வங்கிக்கு
டீ சப்ளை என்றால் ரிஷி என்றாகிவிட்டது. கேஷியர்களை ஸ்பெஷலாக கவனித்துக் கொள்வான்.
முதன்மை மேலாளரையும் அப்படியே தற்காலிக துப்புரவாளர் பணி, அடெண்டர் பணி கிடைக்க
ஆரம்பித்தது.
ஐந்து
காஷியர்களில் சர்மா பந்தா பேர் வழி. மாலையில் வீடு செல்லும்போது கூட காஷ் கேபினை
பூட்டிக் கொண்டுதான் வருவான். கேபினுக்கு ரொக்கம் வந்தவுடன் யாரையும் உள்ளே விட
மாட்டான். வந்தால் கூட டிராயர்களை பூட்டி விட்டுத்தான் அனுமதிப்பான்.
தீபாவளிக்கு
இன்னும் பத்து நாட்கள் தான் இருந்தன. வியாபாரம் செழிப்பாக நடந்தது. பழைய
டெல்லியில் கூட்டம் பொங்கி வழிந்தது. கிளையிலும் அப்படியே. அன்று நிரந்தர
துப்புரவாளன் வராததால் ரிஷிக்கு அந்த சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த வாய்ப்பு தங்க
வாய்ப்பாக மாறியது. முன் தினம் சர்மா அசட்டையாக இருந்ததால் அவனுடைய கேஷ் கேபினில்
ஒரே குப்பை. ரொக்கம் கேபினுக்கு வந்தாகிவிட்டது. ரிஷி துப்புரவு செய்து
கொண்டிருந்ததால் அவனை கேபினுக்குள் அனுமதித்தான். தூசி அலர்ஜி சர்மாவிற்கு உண்டு.
அதனால் டிராயர்களை பூட்டி விட்டு வெளியே வந்தான். காபினுக்குள் சென்ற ரிஷியின்
கண்களில் கீழே கிடந்த பணக்கட்டு உடனே பூதாகார மாக தெரிந்தது.
அதை மின்னல் வேகத்தில் எடுத்து குப்பைக் கூடையில் போட்டுக் கொண்டு அதன் மேல் முகத்தில் கட்டியிருந்த துணியை போட்டு மூடினான். குப்பையை வாரி அதன் மேல் கொட்டினான். ஒன்றும் நடக்காதது போல குப்பையை கொட்ட வெளியேறினான்.
அதை மின்னல் வேகத்தில் எடுத்து குப்பைக் கூடையில் போட்டுக் கொண்டு அதன் மேல் முகத்தில் கட்டியிருந்த துணியை போட்டு மூடினான். குப்பையை வாரி அதன் மேல் கொட்டினான். ஒன்றும் நடக்காதது போல குப்பையை கொட்ட வெளியேறினான்.
ஒரு
தோளில் மாட்டும் புதிய தோல் பையை வாங்கி பணக்கட்டை
உள்ளே போட்டான். 10 கட்டு 100
ரூபாய் நோட்டுக்கள் சணல் கயிறால் கட்டப்பட்டிருந்தது. ஒரு இலட்சம் ரூபாய்.
முதலாளியிடம் தீபாவளிக்கு ஊருக்கு போவதாக பணம் லீவு கேட்டான். அவர் ரூ.1.000 கொடுத்து 15 நாட்கள் லீவும் கொடுத்தார். தோல் பையைஅவரின்
பாதுகாப்பிலேயே கொடுத்தான். 10 பாக்கேட் இனிப்புகளை வாங்கி,
முதலாளிக்கு ஒரு பாக்கெட் கொடுத்து விட்டு, நான்கு
பாக்கெட்டுகளை சூட் கேஸில் வைத்து, 5 பாக்கெட் இனிப்புடன் வங்கிக்குச்
சென்றான். வங்கி மேலாளரிடம் ஒரு பாக்கெட், கொடுத்து
தீபாவளிக்கு வாழ்த்தினான். தான் லீவில் ஊருக்குப் போவதாக கூறினான். 28ஆம் தேதி ஆகியிருந்ததால் அவனது சம்பளத்தை கொடுக்க உத்தரவிட்டார. அவரும்
அவனுக்கு ரூ.500, இனமாக கொடுத்தார்.
