தொடரும் தோழர்கள்

வியாழன், ஆகஸ்ட் 06, 2015

மகிழ்வுந்தில் மூன்று பெண்கள்!



மகிழ்வுந்தைச் செலுத்திக் கொண்டிருந்த ரமாவுக்கு எரிச்சலாக இருந்தது.

இப்படியும் சில பேர்வழிகள் என மனத்துக்குள் முணுமுணுத்தாள்.

இவர்கள் எல்லாம் படித்து என்ன பயன்?மிக  சமீபத்திய பாணியில் உடை அணிந்து என்ன?

எல்லாம் வீண்,பண்பாடான செயல்கள் இல்லையெனில்.

இந்தக் கல்யாணி மாமியால் வந்தது எல்லாம்.

அவர்கள் வீட்டுக் கொலுவுக்குக் கட்டாயம் வரவேண்டும் என்று வருந்தி வருந்தி அழைத்த தனால், அடையாரிலிருந்து தி.நகருக்கு வரவேண்டியதாயிற்று
.
மாமி கேட்டதற்கிணங்கி ஒரு பாட்டு வேறு பாடியாயிற்று.

அவள் வீட்டுக்குப் புறப்பட்டு மாமியிடம் விடை பெற்றுக் கொண்டு வாசல் வந்து வண்டியில் ஏறி அமர்ந்து விட்டாள்

அப்போது குரல் கேட்டது 

“ரமா”-மாமிதான்

 வெளியே பார்த்தாள்.

மாமி அவசரமாக வந்து கொண்டிருந்தாள்

கூடவே இரு பெண்கள்.

“ரமா!இவங்களும் அடையார்தான் போகணும்.இவங்க வண்டி ஏதோ கோளாறுன்னு இப்பத்தான் தொலைபேசி வந்தது.கொஞ்சம் இவங்களை அடையாரில் இறக்கி விட்டு விடுகிறாயா?” மாமி கேட்டாள்

“அதுக்கென்ன மாமி.நானா சுமக்கப் போகிறேன்.வரட்டும்”

பெண்கள் இருவரும்  வந்து ஏதுவும் பேசாமல் பின்பக்கம் ஏறி அமர்ந்தனர்.

ரமாவுக்குக் கோபம் வந்தது”நான் என்ன ஓட்டுநரா?முதலாளி மாதிரி பின்னால ஏறி உட்கார்ந் துட் டாங்களே”

இருந்தாலும் கேட்டாள்அடையார்ல எங்க?”

நேரு நகர் முதல் தெருசுருக்கமான பதில்.

வேறு ஏதாவது பேசுவார்கள் என ரமா எதிர்பார்த்தாள். 

ஆனால் பேச்சு தொடர வில்லை

அவர்களும் அவர்களுக்குள் எதுவும் பேசிக் கொள்ளும் ஒலியும் கேட்கவில்லை

வண்டி ஒரு போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டு அவள் எரிச்சலைக் கிளப்பியது

கண்ணாடி வழியே பார்க்கையில் பின்னிருக்கையில் இருக்கும் பெண்கள் சைகையில் தங்களுக்குள் பேசிக் கொள்வது தெரிந்தது.

அவர்கள் முகங்களில் ஒரு மாதிரியான சிரிப்பு வேறு.

ஒரு வேளைத் தன்னைப் பற்றித்தான் ஏதாவது பேசிக் கொள்கிறார்களோ என்ற சந்தேகமும் வந்தது ரமாவுக்கு.

இறங்கும் இடம் வந்ததும்  அவர்களுக்கு சரியான சூடு கொடுக்க வேண்டும் என எண்ணி யவாறு உந்தை ஓட்டினாள்.

அரவமின்மை தொடர்ந்தது.

வண்டி அடையாரை அடைந்தது.

அவர்கள் சொன்ன தெரு வழியாகப் போன ரமா  வீடு எங்கே எனக் கேட்கு முன்,அந்தப் பெண்”அக்கா!வலது பக்கம் இருக்கும் அந்தக் குடியிருப்புதான்” என்றாள்.

ரமா வண்டியை நிறுத்தினாள்.

அவர்கள் இறங்கினர்

பெரியவள் ரமாவின் அருகில் வந்து “மிக்க நன்றி அக்கா” என்று சொல்லி விட்டுப் புறப்பட்டாள்

“ஒரு நிமிடம்”ரமா ஆரம்பித்தாள்”மாமி சொன்னாளே என்று உங்களை ஏற்றிக் கொண்டு வந்தேன்.இருவரும் பின்னால் ஏறிக் கொண்டது மட்டுமின்றி உங்களுக்குள் சைகையில் பேசிச் சிரித்துக் கொண்டு வந்தீர்கள்,என்னிடம் ஒன்றுமே பேசாமல்.இதுதான் பண்பாடா?”

அந்தப் பெண்ணின் முகத்தில் வருத்தம் தெரிந்தது”மன்னிச்சுக்குங்க!என் தங்கைக்குப் பேச முடியாது;காதும் கேட்காது.அதனால் சைகையில் பேசியபடி வந்தோம்.அவளை விட்டு விட்டு உங்களுடன் நான் மட்டும் பேசியபடி வந்தால் அவளுக்கு வருத்தமக இருக்கும்.அதுதான்.......”

ரமா உறைந்து போனாள்

கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது

 கீழே இறங்கி “மிக வருந்துகிறேன்.நீங்கள்தான் என்னை மன்னிக்க வேண்டும்”  என்று அவள் கையைப் பிடித்து விட்டுச் சொல்லி விட்டு ,அவள் தங்கையின் தலையைத் த்டவிக் கொடுத்த பின் கனத்த மனத்துடன் மகிழ்வுந்தைக் கிளப்பினாள்.

******************************************

கதை முடிந்தது.

ஆனால் என்னால் இன்னும் ஒரு முறுக்கு முறுக்காமல் இருக்க முடியாதே.

முறுக்கிய முடிவு.....

*****************************************

மக்ழ்வுந்து தெருமுனை சென்று திரும்பும் வரை பார்த்துக்கொண்டிருந்த பெண்கள்,சிரிக்கத் தொடங்கினர்.

”வழக்கம்போல் இன்னிக்கும் ஒரு ஆளு மாட்டிச்சு.பார்த்தாலே ரொம்ப  செருக்குள் ளவங்களாட்டம் தெரிந்தது.இது வேணும் அவங்களுக்கு” தங்கை சொல்லிச் சிரித்தாள்

********************************************

(இது நேற்றைய ‘வானமே எல்லை’ என்ற பதிவுக்குத் தொடர்புடையது)

20 கருத்துகள்:

  1. கதை மிக அருமை. முதல் முடிவைப்பார்த்து நானும் அனுதாபப்பட்டேன். அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வரக்கூடாது என்பதை அந்த கதை சொன்னதால். ஆனால் அதன் தொடர்ச்சியைப் படித்ததும்.இப்படியும் மனிதர்கள் இருக்கமுடியும் என கதையை முடிக்கலாம் என்று காட்டிய உங்களின் எழுத்துத் திறமையை எப்படி புகழ்வது? வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்,
    முன்னதே நல்லா தானே இருந்தது,
    பின் ஏன் இந்த முறுக்கு,,,,,,,,,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அருமையான சஸ்பென்ஸ் முடிவு ஐயா,,,,

    பதிலளிநீக்கு
  4. உங்க கைப் பக்குவத்தில் முறுக்கு ...நல்ல ருசி :)

    பதிலளிநீக்கு
  5. இரண்டு முடிவுகள்....

    இரண்டுமே நன்று.

    பதிலளிநீக்கு
  6. முதல் முடிவைப் படித்ததுமே தெரிந்துவிட்டது நீங்கல் கண்டிப்பாக முறுக்குல் இன்னுரு சுற்று முறுக்கப் போகின்றீர்கள் என்று...அது நன்றாகவே சுற்றியிருக்கின்றீர்கள்...

    இரண்டுமே அருமை!

    பதிலளிநீக்கு
  7. சரியான முறுக்கு.

    சம்பவத்தை மிகச் சுவையுடன் நல்ல சிறுகதையாக்கி விட்டீர்களே. உங்களுடைய திறமையை பளிச்சென்று வெளிக்காட்டியது இந்தக் கதை. இயல்பான நடை கொக்கி போடுகிறது.
    வாழ்த்துக்கள்.

    God Bless You

    பதிலளிநீக்கு
  8. கதை முடிந்த பின் முறுக்கிய முறுக்கில் சத்தம் கேட்கவில்லையே !!அய்யா..

    பதிலளிநீக்கு
  9. கதையின் போக்கு அருமையாக இருந்தது. ரசித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  10. சிறப்பான முடிவுகள்! இரண்டுமே அருமை!

    பதிலளிநீக்கு