தொடரும் தோழர்கள்

வெள்ளி, அக்டோபர் 16, 2015

விளக்கும் விளக்கும்!



குஷி என்றொரு படம்.

அதில் ஒரு காட்சி

ஒரு மாற்றுத் திறனாளிப் பெண்,கோவிலில் ஒரு விளக்கேற்றி விட்டுச் செல்வாள்.
அடிக்கின்ற காற்றில் அந்த விளக்கு அணைந்து விடுவது போல் அலையும்.அதைப்  பார்த்துக் கொண்டே இருக்கும் நாயகனும் ,நாயகியும் ஓடி வந்து ஒரே நேரத்தில் அதற்குக் கைகளால், தடுப்பு ஏற்படுத்தி அதை அணையாமல் காப்பர்!

காரணம் அந்தப் பெண் நம்பிக்கையுடன் ஏற்றிய விளக்கு அணைந்து விடக் கூடாது என்ற எண்ணம்.

காட்சியை மாற்றுவோம்.

கோவில் ஒரு பெண்மணி விளக்கை வைத்து விட்டு அதை ஏற்ற தீப்பெட்டியை எடுக்கிறாள்.

அப்போது மற்றொரு பெண்மணி கையில் விளக்குடன் அங்கு வந்து கொஞ்சம் நெருப்புப் பெட்டி கொடுங்கள் என்று கேட்கிறாள்

என்னவொரு தர்ம சங்கடம்.

ஏற்றப்போனவள் அதை நிறுத்த முடியுமா?

அது அபசகுனமாகி விடாதா?

எனவே சொல்கிறாள்நான் ஏற்றி விட்டுத் தருகிறேன்”.........

பெட்டியைத் திறக்கிறாள்

உள்ளே இருப்பது ஒரே ஒரு குச்சி.

என்ன செய்வது ?

திகைக்கிறாள்.

ஆனால் இவள் நிலை மற்றவளுக்குத் தெரியாது

இப்போது இவள் அவளிடம் எப்படிச் சொல்வாள்?

இங்கு முக்கியம் எது?

விளக்கேற்றுவதா?

அல்லது முதலில் விளக்கேற்றுவதா?

அவர்கள் வேண்டுதல்,வழிபாடு விளக்கேற்றுவதுதான்.

இருவரில் ஒருவர் தன் விளக்கை ஏற்றி விட்டு அதைக் கொண்டு மற்ற விளக்கை ஏற்றலாம்.

அவ்வாறு செய்தால் இரண்டும் எரியும்;முதல் விளக்கின் ஒளியும் குறையப் போவதில்லை

இதைத்தான் ஆங்கிலக்கவிஞன் ஒருவன் அழகாகச் சொன்னான்

“.as one lamp lights another,nor grows less
So nobleness  enkindleth nobleness”
என்று.

பதிவர் நண்பர் குட்டனின் மொழி பெயர்ப்பில்....

”விளக்கொன்றால்  மறுவிளக்கை ஏற்றினாலும் முதல்
விளக்கு  தன் ஒளியைச் சிறிதும் இழப்பதில்லை;
அதேபோல் மேன்மை தூண்டுமே மேன்மையை!”


நாம் செய்யும் நன்மைகள் மேலும் நன்மைகளை உருவாக்கும்;நமக்கே மீண்டும் நன்மை பயக்கும்

நார்மன் வின்செண்ட் பீல் அவர்கள் சொல்வார்”நல்ல எண்ணங்கள்(கவனியுங்கள்.நல்ல செயல்கள் கூட இல்லை) ஒரு வளைஎறி போன்றவை,வீசினால் திரும்பி நம்மிடமே வரும்”

நல்லதே நினைப்போம்
நல்லதே செய்வோம்

நன்மையே நடக்கும்! 

 பிரஹதாரண்யக உபநிடதம் சொல்கிறது.... தமஸோ மா ஜ்யோதிர் கமய!

இருளிலிருந்து ஒளிக்கு என்னை இட்டுச் செல்!

விளக்கு அதைத்தான் செய்கிறது!





35 கருத்துகள்:

  1. அருமையான சிந்தனை. கொடுக்கக் கொடுக்கக் குறையாது வளர்வது கல்வியறிவு என்பார்கள். அதுபோல.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    ஐயா
    படக்கதையை வைத்து வாழ்க்கை தத்துவத்தை சொல்லியுள்ளீயுள்ளீர்கள் ஐயா வாழ்த்துக்கள் த.ம3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. நல்லதே நினைப்போம்
    நல்லதே செய்வோம்
    தம +1

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் அய்யா! அருமையான வாழ்க்கை சிந்தனை! நல்லதையே நினைப்போம் நல்லதையே செய்வோம் நன்றி!!!

    பதிலளிநீக்கு
  5. அருமை ஐயா

    நல்லதை நினை நன்மை நடக்கும்
    தொண்டு செய் மேலான நிலை அடைவாய்
    - சிவமுத்தர் ஸாது ஸ்வாமிகள்

    பதிலளிநீக்கு
  6. நல்லதே நினைப்போம்
    நல்லதே செய்வோம்... நாளொரு நற்சிந்தனை.

    பதிலளிநீக்கு
  7. நேர்மறை சிந்தனை! கொடுக்கக் கொடுக்கக் குறையாது நமது அறிவு அதனால் உங்களால் எவ்வளவு நீங்கள் கற்றதை பிறருக்கு வழங்க முடியுமோ அத்தனையும் வழங்குங்கள் என்று எங்கள் பேராசிரியர் சொல்லுவதுண்டு. அதனால் தான் ஆசிரியர் தொழில் நோபிள் ப்ரொஃபஷன் என்று ஆனதோ...

    பதிலளிநீக்கு
  8. நல்லதொரு தத்துவம்! அருமையாக எளிமையாக விளக்கியவிதம் சிறப்பு!

    பதிலளிநீக்கு
  9. அருமை ஐயா,
    நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  10. தலைப்பு அருமை! விளக்கு விளக்குவதை நீங்கள் அழகாக விளக்கிவிட்டீர்கள். கருத்தையும், எழுத்தையும் இரசித்தேன்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. ஆன்லைன் மூலம் மாதம் Rs10000 மேல் வீ ட்டிலிருந்தே நிரந்தர வருமானம் பார்க்க நீங்கள் விருப்பம் உள்ளவரா ? இனி கவலையை விடுங்கள் உடனே கீழேயுள்ள இணையத்தளத்தில் உங்களுக்கென்று ஒரு இலவச கணக்கை உருவாக்கி அதன் மூலம் மாதம் Rs10000 என்ற சுலபமான இலக்கை அடையும் யுக்திகளை பெற்று கொள்ளுங்கள்...

    என்றும் உங்கள் தேவைக்கு எங்கள் சேவை ....

    உங்களுக்கென்று ஒரு இலவச கணக்கை உருவாக்கி கொள்ளுங்கள்

    பதிலளிநீக்கு
  12. அருமையான சிந்தனைப்பகிர்வு ஐயா.

    பதிலளிநீக்கு
  13. ஒரு சிறு நிகழ்வு. ஆனால் பெரிய பாடம். பகிர்வுக்கு நன்றி.
    வாய்ப்பு கிடைக்கும்போது மகாமகத் தீர்த்தவாரி கோயில்களைக் காண அழைக்கிறேன்.
    http://drbjambulingam.blogspot.com/2015/10/2016.html

    பதிலளிநீக்கு