ரொக்க
கண்காணிப்பாளர்கள்,
தலைமை காஷியர் ரமேஷ் சர்மா, மற்ற கேஷ்
ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கிவிட்டு, சம்பளப் பணத்தை
ரமேஷிடம் வாங்கிக் கொண்டு எதுவுமே நடக்காத மாதிரி வெளியேறினான். ரமேஷ் ரிஷியை
மனமாற வாழ்த்தினான்.
முதலாளியிடம்
அனுமதி வாங்கிக் கொண்டு கங்காராமை சந்திக்க பையைதோளில் மாட்டிக்கொண்டு
புறப்பட்டான்.நண்பர்கள் சந்தித்தனர். ஒரு
இலட்சத்தை கண்டவுடன் கட்டிப்புரண்டனர். 40 ஆயிரத்தை ரிஷிக்கு கொடுத்து மற்ற நான்கு
பேர்களும் 15 ஆயிரமாக பகிர்ந்து கொண்டனர். ரிஷி மாரி ஆனான்.
அன்று
வியாழக்கிழமை தெற்கே சூலம். ஜி.டி.யில் கும்பல் கம்மியாக இருந்தது. 3 டயர் கோச்சில் மேல்
பர்த் ஒன்றை டிடிஆர் கொடுத்தார். ஆக்ரா கடக்கும் போது நீதிபதியின் மகள் நினைவு
அதிகமானது
பிறகு மாரி ஆழ்ந்து தூங்க ஆரம்பித்தான். வெகு நேரம் கழித்து திடீரென்றுமாரி விழித்துக் கொண்டு கீழ் பர்த்தில் இருப்பவரை பார்த்து “ராஜம் முந்திரி எப்ப வரும் என்றான்”. அப்போது மாலை சுமார் 5.45 மணியிருக்கும் “இப்ப வரப்போற ஸ்டேஷன் ராமகுண்டம் ராஜமுந்திரி இந்த ரூட்டுல வராது.”
டெல்லிக்கு வரும்போது கோதாவரி பாலத்தை ராஜமுந்திரியிலே பார்த்தேனே.
அது கிருஷ்ணா நதி பாலம். இரவு 9 மணிக்கு மேலே விஜயவாடா பக்கத்திலே வரும். நீங்க முழித்துக் கொண்டிருந்தால் சொல்கிறேன் என்றார்.
மாரி மீண்டும் தூங்க ஆரம்பித்தான்.
பிறகு மாரி ஆழ்ந்து தூங்க ஆரம்பித்தான். வெகு நேரம் கழித்து திடீரென்றுமாரி விழித்துக் கொண்டு கீழ் பர்த்தில் இருப்பவரை பார்த்து “ராஜம் முந்திரி எப்ப வரும் என்றான்”. அப்போது மாலை சுமார் 5.45 மணியிருக்கும் “இப்ப வரப்போற ஸ்டேஷன் ராமகுண்டம் ராஜமுந்திரி இந்த ரூட்டுல வராது.”
டெல்லிக்கு வரும்போது கோதாவரி பாலத்தை ராஜமுந்திரியிலே பார்த்தேனே.
அது கிருஷ்ணா நதி பாலம். இரவு 9 மணிக்கு மேலே விஜயவாடா பக்கத்திலே வரும். நீங்க முழித்துக் கொண்டிருந்தால் சொல்கிறேன் என்றார்.
மாரி மீண்டும் தூங்க ஆரம்பித்தான்.
ரிஷி
என்ற மாரியின் டெல்லிப்பயணம் மங்களகரமாக முடிந்தது. அன்று 5 மணிக்கு பாங்கில் என்ன
நடந்தது பார்ப்போம்.
