ஓர் ஓட்டல்.
அங்கு தோசைக்குத் தொட்டுக் கொள்ள சர்க்கரை
கொடுப்பார்கள்.சர்க்கரை விலை ஏறியதால், இனி கொடுக்க முடியாது எனத் தீர்மானித்து அறிவிப்பு எழுதி வைத்தனர் ”இன்று
முதல் தோசைக்குச் சர்க்கரை கிடையாது”
ராமு சாப்பிட வந்தான்
தோசை ஆர்டர் செய்தான்.
சர்க்கரை கேட்டான்
பலகையைப் பாருங்கள் என்றான் பணியாள்
ஒரு தோசையைச் சாப்பிட்டுவிட்டு ராமு இன்னொரு
தோசை கொண்டு வரச் சொன்னான்.
தோசை வந்தது
சர்க்கரை கேட்டான் ராமு.
கோபம் கொண்ட பணியாள் போர்டில் இருப்பதைப் படித்தாயல்லவா என்றான்
ராமு பொறுமையாகச் சொன்னான்”இன்று முதல்தோசைக்குச்
சர்க்கரை கிடையாது என்று எழுதியிருக்கிறீர்கள்.நான் முதல் தோசைக்குக் கேட்கவில்லையே,இரண்டாவது தோசைக்குத் தானே கேட்கிறேன்!”
இது எப்படி இருக்கு?!
(அந்த நாள் ஞாபகம்:
மதுரை மகால் எதிரே இருந்த
ஒரு சிறிய ஓட்டலில் பொங்கல்,தோசை எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொள்ள நாட்டுச் சர்க்கரை
கொடுப்பார்கள்.படித்துப் பாருங்கள் )
விடுமுறை சிரிமுறை கிடக்கட்டும்;இன்று என் அடுமுறை!!(நிச்சயமாகச் சாப்பிடுப வர்களுக்கு அழுமுறை அல்ல!
அதானே...? என்னவொரு (அ)நியாயம்....!
பதிலளிநீக்குநியாயமான பேச்சு!
நீக்குநன்றி டிடி
//”இன்று முதல்தோசைக்குச் சர்க்கரை கிடையாது என்று எழுதியிருக்கிறீர்கள். நான் முதல் தோசைக்குக் கேட்கவில்லையே, இரண்டாவது தோசைக்குத் தானே கேட்கிறேன்!”//
பதிலளிநீக்குராமுவின் புரிதல் மிகவும் அருமை. இங்கு இதைப் படிக்கும் எவ்வளவு பேர்கள் புரிந்துகொள்ளப்போகிறார்களோ .... அதுவே என் இப்போதையக்கவலை :)
பகிர்வுக்கு நன்றிகள், சார்.
உங்கள் கவலை சரிதான்!
நீக்குநன்றி சார்
ராமு போல ஒருவன் ஓர் மளிகைக்கடையில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தானாம். கஸ்டமர் கொடுத்த சீட்டை வாங்கியதும் ‘சுக்குமி’ ’ளகுதிப்’ ’பிலி’ ஒவ்வொன்றும் தலா 50 கிராம், எனப் படித்தானாம்.
நீக்குஅந்தந்த மளிகை சாமான்களை எடுத்து தராஸில் நிறுத்தி பொட்டலம் கட்டிக் கொடுக்க வேண்டிய பணியாளருக்கு இவன் சொல்லுவது ஒன்றுமே புரியவில்லையாம்.
அதில் எழுதியிருந்தவை :
சு க் கு மி ள கு தி ப் பி லி .... ஒவ்வொறும் தலா 50 கிராம்.
ஏற்கனவே படித்ததாக நினைவு. உங்களுடைய மீள் பதிவு என்று நினைக்கின்றேன். எனக்கு பழைய நினைவு (திருச்சி (ஆரம்ப கால) ராமா கபே ரவா தோசை + தேங்காய்ச் சட்டினி + ஜீனி சர்க்கரை எனக்கு பிடிக்கும்.) வந்தது. நன்றி.
பதிலளிநீக்குபழைய பதிவுக்குத்தான் சுட்டி!
நீக்குஜோக் மீள்பதிவல்ல!
நன்றி தமிழ் இளங்கோ சார்
மீண்டும் ரசித்தேன்!
பதிலளிநீக்குரசித்தது பழைய பதிவை மட்டும்தானா?
நீக்குநன்றி ஸ்ரீராம்
ஹாஹாஹா ஸூப்பர் ஐயா.
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி
நீக்குஇதுதான் வார்த்தை விளையாட்டு என்பது. இதுபோல் ‘இங்கு தங்க வீடு கிடைக்குமா?’ என்றதற்கு ‘இங்கு தங்கத்தில் வீடெல்லாம் கிடையாது. செங்கல் மற்றும் குடிசை வீடுகள் தான்.’ என்ற நகைச்சுவையை நினைவுகூர்கிறேன்.
