தொடரும் தோழர்கள்

திங்கள், மார்ச் 25, 2013

வாழ்க்கை கேள்வித்தாளா?கழிப்பறைத்தாளா?



”நான் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன்” இதற்கு வழி என்ன? கேட்டேன்

ஞானி சொன்னார்”உன் கேள்வியில் இருக்கும் ”நான்” என்பதை எடுத்து விடு!அடுத்து  நீ சொன்ன ”விருப்பம்”என்பதை எடுத்து விடு.எஞ்சியிருப்பது மகிழ்ச்சியாக இருப்பது மட்டும்தான்!

ஆம்!முதலில் அகந்தை அகல வேண்டும்;பின் ஆசை அகல வேண்டும்;மகிழ்ச்சி தானே வரும்!  

......................................................................
 

தேவைப்படும்போது மட்டுமே பிறர் நம்மைப் பற்றி நினைக்கிறார்களே என வருத்தப் பட வேண்டாம்;இருட்டில் இருக்கும் போது ஒரு மெழுகுவர்த்தியின் நினைவு வருவது போல் அது எனப் பெருமை அடையுங்கள்

....................................................................
 
சிறுவர்களாய் இருக்கும்போது பென்சில் உபயோகித்தோம்.பெரியவர்களாக ஆனபின் பேனா உபயோகிக்கிறோம்.ஏன் தெரியுமா? 

சிறுவயதில் செய்யும் தவறுகளை அழிக்க முடியும். 

ஆனால் வயதான பின்னரோ?!

..................................................................
 
நேற்று என்பது குப்பைத் தாள்
இன்று என்பது செய்தித் தாள்;
நாளை என்பது கேள்வித்தாள்
கவனமாகப் படியுங்கள்.
சிந்தித்து விடை அளியுங்கள்
இல்லையென்றால் வாழ்க்கை
கழிப்பறைத் தாளாகி விடும்!

................................................................
 
பிறந்த நாள் என்பது என்ன?
வாழ்க்கையில் ஒரே ஒரு நாள்,
நீங்கள் அழுதபோது
உங்கள் தாய் சிரித்த நாள்!—(டாக்டர் அப்துல் கலாம்)

.....................................................................
ஒருவரால் கவரப்படுவதற்கு ஒரு மணித்துளி போதும்
ஒருவரைப் பிடிக்க ஒரு மணி நேரம் போதும்
ஒருவரைக் காதலிக்க ஒரு நாள் போதும்
ஒருவரை மறக்க ஒரு வாழ்நாள் போதாது!


21 கருத்துகள்:

  1. சிந்தனைத்துளிகள் சிறப்பு! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  2. ஆசை அகல வேண்டும்;மகிழ்ச்சி தானே வரும்! //உண்மைகளா சார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமூலரும் அதைத்தானே சொல்கிறார் கவிஞரே1--”ஆசை விட விட ஆனந்தம்தானே”என்று!
      வருகைக்கு நன்றி

      நீக்கு
  3. வாழ்நாள் போதாது.. ஒரு லார்ஜ் சிங்கில் மால்ட் போதும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு லார்ஜ் போதுமா?!
      ஆனாலும் எஃபெக்ட் போனபின் மீண்டும் நினைவுகள் வந்துவிடுமே அப்பாதுரை1

      நீக்கு
  4. அனைத்தும் அருமை...

    முடிவில் உள்ளது 100% உண்மை...

    பதிலளிநீக்கு
  5. மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. எல்லா கருத்துக்களுமே அருமை. ஆனாலும் அந்த பென்சில் பேனா பயன்பாடு பற்றிய கருத்து மிக மிக அருமை

    பதிலளிநீக்கு
  7. முதலில் அகந்தை அகல வேண்டும்;பின் ஆசை அகல வேண்டும்;மகிழ்ச்சி தானே வரும்! //இந்த ஞானம் அனைவருக்கும் இருந்தால் இந்த ஞாலம் சிறக்கும்.அருமையான கருத்துகக்ள் ஐயா.

    பதிலளிநீக்கு
  8. த்த்துவம் பித்தரே! தனித்துவம்! பெற்றீர்!

    பதிலளிநீக்கு