அடடா! எத்தனை நூதனமாய் திருட்டுக்கும் திட்டம் இடுகின்றார்கள். நிஜமாக நடந்த சம்பவம் போலவே எழுதுகின்றீர்களே! சுவாரஷ்யமாக இருக்கின்றது.
பதிலளிநீக்குஅப்புறம் என்ன நடந்தது?
விரைவில் தெரியும்!
நீக்குநன்றி நிஷா
த்ரில்லர் போல இருக்கிறது! தொடர்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்
நீக்குகதையில் நல்ல விறுவிறுப்பு. தொடரட்டும். பாராட்டுகள்.
பதிலளிநீக்கு’ராஜம்’ + ’முந்திரி’ எனப்பிரித்துச் சொன்னதுதான் என்னை சிரிக்கவும், ஏதேதோ சிந்திக்கவும், கற்பனை செய்யவும் வைத்தது. மிக்க நன்றி, சார்.
அவனுக்குப் பெயர் கூடச் சரியாகத் தெரியவில்லை!
நீக்குநன்றி வைகோ சார்
அருமை அய்யா! தங்கள் எந்த பதிவை படித்தாலும் உண்மையில் நடந்தது போலவே இருக்கிறது! உண்மைசம்பவமோ!
பதிலளிநீக்குஅடுத்து என்ன
ஆவலுடன்
.நன்றி அய்யா!
கற்பனைகள் எப்போதும் நிஜத்தைச் சார்ந்தவையே
நீக்குநன்றி பூபகீதன்!
வங்கியில் நடந்தது என்ன என்பதை அறிய ஆவலுடன் இருக்கிறேன் ஐயா
பதிலளிநீக்குநன்றி
நீக்குதெற்கே சூலம் என்கிறபோதே ரிஷிக்கு நேரம் சரியில்லை எனத்தெரிகிறது, பார்ப்போம் என்ன நடக்கிறதென்று.
பதிலளிநீக்குயாருக்கு சரியில்லையோ!
நீக்குநன்றி சார்
அருமை . தொடர்கிறோம்
பதிலளிநீக்குநன்றி பாரதி
நீக்குஐயோ... அய்யய்யோ....
பதிலளிநீக்குஜுஜூபி!
நீக்குநன்றி டிடி
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
கதை மிக அருமையாக உள்ளது... படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் ஐயா.த.ம5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்
நீக்குஆங்கிலத்திரைப்படம் பார்ப்பதுபோல உள்ளது. தொடர்கிறேன்.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குசஸ்பென்ஸ். தொடர்கின்றேன். அந்த கேஷியருக்கு தெய்வமே துணை நிற்க வேண்டும்.
பதிலளிநீக்குநன்றி தமிழ் இளங்கோ சார்
நீக்குநடக்கப் போவது என்ன அறிய ஆவல் :)
பதிலளிநீக்குநன்றி ஜி!
நீக்குஆஹா நினைத்த மாதிரியே ஆட்டைய போட்டுன்ட்டானே !
பதிலளிநீக்குகில்லாடி மாரி தொடரட்டும் பதிவு தொடர்கிறேன்
அருமை ஐயா வாழ்த்துக்கள் !
4 வது படிக்கும் முன் இது படிக்காததால் இதைப் படித்து அதைத் தொடர எண்ணம்....செம த்ரில்லிங்காக இருக்கின்றது சார். அது சரி, ஒன்றே ஒன்று...பேங்கில் ஒவ்வொரு நாளும் முடியும் போது அக்கவுண்ட் செக் செய்துவிட்டு டாலி ஆனபிறகுதானே கேஷியர் செல்வார், மாரி ஸாரி ரிஷி எடுத்த பணம் டேலி ஆகாமல் இருந்திருக்குமே....ஓ அதுதான் அந்த பேங்கில் மாலை நடந்த சம்பவமா....ஓகே ஓகே....இதோ தொடர்கின்றோம்
பதிலளிநீக்கு