தொடரும் தோழர்கள்

வியாழன், அக்டோபர் 22, 2015

தனி ஒருவன் -முடிவான முடிவு!..



 தனி ஒருவன் முடிவிற்கு, திருமதி அபயாஅருணா, திரு நடன சபாபதி, திரு தளிர் சுரேஷ் அளித்த கருத்துக்கள் என்னை சிந்திக்க வைத்தன.  

                   
அந்தக் கதை முடியும்போது, ’சுவாமியின் முடிவு என்னவாக இருக்கும்என்பது உண்மை யிலேயே பரந்தாமனுக்குத் தான் வெளிச்சம்.  அப்புறம் நடந்தது இதோ....
 
இரண்டு நாட்கள் கழித்து சுவாமி, ஜெகன்னாதனைத் தொலை பேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தார்.  ஜெகனின் மனைவி தான் போனை எடுத்தார்.  ஜெகன் பெங்களூர் போயிருப் பதை அறிவித்தார்.  திரும்பி வந்தவுடன் அவரை என்னுடன் கண்டிப்பாகத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள் எனத் தெரிவித்து சுருக்கமாகக் குசலம் விசாரித்துத் துண்டித்தார்.  
 ஜெகன் ஊர் திரும்பியவுடன் அன்று மாலை பெசன்ட் நகர் சென்றார்.  


கடற்கரையில் அமர்ந்திருந்த சுவாமிக்கு மிக்க மகிழ்ச்சி.  
ஜெகனைப் பார்த்தவுடனேயே தன் குறையை சொல்ல ஆரம்பித்தார்.  
அந்த செந்தில் எனக்கு எப்படி 2 பவுன் தர முடியும்? என்று ஆச்சரியப் பட்டார்.  
ரிடையர் ஆகி 30 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்க ஒளியூட்டிய வாழ்வை அனுபவித்த ஒருவனின்  அன்புக் காணிக்கையான 2 பவுன் தானே, கட்டை விரலையா குடுத்துட் டான்   ஜெகன்
நான் துரோணர் மாதிரி மோசமானவன் இல்லே, காப்பாத்த வேண்டிய அர்ஜுனனும்  எனக்கு யாரும் இல்லே
இப்ப என்ன பண்லாம்ங்கறேங்கஎன்றவரிடம் உங்களுக்கு அவரோட வீடு நல்லா தெரியும், நம்ப போய் கொடுத்துட்டு வந்துடலாம்” என்றார்  சுவாமி.
  “இப்ப உங்க வீட்டுக்குப் போய், அதை எடுத்து கிட்டு, அப்புறம் செந்தில் வீட்டுக்குப் போக உங்க மனசு உங்களை துரத்தினாலும் உடம்பு இணங்குமா?” 


சரி, என்னோட வந்து அதை எடுத்துண்டு போய், நீங்களே கொடுத்திடுங்க நா ஒரு லெட்டரும் தரேன்என்றார். 
                      ”அதுலே பெற்றுக் கொண்டேன்னு கையெழுத்து வாங்கிண்டு வரச் சொல்லி, அதை பத்திரமா பைல் பண்ணி வைச்சுக்கோங்க ”என்று சொல்லிச் சிரித்தார் ஜெகன்  
                     பின் அவர் வீட்டுக்குச் சென்று சிகப்பு பெட்டியை வாங்கிக் கொண்டு வரசித்தி வினாயகர்கோவில் வரை போய்விட்டு வினாயகரை வணங்கி விட்டு சுவாமி வீட்டிற்குத் திரும்பினார் ஜெகன்.  
என்ன திரும்ப எடுத்துண்டு வந்துட்டேங்க
செந்தில் பெண்ணும், மாப்பிள்ளையும் U.S.போயாச்சு, செந்தில் U.K. போயாச்சு, செக்யூரிடி மட்டும் தான் இருக்கான்
 சரி, இப்ப என்ன பண்றது? என்று சுவாமி அங்கலாய்த்தார்.




” அதை விடுங்க!உங்க பொண்ணோட நீண்ட நாள் லட்சியமான  டான்ஸ் ஸ்கூல் எப்ப திறக்கப் போறது? ”என்று கேட்டார் ஜெகன்


”விஜயதசமி அன்னிக்கு, நாங்க செலக்ட் பண்ண பெயர் சொன்னேனோ?ஆங்கிகம் நாட்டியாலயா”, எப்படி புதுமையா இருக்கா?” எனக் கேட்டார் சுவாம

நீங்க வைச்ச பேராதான் இருக்கும்” 

 சுவாமிக்கு ஒரே பூரிப்பு

 ”இப்ப இன்னொண்ணு நான் சொல்லப் போறேன், அதையும் கேட்டு இதே மாதிரி சந்தோஷப்படணும்” என்றார் ஜெகன். 

