தொடரும் தோழர்கள்

புதன், அக்டோபர் 07, 2015

சாக்லெட் பெண்கள்.......என்னதான் முடிவு?!



நண்பர் பார்த்தசாரதி என் பதிவுகளை வழக்கமாகப் படிப்பவர்.

அவருக்கு ஒரு நாள் ஒரு விபரீத ஆசை எழுந்தது.

இந்தப் பக்கம் தமிழில் இருக்கிறது;இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டுமாஎன்ற கேள்வியைப்  பார்த்ததும் ஆமாம் என்று சொடுக்கி விட்டார்.

பின்னர் விழுந்து விழுந்து சிரித்து அவருக்கு அடி கூடப் பட்டு விட்டதாம்.

ஏன் அப்படிச் சிரித்தார்?

பதிவின் மொழி பெயர்ப்பைப் பார்த்தா?

இல்லை!

பதிவரின் பெயரும் மொழி பெயர்க்கப் பட்டிருந்தது!

எப்படி?

Chennai madman!

அதுதான் அந்தச் சிரிப்புக்குக் காரணம்!

சரியாகத்தான் சொல்லியிருக்கோ?!

இனி கதையை முடிக்கலாமா?

(வழக்கமாக இதற்குப் பொருளே வேறல்லவோ?) 

………………
மணி 10.15

முகநூலில் மேய்ந்து கொண்டிருந்த மாலினிக்கு அந்த செய்தி வந்தது

சமீபத்தில் அறிமுகமான சுமாதான்.

சுமாவை அவளுக்குப் பிடித்தற்குக் காரணம் அந்த அழகிய சின்னப் பெண் மைத்ரிதான்

புகைப்பத்தில் எவ்வளவு வசீகரம்? 

சுமா தன் நிலைமையை விளக்கி அவள் கணவரின் கடையிலிருந்து சாக்லெட் வாங்க உதவ முடியுமா எனக் கேட்டிருந்தாள்.

மாலினி பதில் அளித்தாள்,என்னிடமே வெளிநாட்டு சாக்லெட் டப்பா இருக்கிறது தருகிறேன் என்று சொல்லி.அப்படியே சுமாவின் விலாசத்தைக் கேட்டு அருகில்தான் என அறிந்தபின் தானே அதை அனுப்புவதாகக் கூறினாள்.

அந்த சாக்லெட் டப்பாவை எடுத்து ஒரு வண்ணத்தாள் சுற்றி அழகு படுத்தினாள்

மேலே ஒரு சின்னத் தாளில் அழகுக் குழந்தை மைத்ரிக்கு என்று எழுதி ஒட்டினாள்

காவல்காரனை அழைத்து விலாசம் தந்து கொடுத்து விட்டு வரச் சொன்னாள்.

சுமாவுக்கும் தகவல் சொல்லி அது தன் அன்புப்பரிசு என்றும் தெரிவித்தாள்.

சாக்லெட் போய்ச் சேர்ந்து விடும்!

மைத்ரி மகிழ்ச்சி அடைவாள்! .............


இங்கே முடிக்கிறேன் இந்தப் பித்தன்..madman!

மொட்டையாக முடித்து விட்டேன் என்று நினைக்கிறீர்களா?

இதற்குப் பல முடிவுகள் உள்ளன.

மகிழ்ச்சியான முடிவு;
சோகமான முடிவு;
நகைச்சுவையான முடிவு;
சட்ட பூர்வ முடிவு…இத்யாதி இத்யாதி!

எனவே .........

நீங்களே முடியுங்களேன்!

7 கருத்துகள்:

  1. வணக்கம் அய்யா! எதிர்பார்த்ததை விட சிம்பிளாக முடிச்சிட்டிங்க! ஆனாலும் சிறப்பு! அந்த முடிவுகளையும் நீங்களே எழுதிங்கய்யா! அப்படியே மொழிபெயர்த்த இப்படித்தான் வில்லங்கமா வருமோ! நன்றி

    பதிலளிநீக்கு
  2. //முடிகிக்கிறேன்//

    pitha pirai choodi perumane

    subbu thatha

    பதிலளிநீக்கு
  3. கதையை முடிக்காமல் விட்டுவிட்டு எங்களை முடிக்க சொல்லிவிட்டீர்களே! ஆகட்டும் பார்க்கலாம் !


    பித்தன் என்பதற்கு zealot அதாவது அளவு மீறிய உற்சாகத்துடன் செயலாற்றுகிறவர் எனத் தெரியவில்லையா அந்த கணினி மொழிபெயர்ப்பானுக்கு?

    பதிலளிநீக்கு
  4. எப்படியோ மைத்ரிக்கு சாக்லெட் கிடைத்துவிட்டது! ஆனால் எங்களுக்குத்தான் முடிவு கிடைக்கவில்லை! என்று தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
  5. ஒரு கதை எழுதி அதை முடிக்குமாறு வாசகர்களிடம் வேண்டி , வாசகர்களின் முடிவு என் முடிவுடன் ஒத்துப்போனால் பரிசும் அறிவித்திருந்தேன் குறைந்த எண்ணிக்கையிலேயே கதைகள் முடிக்கப் பட்டிருந்தன. ஒன்றாவது என் முடிவுடன் ஒத்துப் போக வில்லை வந்ததில் சிறந்தது என்று நடுவர் முடிவு செய்த கதைக்குப் பரிசு கொடுத்தேன் அது பழைய கதை. இது எப்படி என் கண்ணில் படாமல் போயிற்று. ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கு நன்றி ஐயா!முன்பே இது போல் முயற்சி செய்திருக்கிறேன்,போட்டி என்று வைக்காமல்.
      முடிதால் பாருங்கள்
      http://chennaipithan.blogspot.com/2013/08/blog-post_7.html
      http://chennaipithan.blogspot.com/2013/08/blog-post_9.html
      http://chennaipithan.blogspot.com/2013/08/blog-post_16.html
      http://chennaipithan.blogspot.com/2013/08/blog-post_17.html
      http://chennaipithan.blogspot.com/2013/08/blog-post_19.html

      நீக்கு
  6. சுரேஷ் அழகான ஒரு முடிவை கொடுத்திருக்கிறார் இன்றுதான் பார்க்க முடிந்தது. வேறு முடிவுகள் வந்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும்...

    பதிலளிநீக்கு