தொடரும் தோழர்கள்

சனி, நவம்பர் 14, 2015

குழந்தைகளும்,நீரிழிவும்!



தலைப்பைப்  பார்த்ததும் குழந்தைகளுக்கு வரும் நீரிழிவு நோய் பற்றி எழுதியிருக் கிறேனோ என்று எண்ணியிருக்கலாம்.
இல்லை!

இன்று இரண்டு தினங்கள் அனுசரிக்கப்படுகின்றன

குழந்தைகள் தினம் மற்றும்

உலக நீரிழிவு தினம்

எனவே அத் தலைப்பு!

குழந்தைகள் தினத்தில்  என்ன  எழுதலாம்...........

குழந்தைகளுக்கான கதை சொல்லலாம்....அதைத் தளிர் சுரேஷ் பார்த்துக் கொள்வார்

நேரு மாமா பற்றி எழுதலாம்...அதைக் கரந்தையார் பார்த்துக் கொள்வார்

குழந்தைகளுக்காக அல்லது குழந்தைகள் பற்றி ஏதாவது கவிதை எழுதலாம்.....அதை சசிகலா, இளமதி,அம்பாளடியாள்,அருணா செல்வம் பார்த்துக் கொள்வார்கள்.

பாரதி குழந்தைகளுக்குச் சொன்னதை பகிரலாமா?லாம்!

ஆனால் வேறு யாராவது கவிஞரின் சிந்தனையைப் பகிரலாமே !

இதோ கவிஞரின் அறிவுரை.........

//சின்னப்பயலே சின்னப்பயலே
சேதி கேளடா
நான் சொல்லப்போற வார்த்தையை நல்லா
எண்ணிப் பாரடா-நீ
எண்ணிப் பாரடா  
ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அதுதாண்டா வளர்ச்சி -உன்னை
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே-நீ
தரும் மகிழ்ச்சி

நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
காலம் தரும் பயிற்சி-உன்
நரம்போடுதான் பின்னி வளரணும்
தன்மான உணர்ச்சி-

மனிதனாக வாழ்ந்திட வேணும்
மனதில் வையடா-தம்பி
மனதில் வையடா
வளர்ந்து வரும் உலகத்துக்கே-நீ
வலது கையடா-நீ
வலது கையடா

தனியுடமைக் கொடுமைகள் தீரத்
தொண்டு செய்யடா-நீ
தொண்டு செய்யடா!
தானா எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா-எல்லாம்
பழைய பொய்யடா!


வேப்பமர உச்சியில் நின்னு
பேயொண்ணு ஆடுதுன்னு
விளையாடப் போதும்போது
சொல்லி வைப்பாங்க-உன்
வீரத்தைக் கொழுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட
நம்பி விடாதே-நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
வெம்பி விடாதே-நீ
வெம்பி விடாதே!-//
----------------------------------------------

//ஏட்டில் படித்ததோடு
இருந்து விடாதே!-நீ
ஏன்படித்தோம் என்பதையும்
மறந்துவிடாதே

நாட்டின் நெறிதவறி
நடந்துவிடாதே-நம்
நல்லவர்கள் தூற்றும்படி
வளர்ந்துவிடாதே!
மூத்தோர்சொல் வார்த்தைகளை
மீறக்கூடாது-பண்பு
முறைகளிலும் மொழிதனிலும்
மாறக்கூடாது
மாற்றார் கைப்பொருளை நம்பி
வாழக்கூடாது-தன்
மானமில்லாக் கோழையுடன்
சேரக்கூடாது!  
துன்பத்தை வெல்லும் கல்வி
கற்றிடவேணும்
சோம்பலைக் கொல்லும் திறன்
பெற்றிடவேணும்
வம்புசெய்யும் குணமிருந்தால்
விட்டிடவேணும்-அறிவு
வளர்ச்சியிலே வான்முகட்டைத்
தொட்டிடவேணும்!
வெற்றிமேல் வெற்றிவர விருதுவரப்
பெருமைவர
மேதைகள் சொன்னதுபோல்
விளங்கிடவேணும்
பெற்றதாயின் புகழும்,நீ பிறந்த
மண்ணின் புகழும்
வற்றாமல் உன்னோடு
வளர்ந்திடவேணும்!//

பட்டுக்கோட்டையார் சொல்லும் இவ்வறிவுரைகளுக்கு மிஞ்சி வேறென்ன இருக்கிறது?

இனி நீரிழிவு நோய் பற்றி ஒரு சிறு கருத்து.
பாதிக்கப்பட்ட ஒருவர்தானே அழகாகச் சொல்ல முடியும்.எனவே பார்த்தசாரதி பேசுகிறார்.........

நீரிழிவு நோயோடு வாழ்வோம்!
.................................................
இன்று குழந்தைகள் தினம்.
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது இனிப்பு
இரத்த இனிப்பு அதிகமானால் நா இனிப்பை இழக்கும்!
ஆம்!இந்தப் பலவீனம்தானே நீரிழிவு.
கணையம் சுரக்கும் இன்சுலின் அளவு குறையும்போது வரும் மாற்றம்தானே இது.


இந்த நீரிழிவின் வீரியத்தைக் குறைத்து,மற்ற நோய்களைக் கட்டுப் படுத்தி வாழ வேண்டிய அவசியத்தைப் பற்றி விழிப்புணர்ச்சி ஊட்டும் நாளே “உலக நீரிழிவு நோய் நாள்”



 நடத்தையில் இனிப்பைக் கூட்டி, இனியவை பேசி ,நாவில் இனிப்பை நீக்கி, இன்னாது உண்டு,நல்வாழ்வு என்ற கனியைக் கவர்ந்திடுவோம்.
நீரிழிவு நோயை உதாசீனப் படுத்தினால்,நல்வாழ்வு நம்மை புறக்கணித்து விடும்.


