தொடரும் தோழர்கள்

ஞாயிறு, அக்டோபர் 18, 2015

விடுமுறை,சிரிமுறை!




ஒருவன் பொதுத் தொலை பேசியைக் கையில் வைத்துக் கொண்டு 30 நிமிடங்களாக பேசாமலே இருந்தான்;

காத்துக் கொண்டிருந்த மற்றவன் கேட்டான்”30 நிமிடமாகப் பேசாமல் கையில் தொலைபேசியை வைத்துக் கொண்டு என்ன செய்கிறாய்?”


அவன் சொன்னான்”நான் என் மனைவியுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்”
--------------------------------------------

பையன் அப்பாவிடம்:”எனக்குப் பள்ளி நாடகத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது:

அப்பா:சூப்பர் !என்ன வேடம்?

பையன்:அப்பா வேடம்

அப்பா”முட்டாள்! வசனம் இருக்கும் வேடமாகக் கேள்!”
 

31 கருத்துகள்:

  1. 30நிமிசமா அவனுக்க பேச வாய்ப்பே இல்லையா?

    அப்பானா கேட்க மட்டுதானா? பேச இல்லை!
    ஹா ஹா ஹா ...சூப்பர் அய்யா!!!

    பதிலளிநீக்கு
  2. சிரிப்புத்தான் வருகுதய்யா! இரண்டுமே மவுனமாகிவிட்ட ஆம்பிள்ளைகளின் மனக்குமுறல்கள்.

    பதிலளிநீக்கு
  3. பேசலைனா என்ன? ரசித்தேன்...நன்றி அய்யா

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. ஏன் சார்?ஏற்கனவே இன்றைய சோற்றைப் பற்றிக் கவலை!
      நன்றி ஐயா

      நீக்கு
  5. ஐயோ ஐயோ மனைவியிடம் பேசும் மொழி மௌனமா ???????

    அருமை ஐயா ரசித்தேன் தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. ஆமா இதற்கு நான் எதுவும் சொல்ல முடியாதே..

    பதிலளிநீக்கு
  7. ஹாஹாஹாஹா ஸூப்பர் ஐயா மிகவும் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  8. ஹஹஹஹ்ஹ் ரசித்தோம்....

    மலரே மௌனமா
    மௌனமே வேதமா
    மலர்கள் பேசுமா
    பேசினால் ஓயுமா அன்பே !!! இந்தப் பாட்டு அவரு மனசுல ஓடியிருக்குமோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மௌனம்தான் மிகவும் வலிமயான மொழி!
      நன்றி இருவருக்கும்!

      நீக்கு
  9. ஊம் ஊம் என்று கூடவா சொல்லவில்லை :)

    பதிலளிநீக்கு
  10. காதுக்கு மட்டும் வேலையா!!

    பதிலளிநீக்கு
  11. வாய்விட்டு சிரிக்கவைக்கும் சிரிப்புக்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு