தொடரும் தோழர்கள்

சனி, அக்டோபர் 17, 2015

புலி,ஆடு,புல்லுக்கட்டு!



எனக்குத் தெரிந்த மனிதர் ஒருவர்.

ஒரு அழகிய பாமரேனியன் நாய் வளர்த்து வந்தார்.

சிறிய குட்டியாக இருக்கும் போதே வாங்கி அதை மிகவும் ஆசையாக வளர்த்து வந்தார்

சில நாட்கள் கழித்து ஒரு வெள்ளைப் பூனைக்குட்டி வந்து சேர்ந்தது.பூனை எப்போதுமே பார்க்க அழகுதானே.

அதற்குப் பால் வைக்கவும் அது அங்கேயே ஒட்டிக் கொண்டது

முதலில் நாய் அதை எதிரியாகப் ,பார்த்தாலும் .நாட்கள் செல்லச் செல்ல இரண்டும் பழகி நண்பர்களாகின.

இரண்டுக்கும் விசேட உணவுகள் வேறு

ஒரு நாள் அவர் ஒரு ஆட்டுக்குட்டி வாங்கி வந்தார்.

அதற்கும் நல்ல இரை கொடுத்து வளர்த்து வந்தார்.

ஒரு முறை நாய் காணாமல் போக,தவித்துப் போன நண்பர் பத்திரிகை மூலமும், சுவ ரொட்டிகள் மூலமும் விளம்பரம் செய்து பரிசும் அறிவித்தார்.

சில நாட்களில் நாய் கிடைத்து விட்டது

இடைப்பட்ட நாட்களில் அவர் மிகவும் சோர்ந்து போய் விட்டார்

நாய் கிடைத்த பின் சொன்னார்”இப்போதுதான் எனக்கு உயிர் வந்தது”

மீண்டும் ஒரு நிகழ்வு

பூனை வெளியில் செல்கையில் காரில் அடிபட்டு இறந்து போயிற்று அன்று அவர் அடைந்த சோகம் சொல்ல முடியாது,ஒரு நாள் முழுவதும்  சாப்பிடவில்லை.

செல்லப் பிராணிகளின் இழப்பு எவ்வளவு சோக மயமானது என்பதை அப்போது நான் உணர்ந்தேன்.

நாயும்,ஆடும் நன்கு வளர்ந்தன

ஆடு நல்ல இரை தின்று கொழு கொழு என்று ஆயிற்று

ஒரு நாள் அவர் வீட்டுக்குப் போன போது ஆட்டைக் காணவில்லை.

ஆட்டூடன் நட்பாகிப் போன நாய் ஆடு இருந்த இடத்தையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது

என்ன நேர்ந்தது ஆட்டுக்கு?

நண்பர் வருத்தத்தில் இருப்பாரோ .

நண்பரைப் பார்த்தேன்

பெரிய ஏப்பம் விட்டவாறு வந்தார்.

எந்த சோகமும் முகத்தில் தெரியவில்லை

ஆடு எங்கே என்றேன்

சிரித்தார்.வயிற்றைத் தடவிக் காண்பித்தார்

வளர்க்கும் நாய் காணாமல் போனபோது வருந்தினார்

வளர்த்த பூனை இறந்தபோது அழுதார்.

வளர்த்த ஆட்டை அவரே தனக்கு இரையாக்கி விட்டார்

நாயை,பூனையை அவர் உள்ளம் நேசித்திருக்கிறது

ஆட்டை அவர்  நாக்கும்,வயிறுமல்லவா நேசித்திருக்கின்றன

........
இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே
இதுதான் உலகம்  வீண் அனுதாபம் கண்டு நீ
ஒரு நாளும் நம்பிடாதே!—(பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்)



அந்த நாயின் பெயர் டைகர்(புலி)

ஆட்டுக்கு இரை புல்லுக்கட்டு!

ஆடு எதற்கு இரை?

மனிதப் புலிக்குத்தான்!

தலைப்பு வந்து விட்டதல்லவா?!

26 கருத்துகள்:


  1. மனிதன் சுயநலமானவன் என்பதை உணர்த்தும் இந்த பதிவின் தலைப்பை நீங்கள் இரை போடும் மனிதர்கள்? என்று வைத்திருக்கலாமோ?

    1957 இல் வந்த பதி பக்தி படத்தில் வரும் பட்டுக்கோட்டையாரின் கருத்தாழம் மிக்க பாடலை நினைவூட்டியமைக்கு நன்றி! அந்த பாடலை இணைத்திருக்கலாமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைப்பு அப்படி வைத்தால் முடிவு முதலிலேயே தெரிந்து விடுமே!
      நன்றி ஐயா

      நீக்கு
  2. உண்மைதான்
    ஆட்டை நாக்குதான் நேசித்திருக்கிறது
    என்ன மனிதர் இவர்
    தம +1

    பதிலளிநீக்கு
  3. பட்டுக்கோட்டையார் பாடல் மிகவும் சிந்திக்க வைத்திருக்கிறது தங்களை. நல்லதொரு பாடல். தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  4. அழகாக சித்தரித்து கொண்டு வந்து முடிச்சுப்போட்டு விட்டீர்கள் ஐயா அருமை

    பதிலளிநீக்கு
  5. ஆட்டை நேசித்தது நாக்கு மட்டும் தான்.... :(

    பதிலளிநீக்கு
  6. உண்மைதான் மனிதன் சுயநலகாரன்தான் அருமையாக பாடல்மூலம் விளக்கீட்டிங்க அய்யா நன்றி
    எங்க வீட்டுல வளர்க்கற ஆட்டை நாங்க ஒருபோதும் சாப்பிட்டதில்லை! நான் இன்றுவரை ஆட்டுகறி உட்பட எந்த கறியும் சாப்பிட்டதில்லைய்யா!

    அதுவும் ஒரு உயிர்தானே! கழுத்தறுக்கறப்ப ம்மே னுகத்தறப்ப மனச பிசையும் அய்யா! நன்றி

    பதிலளிநீக்கு
  7. யாரோ ஒருவர் ஒரு சிறுமியை மகளாக வளர்த்து பின்னர் அந்த பெண்ணையே தன முதிர்ந்த வயதில் கண்ணாலம் கட்டிக்கிட்டாரே ....... அதுபோலவா....!?

    பதிலளிநீக்கு
  8. ஊவமை அழகு, மனிதரில் சுயநலமின்மையை கண்பதறிது. நன்றி

    பதிலளிநீக்கு
  9. ஆடும் அறுப்பவனைதான் நம்புகிறது :)

    பதிலளிநீக்கு
  10. வணக்கம்
    ஐயா
    அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் பாடலை இரசித்தேன் த.ம 7
    1.ஆறு-தண்ணீர்உள்ள ஆறு.
    2.சினம்
    3.வது
    4.சிறு
    5.ஆ-பசு
    6.சிவ
    7.துவம்-முதலாளி
    8.னம்-மர்மம்
    9.ஆசி-நிறைவேறி
    10.சிம்
    11.சின-கோபி
    12.ஆனம்-ஆதாரம்
    13.ஆம்
    14.ஆன
    15.துசி
    16.வனம்
    17.ஆறு-இலக்கம்
    18.வசி
    19.தும்-ஒரு ஒலி சப்பதம்
    20.வம்சி.
    21றுது.
    22.வறு
    நல்ல போட்டி ஐயா.. எல்லோரையும் சிந்திக்க வைத்திங்கள்.உலகம் தழுவிய கவிதைப் போட்டி சம்மந்தமாக பதிவை வெளியிட்டமைக்கு நன்றி ஐயா. த.ம
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் பாடலை இரசித்தேன் த.ம 7//
      நன்றி ரூபன்

      நீக்கு
  11. பாவம் ஆடு. நாயைத் தவிர ஆட்டை நேசிக்க யாருமில்லை!

    ரூபன் கண்ட்ரோல் A போட்டதால், அவர் வெங்கட் பதிவுக்கு எழுதி வைத்திருந்த பின்னூட்டமும் இங்கு வெளியாகி விட்டது! ஹா... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேசிக்கிறார்கள்,வேறு காரணத்துக்காக!

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  12. கதையுடன் பாடலைப பொருத்தமாக இணைத்து விட்டீர்!

    பதிலளிநீக்கு
  13. எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்கும் அந்த உயிர் மூச்சு ஒன்றுதான் இல்லையோ?!! சுவாமி பித்தானந்தா என்ன சொல்லுகின்றார்!!!???

    செம!! பதிவு சார்!

    பதிலளிநீக்கு
  14. ஆடு வளர்க்கையிலேயே இரைக்கு என்று மனப்போக்குடன் வளர்ப்பதால் வலிக்கவில்லையோ என்னமோ?

    பதிலளிநீக்கு