சொல்லுங்க


  ” டிரஸ்ட்டுக்கு உங்க மாப்பிள்ளை நன்கொடை எல்லாம் வாங்கிண்டார்ன்னு சொன்னேங்களே, நீங்க தானே ரசீது போட்டுக் கொடுத்தீங்க


 அதுக்கென்ன?

 உங்க நன்கொடை?

 எல்லாமே அவளுக்குப் போக வேண்டியதுதான

இந்த 2 பவுனை செந்தில் நாதன் நன்கொடையாக எடுத்துண்டு அவர் பேர்லே ஒரு ரசீது போட்டுக் கொடுங்க, ரூ.45,000 க்கு ரசீது எழுதுங்க” என்றார் ஜெகன்

ஆச்சரியகரமாக, உடனே சம்மதித்தார்  சுவாமி.  

”நாட்டியாலயா, சரஸ்வதி பூஜை அன்று ஆரம்பம்.  விஜயதசமி அன்னிக்கு அவளோட மாணவிகள் 50 பேர் சேர்ந்து தியான ஸ்லோகம் பாடி அபினயம் பிடிச்சு பள்ளி துவங்கும், உலகத்தரத்தை எட்ட  மாப்பிள்ளை தன்னாலான எல்லாத்தையும் பண்ணிண்டிருக்கார்.  
                    கண்டிப்பாக அக்டோபர் 21, 22 ரெண்டு நாளும் வந்து எம் பொண்ணோட நினைவுகளை, கனவுகளை கௌரவிங்க, ”என்று குரல் தழதழத்தார் சுவாமி.  அவரது கரங்களை ஆதரவாக பிடித்துக் கொண்டார் ஜெகன்.  



//போன வருடம் தான் புற்று நோய் அவரது மகளை வீழ்த்தியது//
கலைமாமணி விருது பெற்ற,ஒரு உன்னத நடனமேதை அவள்
ஆங்கிகம் நாட்டியாலயாஓங்கி   வளர வாழ்த்துகள்!
                                                                                                                                                       
 ஆங்கிகம் புவனம் யஸ்ய வாச்சிகம் சர்வா வான்மயம்
 ஆஹார்யம் சந்த்ரதாராதி தம் நும சாத்விகம் சிவம்
உலகத்தை உடம்பாகவும் பேசும் பாஷைகள் யாவற்றையும் ஒரே பாஷையாகவும் சந்திர நட்சத்திரங் களை ஆபரணங்களாகவும் அணிந்துள்ள சாந்த ரூபமான சிவனை  வணங்குகிறோம். 
 -பார்த்தசாரதி

டிஸ்கி: பரதத்தில் நான்கு வித அபிநயங்கள் சொல்லப்படுகின்றன
ஆங்கிகம் என்பத உடல் சார்ந்த அபிநயம்.
வாசிகம் என்பது இயல் வரிகள்,வசனம் ,மொழி
ஆஹார்யம் என்பது உடை,அணிகலன்கள்
சாத்விகம் என்பது முக அபிநயம்,பாவம்
ஆடல் தெய்வமான சிவனுக்கு எவையெல்லாம் இந்த அபிநயங்களாக அமைகிறது எனக் கூறகிறது  பாடல்.


 




12 கருத்துகள்:

  1. முடிவான முடிவு அருமைய்யா! உண்மை கதைபோலவேயிருக்கு! பரதத்தை பற்றிய தகவல்கள் அருமை! ஆங்கிகம் வளரட்டும்! நன்றிஅய்யா

    பதிலளிநீக்கு

  2. நான் எண்ணியதுபோலவே திரு சுவாமி அவர்கள், திரு செந்தில் கொடுத்த அந்த பரிசை தான் எடுத்துக்கொள்ளாமல் ஒரு அறக்கட்டளைக்கு திரு செந்தில் பெயரிலேயே கொடையாக தந்திருக்கிறார் என அறியும்போது மகிழ்ச்கியாய் இருக்கிறது.
    நிகழ்வை(!) கதையாய் தந்திருக்கும் திரு பார்த்தசாரதி அவர்கட்கும், அதை பகிர்ந்த தங்களுக்கும் பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  3. எத்தனை அருமையாக உளம் தொட்ட கதை ஐயா!
    பரதக் கலைபற்றிப் பகிர்ந்த தகவல்கள் நன்று!

    விஜயதசமி நன்நாள் வாழ்த்துக்கள் ஐயா!

    த ம +1

    பதிலளிநீக்கு
  4. அருமையான முடிவு ஐயா நகர்த்திய விதம் நன்று

    பதிலளிநீக்கு
  5. நல்ல மனங்கள் வாழ்க. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  6. மிகச்சிறப்பான முடிவு! அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு