தொடரும் தோழர்கள்

செவ்வாய், நவம்பர் 03, 2015

ஆரஞ்சு மனிதர்கள்!



வழக்கம்போல் ஸ்வாமிஜியின் சத்சங்கக் கூட்டம்.

அவர் மேடையின் மீது  அமர்ந்திருந்தார்

அவர் முன் பக்தர்கள் கொண்டு வந்த பழங்கள் தட்டுக்களில் வைக்கப் பட்டிருந்தன

ஸ்வாமி கையில் ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்தார்.

தன் உரையைத் துவக்கினார்

“இதோ என் கையில் இருப்பது ஆரஞ்சுப்பழம்தானே சந்தேகம் இல்லியே?.... (சிரிப்பு)

கூட்டத்தில் இருந்த  ஒருவரை அழைத்தார்”சந்தேக சுந்தரம்!இங்கே வா”......(சிரிப்பு)

அவர் வந்தார்.ஸ்வாமி கேட்டார்”இப்போது இந்தப்பழத்தை நான் என் கையினால் பிழியப் போகிறேன்;பிழிந்தால் என்ன வரும்?

“சாறு வரும்’என்றார் அவர்

என்ன சாறு?

ஆரஞ்சுச் சாறுதான்

நிச்சயமாக?

நிச்சயமா.

ஆப்பிள் சாறோ ,திராட்சைச் சாறோ வராதா?

அதெப்படி வரும்?

இதுவே திராட்சைப் பழம் என்றால்?

திராட்சைச் சாறு வரும் உள்ளே இருப்பதுதானே வெளியே வரும்”

போய் உட்கார்

கூட்டத்தினரை நோக்கிப் பேச ஆரம்பித்தார்

“இப்பழத்தைப் பிழிந்தால் ஆரஞ்சு சாறு வரும்;ஏனெனில் உள்ளே இருப்பது அதுதான். இதோ இந்த திராட்சைப்பழத்தைப் பிழிந்தால் திராட்சைச் சாறுதான் வரும்;ஏனெனில் உள்ளே இருப்பது அதுதான்.

இதே போல் உங்களுக்கு யாராவது சுடுசொல்லால்  மன அழுத்தம் ஏற்படுத்தினால், நீங்கள் விரும்பாத சொல்லைப் பேசி மனத்தைப் பிழிந்தால்.என்ன வெளி வருகிறது? கோபம், வஞ்சம்,வெறுப்பு இவை வெளியாகின்றன.காரணம் அவையே உங்கள் மனத்தில் இருக்கின்றன;எனவே அவையே வெளி வருகின்றன.உள்ளே இருப்பதுதானே வெளியே வரும்?

பிழிபவர்கள் யாரென்பது முக்கியமில்லை.உங்கள் அப்பாவாக,சகோதரனாக,நண்பனாக மேலதிகாரியாக யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.உங்கள் உள்ளிருப்பதுதான் வெளியே வரும்!

ஆனால் உள்ளே என்ன இருக்கிறது என்பது உங்களிடம்தான் இருக்கிறது.உங்கள் மனம் அழுக்கால் நிரம்பியிருந்தால்,வெளியே வருவது அழுக்காகத்தான் இருக்கும்;உள்ளம் அன்பால் நிரம்பியிருந்தால்,வெளியே வருவது அன்பாகத்தான் இருக்கும்.

எனவே உள்ளிருக்கும் எதிர்மறை எண்ணங்களை அகற்றி மனத்தில் நல்லெண்ணங்களை ,அன்பை,நிரப்புங்கள்.

உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக,அன்பு நிறைத்ததாக மாறும்.

என்னப்பா நீ இன்னும் சந்தேக சுந்தரம்தானா?

(ஸ்வாமி பித்தானந்தாவின் உரையிலிருந்து)

27 கருத்துகள்:

  1. பித்தானந்தாவின் கருத்துரை மனதில் பதியவைத்துக்கொள்ளப்பட வேண்டியது. நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நல்ல பிரசங்கம். பித்தானந்தா நீங்கள்தானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லையென்று சொன்னால் நம்புவீர்களா?
      நன்றி தமிழ் இளங்கொ ஐயா

      நீக்கு
  3. நல்ல பிரசங்கம்! உள்ளே இருப்பதுதான் வெளியே வருகிறது! நல்லதையே நினைப்போம்! நல்ல கருத்து!

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் அய்யா! அருமையான தத்துவம் அய்யா! மனசுல அப்படியே பதியவச்சுக்கிறேன்!

    சத்சங்க -அப்படினா என்னய்யா
    பித்தானந்தா சாமி யார்???? நன்றிய்யா!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல செய்திகளைப் பேசுவதற்காகக் கூடும் கூட்டம் என்று சொல்லலாமா?
      சாமி மனத்தால் ரிஷிகேசில் இருப்பதாகக் கேள்வி!
      நன்றி பூபகீதன்

      நீக்கு
  5. நல்ல கருத்தை முன் வைத்தீர்கள் ஐயா நன்று

    பதிலளிநீக்கு
  6. அருமையான கருத்தை அழகாக புரிய வைத்த பதிவு!
    த ம 5

    பதிலளிநீக்கு
  7. என் மாணவர்களுக்கு எடுத்துச்சொல்ல அருமையான கதை!! மிக்க நன்றி சார்!

    பதிலளிநீக்கு
  8. பித்தானந்தா சுவாமிகள் நன்றாகவே சாறு பிழிகின்றார். சாறு தத்துவம் அருமை. இது மூளைக்கு அடிக்கடிச் சொல்லி எங்கள் சிறுவயதில் அதையும் தத்துவமாக எடுத்துக் கொண்ட காலங்கள் உண்டு! இப்போது பித்தானந்தா வாய்விழ் வருவது இன்னும் விசேஷம்! சிஷ்யகோடிகள் அதிகரிப்பார்களே. பேசாமல் ஒரு ஆசிரமம் ஆரம்பித்துவிடலாமோ...

    பதிலளிநீக்கு
  9. சொல்லும் விடயத்தைக் கேட்போர் மனதிற் பதியும்படி சொல்வதுதென்பது அத்தனை இலகுவானதும் எலோராலும் முடியக் கூடிய செயலும் அல்ல!..
    தாங்கள் இவ்விடயத்தில் கைதேர்ந்தவரென இப்பதிவு சொல்லும்.
    தங்களின் கூற்று என் மனதிலும் பதிந்துகொண்டது! நல்ல பகிர்வு.

    நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  10. சில சமையங்களில் நம் மனது சுத்தமாக இருந்தாலும் அதை
    நசுக்கி பிழியும் போது வரும் வலியின் வேதனை.....
    தத்துவங்கள் கேட்பதற்கு இனிமையான விசயம் தான்.
    இந்த பகிர்வால் நான் அதிகம் யோசித்தேன் பித்தன் தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பித்தனந்தா சொன்னார் //வேதனைப் படாமலிருக்கமுடியாதுதான்.ஆனாலதன்
      விளைவுச்அது போன்ற செயலேயாக இருக்கக் கூடாது.இத்ற்குத்தான் முயலவேண்டும்.//
      அம்பாளடியாளுடன் சேர்ந்து விட்டீர்கள்!
      நன்றி அருணா

      நீக்கு
  11. அருமை. இந்தச் சாரத்தைச் சொல்லத் தெரியாமல் பேசியிருந்தேன், நண்பரிடம் சிலநாட்களுக்கு முன். இப்போது இது உதவும்.

    பதிலளிநீக்கு
  12. இப் பக்குவம் எவருக்கும் எப்போதும் இருக்க வேண்டும்!!!! ஆனால்.....

    பதிலளிநீக்கு
  13. சுவாமி பித்தானந்தாவின் உரைகள் அவ்வப்போது வந்தாலும் சுவையாக ஏற்புடையதாக இருக்கின்றன. பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  14. ஜூஸானந்தாவின் உதாரணம் , ஜூஸாய் இனிக்கிறது :)

    பதிலளிநீக்கு
  15. பித்தானந்தா ரிடர்ன்ஸ்! :)

    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு