவாங்க..

    பணத் தேவை இருக்கும்போது இப்படி ஒரு பதிவு.. ஆகா. ரொம்ப நன்றி.

    God Bless You

    பதிலளிநீக்கு
  3. பெயரையும் குறிப்பிட்டு இருந்தால் நல்லது தான்... ஆனாலும் உரிமையாளர் அன்பை மதிக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிடைத்த பின் இன்னொரு போஸ்டர் ஒட்டினால் தெரிந்து கொள்ளலாம்!
      நன்றி

      நீக்கு
  4. அப்படிக் கிடைத்தால் என்னை மறந்து விடாதீர்கள்!//

    sorry, i forgot to add in my previous comments.
    '
    u will of course get ten per cent of my prasna dhakshina

    subbu thatha

    பதிலளிநீக்கு
  5. உரிமையாளர் பெயரையும் குறிப்பிட்டிருக்கலாம்தான்! பதட்டத்தில் தவிர்த்திருப்பார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உரிமையாளர் தனது,நாய் பெயரைக் குறிப்பிட்டிருக்க வேண்டும்
      நன்றி

      நீக்கு
  6. விளம்பரத்தில் எந்த ஏரியாவில் காணாமல் போய்விட்டது எனக் குறிப்பிடவில்லை. அண்ணா நகர் ஏரியாவாக இருந்தால் நானும் முயற்சிப்பேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு ஒட்டியிருப்பதால் அடையாறு பகுதியகத்தான் இருக்கும்
      நன்றி

      நீக்கு

  7. நல்ல ஜாதி நாய்
    நிச்சயம் பிடித்தவர்கள் தரப்போவதில்லை
    வேறு வகையில் முயற்சிக்க வழியில்லை
    இது சரி எனத்தான்படுகிறது

    தங்கள் பதிவு கூடுதலானவர்களிடம்
    இந்தத் தகவலை கொண்டு செல்வதால்
    ஒருவேளை கிடைக்க வாய்ப்பிருக்கிறது
    என நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  8. எங்க ஊர்ல இப்படித்தான் தன் பூனையைக் காணவில்லை என்று ஒருவர் பிட் நோட்டீஸ்அடித்து செய்தித்தாள்களில் வைத்து அனுப்பினார். அவர்கள் பாசம் அவர்களுக்குத்தான் தெரியும்.

    பதிலளிநீக்கு
  9. மனிதர்களை நம்புவதைவிட நாய்களை நம்பலாம் என்ற நிலையில் இவ்வாறு செய்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு

  10. தாங்கள் குறிப்பிடுவதுபோல் பெயரை விளம்பரத்தில் சேர்த்திருக்க வேண்டும்
    நன்றி ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  11. தருமி ஆயிரம் பொற்காசுக்கு ஆசைபட்டது மாதிரி..தருமியின் வாரிசுகள் இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  12. நாயின் மேல் உள்ள பாசத்தால் அவர்கள் இப்படி பண்ணி இருக்கலாம். சீக்கிரம் கிடைத்து விடும் என்று நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  13. ஓரு ஆங்கிலப் படத்தில் (கமல்ஹாசன் தமிழில் கிரேசி மோகன் துணையுடன் திருடி தங்கள் பெயரில் க்ரெடிட் தேடிக்கொண்டிருக்கலாம் தெரியாது) ஒரு கரும்பூனையைத் தொலைத்துவிட்டு வெள்ளைப்பூனைக்கு கருப்புச் சாயம் பூசி... தமாஷ்.

    பதிலளிநீக்கு
  14. நாய் கிடைத்த விசயத்தை இப்படி போஸ்டர் அடித்து ஓட்டுவார்களா ?ஏனென்றால் ,நாயை தேடியே என் வாழ்க்கை வீ 'நாய் 'போக வாய்ப்புண்டு :)

    பதிலளிநீக்கு
  15. அவர்கள் பாசம் இவைகள் மேல், எனவே கவலை போலும், கிடைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் ஐயா !

    அன்போடு வளர்க்கும் எவ்வுயிரும் அவ்விடம் விட்டுச் செல்வதில்லை
    யாரும் ஆட்டையப் போட்டு இருப்பாங்க அவர்கள் செல்லம் அவர்களிடம் வந்து சேர வேண்டுகிறேன் .

    பதிலளிநீக்கு
  17. எங்கள் வீட்டுக்கு அருகில் கொஞ்ச நாட்களுக்கு முன்னால் ஒரு நாலுகால் நண்பர் வந்தார். (நானும் நாய் நேசன் தான் ஸார்!) பார்க்கும்போதே செல்லமாக வளர்க்கப்பட்டிருக்கும் சற்றே மேல் தட்டு வகை என்று தெரிந்தது. நாங்கள் கொடுக்கும் உணவைக் கூட சில சமயம்தான் ஏற்றுக் கொள்ளும்! (---- காயும் நேரங்களில் மட்டும் என்று வைத்துக் கொள்ளலாம்) இரண்டுநாட்கள் கழித்து ஒருவர் வந்தார்.."டாமி.. இங்கயே இருக்கே? வாடா என் செல்லமே.." என்று கொஞ்சி, (அதுவும் அவரை அடையாளம் கண்டு கொண்டதாய் வாலாட்டி கொஞ்சி மகிழ்ந்தது) அதை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார்.

    அப்போது ஒரு பைக் வந்து நின்றது. "ஏய்! உன்னை எங்கல்லாம் தேடறது? ராஸ்கல்... வாடா" என்று சொன்னபடியே இதைத் தூக்கச, இதுவுமா வர்களிடமும் வாலாட்டி முகத்தை நக்கி மகிழ்ந்தது.

    அப்புறம் கொஞ்ச நேரம் சண்டை மயம்தான்! உங்கள் பிரச்னையை கொஞ்சம் தள்ளிச் சென்று தீர்த்துக் கொள்ளுங்கள் என்று நாங்கள் அவர்களைத் துரத்தி விட்டோம். பின்னர் மன்னன் சாலமன்தான் அவர்களுக்கு உதவியிருக்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
  18. நாய் மேல் உள்ள பாசம் சிலருக்கு மனிதர்மேல் இருப்பதில்லை.

    அந்த நாய் அதன் உரிமையாளருக்கு சீக்கிரத்தில் கிடைக்க நான் கடவுளைப் பிராத்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. இவ்வளவு செய்யதவர்கள் பெயரை வெளியிட்டு இருக்காம் என்ற தங்களது யோசனையை மறந்து விட்டது அவர்களின் துரதிஷ்ர்டமே...
    தமிழ் மணம்10

    பதிலளிநீக்கு
  20. சார்! நாலுகால்கள் (எங்களுக்கு அதீத பாசம் இவர்கள் மேல்) குறிப்பாக நாய்கள் தாங்கள் தங்கள் இருப்பிடத்தை மிகச் சரியாகக் கண்டுபிடித்து வந்து விடும் அறிவு உள்ளவர்கள் தங்கள் மோப்ப சக்தியை பிரகடனப்படுத்திக்கொண்டு....மகன் கால்நடை மருத்துவர். இப்படித்தான் ஒரு நாள் அவன் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த போது அந்த நாய் ஒரே ஓட்டத்தில் கிளினிக்கை விட்டு வெளியில் ஓடிவிட்டது. மெயின் ரோட்டில்....(திருவான்மியூர் காமராஜ் நகர், டைடல் பார்க் அருகில் உள்ளது க்ளினிக்....ஆர்க் என்ற நாய்கள் கிளினிக்கும், ஒன்லி கேட் க்ளினிக்...(மகன் இரண்டிலும் - டாக்டர் அஃப்சல் கேட் கிளினிக் - கீழ் மகன் வேலை செய்வதால் இரண்டு க்ளினிக்கிலும் இவர்களது நோயாளிகள்/நாலு கால்கள்தான்...) ரோட்டில் ஓடிய நாயின் பின் மகன் செயினுடன் ஓட....அதுவோ நேராக தான் இருக்கும் வீட்டிற்கு ஓடி விட்டது. ட்ராஃபிக்கைக் கடந்து திருவான்மியூரில் இருக்கும் தனது வீட்டிற்கு! அப்புற என்ன மகன் எளிதாக அதைப் பிடித்துக் கொண்டு வந்து விட்டான்....

    இந்த போஸ்டரில் உள்ளதும் ஒருவேளை தானாகவே திரும்பி வரலாம் இல்லை என்றால் அடையாளம் தெரியாமல் நண்பர் ஸ்ரீராம் சொல்லி இருப்பது போல் இரு உரிமையாளர்கள் என்று சண்டையும் வரலாம்....பொதுவாக அல்சேஷன், டாபர்மேன் போன்ற சற்று ஃபெரோசியஸ் தவிர மற்றவை யாரைக் கண்டாலும் வாலாட்டும்...அன்புடன் இருந்தால்...எனவே பெயர் அவசியம்தான்...அவர்கல் அந்த நாய் பட்டியில் பெயரும், நம்பரும் குறித்து வைத்திருந்தாலும் நல்லது ஆனால் அதையும் கழட்டிவிட்டு ஆட்டையைப் போடுபவர்களும் இருக்கிறார்கள்....

    மகனுக்குக் கிடைத்தால்....(யாராவது இப்படி ரோட்டில் பார்ப்பவற்றை இவர்கள் கிளினிக்கிற்கு கொண்டு வருவது உண்டு...இவர்களும் அவர்களது வலைத்தளத்தில் பகிர்வார்கள்....அப்படி வந்தால் சொல்லி வைக்கிறேன்...ஹஹஹஹ் உங்களுக்கு, சுப்பு தாத்தாவிற்கு எல்லோருக்கும் கமிஷன் உட்பட....

    ---கீதா

    பதிலளிநீக்கு