பதிலளிநீக்குநான் விருத்தாசலத்தில் படித்தபோது 1957-60 களில் உணவு விடுதிகளில் உப்புமாவிற்கு சட்னியோடு சர்க்கரையையும் தருவார்கள். அப்போது அதை அஸ்கா என்றும் அழைப்பார்கள். (அப்போதைய ஆங்கிலேய ஆட்சியில் ஒரிசா,ஆந்திரா உள்ளிட்ட பரந்துபட்ட சென்னை இராஜதானியில் சர்க்கரை ஒரிசாவில் இருக்கும் அஸ்கா என்ற இடத்தில் இருந்த சர்க்கரை ஆலையிலிருந்து வந்ததால் அஸ்கா என அழைத்தார்களாம்!)
இதையே இன்னும் இழுக்க நினைத்தேன்!..(இனிமேல் தோசைக்குச் சக்கரை கிடையாது!..மேல் தோசை,கீழ்த்தோச
நீக்குநன்றி சார்
தோசைக்குச் சர்க்கரை.... செம காம்பினேஷனா இருக்கே! :) சுட்டி மூலம் முந்தைய பதிவை மீண்டும் படித்து ரசித்தேன்.
பதிலளிநீக்குசர்க்கரையில் கொஞ்சம் நெய்யும் சேர்த்தால்....!
நீக்குநன்றி வெங்கட்
வணக்கம் பித்தன் ஐயா !
பதிலளிநீக்குசரத்குமார் கவுண்டமணி நகைச்சுவை '' தங்கப்ப தக்கம் '' போலவா இன்றுமுதல் தோசையும் அசத்தல் ஆமா இன்று உங்கள் சமையலா வீட்டில் அவ்வவ்வ்வ்வ் அடுமுறை என்றால் அதுவா !???
ரசித்தேன் சிரித்தேன் நன்றி தொடர வாழ்த்துக்கள்
//அடுமுறை என்றால் அதுவா !???//
நீக்குஅதே அதே!
நன்றி சீராளன்
பெஸ்ட் கிருஷ்ண பவன் இருந்தது ஐம்பதாண்டு முன்னால் என நினைக்கிறேன் ,நான் ,அந்த பகுதியில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் ,அந்த நாட்டு சர்க்கரை இன்னும் என் நாவில் இனிக்கிறது :)
பதிலளிநீக்குநான் சொல்லும் காலகட்டம்-1970-1977.
நீக்குஅவுர் ஒத்த களாயா?!
நன்றி பகவான் ஜி
சுட்டியின் நினைவலைகள் சென்றேன் நன்று ஐயா
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி
நீக்குஅசத்திட்டீங்க ஜி! நாட்டு சர்க்கரை அடை காம்பினேஷன் தான் டாப்புங்க!
பதிலளிநீக்குசூப்பர்!
நீக்குநன்றி மோகன் ஜி
முதல் தோசை விளக்கம் அருமை. அ.கி.பரந்தாமனார் தன்னுடைய நல்ல தமிழ் எழுதவேண்டுமா? என்ற நூலில் 'நான் முந்நூறு ரூபாய் அனுப்பினேன் என்று கூறினால் அவர் இருநூறு ரூபாயை இழக்கவேண்டும் என்றும், (முன்னூறு என்றால் முன் நூறு) முந்நூறு ரூபாய் என்றால்தான் மூன்று நூறு ரூபாய்' என்றும் கூறியதைப் படித்ததாக நினைவு.
பதிலளிநீக்குஇரு நூறு,முன் நூறு,நான் நூறு இப்படியே போகலாம்....
நீக்குநன்ரி ஐயா
இனித்தது பதிவு
பதிலளிநீக்குஹஹஹஹ ரசித்தோம். முதல் என்ற வார்த்தை எப்படி எல்லாம் படுத்துகின்றது!!! ஹ்ஹஹ ஒரு கமா இல்லாததால்...கடன் கொடுத்தவர் வட்டி கேட்க வீட்டிற்குச் சென்றாராம்...அவன் வீட்டில் "நாளை தருகிறேன்" என்று எழுதியே வைத்துவிட்டானாம்....
பதிலளிநீக்குகீதா: சார் சர்க்கரையோடு நெய் சேர்த்துச் சாப்பிட்டால் ரொம்ப நன்றாக இருக்கும் சப்பாத்திக்குக் கூட...ஹும்! இப்ப அது முடியாது ...நானே இனிமையாகிப் போனதால்....எப்பவுமே ஸ்வீட் 16 ஹஹஹ்ஹ