தொடரும் தோழர்கள்

திங்கள், செப்டம்பர் 21, 2015

மாயா--ஒரு விளக்கம்!


மாயா!

சென்ற பதிவின்  தலைப்பு.

பதிவின் முடிவில் எனக்கே புரியவில்லை என்று எழுதி படிப்பவர்கள் அனைவரையும் அந்த மனநிலைக்குக் கொண்டு சென்று விட்டேன்.

அவ்வாறு நான் எழுதவில்லையென்றால்,சொல்லப்பட்ட செய்தியை எல்லோரும் புரிந்து கொண்டிருப்பர்.

வாசகர்கள் அனைவரும் சூரர்கள்.

இப்பதிவு நிச்சயமாக satire இல்லை

இது ஒரு மனச்சிதைவு நோயாளியின் psychedelic எண்ண ஓட்டங்களின் வெளிப்பாடு!

இப்படித்தான் குழப்பமாக இருக்கும்!

நம் பார்வையில் தொடர்பில்லாத பல விஷயங்கள் இருப்பதாகத் தோன்றலாம்.

ஆனால் அவனுக்கு எல்லாம் தொடர்புடையவையே!

இப்போது பதிவின் சில வரிகளை மட்டும் எடுத்துத் தருகிறேன்

//மாயா என்னும் மகாகாலன்!

//எப்போ நடந்தது இந்த அநாசாரம்?

அநாசாரமாய், பர புருஷனுடன்.......

புருஷன் எல்லாம் புருஷனாகி விடுகிறானா?//

//இதற்குப்  பெயர் மனைச் சிதைவு!

சிதைவு!எல்லாம் சிதைந்து போயாச்சு!//

//கத்தி,!யாராவது வாங்கோ .பைத்தியம் கத்தியோட குத்த வரது

வரது! அவன் பெயர் அதுதானே?

அதுதான் உனக்கு இந்த முடிவு.

முடிந்தது எங்கும் ரத்தம்!

 ரத்தம்!விநாசாய ச துஷ்க்ருதாம்!

எல்லாம் மாயா மாயா மாயா!

நான் கடவுள்!//

புரிகிறதா?

அவன் ஏன் மனநோயாளியானான் என்பது?

மனைவி துரோகம் செய்து விட்டாள்


இது உண்மை அல்லது  அவன் எண்ணம்

இருக்கலாம்;இல்லாமலும் இருக்கலாம்!

முன்பே அவனுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்திருக்கலாம்

எனவே எளிதில் சந்தேகம்.

அவள் தவறு செய்தவள்.

தண்டிக்கப்பட வேண்டியவள்

அவன் தண்டிக்கிறான்

அவன் கடவுள் என்பதே நினைப்பு!

இது ஒரு சிறுகதையாக சொல்லலாம்

நெடுங்கதையாக நீட்டலாம்!

ஆனால் அவன் எண்ண ஒட்டத்தில் வெளிப்படுகையில் இப்படித்தான் இருக்கும்!

எல்லாம் மாயா! 

பிகாசோவின் ஓவியம்போல் என்றார் வே.நடனசபாபதி அவ்ர்கள்.உண்மைதான் பார்த்தால் குழப்பமாக இருக்கும்;ஆனால் உள்ளே பொருளிருக்கும்!


இது அங்கதம் என்றார் சுப்புத்தாத்தா அவர்கள்;நிச்சயமாக இல்லை.ஒரு குழம்பிய மனநிலையின் வெளிப்பாடு!

நான் புகுத்தியிருந்த ஓர் உத்தியைக் கவனித்துச் சொன்னார் ஸ்ரீராம் அவர்கள்--அந்தாதி.

வருகை தந்து கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி!

படித்துக் கருத்துச் சொல்லாமல் விட்டிருந்தாலும் நன்றி!







22 கருத்துகள்:

  1. தெளிவாக விளக்கம் தந்தமைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  2. மண்டைக் காய்ந்தது ,நல்ல வேளை,விளக்கம் தந்தீர்கள் :)

    பதிலளிநீக்கு
  3. விளக்கம் அறிந்தேன். படித்துக் கருத்துச் சொல்லாமலிருந்தாலும் நன்றி என்ற சொற்றொடரை அதிகம் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. அப்பாடி மாயா "வுக்கு விளக்கம் கிடைச்சிடுச்சு! நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    ஐயா
    சொல்லிய விளக்கம் மகுடம்... வாழ்த்துக்கள் ஐயா த.ம 4

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. அருமையான பதிவு


    முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!
    http://www.ypvnpubs.com/2015/09/blog-post_18.html

    பதிலளிநீக்கு
  7. //இது ஒரு மனச்சிதைவு நோயாளியின் psychedelic எண்ண ஓட்டங்களின் வெளிப்பாடு!//


    இதை நான் யூகித்தேன். மனைவி, துரோகம் எல்லாம் பிடிபடவில்லை என்றாலும் "மாறிக்கொண்டே இருக்கும் 'குணா'வின் எண்ண ஓட்டங்கள்" என்றும் சேர்க்க எண்ணி இருந்தேன். மற்ற பின்னூட்டங்களைப் படித்ததும் அந்த வரிகளை வெட்டி விட்டேன்! சேர்த்திருக்கலாம். அதற்கும் கிரெடிட் கிடைத்திருக்கும்!

    ஆனால் ஒன்று. நீங்கள் சொல்லி இருப்பது போல நீங்கள் கடைசியாகச் சொல்லி இருக்கும் வரிகளைப் பொறுத்து மட்டும் அல்ல, பெரும்பாலும் முதலிரு பின்னூட்டங்கள் ஒட்டியும் மற்றவர்கள் பின்னூட்டங்கள் அமைந்து விடும்!
    தம +!

    பதிலளிநீக்கு

  8. • பலருக்கு புரியாததை விளக்கிவிட்டீர்கள். அதனால் தான் இதை ஓவியர் பியாசோவின் ஓவியத்தோடு ஒப்பிட்டேன். காரணம் பிக்காசோ ஓவியத்தை சாதாரணமாக பார்ப்போருக்கு புரியாது.. ஊன்றி கவனித்தால் புலப்படும். இல்லாவிடில் யாரேனும் விளக்கவேண்டியிருக்கும். அதுபோலவே இந்த பதிவை ஊன்றி படிப்போருக்கு புரியும். இல்லாவிடில் விளக்கவேண்டியிருக்கும். விளக்கத்திற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைத்தான் நானும் இந்தப்பதிவில் சொல்லியுளேன்
      நன்றி ஐயா

      நீக்கு
  9. மாயா பற்றிய விளக்கத்திற்கு நன்றிங்க ஐயா.

    பதிலளிநீக்கு