35 கருத்துகள்:

  1. தங்களது பாணியில் புதுமையான விடயம் அருமை ஐயா.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ஐயா !

    ஆரவாரம் இன்றி அளிக்கும் படைப்பினில்
    அந்தந்த நாட்கள் அழகாகின்றன !

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
    தம +1

    பதிலளிநீக்கு
  3. தலைப்பைக் கண்டதும் சற்றே யோசித்தேன். தெளிவாக்கியுள்ளீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  4. நன்று சொன்னீர்கள்.
    நன்றி அய்யா...

    பதிலளிநீக்கு
  5. // நடத்தையில் இனிப்பைக் கூட்டி, இனியவை பேசி ,நாவில் இனிப்பை நீக்கி, இன்னாது உண்டு,நல்வாழ்வு என்ற கனியைக் கவர்ந்திடுவோம்.//

    சொல்வது எளிது. ஆனால் செயலாக்குவது கடினம் என்று திரு பார்த்தசாரதியே ஒப்புக்கொள்வார். இருப்பினும் நீரிழிவு தாக்கம் உள்ளவர்கள் இனிப்பைக் குறைத்து அதன் தாக்கத்தை கட்டுப்பாட்டில் வைத்து இனிதாய் வாழ வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  6. பட்டுக்கோட்டையாரின் பாடலுடன் குழந்தைகள் தினத்தையும் நண்பர் பார்த்தசாரதியாரின் அறிவுரையுடன் நீரிழவு தினத்தையும் சிறப்பித்த பதிவுகள் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. இப்படி ஏதோ எழுதுவீங்கன்னு தான் எதிர்பார்த்தேன். எவ்ளோ நாளாய் உங்க பக்கம் வாசிக்கிறேன்:)

    *நடத்தையில் இனிப்பைக் கூட்டி, இனியவை பேசி ,நாவில் இனிப்பை நீக்கி, இன்னாது உண்டு,நல்வாழ்வு என்ற கனியைக் கவர்ந்திடுவோம்* படிக்கும்போதே இனிக்குதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எவ்ளோ நாளாய் உங்க பக்கம் வாசிக்கிறேன்:)//
      இதுவே கேட்க இனிக்கிறதே!
      நன்றிம்மா

      நீக்கு
  8. இருபது வருடமா... சந்தோசமாக...

    ஏற்றுக் கொள்கிறேன் ஐயா...

    நோய் அல்ல... தாய் தந்தை தந்த குறைபாடு...! (சொத்து)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொத்தை மறுக்க முடியாதே!
      வாழ்க வளமுடன்!
      நன்றி தனபாலன்

      நீக்கு
  9. வணக்கம்
    ஐயா

    கவிதையும் நீர்ழிவு நோய் பற்றிய விளக்கமும் வெகுசிறப்பு ஐயா.த.ம6

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  10. இரண்டு விஷயங்களை இணைத்து இனிமையாக எழுதி இருக்கிறீர்கள். அருமை.

    பதிலளிநீக்கு
  11. பெற்றோர் தந்த சொத்துடன் இருவரும் இங்கு......

    நாமளே ஸ்வீட்...இது நோயே அல்ல. மெட்டபாலிசத்தில் ஏற்படும் குறைபாடு. சரிவர நோக்கினால் அப்படியே ஸ்வீட் உடல்நலத்தோடு தள்ளிக் கொண்டு போய்விடலாம்...

    //நடத்தையில் இனிப்பைக் கூட்டி, இனியவை பேசி ,நாவில் இனிப்பை நீக்கி, இன்னாது உண்டு,நல்வாழ்வு என்ற கனியைக் கவர்ந்திடுவோம்* படிக்கும்போதே இனிக்குதே!// கண்டிப்பாக...

    பதிலளிநீக்கு
  12. உங்கள் மாயக்கட்டில் எங்களுக்கும் ஜாலம் எல்லாம் காட்டியது....

    பதிலளிநீக்கு
  13. ஓடி விளையாடு பாப்பான்னு மீண்டும் சொல்ல வேண்டியிருக்கு ,இந்த கால குழந்தைகள் இன்டோர்,அதுவும் செல்லில் மட்டுமே விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் ,நீரிழிவு வராமல் என்ன செய்யும் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் குழந்தைகள் நீரிழிவு பற்றி எதுவுமே சொல்லவில்லையே!
      // தலைப்பைப் பார்த்ததும் குழந்தைகளுக்கு வரும் நீரிழிவு நோய் பற்றி எழுதியிருக் கிறேனோ என்று எண்ணியிருக்கலாம்.
      இல்லை!
      இன்று இரண்டு தினங்கள் அனுசரிக்கப்படுகின்றன
      குழந்தைகள் தினம் மற்றும்
      உலக நீரிழிவு தினம்
      எனவே அத் தலைப்பு!//

      இது நான் சொன்னது!தலைப்பைப் பிடித்துக் கொண்டு விட்டீர்கள்;!
      வாழ்க!
      நன்றி

      நீக்கு
  14. இரண்டு நாளையும் இணைத்து தங்கள் பாணியில் ஒரு பகிர்வு.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு